கதைத்தொகுப்பு: ஒரு பக்க கதை

511 கதைகள் கிடைத்துள்ளன.

சங்கிலி – ஒரு பக்க கதை

 

 ‘‘ஒம்பது மணிக்கு பேங்க் திறக்குது. ஒம்பதே கால் ஆச்சு… ஒருத்தராவது சீட்ல உட்கார்ந்து வேலையை ஆரம்பிக்கறாங்களா…’’ என்று வெறுப்பை சத்தமாகவே வெளியிட்டான் பெருமாள். ‘‘ஏங்க, எட்டரை மணியிலேர்ந்து உங்க ஆபீஸ்ல மின்சார கட்டண கவுன்ட்டருக்கு முன்னால நின்னு, நின்னு, உங்களை திட்டிக்கிட்டே பேங்குக்கு வந்தா… நீங்க இங்க க்யூவில நின்னுக்கிட்டிருக்கீங்க, அடச் சே!’’ என்று கோபக்குரலில் அலுத்துக்கொண்டான் டேவிட். ‘‘மெட்ரோ வாட்டர் வரி கட்டப் போனேன். அங்கேயும் கவுன்ட்டர்ல யாரும் இல்லே… சே! அட, ஏம்ப்பா நீ


அபியும் ஆயாவும் – ஒரு பக்க கதை

 

 ‘‘ஆயா, டி.வி சவுண்டை குறைங்க…’’ ‘‘ஏய் அபி, நீ என்ன படிக்கவா செய்யுற? முதல்ல கம்ப்யூட்டர் கேம்ஸோட சவுண்டை குறை. நிம்மதியா ஒண்ணு பார்க்க முடியறதில்ல…’’ ‘‘எனக்கும்தான் நினைச்ச பாட்ட கேக்க முடியுதா… எந்நேரமும் வில்லிங்க ராஜ்ஜியமும் அழுகாச்சி ஓசையும்தான்…’’ ‘‘ரொம்ப வாயாடற. உங்கம்மா கண்டிச்சி வளர்த்தாதானே?’’ சுதாவுக்கு சுருக்கென்றது. கணவனின் காதுக்குள் விஷயத்தைப் போட்டாள். ‘‘ம்… இந்த வீட்டுல மாமியார் & மருமகள் பிரச்னைக்கு பதில் பாட்டி&பேத்தி சண்டதான் பூதாகரமா இருக்கு. நாளைக்கு ரெண்டு பேரும்


நிறம் – ஒரு பக்க கதை

 

 அண்ணா பூங்காவிற்குள் நுழைந்ததுமே புவனாவின் கண்களில் அவர் பட்டு விட்டதால் அவளுக்கு கோபம் தலைக்கேறியது… நேராய் அவரிடம் சென்று… “நீங்கல்லாம் என்ன நினைச்சிகிட்டு இருக்கீங்க மனசுல?. நீங்க பொண்ணு பார்க்க வர்றீங்கன்னு நாங்க அலங்காரம் பண்ணிட்டு இருப்போம். நீங்க வந்து பார்த்துட்டு, நல்லா சாப்பிட்டுட்டு ,பொண்ணே பிடிக்கலன்னு சொல்லிட்டு போயிடுவிங்க. உங்களுக்கெல்லாம் மனசுல மன்மதன்னு நினைப்பா?” என்று மூச்சிரைக்க முடித்தாள் புவனா. அவர் நிதானமாய் தொடங்கினார் .”இப்ப நான் பேசலாமா ? மேடம் நேற்று உங்க வீட்டுக்கு


ஆத்தா – ஒரு பக்க கதை

 

 அலமேலுபுரம். பசுமையான கிராமம். நாற்பது வீடுகள்,ஒரு ஆஞ்சநேயர் கோவில், ஒரு சிறிய நூற்ப்பாலை என்று அடக்கமான கிராமம். அந்த நூற்பாலையை நம்பித்தான் அந்த கிராமமே இருந்தது. ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகே உள்ள மகிழ மரத்தடியில் வடை,பஜ்ஜி சுட்டு வாழ்ந்து கொண்டிருந்தாள் அனாதையான மீனாட்சி பாட்டி. அங்கு வரும் நூற்ப்பாலை தொழிலாளர்களுக்கு அன்போடு பரிமாறுவாள். அப்படி அங்கு சாப்பிட வருபவர்களுள் சண்முகமும் ஒருவர். நிறைய பேர் பிறகு காசு தருகிறேன்னு சொல்லி போய்விடுவர். ஆனால் சண்முகம் தானும் அனாதை


கிளிப்பேச்சு – ஒரு பக்க கதை

 

 நெருக்கடியான நகரப் போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலை.வாகனங்கள் அனைத்தும் பரபரப்பை,சத்தங்களோடு விரைந்து கொண்டிருந்தன. அதில் புதிதாய் வாங்கிய மாருதி-800 ல் இன்னும் ஒரு மாதத்தில் நடக்கவிருக்கும் கல்யாணம் பற்றிய நினைவுகளோடு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தாள் ஹனு. வருங்காலக் கணவன்,வாங்க நினைக்கும் நகைகள், சேலைகள் என வண்ண வண்ண கனவுகளின் ஒத்திகையோடு அவள் சென்றுகொண்டிருந்த போது திடீரென ஒரு வளைவில் வேகமாய் வந்த லாரி அவள் கார் மீது மோத அவள் தூக்கி எறியப்பட்டாள். சாலையோரம் இருந்த இரும்புக்கம்பியில் அவள் கழுத்து


அர்த்தங்கள் – ஒரு பக்க கதை

 

 மீனா அபார்ட்மென்ட்ஸ். மூன்றாவது ப்ளோரின் 21ம் நம்பர் வீடு. சமையல் முடித்து ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சியினை காண கண்ணாடி ஜன்னலின் திரைச்சீலையை மூட வந்தவளுக்கு திக்கென்றிருந்தது. உடனே கணவனிடம் சென்று, “இதோ பாருங்க, உங்க அப்பாவும் அம்மாவும் கீழே வந்துகிட்டிருக்காங்க, சும்மா விட்டோம்னா இங்கயே ஒரேயடியா தங்கிடுவாங்க. அதனால அவங்க வந்ததும் நாங்க திருப்பதி போறோம், வர ஒரு வாரம் ஆகும்னு சொல்லி அந்த கிழங்கள விரட்டிடுங்க ..சரியா?” “சரி சரி” அழைப்பு மணி அழைத்தது. கதவை


கடிதம் – ஒரு பக்க கதை

 

 அந்தக் கடிதம் இப்படித் தொடங்கி, அப்படி முடிந்தது… ‘உன் கணவன் இளம்பெண்களைப் பார்த்தால் வழிகிறான். நேற்றுகூட ஒரு அழகியுடன் ஹோட்டலில் சாப்பிட்டான். ஏகப்பட்ட போன் கால்கள்… மனைவிங்கற ஸ்தானம் பறிபோகாமல் பார்த்துக்கொள்! உண்மை விளம்பி’ கடிதத்தைப் படித்த சுதாகர் அதிர்ந்து, வியந்து கேட்டான்… ‘‘என்னடா, உன் அட்ரசுக்கு நீயே மொட்டைக் கடுதாசி எழுதற?’’ ‘‘ஆமா… பொறுத்திருந்து பார். இந்தக் கடிதம் என் மனைவி கையில கிடைக்கணும்’’ என்றான் ஆனந்த். சில நாட்களுக்குப் பிறகு… ‘‘என்ன ஆச்சு? அந்த


ரெசிபி – ஒரு பக்க கதை

 

 “நேத்து எங்க வீட்டுக்காரர் உங்க வீட்டுக்கு வந்திருந்தப்போ எதோ தோசை சுட்டு கொடுத்தியாம். அது அவ்ளோ டேஸ்டா இருந்துசின்னு வந்ததுல இருந்து சொல்லிகிட்டே இருக்கார் …….’ நீயும் அதே மாதரி செய்யேன் ‘ன்னு கேக்குறார் . அதுக்கு ரெசிபி சொல்லேன் ” விமலாவிடம் போனில் கேட்டல் மாலதி …. “ரெசிபியா? அந்த கொடுமைய ஏன் கேக்குற ? எங்க வீட்டுக்காரர் தீடிர்னு உங்க வீட்டுக்காரரை இங்க கூட்டிட்டு வந்துட்டார் . மாச கடைசி விட்டுல ஒரு மளிகை


ரகசியம் – ஒரு பக்க கதை

 

 கடைப்பையனுக்கு முதலாளியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.கூட்டம் வழக்கம்போல நிரம்பி வழிந்தது. ஒரு இளம் தம்பதி டி.வி.டி பிளேயர் வாங்கினர். உடனே முதலாளி முருகேசன் அவனிடம் சொன்னார்… ”டி.வி.டி&யை அவங்க கார்ல வச்சுட்டு வா…’’ இப்படித்தான் யார் எதை வாங்கினாலும், ‘கார்ல வச்சுட்டு வந்திரு’ என்று சகட்டுமேனிக்குச் சொல்வார். இது அவனுக்குக் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன விஷயம். அவருக்கோ சொல்வதில் சலிப்பு வந்ததே இல்லை.‘‘வேண்டாங்க, நாங்களே எடுத்துட்டுப் போயிடுறோம்…’’ என்றபடி அதைக் கையில் தூக்கிக்கொண்டு நழுவினார்கள் அவர்கள். வாடிக்கையாளர் சென்றதும்


பாசம் – ஒரு பக்க கதை

 

 இப்படி ஒரு கணவன் கிடைக்க என்ன தவம் செய்தோமோ என்று எண்ணிப் புரித்தாள் வளர்மதி ….. அவளுக்கும் ராஜாராமன்னுக்கும் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன . தனிக்குடித்தன தம்பதிகளான அவர்களை பார்க்க பக்கத்துக்கு ஊரிலிருந்து வளர்மதியின் பெற்றோர் அடிக்கடி வருவார்கள் …. அவர்களிடம் ராஜாராமன் காட்டும் பாசமும் பிரியம்மும் சொல்லி மாளாது … அவனே மார்கெட் போய் அவர்களுக்கு பிடித்த காய்கறிகளை வாங்கி வந்து சமைத்து போட சொல்லுவான் மகிழ்வான் … மரியாதையுடன் வழியனுப்பியும் வைப்பான்…. இதை