கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

178 கதைகள் கிடைத்துள்ளன.

காரைக்கால் அம்மையாருக்கு கயிலாய வரவேற்பு!

 

 இறவாத அன்பு வேண்டும்… பிறவாமை வேண்டும்… பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும்!” _ சிரம் தாழ்த்தி கரம் கூப்பி ஈசனை வேண்டி நிற்கும் பேயுருவை வியப்புடன் நோக்கினாள் பார்வதியாள்! வெள்ளிப் பனிச் சிகரங்களை… தரையில் தலை பதித்துக் கடந்து கயிலையை நோக்கி வரும்போதே இந்தப் பேயுருவைக் கவனித்து விட்ட உமையவள், ”யார் இது?” என்று தன் நாயகனிடம் விசாரித்தாள். அவளிடம், ”எம்மைப் பேணும் அம்மை இவள்!” என விளக்கமளித்த பரமனார், ”அம்மையே வருக!” என்று பேயுருவை


தருமபுத்திரர் சொன்ன பொய்!

 

 அதிர்ந்து நின்றார் யுதிஷ்டிரர். மகாரௌரவம், கும்பிபாகம், காலசூத்திரம், அசிபத்ரவனம், அந்த கூபம், கிருமி போஜனம் முதலான நரகக் காட்சிகளைக் கண்டு உறைந்து போனார் அவர். ‘அவலக் குரல்கள், அதிபயங்கர தண்டனைகள்- சித்ரவதைகள்… என்று நரகத்தின் கொடுமையைக் காணும் துர்பாக்கியம் எனக்கு வாய்த்தது எப்படி? அதுவும் சொர்க்கம் செல்லும் வழியிலா இந்த அனுபவம் நேர வேண்டும்?’_ மனம் வேதனையில் வாட, நரகின் கொடுமையைக் காண முடியாமல் கண்களை மூடிக் கொண்டார் யுதிஷ்டிரர். அப்போது – ‘தருமபுத்திரா!’ என்று எவரோ


சோதிக்க வந்த ஜோதிசொரூபன்!

 

 அமர்நீதி நாயனார் திருநட்சத்திரம் – ஜூன்:28 கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருநல்லூர். முன் னொரு காலத்தில் இங்கு வசித்த அமர்நீதி என்பவர் துணி வியாபாரம் செய்து வந்தார். சிவபக்தியில் சிறந்த இந்த அடியவர், தனது வருமானத்தின் பெரும்பகுதியை இந்தத் தலத்தில் இருக்கும் கல்யாண சுந்தரேஸ் வரர் ஆலயத்துக்காக செலவிட்டார். மேலும், தர்மசாலை ஒன்றும் நிறுவி, சிவனடி யார்களுக்கு உணவும் உடையும் அளித்து மகிழ்ந்தார். கூடவே, கோவணமும் தருவார்! சிவத்தொண்டில் சிறந்த அமர்நீதியின் பக்தியை உலகறியச் செய்ய சித்தம்


இதுவல்லவோ குருபக்தி!

 

 வியாக்ரபாதரின் மகன் உபமன்யு; இவன், வசிஷ்டரின் தங்கை மகனும்கூட! குருகுலத்தில் கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் உபமன்யுவை அழைத்த குரு, ”இங்குள்ள ஐம்பது பசுக்களையும் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வா!” என்றார். அதன்படி பசுக்களை ஓட்டிச் சென்று மேய்த்த உபமன்யு மாலையில், அவற்றைத் தொழுவத்தில் கட்டிவிட்டு, சாப்பிட அமர்ந்தான். ”உனக்கு உணவு வழங்கக் கூடாது என்பது குருநாதரின் உத்தரவு!” என்றார் சமையல்காரர். மறுபேச்சு பேசாமல் எழுந்து சென்றான் உபமன்யு. ஒரு வாரம் கழிந்தது. குருகுலத்தில் எதுவும்


பதமநாப ஸ்வாமி வந்த கதை!

 

 வில்வமங்கல சந்நியாசி ஒருவர், ஸ்ரீமந் நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை புரியும் நேரங்களில், பகவான் ஒரு சிறுவனாக வந்து அந்த சந்நியாசிக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார். அவரைக் கட்டிப் பிடித்து விளையாடுவதும், பூஜை சாமான்களைக் கலைத்தபடியும் கஷ்டங்களைக் கொடுத்தார். ஒரு நாள்… கண்ணனின் தொந்தரவுகளைத் தாங்க முடியாத சந்நியாசி கோபத்தில், ”உண்ணீ (சின்னக் கண்ணா)… தொந்தரவு செய்யாதே” என்று கூறி அவனைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டார். கோபமுற்ற கண்ணன் சுயரூபத்தில் அவர் முன் தோன்றி,


அட்சய திருதியையும் அன்னதானமும்!

 

 அட்சய திருதியை! சித்திரை மாதம், வளர்பிறை திருதியையில் வரும் இந்த நாளில்தான் உலகைப் படைத்தான் பிரம்மன். கண்ணனின் அருளால் குசேலன், குபேரன் ஆனதும், சூரியதேவனின் அருளால் பாஞ்சாலிக்கு அட்சய பாத்திரம் கிடைத்ததும் இந்த நாளில்தான்! ‘அட்சயம்’ என்றால் அழியாதது; அள்ள அள்ளக் குறையாதது என்று பொருள். இந்த நாளில் செய்யும் புண்ணிய காரியங்க ளுக்கான பலன்கள் மென்மேலும் பெருகுமாம். அதிலும்… இந்த நாளில் அன்னதானம் செய்வது வெகு சிறப்பு! அப்படியென்ன மகிமை அன்னதானத்துக்கு? சத்தியபுரி எனும் ஊரில்,


குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

 

 துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன காரணம்? எவனோ குதிரைக்காரனாம்! அவனிடம் இருந்த குதிரைகளை விலை பேசினார்களாம் இவரின் சகோதரர்கள். ஆனால் அவனோ ‘குதிரைகளுக்கு விலையாகப் பொன்-பொருள் எதுவும் வேண்டாம். எனது கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும். அதே நேரம்… சரியான பதிலைச் சொல்லாவிட்டால், நான் போடும் வட்டங்களுக்குள் நீங்கள் அடைபட வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தானாம்! இதற்கு ஒப்புக் கொண்ட தருமரின்


நாரதருக்கு மீன் உணர்த்திய பாடம்!

 

 ஒரு முறை நாரதர், பெரும் துக்கத்தில் இருந்தார். எவ்வளவோ முயன்றும் அந்தத் துக்கத்தில் இருந்து அவரால் மீள முடியவில்லை. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று குழம்பிப் போய், இறுதியில் மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார். மகாவிஷ்ணு நாரதரிடம், ”பேரானந்த ஸ்வரூபமான என் அருகில் இருக்கும் நீயும் எப்போதும் ஆனந்தமாகவே இருக்க வேண்டும். சரி, உன் துயர் நீங்குவதற்கு ரிஷிகேசம் என்ற தலத்துக்குச் செல். துக்கத்தில் இருந்து நீ மீள்வாய்” என்று அறிவுரை கூறினார். அவ்வாறே நாரதரும் ரிஷிகேசத்துக்குப் புறப்பட்டார்.


வதைத்தவனையும் வாழ வைத்த கொக்கு!

 

 வட தேசத்தில் கௌதமன் எனும் ஏழை அந்தணன் ஒருவன், ஒழுக்கமற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, தவறான செயல்களில் பணம் சம்பாதித்து வந்தான். ஒரு நாள் பசியுடனும் களைப்புடனும் வனத்தில் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து இளைப்பாறினான். இந்த மரக் கிளையில், நாடீஜங்கன் எனும் தெய்வீகக் கொக்கு ஒன்று வசித்து வந்தது. இதன் மேனியெங்கும் பொன் ஆபரணங்கள்! கௌதமனைக் கண்ட கொக்கு, அவனைத் தன் விருந்தாளியாகவே எண்ணி வரவேற்று, அவனுக்கு உணவும் அளித்தது. இதில் மகிழ்ந்த கௌதமன், தன்


அர்ஜுனனுக்கு காண்டீபம் கிடைத்த கதை!

 

 சுவேதகி எனும் மன்னன், யாகங்கள் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தான். தன் வாழ்நாள் முழுவதையும் யாகம் செய்வதற்கே அர்ப்பணித்திருந்தான். தொடர்ந்து நூறாண்டுகள் வரை மாபெரும் வேள்வி ஒன்றை செய்ய வேண்டும் என்று விரும்பினான் மன்னன். இதுகுறித்து சிவனாரை வேண்டி கடும் தவம் மேற்கொண்ட மன்னனுக்குக் காட்சி தந்து அருளினார் சிவபெருமான். ”என்ன வரம் வேண்டும்?” என்று சிவனார் கேட்க… ”அடியேன் நூறாண்டு யாகம் நடத்த உதவுங்கள்” என்று வேண்டினான் மன்னன். ”முதலில் பன்னிரண்டு ஆண்டுகள், நெய் தாரைகளால்