கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

182 கதைகள் கிடைத்துள்ளன.

குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

 

 துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன காரணம்? எவனோ குதிரைக்காரனாம்! அவனிடம் இருந்த குதிரைகளை விலை பேசினார்களாம் இவரின் சகோதரர்கள். ஆனால் அவனோ ‘குதிரைகளுக்கு விலையாகப் பொன்-பொருள் எதுவும் வேண்டாம். எனது கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும். அதே நேரம்… சரியான பதிலைச் சொல்லாவிட்டால், நான் போடும் வட்டங்களுக்குள் நீங்கள் அடைபட வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தானாம்! இதற்கு ஒப்புக் கொண்ட தருமரின்


நாரதருக்கு மீன் உணர்த்திய பாடம்!

 

 ஒரு முறை நாரதர், பெரும் துக்கத்தில் இருந்தார். எவ்வளவோ முயன்றும் அந்தத் துக்கத்தில் இருந்து அவரால் மீள முடியவில்லை. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று குழம்பிப் போய், இறுதியில் மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார். மகாவிஷ்ணு நாரதரிடம், ”பேரானந்த ஸ்வரூபமான என் அருகில் இருக்கும் நீயும் எப்போதும் ஆனந்தமாகவே இருக்க வேண்டும். சரி, உன் துயர் நீங்குவதற்கு ரிஷிகேசம் என்ற தலத்துக்குச் செல். துக்கத்தில் இருந்து நீ மீள்வாய்” என்று அறிவுரை கூறினார். அவ்வாறே நாரதரும் ரிஷிகேசத்துக்குப் புறப்பட்டார்.


வதைத்தவனையும் வாழ வைத்த கொக்கு!

 

 வட தேசத்தில் கௌதமன் எனும் ஏழை அந்தணன் ஒருவன், ஒழுக்கமற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, தவறான செயல்களில் பணம் சம்பாதித்து வந்தான். ஒரு நாள் பசியுடனும் களைப்புடனும் வனத்தில் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து இளைப்பாறினான். இந்த மரக் கிளையில், நாடீஜங்கன் எனும் தெய்வீகக் கொக்கு ஒன்று வசித்து வந்தது. இதன் மேனியெங்கும் பொன் ஆபரணங்கள்! கௌதமனைக் கண்ட கொக்கு, அவனைத் தன் விருந்தாளியாகவே எண்ணி வரவேற்று, அவனுக்கு உணவும் அளித்தது. இதில் மகிழ்ந்த கௌதமன், தன்


அர்ஜுனனுக்கு காண்டீபம் கிடைத்த கதை!

 

 சுவேதகி எனும் மன்னன், யாகங்கள் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தான். தன் வாழ்நாள் முழுவதையும் யாகம் செய்வதற்கே அர்ப்பணித்திருந்தான். தொடர்ந்து நூறாண்டுகள் வரை மாபெரும் வேள்வி ஒன்றை செய்ய வேண்டும் என்று விரும்பினான் மன்னன். இதுகுறித்து சிவனாரை வேண்டி கடும் தவம் மேற்கொண்ட மன்னனுக்குக் காட்சி தந்து அருளினார் சிவபெருமான். ”என்ன வரம் வேண்டும்?” என்று சிவனார் கேட்க… ”அடியேன் நூறாண்டு யாகம் நடத்த உதவுங்கள்” என்று வேண்டினான் மன்னன். ”முதலில் பன்னிரண்டு ஆண்டுகள், நெய் தாரைகளால்


ஏழைக்கு இரங்குபவனே உண்மையான பக்தன்!

 

 மூட்டை தூக்கும் தொழிலாளியான ராமதேவன், தினமும் மாலையில் நீராடி, ஸ்ரீபாண்டுரங்கனைப் பாடி பூஜித்து, பழம்- கற்கண்டுகளை பக்தர்களுக்கு வழங்கி வந்தான். சம்பாதிப்பதில் ஒரு பங்கை உண்டியலில் சேமித்து வைத்து, வருடா வருடம் பண்டரிபுரம் சென்று, விட்டலனுக்கு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம். உண்டியல் பணத்தை எண்ணினான் ராமதேவன். ‘இதில் விட்டலனுக்கு நூல் வேஷ்டியும் அங்க வஸ்திரமும்தான் வாங்க முடியும்’ என வருந்தினான். பிறகு மனதைத் தேற்றியபடி, நூல் வேஷ்டி மற்றும் அங்க வஸ்திரத்தை வாங்கிக் கொண்டு பண்டரிபுரம் நோக்கி


கடைத்தேற்ற உதவும் கர்ம யோகம்!

 

 வினைப்பயன் காரணமாக நரக லோகத்தில் கஷ்டப்படுபவர்களையும், துர்மரணம் ஏற்பட்டு முக்தி அடையாமல் அல்லாடுபவர்களையும் கடைத்தேற்ற பகவத் கீதையின் கர்ம யோகம் துணை புரியும். இந்தத் தகவலைச் சொல்லும் ஒரு கதை பத்ம புராணத்தில் உள்ளது. அந்தக் கதை இதுதான்: ஜடன் எனும் கௌசிக குலத்தைச் சேர்ந்த அந்தணன், ஜனஸ்தானம் என்ற ஊரில் வாழ்ந்து வந்தான். குல வழக்கத்துக்கு மாறாக வியாபாரத்தில் ஈடுபட்டு, பொன்னும் பொருளும் சேர்ப்பதில் குறியாக இருந்தான் ஜடன். நாளுக்கு நாள்…பணம் சேர்ந்ததுடன், தீயவர்களது சகவாசமும்


குருவாயூரப்பா… அருள் புரிவாயப்பா!

 

 அடியவருக்கும் அடியவன் ஆனவன் ஆண்டவன். நாராயண பட்டத்ரி, பில்வமங்களர் மற்றும் குரூரம்மை ஆகியோரின் வாழ்வில் ஸ்ரீகுருவாயூரப்பன் நிகழ்த்திய அருளாடல்கள் இதை மெய்ப்பிக்கும்! வாத நோயால் அவதியுற்ற நாராயண பட்டத்ரி, தன்னிடம் நேரில் பேசிய ஸ்ரீகுருவாயூரப்பனின் அனுக்கிரகத்துடன் எழுதிய ஒப்பற்ற நூலே நாராயணீயம்! பில்வ மங்களரும் குரூரம்மையும்… தினமும் தங்களது வீட்டுக்கு, பகவான் ஸ்ரீகிருஷ்ணரே வந்து விருந்துண்டு செல்லும் பாக்கியம் பெற்றவர்கள்! பில்வமங்களர்… ஏகாதசி, தசமி மற்றும் சிரவணம் (திருவோணம் நட்சத்திரம்) ஆகிய நாட்களில், துளசி தீர்த்தத்தை மட்டும்


ஏழை பக்தனுக்கு… பொன்னை அள்ளிக் கொடுத்த பெருமாள்!

 

 காஞ்சி- ஸ்ரீஅத்திவரதரின் அருளால், வேகவதி நதிக்கரையில் புதையல் பெற்று, சோழப் பேரரசனிடம் இருந்து சிறை மீண்டவர் திருமங்கை ஆழ்வார்! இவருக்கு மட்டுமல்ல, முகுந்தன் என்ற அடியவருக்கும்… பெருமாள், பொருள் தந்து அருள் புரிந்த திருக்கதை ஒன்று உண்டு! காஞ்சிபுரத்தில் காஸ்யபன் என்ற ஏழை அந்தணர் ஒருவர் வாழ்ந்தார். வறுமையில் இருந்து மீள முடியாமல் தவித்தது அவர் குடும்பம். ஒரு நாள் அவரின் மூத்த மகனான முகுந்தன், ”தந்தையே! நமது வறுமை நீங்க வேண்டும். எனவே, வளம் மிகுந்த


ஏன் நிறைய கடவுள்கள்?

 

 பேரரசர் அக்பர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அமைச்சராக இருந்த பீர்பாலோ இந்து மதத்தைச் சேர்ந்தவர். இதனால் சில நேரங்களில் அவர்களிடையே விவாதங்கள் நிகழும். ஒரு முறை பீர்பாலிடம் அக்பர், ”எங்கள் இஸ்லாம் மதத்தில் ஒரே கடவுள்தான் உள்ளார். அதே போல கிறிஸ்தவ மதம், புத்த மதம் போன்றவற்றுக்கும் ஒரே கடவுள்தான் உள்ளார். ஆனால் உங்கள் இந்து மதத்தில் மட்டும் நிறையக் கடவுளர்கள் உள்ளார்களே?” என்று கேட்டார். அதற்கு பீர்பால், ”பேரரசர் அவர்களே! எல்லாக் கடவுளரும் ஒன்றுதான். அவரவர்


கெளசிக கோத்திரம் வந்த கதை!

 

 இந்திரனுக்கு சமமான புத்திரன் ஒருவன் தனக்குப் பிறக்க வேண் டும்’ என்பதற்காக தவம் இருந்தான் சாம்பன் என்ற மன்னன். சாம்பனின் தவ வலிமையைக் கண்டு இந்திரனே அவன் முன் தோன்றி, ”நானே உனக்கு மகனாகப் பிறப்பேன்” என்று கூறினான். அதன்படி சாம்பனின் மனைவிக்கு, ‘காதி’ என்ற புத்திரன் பிறந்தான். அவனுக்கு ‘கௌசிகன்’ என்ற பெயரும் உண்டு. கௌசிகன் வளர்ந்து பெரியவனானான். இவனுக்கு குணவதியான பெண் ஒருத்தி மனைவியானாள். இவர்களுக்கு பிறந்தவள் சத்தியவதி. பிருகு முனிவரின் புதல்வனான ரசீக