கதைத்தொகுப்பு: ஒரு பக்க கதை

491 கதைகள் கிடைத்துள்ளன.

குழந்தை.. – ஒரு பக்க கதை

 

 “ஒன்னு போதும்ன்னு முடிவெடுத்து பெத்து வளர்த்தது, மூணு வருஷம் வளர்ந்து, விபத்துல போய் பத்து மாசம் ஆச்சு. உனக்கு… அடுத்து அறுவை சிகிச்சை செய்து குழந்தைப் பெத்துக்கிறதிலே விருப்பமில்லை. எனக்கும் அப்படி. நாம கடைசிவரை இப்படியே இருக்கனுமா..? – கேட்டு தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான் ஆனந்த். “உங்க விருப்பம் என்ன..” நந்தினி அவனைத் திருப்பிக் கேட்டாள். “கைநிறைய சம்பாதிக்கிற நாம ஏன் வெறுமனே வாழ்ந்து மடியனும்..? ஏதாவது ஒரு அனாதை குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாமே…? அதுக்கும்


பொய் – ஒரு பக்க கதை

 

 பக்கத்துக்கு வீட்டு குடிசைக்குள் நுழைந்த என் மனைவி மரகதம் கையில் மூடிய கிண்ணத்துடன் திரும்பி வந்தாள். வழியில் அமர்ந்திருந்த எனக்கு…. கருவாட்டுக் குழம்பு வாசனை கம கமவென்று என் மூக்கில் ஏறியது. புரிந்து விட்டது! அந்த வீட்டிலிருந்து இதை வாங்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் பிழைப்புக்காக வெளியூரிலிருந்து வந்தவர்கள். கணவர் வாய் பேச முடியாத மனிதர் கூலித் தொழிலாளி. மனைவி, இரண்டு பிள்ளைகளோடு பிழைப்புத் தேடி வந்தவர்களுக்கு ஊர் பெரிய மனிதர் என்கிற முறையில் என்


யோக்கியன் – ஒரு பக்க கதை

 

 அதிகாலை நடைப்பயிற்சி. நடு சாலையில் கிடந்தது ஒரு இளநீர். தூரத்துப் பேருந்து நிலையத்தின் அருகில் தினம் ஒரு இளநீர் வண்டி உண்டு. அதில் வாங்கிச் சென்ற எவரோ ஒருவர்தான் வழியில் தவற விட்டிருக்கிறார்கள்! – தெளிவாகத் தெரிந்தது. இது போக்குவரத்திற்கு இடைஞ்சல். மேலும் சைக்கிளில் பள்ளிப் பிள்ளைகள் டியூசன் சென்று வருகிற வேளை. தடுக்கி விழா வாய்ப்பு உண்டு. எடுத்தேன். இரு நிமிட நடையில் அந்த இளநீர் வண்டியை அடைந்தேன். “என்ன சார்..?” வியாபாரி கேட்டான். “உன்கிட்ட


பரிசு – ஒரு பக்க கதை

 

 அம்மா ரெடி மிக்ஸ் சமையல் போட்டி ஊர் ஊராக நடத்தும் பொறுப்பு சமையல் நிபுணர் செல்லம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நிறைய ஊர்களில் பரிசுக்குரிய போட்டியாளரை தேர்ந்தெடுப்பது கஷ்டமாகவே இல்லை. ஆனால் கும்பகோணத்தில் மட்டும் ஐந்து பேர் நல்ல சுவையுடன் தயாரித்திருந்தார்கள். அவர்களில் ஒருவரை மட்டும் எப்படி தேர்ந்தெடுப்பது குழம்பித்தான் போனாள். ஐந்து பேரில் நான்கு இளம் பெண்கள், ஒருவர் வயதான பெண்மணி. அவருடன் வந்திருந்த கணவர் “ இதற்கு போய் என்ன குழப்பம் ஐந்து பேரிடமும் தனித்தனியாக இந்த


மாற்றம்..! – ஒரு பக்க கதை

 

 வந்து நின்ற அந்த பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏறி, ஜன்னலோரமாக அமர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான் ரவி. அதே வேகத்தில், அரக்கப்பரக்க இடம்பிடித்து அருகில் அமர்ந்தவனைப் பார்த்தான். ஆறுதலாக இருந்தது. அவன் ஒல்லியாக இருந்தான். பஸ் பயணம் என்றாலே என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கு? ஜன்னலோரம், சீட்டின் மறுஓரம் தூண் கம்பி இருக்கக்கூடாது. இருந்தால் நிம்மதியாக உட்கார முடியாது. பக்கத்திலிருப்பவன் குண்டாக இருக்கக் கூடாது. இப்படி எதை எதையோ மனம் தேடுகிறது. பஸ் புறப்பட்டு, பத்து நிமிடம்


அந்த இனம்… – ஒரு பக்க கதை

 

 தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகி விட்டிருந்தது…. எங்கு பார்த்தாலும் பலவித கட்சிகளின் கொடிகள்…. வண்ணங்கள்…. பிரச்சார பொன்மொழிகள்…. வாக்குறுதிகள்…. ஒரு கட்சியின் தலைவர் (பெயர், மற்றும் ஆணா பெண்ணா என்பதை அவரவர் கற்பனைக்கு!!) ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். தலைவர் என்பதால் அவருக்கு பலத்த பாதுகாப்பு இருந்தது…. எங்கு சென்றாலும் முன்னும் பின்னும் நான்கு படை வீரர்கள், இயந்திரத் துப்பாக்கியுடன் அவரை சூழ்ந்து காவல் காத்தனர்….. அவர் நடந்தாலும்…. உட்கார்ந்தாலும்…. பொதுவாக ஒருத்தருக்கு ஒரு நிழல்


குறைந்த லாபம் – ஒரு பக்க கதை

 

 ஒரு துண்டு வியாபாரி மனைவியிடம், இருபது துண்டு இருக்கிறது, நான் சந்தைக்கு போய் விற்பனை செய்து வருகிறேன் என்று சொன்னார். மனைவி என்னங்க! வரும்போது ஒரு சிற்பம் அரிசி வாங்கிட்டு வந்துருங்க. அரிசி இன்னைக்கு சமைக்க மட்டும் தான் இருக்குது. வியாபாரி மகன்!, அப்பா இன்னைக்கு ஸ்கூல் லீவு நானும் உங்கக்கூட வரேன். இருவரும் சந்தைக்கு போனார்கள். ஒருவர் வியாபாரியிடம் துண்டு எவ்வளவு என்று கேட்டார். வியாபாரி ஒரு துண்டு ₹55 ரூபாய் என்று சொன்னார். இதேபோல்


ஒரு பொய்யாவது சொல்…! – ஒரு பக்க கதை

 

 நள்ளிரவு.  மாடியில் தனியாய் படித்துக் கொண்டிருந்த மாலினியை கத்தியோடு நெருங்கினான்.. காதலித்து ஏமாந்துபோன குமார். சுதாரித்துக் கொண்டவள்,  தைரியத்தை வர வழைத்துக் கொண்டு ஒரு கணம் யோசித்துவிட்டு, ‘நில்..! நெருங்காதே, என்னைக் கொல்லப் போகிறாயா?’  என்றாள். ‘ஆமாம்! எனக்குக் கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாத்!  நீ உயிரோடு இருக்கக் கூடாது!’ நெருங்கினான். ‘இதோ பார், நான் கொரானாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப் படுத்தப் பட்டிருக்கேன்…! உனக்கும் தொற்று பரவிவிடப்  போகிறது…!  உன் கையால் சாவது எனக்கு சந்தோஷம்தான். 


நேர்மை – ஒரு பக்க கதை

 

 ஒரு மாம்பழ வியாபாரி சைக்கிளில் மாம்பழம் விட்ருக்கொண்டு போகிறான், “கிலோ ₹30 கிலோ ₹30” என்று கூவிக்கொண்டு போகிறான். மாம்பழக் காரரே நில்லுங்கள்! என்று ஒருவர் கூறினார். கிலோ ₹30 என்று வியாபாரம் செய்து கொண்டு இருந்தான். மாம்பழம் வாங்குவதற்கு ஐந்து, ஆறு நபர்கள் வந்துவிட்டார்கள். ஒரு பெண் இரண்டு கிலோ மாம்பழம் வாங்கி இருக்கிறேன், ஒரு மாம்பழம் அதிகமாக கொடு என்று கேட்டாள். வியாபாரி எடைக்கு மேல் ஒரு பழம் கூட தர மாட்டேன் என்று


எப்போது புத்தி வரும்?

 

 நிலக்கிழார் நல்லுச்சாமி பிள்ளை என்றால் கீரனூரில் அனைவருக்கும் தெரியும். அவருக்கு இரு மனைவிகள் இருந்தும் குழந்தைகள் இல்லை. அவர் இறந்த பதினாறாம் நாள் சடங்கு முடிந்த அன்று, அவரது விழக்கறிஞர் அவரது இல்லத்திற்கு வந்து, அவருக்குள்ள 24 ஏக்கர் நஞ்சை நிலத்தையும் ஆளுக்கு 12 ஏக்கர் வீதம் எழுதி வைத்திருக்கிறார் என்றும், அவற்றிற் குரிய ஆதரவுகளை இரு மனைவிகளிடமும் பிரித்துக் கொடுத்தார். அவரது பெரிய வீட்டைமட்டும் இளம் மனைவிக்கு எழுதி வைத்து இருக்கிறார் என்று கூறி, அந்த