கதைத்தொகுப்பு: ஒரு பக்க கதை

534 கதைகள் கிடைத்துள்ளன.

விவாகரத்து! – ஒரு பக்க கதை

 

 கோர்ட். நீதிபதி ஆசனத்தில் அமர்ந்திருக்க….. குற்றவாளி கூண்டுகளில் எதிரும் புதிருமாக கணவன் மனைவி கணேஷ்; – கமலா. நடுவில்… வக்கீல்கள் வரிசையை ஒட்டி இவர்கள் குழந்தைகள் பத்து வயது பாபு, ஏழு வயது கிருபா. நின்றார்கள். நீதிபதி கணேசைப் பார்த்து…… ”உங்க விவாகரத்துக்கான கடைசி கெடுவு நாளான இன்று இறுதி முடிவாய் கேட்கிறேன். உங்களுக்கு மனைவியோடு வாழ விருப்பமில்லை. விவாகரத்துத் தேவையா?” கேட்டார். ”தேவை சார் !” கணேஷ் தயங்காமல் பதில் சொன்னான். ”கமலா ! நீங்க


வீட்டுக்கு ஒரு….! – ஒரு பக்க கதை

 

 மழை வேண்டுமானால் வீட்டுக்கு ஒரு மரம் நட வேண்டும் என்று ஒரு காலத்தில் தொகுதி மக்களிடம் தீவிர பிரச்சாரம் செய்த அந்த முன்னாள் அமைச்சரின் சட்டசபைத் தொகுதியின் இடைத் தேர்தலும், இந்த பாராளுமன்றத் தேர்தலோடு வந்து விட்டது! அதனால் அவர் குட்டி போட்ட பூனை மாதிரி தொகுதியில் தினசரி வலம் வந்து கொண்டிருந்தார். அவர் தொகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு டாஸ்மாக் கடை இருந்தது. அதை உயர் நீதி மன்ற உத்திரவுப் படி மூட வேண்டிய நிர்ப்பந்தம்


அவன்..! – ஒரு பக்க கதை

 

 அலுவகத்தின் உள்ளே உம்மென்று நுழைந்த திவ்யா… இவளை ஏறெடுத்தும் பார்க்காத அபிஷேக்கைக் கண்டும் காணாமல் சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள். தூரத்தில் அமர்ந்திருந்த தீபன் இவளைக் கண்டதும் புன்னகைத்தான். இதுதான் இவளுக்கு எரிகிற தீயில் எண்ணையை விட்டது போலிருந்தது. வரட்டும்! இன்னைக்கு எதிரே உட்கார்ந்து ஆள் பேச வாய்ப்பே வைக்கக் கூடாது. அபிஷேக்கோடு மனமுறிவு, சண்டை, பேச்சுவார்த்தை இல்லை இருவருக்கும் காதல் முறிவு. என்பது தெரிந்து வலிய வந்து பேசி வழிந்து கவிழ்க்கப் பார்க்கிறான்.! என்னை அவன்


அப்பா..! – ஒரு பக்க கதை

 

 சந்திரன் புறப்பட்டுச் சென்ற அடுத்த வினாடி அடுப்படியில் இருந்த அம்மாவிடம் சென்றான் 25 வயது இளைஞன் அருண். “அம்மா..! அம்மா!” தோசை சுடுவதை நிறுத்தி.. “என்னடா..?” திரும்பிப் பார்த்தாள் தேவகி. “அப்பா என்ன சரியான கிறுக்கா..?” மகன் கேள்வி புரியாமல்… “ஏன்…?” குழப்பமாகப் பார்த்தாள் அவள். “இப்போ எங்கே புறப்பட்டுப் போறார்..?” “திருமணத்துக்கு..” “யார் வீட்டுத் திருமணம்..?” “அடுத்தத் தெரு அன்பரசன் வீட்டுத் திருமணம்.” “அவர் யார்..?” விளங்காமல் பார்த்தாள். “நமக்கு உறவா..?” “இல்லே..” “அப்புறம்..? ”


கணவர்..! – ஒரு பக்க கதை

 

 அதிகாலை மணி 5.30. கூப்பிடு தூரத்தில் எதிரே வேகுவேகுவென்று வியர்வை வழிய நடந்து வரும் கதிரேசனைப் பார்க்க எனக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். வயது ஐம்பது. ஓமக்குச்சி நரசிம்மன் உடல். அதில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு எதுவும் மருந்துக்குமில்லை என்பது சத்தியம். அப்படி இருக்கும்போது எதற்கு நடைப்பழக்கம் ? ‘பொழுது போகவில்லை என்றால் காலை எழுந்து பல் துலக்கி, காபி குடித்து…. வாசலில் வந்த தினசரியை எடுத்து மேய்ந்தால் மணி எட்டு. அப்புறம் அலுவலகம். அதற்கு எதற்கு நடை.?


வேலை..! – ஒரு பக்க கதை

 

 இந்த பத்தாவது நேர்முகத்தேர்வு கலாட்டாதான். கேட்கிற கேள்விக்கெல்லாம் ஏட்டிக்குப் போட்டி பதில்தான். உறவு, சிபாரிசு, பெரிய இடம்ன்னு ஆட்களைப் பொறுக்கி வைச்சுக்கிட்டு தேர்வை அரசாங்கத்தை ஏமாத்தற கண்துடைப்பு நாடகமாய் நடத்துறதுக்கு எதுக்குச் சரியான பதில்,பொறுப்பான பேச்சு ?! இப்போ கல்லூரி வளாகத் தேர்வும் கழிசடையாய்ப் போச்சு.! கம்பெனிக்காரங்க….மொதல்ல நல்ல கல்லூரிகளாய்ப் பார்த்து திறமையானவர்களைப் பொறுக்கி எடுத்துப் போனாங்க. அதை விளம்பரம் செய்து அந்த கல்லூரி காசு பார்த்தைப் பார்த்ததும்…அடுத்து உள்ள கல்லூரிகளெல்லாம் பசங்ககிட்ட வேலைக்குப் பணம் வாங்கி


யோசனை! – ஒரு பக்க கதை

 

 அலுவலகத்திற்குச் செல்லும் திவ்யாவைக் கண்ட ஆதவன் முகத்தில் மின்னல் மலர்ச்சி. அவள் அருகில் வண்டியை நிறுத்தி, ”ஒரு உதவி…? ” என்றான். ”சொல்லுங்க ? ” ”போற வழியில உள்ள தபால் பெட்டியில இந்த கவரை சேர்க்கனும்.” நீட்டினான். ”கண்டிப்பா…” கை நீட்டி வாங்கி நடந்தாள். நாலடி நடந்தவள் உறையைப் பார்த்து தன் கைபேசியை எடுத்து எண்கள் அழுத்தி காதில் வைத்து……. ”ஹலோ..!” என்றாள். ”சொல்லுங்க திவ்யா.? ” ”இப்போ பேசுறது என் நம்பர். சேமிச்சு வைச்சுக்கோங்க.”


பெண் குழந்தை – ஒரு பக்க கதை

 

 தனலெட்சுமி முகம் வாட்டமாக மூத்த மகன் வீட்டுப் படி ஏறினாள். ”என்னம்மா ? ” ”உன் தம்பிக்கு மருத்துவமனையில பெண் குழந்தைப் பிறந்திருக்கு.” ”அதுக்கு ஏன் நீ வாட்டம் ? ” ”ஏற்கனவே அவன் குடிகாரன். இப்போ தலைச்சன் பெண். அந்த மனவேதனையிலும் அடுத்துப் பெண் பிறக்கும் என்கிற யோசனை, பயத்திலும் அதிகம் குடிப்பான்.” ”அதுக்கு நான் என்ன செய்ய ? ” ”பொண்ணு பெத்துட்டேன்னு வருத்தப்படாதே. குடிக்காம கொள்ளாம இருந்தா பத்துப் பெண் புள்ளைகள் பொறந்தாலும்


அட்டாக் – ஒரு பக்க கதை

 

 மாசிலாமணிக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் பண்ணியே ஆகணும்னு டாக்டர் சொல்லிட்டார். இரண்டிலிருந்து மூன்று லட்சங்கள் ஆகலாம். சிக்கனமாக இருந்து, நேர்மையாக சம்பாதித்து முன்னுக்கு வந்தவர். கால்குலேட்டடு பெர்சன். வயது எண்பது. அவருக்கு சம்மதமில்லையென்றாலும், மனைவி கணவருக்கு பைபாஸ் பண்ணியே ஆக வேண்டும் என உறுதியாக இருந்தார். அன்புக்கணவர் ஆயிற்றே…! மூன்றரை லட்சங்களை விழுங்கி மாசிலாமணி உயிர் பெற்றார். வீட்டிற்கு வந்ததும், ”பைத்தியக்காரியா இருக்கியே, இந்த வயதில் இவ்வளவு செலவு தேவையா..? போனால் போகட்டும்- னு விடாம, காசைக்


விலங்கு – ஒரு பக்க கதை

 

 “சார்.. உங்க நண்பர் விஜயன் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கொலை நடந்த அன்று நீங்க அவர் வீட்டுக்குப் போயிருக்கீங்க உண்மைதானே?’ என்றார் இன்ஸ்பெக்டர் குமரன். “சார், நான் அவரைப் பார்க்கப் போனது செவ்வாய் கிழமை. அன்று அவரும் வீட்டில் இல்லை. வராண்டாவில் கிடந்த நாற்காலியில் கொஞ்சநேரம் குமுதம் படிச்சிட்டு வந்துட்டேன்… சார். மறுநாள்தான் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். அன்று நான் ஊரில் இல்லை…’ என்றா சதீஷ். “குமுதம் அங்கேயே கிடந்ததா?’ “இல்ல சார்.. வர்ற வழியில் ஹன்சிகா சிம்பு