கதைத்தொகுப்பு: ஒரு பக்க கதை

513 கதைகள் கிடைத்துள்ளன.

பாடம் – ஒரு பக்க கதை

 

 வீட்டுப்பாடம் எழுத அமர்ந்த பாலன்,தனது புத்தகப்பையைத் தலைகீழாகக் கவிழ்த்து கீழே கொட்டினான். அதிலிருந்து ஏராளமான பென்சில்கள், ரப்பர்கள், பேனாக்கள் கீழே விழுந்தன. அவதைப் பார்த்த பாலனின் அம்மா,”ஏதுடா இதெல்லாம்” என்று கேட்டார். “இது கோபிகிட்ட அடிச்சது. இது சுரேசு கிட்ட அடிச்சது” என்று பெருமையுடன் வரிசையாக சொல்லிக்கொண்டே சென்றான். தன் மகன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. அன்று இரவே பாலனின் தந்தையிடம் இந்த விஷயத்தைச் சொன்னார். “இவனுக்கு வீட்டுல என்ன குறைச்சல்? நம்ம மானத்தை


அம்மா – ஒரு பக்க கதை

 

 இரண்டு தங்கைகள், அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எனப் பெரிய குடும்பம். மூத்த பெண் நான்தான் குடும்பத்தைத் தாங்கும் தூண் என்பார் அப்பா. காலை ஏழரை மணிக்குக் கிளம்பி இரண்டு பஸ்கள், மின் ரயில் மாறி இடி ராஜாக்களின் உரசல்களுக்குத் தப்பி அலுவலகம் சேர்ந்தால் சில ஆண் அலுவலர்களின் கிண்டல், டார்ச்சர். உள்ளுக்குள் அழுது, வெளியில் சிரித்து நடித்து, மாங்கு மாங்கென்று வேலை செய்து, இரவு மீண்டும் அதே பஸ், மின் ரயில் என வீட்டுக்குப் போய்ச்


பட்டு மனசு – ஒரு பக்க கதை

 

 அம்மா உங்களுக்கு பட்டுப்புடவை உயிருன்னா, மருமக காயத்ரியை எதுக்கு தினம் பட்டுப்புடவையைக் கட்டச் சொல்லி சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்கீங்க..?” என்ற ராகவனிடம் தாய் சீத்தா… ” காரணம் இருக்கு…காயத்ரி குடும்பத்துக்கு நெசுவுத் தொழில். அவுங்க தொழில்ல, காயத்ரி மட்டும் பட்டுப்புடவை தயாரிப்பில் ஒரு ஜாம்பவானா இருந்தவ. ஒரு சமயம் அங்க போனப்ப, ஆன்ட்டி வாங்கன்னு, நெய்யறதை விட்டுட்டு ஓடி வந்து உட்காரச் சொல்லி அவ தயாரிச்ச பட்டுப் புடவைகளை காட்டிக்கிட்டு இருந்தாள். அவ கட்டியிருந்த கந்தல் புடவையில என்


தற்கொலை – ஒரு பக்க கதை

 

 நீங்க யாராவது பரீட்சையிலே ஃபெயிலாகியிருக்கீங்களா? அதனாலே… அப்பா, அம்மாட்டே திட்டு வாங்கியிருக்கீங்களா? அந்த வேகத்தில் தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கீங்களா? அந்த நிலைமைதாங்க நம்ம ஷர்மிக்கு வந்துடிச்சி! ஆனா….அதுக்கு முன்னாலே சமந்தா மிஸ்ஸை மட்டும் பார்க்கணும்னு ஆசை? மிஸ் வீட்டுக்கு போனாள், பார்த்தாள்…. அழுதாள்! தற்கொலையை மட்டும் மறைத்து விட்டாள். ஆனால்…. “கடைசியாய் உங்களைப் பார்த்துட்டு போவலாம்னு…’ சொன்ன அவளது வார்த்தை மட்டும் சமந்தா மிஸ்ஸை உறுத்தியது. “அட…. அசட்டுப் பெண்ணே!’ என்று புத்திமதிகளைச் சொன்னாள். எதிரே இருந்த


கஸ்டமர் – ஒரு பக்க கதை

 

 கசமுத்து பலசரக்கு கடையில் நான் நின்றிருந்தேன். ஒவ்வொருவராக வந்து பலசரக்கு சாமான்கள் வாங்கி சென்ற வண்ணம் இருந்தனர். ஒருவர் கருப்புகட்டி ஒரு கிலோ என்று கேட்க, ஏய் தம்பி சாருக்கு உடன்குடி கருப்புகட்டியை போட்டுக்கொடு என்றார் கசமுத்து. இன்னொரு பெண், அரை கிலோ துவரம்பருப்பு என்று கேட்க, அம்மாவுக்கு அந்த நயம் பருப்பை நிறுத்துக்கொடு என்றார். எனக்கு தெரியும் இவரிடம் இருப்பது ஒரே கருப்பு கட்டி. ஒரே துவரம்பருப்பு தான் என்று. இது பற்றி கடை முதலாளி


சம்பளம் – ஒரு பக்க கதை

 

 முதலாளி…ரெண்டு வருஷமா சம்பள உயர்வு கேட்டுட்டே இருக்கேன், அப்புறம் பார்ப்போம்னே சொல்லிட்டிருக்கீங்களே… ”இப்ப லாபம் கம்மியாயிருக்கு…செழிச்சி வரட்டும்.. கவனிப்போம்’’ பதில் சொல்லி குப்பனை அனுப்பினார் முதலாளி. மேனேஜருக்கு தாங்கவில்லை. ”முதலாளி…கம்பெனி லாபத்துலதானே ஓடுது. சம்பளத்தை கூட்டலாமே…” என்றார். ஒரு நிமிடம் உற்றுப்பார்த்தவர், ‘’அந்த குப்பன் இருக்கானே…தீடீர்னு பயங்கர குடிப்பழக்கத்துக்கு அடிமையாயிட்டான். குடுக்கற சம்பளத்தை குடிச்சே அழிக்கிறான். இப்ப சம்பளத்தை கூட்டினா அதையும் வீட்டுக்கு கொடுக்காமே குடிச்சே அழிப்பான். அவனோட குடிப்பழக்கத்தை குறைக்க முயற்சி பண்ணிட்டிருக்கேன். அது குறைஞ்சதுக்கப்புறம்


சர்வர் – ஒரு பக்க கதை

 

 “ஆர்டர் கொடுத்து, இருபது நிமிடங்கள் ஆவுது. சர்வர் இன்னும் நான் கேட்டதைக் கொண்டு வரவில்லை. இந்த மாதிரி சின்னப் பையன்களை வச்சுக்கிட்டு ஓட்டல் நடத்தினால் வர்றவங்க பட்டினியால் சாக வேண்டியதுதான்’ என்று முதலாளியிடம் கோபமாக கத்திவிட்டு எழுந்தார் சக்கரபாணி. “ஏண்டா சோம்பேறி! அவருக்குப் பின்னாடி ஆர்டர் கொடுத்தவங்களுக்கெல்லாம் கொண்டுவந்துட்டு, சாரை மட்டும் வெயிட் பண்ண வச்சுட்டே!’ தன் பங்குக்கு, சர்வர் குமாரை முதலாளி கடிந்து கொண்டார். “டென்ஷன் ஆகாதீங்க முதலாளி. சர்க்கரை வியாதிக்கு சாப்பிட வேண்டிய மருந்தை


லிஃப்ட்! – ஒரு பக்க கதை

 

 மார்த்தாண்டத்திலிருந்து களியக்காவிளை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வேகமாய் போய்க் கொண்டிருந்தான் விமல். வழியில் குழித்துறை ஸ்டாப்பில் பஸ்ஸுக்கு காத்துநின்ற ஒருவன் லிஃப்ட் கேட்டு வழி மறித்தான். விமலின் கால்கள் பிரேக்கை தொடாமலேயே அவனைக் கடந்து போனது. வீட்டில் வந்ததும் தனது மனைவியிடம் நடந்த நிகழ்வுகளை பட்டியலிட்டபோது வழியில் லிஃப்ட் கேட்ட விஷயமும் சேர்ந்து கொண்டது. “ஏங்க… அவருக்கு லிஃப்ட் குடுத்திருக்கலாமில்ல… இதெல்லாம் ஒரு மனிதாபிமானம் தானே… இத ஏன் செய்ய மாட்டேங்கறீங்க…?’ செல்லமாய் கடிந்து


தனிக்குடித்தனம் – ஒரு பக்க கதை

 

 சார், நம் கம்பெனியில பெண்கள் வேலை செய்யிற பகுதிக்கு சூப்பர்வைஸர் தேவைன்னு விளம்பரம் கொடுத்திருந்தோம் இல்லையா? அதுக்கு அப்ளை பண்ணவங்க எல்லாருக்கும் டெஸ்ட் வச்சு இன்டர்வியூ முடிச்சாச்சு. வனஜா, கிரிஜான்னு ரெண்டு பேரு சம தகுதியோட இருக்காங்க. அவங்கள்ல யாரை செலக்ட் பண்றதுன்னு நீங்கதான் முடிவு பண்ணனும் சார்” மானேஜிங் டைரக்டர் ராஜாவிடம், அவரது உதவியாளர் ஃபைல்களை கொடுதார். அந்த இருவரின் சுயவிவரங்களையும், தகுதிகளையும் நோட்டம் விட்ட ராஜா, ”கல்யாணமான இவங்க ரெண்டு பேர்ல யார் கூட்டுக்குடும்பம்,


கல்யாண வைபோமே – ஒரு பக்க கதை

 

 “அத்தே, இந்த மாசத்துலேருந்து எனக்கு இன்கிரிமெண்ட் வரும். பவானிக்காக நகைச்சீட்டில் சேரட்டுமா?” என்ற கங்காவை ஏறிட்டுப் பார்த்த கமலா, “ஆமா கங்கா, ஒன் தங்கச்சிக்குத் தான் யார் இருக்கா, ஒன் அம்மா ஒத்தை ஆளா என்ன செய்வா? நீயும் என் புள்ளையும்தான் பவானிக்குக் கல்யாணம் காட்சி செய்யணும்…தாராளமா சீட்டுல சேரு’’ என்றாள். “நீங்க மாமியாரக் கிடைக்கறதுக்கு நா குடுத்து வச்சிருக்கணும், அத்தே. என் கல்யாணத்தின் போதும், நீங்க அது வேணும், இது வேணும்னு நச்சரிக்கலே. இப்பவும் என்