கதைத்தொகுப்பு: ஒரு பக்க கதை

534 கதைகள் கிடைத்துள்ளன.

கேட்ச் – ஒரு பக்க கதை

 

 மாரிமுத்துவின் மானசீக அணி ஃபீல்டிங. எதிர் அணி வெற்றி பெற ஒரே பந்து இரண்டு ரன்கள். பந்து ஆகாயத்தை நோக்கி அடிக்கப்பட்டது! மாரிமுத்து டீ ஆத்துவதை கூட நிறுத்திவிட்டு, டீக்கடை டிவி- யில் மூச்சடைத்துப் பார்க்க பந்து பவுண்டரிக்கு அருகில் இறங்கி, அங்கு நின்றிருந்த அவனது கிரிக்கெட் ‘ஹீரோ’வின் கைகளில் விழுந்தது அனைவரும் உற்சாக கூச்சலிட பந்து கையிலிருந்து நழுவி கீழே விழ, அணி தோற்றது! ஆத்திரம் தாங்காத மாரிமுத்து, உடலில் தீயை பற்ற வைக்க, மறுநாள்


பாஸிட்டிவ் – ஒரு பக்க கதை

 

 ஏம்பா சரவணா, குழந்தைக்கு ஜாதகம் பாக்கப் போனியே என்னாச்சு? வீட்டிற்குள் நுழைந்த சரவணனை மறித்து அவனுடைய அம்மா பார்வதி கேட்டாள் ஹோதிடர் சொன்னதை அவனுக்குள்ளாகவே நினைத்துக் கொண்டான். இதோ பாரு தம்பி உனக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் கழிச்சி குழந்தை பிறந்திருக்கு. இது எல்லாருக்கும் சந்தோஷம்தான். ஆனா குழந்தை பிறந்த நேரம் சரியில்லை. வெளிப்படையா சொல்லணும்னா, நீ இப்ப பாக்கற வேலை உனக்கு பறிபோயிடும். நீ குடியிருக்கிற வீடும் உன் கைவிட்டுப் போற சூழ்நிலை உருவாகும்”


நியாயம் – ஒரு பக்க கதை

 

 “மோகன்! கல்யாணத்துக்கு அப்புறமும் உங்க அம்மாவும் அப்பாவும் நம்மளோடதான் இருப்பாங்களா? மோகனின் ஆசைக் காதலி சௌம்யா கேட்டாள். அப்புறம் எங்கே போவாங்க? நம்மளோடதான் இருப்பாங்க! மோகன் சற்று அதிர்ச்சியோடு சொன்னான். அதுக்கில்லே… ஒருவேளை நாம தனிக்குடித்தனம் போய்ட்டாலும் அத்தையும் மாமாவும் தனியா சமாளிச்சுக்குவாங்கல்ல.. என்ன பேசுறே சௌம்யா? என்னோட அம்மா அப்பாவுக்கு நான் ஒரே பிள்ளைங்கிறதை ஞாபகம் வெச்சுக்கோ. என்னைப் பெத்து கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிருக்கிறாங்க. அம்மா, அப்பாவை வயசான காலத்தில தனியா விட்டுட்டு நாம தனிக்குடித்தனம்


நாடு அதை நாடு – ஒரு பக்க கதை

 

 ராதா அப்பாவை எங்கே காணோம்? அவர் காலையிலேயே வோட்டு போட கிளம்பிவிட்டார். ராகவன் கோபமானான். உடம்புல சுகர், பிரஷர் வச்சுக்கிட்டு இப்போ வோட்டு போடலைன்னா என்ன குடியா முழுகிடும்? சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் அப்பா பலராமன் உள்ளே நுழைந்தார். ஏம்பா காந்திஜியோட ஜெயில்ல ஒண்ணாயிருந்தேன். பாத யாத்திரை போனேன்னு சொல்வீங்களே ஆனா உங்க தியாகி பென்ஷன் வாங்க உங்களை நாயா இந்த அரசாங்கம் அலைய வைக்கிறதே இதுக்கு வோட்டு போடலைன்னா என்ன? டேய் நீங்களெல்லாம் எங்களுக்கு என்ன செய்வீங்கன்னு


சிறுவன்! – ஒரு பக்க கதை

 

 ஐஸ் வாங்க இரண்டு ரூபாய் கேட்டு அழுது கொண்டிருந்தான் சிறுவன் ரவி. “ஜுரம் விட்டு இரண்டு நாள்தான் ஆகுது ஐஸ் சாப்பிடப் போறாராம். என்ன பண்ணாலும் தரமாட்டேன்,’ என்று மயிலம்மா கண்டிப்புடன் கூறினாள். ஆனாலும் சிறுவன் அழுகையைத் தொடர்ந்து கொண்டிருந்தான். வயல் வேலை முடித்தவிட்டு வீட்டுக்கு வந்த ரவியின் தந்தை ஆதிமூலம், “ஏண்டா, அழறே’ என கேட்க, “அம்மா ஐஸ் வாங்க காசு கொடுக்கலை’ என்று அழுகையோடு கூறினான். ரவி இரண்டு ரூபாய் எடுத்து நீட்ட, சந்தோஷமாக


செக்கப்..! – ஒரு பக்க கதை

 

 மாஸ்டர் ஹெல்த் செக்கப் பரிசோதனை முடிந்து வெளியே வந்து டாக்டரின் அழைப்பிற்காகப் பதட்டத்துடன் காத்திருந்தாள் மங்கை. “உட்காருங்கள் என்ற டாக்டர், ரிப்போர்ட்டை நன்றாகப் பார்த்தபிறகு “மேடம் உங்களுக்கு எந்தவிதமான பிரச்னையும் இல்லை யு.ஆர். ஆல்ரைட் ஃபர்பெக்டலி என்றார். மங்கையின் முகத்தில் மகழ்ச்சி “டாக்டர் மிக்க நன்றி இன்று டிவியில் ஒரு புது மெகாத்தொடர் ஆரம்பாமாகப் போகிறது. புது மெகாத்தொடரை பார்க்க உயிரோடு இருப்பேனா என்ற பயத்துடன் இருந்தேன். நல்லவேளை என் வயிற்றில் பாலை வார்த்தீ.ர் இனி நிம்மதியாக


சபலம் – ஒரு பக்க கதை

 

 பேட்டை ரயில் நிலையத்தைக் கடந்து கொண்டிருந்தது கொல்லம் பாஸஞ்சர். கடந்த சில நாட்களாக சொல்லி வைத்தாற்போல், இதே ரயிலில் – இதே எதிர் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் அந்த இளைஞனை வழக்கம் போல் உற்றுப் பார்த்தார் சிவலிங்கம். இளைஞன் பார்க்க லட்சணமாக இருந்தான். அவருக்கு ரொம்பவே பிடித்திருந்தது. கைப்பையில் டிபன் பாக்ஸும் இருப்பதால், எங்காவது புதிதாக வேலையில் சேர்ந்திருக்க வேண்டும். ஒவ்வொரு இளைஞனைப் பார்க்கும்போதும், கல்யாண வயதில் பெண்ணை வைத்திருக்கும் எல்லா சராசரி தகப்பனுக்கும் வரும் சபலம்,


பணம் – ஒரு பக்க கதை

 

 கோவிலுக்குள் நுழையும்போதே கவனித்து விட்டேன். அந்தச் சிறுமி இன்றைக்கும் வந்திருந்தாள். அவள் உயரத்திற்கு ஒரு துடைப்பம். யாரையும் எதுவும் கேட்கவில்லை. கோயிலை பெருக்கத் தொடங்கினாள். பக்தர்கள் வந்தார்கள். பகவானை வழிப்பட்டார்கள். கோயிலை வலம் வந்தார்கள். அவள் அவர்களுக்கு இடையில் தான் பெருக்கிக் கொண்டிருந்தாள். ”ஏம்மா, இன்னும் கொஞ்சம் சீக்கிரமாவே வந்து பெருக்கலாம் இல்லையா? ” “பள்ளிக்கூடம் முடிஞ்சதும் வீட்டுக்குப் போயிட்டு வரேன் கா…” இதுக்கு எவ்வளவு சம்பளம்? அதெல்லாம் இல்லை, அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அதான் இந்த


ம்… – ஒரு பக்க கதை

 

 மெயின் ரோட்டு வளைவில் ராஜேஷ் திரும்பிய அடுத்த நொடி மின்னல் வேகத்தில் எதிரே வந்த கார் அவனை அடித்துவிட்டுச் சென்றது. அந்தக் காட்சியுடன் தொடரும் என்று நாடகத்தை முடித்துவிட்டான். நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த பூர்ணிமா… வேலை முடிந்து வீட்டிற்கு வந்த குணா, தன் மனைவியிடம் “என்னாச்சு பூர்ணிமா ஒரு மாதிரி இருக்கிற?” “என்னங்க! பாசம் நாடகத்தில் சுந்தரி மகனை கார்காரன் அடிச்சிட்டுப் போயிட்டான். ஆண்டவா அவனுக்கு எதுவும் ஆகிடக்கூடாது.” என்றாள் சோகத்துடன் குணா பைக்கில், பூர்ணிமா பஜாருக்குச் சென்று


பொண்ணு அழகாக இருந்தது.. – ஒரு பக்க கதை

 

 பொண்ணு அடக்க ஒடுக்கமா அழகாக இருந்தது, ஆனால் கௌதம் `வேண்டாம்’ என்று பிடிவாதமாக நின்றான். ஒருவேளை அமெரிக்காவில் `காதல்’ `கீதல்’ ஏதாவது?நேராக மகனிடம் கேட்டேன். “அவங்க அக்கா யாருடனோ ரெண்டு வருஷம் முன்னாடி ஓடிப்போயிட்டாளாம்.” இழுத்தான். அவனை காம்பவுண்ட் சுவர் பக்கத்திற்கு அழைத்துச் சென்றேன் “தென்னைமரத்தை நல்லா பாரு… மேலே ஒரு மட்டையை வெட்டியிருக்காங்க பாத்தியா?” “ஆமா…” “அந்த மட்டை பக்கத்து வீட்டுக்குள்ளே நுழைஞ்சிருக்கு. அவங்க இடைஞ்சல்னு சொன்னதாலே அதை மட்டும் வெட்டிட்டோம். மரத்தை வெட்டச் சொல்லலே.