கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

231 கதைகள் கிடைத்துள்ளன.

ஈசா உபநிஷத் கதை

 

 ஒரு முறை , வசிஷ்டர், துர்வாசர், விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள், மேரு மலையில் எல்லா முனிவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் . பெரிய ஞானிகள், முனிகள், ரிஷிகள் அந்த சந்திப்புக்கு வர வேண்டும் எனக் கட்டளை . வராவிட்டால், பெரிய தோஷத்திற்கு, பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு, ஆளாக நேரிடும் எனவும் ஆணை விதித்தார்கள். எல்லா முனிவர்களும் ஆஜர். ஆனால், வைசம்பாயனர் எனும் முனிவர் மட்டும் ஏதோ காரணத்தினால், வர முடியவில்லை . இதனால் கோபமடைந்த துர்வாசர், விஸ்வாமித்திரர்,


ஏது காரணம்!? ஏது காவல்!?

 

 புறப்பட்டு இரண்டு நாட்கள் ஆனாலும் அவர்களிடம் ஏதும் களைப்பு தெரியவில்லை, ஏற்கனவே தொகுத்து வைத்துள்ள பாடல்களை பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் ஆனந்தமாக பயணிப்பதால் அவர்களுக்கு தலைச்சுமையும் தெரியவில்லை, நேற்று இரவு அவர்களது பயணக்குழு தங்கியிருந்த இடம் காடுசார்ந்த முல்லை நிலம் ஒன்றின் எல்லை பகுதியாக இருந்தது, மக்கள் வசிக்கும் ஊர்புறங்களும் கூப்பிடும் தூரத்திலேயே இருந்தது, அவர்களது கூட்டத் தலைவருக்கு தனிக்கூடாரம் அடித்திருந்தார்கள் அவரது மெய்காவலர்களும் பணியாளார்களும் இன்று அதிகாலையிலேயே எழுந்து புறப்பாட்டுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள் அப்பொழுது தொண்டர்கள்


கதோபநிஷத் கதை

 

 கதோபநிஷத்தில் வரும் ஒரு முக்கியமான கதை நசிகேதன் பற்றியது. அந்த கதையில் முக்கிய அம்சம் நசிகேதன் எனும் ஒரு சிறுவனுக்கும் யமதர்மனுக்கும் இடையில் நடக்கும் சர்ச்சை. வேத காலத்தில் , நசிகேதனின் தந்தை வாஜஸ்வர முனிவர், ஸ்வர்க லோகம் வேண்டி, விஸ்வஜித் எனும் பெரும் யாகம் செய்தார். பெரிய முனிவர்கள், ரிஷிகள் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். விசுவஜித் யாகத்தின் நிபந்தனை விசித்திரமானது. உலகில் உள்ள அனைத்தையும் ஆளும் சக்தி பெறவே இந்த யாகம். ஆனால், அது


கேனோ உபநிஷத் கதை

 

 முன்னொரு காலத்தில், தேவர்கள் அசுரர்களை வெற்றி பெற்ற சமயம். அசுரர்களை ஓட ஓட விரட்டி அடித்த சமயம் . அப்போது, தேவர்களுக்கு ஒரு கர்வம் வந்து விட்டது . நம்மை போல் யாரும் இல்லை, நம்மை தோற்கடிக்க இந்த உலகத்தில் எவரும் எல்லை , என்ற ஆணவத்தில் திரிந்து கொண்டிருந்தனர். ஒரு நாள்., தேவர்களான இந்திரன், வருணன், வாயு, அக்னி போன்றவர்கள் , சுய தம்பட்டம் அடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்த போது, பரமாத்மா பார்த்தார். இது


பித்து

 

 நீ பார்த்துள்ளாயா!? நீ அறிவாயா!? என்று ஜனங்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர், மக்களின் ஆச்சர்யம்தான் கட்டுங்கடங்காமல் இருந்தது, பிறந்து வளர்ந்தது முதல் இந்த ஊரையே தாண்டிபோகாத பல முதியவர்கள் கூட வாயில் விரல் வைத்து யோசித்து பார்த்தனர், ஒருசில வாய்ச்சொல் வீரர்களான முதியவர்களே!! சிற்சில பொய்மொழிகளையும் கூறிக் கொண்டிருந்தனர் “முன்பு நம்ம ஊர் வடக்கு தெருவில் இவர் வசித்தது உண்மைதான் பின்பு சிதம்பரம் பக்கம் போய்விட்டார்!” என்று அவர்கள் அவிழ்த்து விட்டனர். ஆனால் அது அப்பட்டமான


ஸ்திர புத்தி

 

 யாருடைய மனம் துக்கத்தில் துவள்வதில்லையோ, சுகத்தை நாடுவதில்லையோ, பற்று பயம் கோபம் ஆகியவற்றை விட்டவன் யாரோ ,அவன் புத்தி விழிப்புற்ற முனிவன் என்று கூறப்படுகின்றான். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் பாண்டவர்களில் மூத்தவர் , தருமபுத்ரர் எனும் யுதிஷ்டிரன். ஸ்திர புத்தி உடையவர். ஸ்திர புத்தி பற்றி கீதை சொல்கிறது ( 2.56) து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:। வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே॥ 2.56 ॥ “துன்பங்களிலே மனம் கெடாதவனாய் இன்பங்களிலே ஆவல் அற்றவனாய் அச்சமும் சினமும் தவிர்த்தனவாய் அம்முனி மதியிலே உறுதி


திருமண்

 

 ஹொய்சள தேசத்தில் திருமண் அணிபவர்கள் யாருமில்லை என்பதால், அப்போது ஸ்ரீராமானுஜருக்கு அது ஒரு பெரும் பிரச்னையாகிவிட்டது. தேசத்தில் இருப்பவர்கள் அத்தனை பேருக்கும் திருமண் வேண்டும், அதுவும் தினமும் வேண்டும். என்ன செய்யலாம்? ஸ்ரீராமானுஜர் உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்தார்… அன்றிரவு அவருக்கு ஓர் கனவு வந்தது. கனவில் சாட்ஷாத் பெருமாள் தோன்றினார். அந்தக் கனவில், “ராமானுஜரே, உடனே கிளம்பி யதுகிரிக்குச் செல்லுங்கள். அங்கே வேத புஷ்கரணி என்றொரு குளம் இருக்கிறது. அதன் வட மேற்கு மூலையில் நீங்கள்


ஜானகிக்காக மாத்திரமல்ல

 

 சுயம்பிரகாசர் எங்கேயோ ஒரு பொதுக்கூட்டத்திற்குப் போய்விட்டுத் திரும்பியவர், தீவிர சிந்தனையில் ஈடுபட்டவர்போல அறையில் குறுக்கும் நெடுக்குமாக உலாவ ஆரம்பித்தார். நான் முதலில் அவர் முகத்தைக் கவனிக்காததால், “சாப்பிடுவோமா?” என்றேன். நான் சொன்னது அவர் காதில் விழாததுபோல, அவர் மறுபடியும் வளையம் வந்து கொண்டிருந்ததைக் கண்டவுடன்தான் அவர் முகத்தைப் பார்த்தேன். மறுபடியும் அவரைச் சாப்பிடக் கூப்பிட வாய் எடுத்தேன். அறையின் மறுகோடிக்குப் போனவர் வேகத்துடன் திரும்பி, “வால் மீகிதான் எழுதவில்லை ; கம்பரும் ஏன் அதை விட்டு விட்டார்?”


ஓடக்காரன்

 

 தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவு புண்ணியம்? எவ்வளவு நல்லது? ஆனால், நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும்… எப்படி? காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவரால் அருளி செய்யப்பட, மிக எளிய அற்புதமான கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட, முப்பது வினாடிகளில் சொல்லி முடித்து அனைத்து பலன்களையும் பெற்று தரக்கூடிய அந்த ஒன்பது வரிகளை மட்டுமே உடைய ராமாயணம் உலக நன்மைக்காக இதோ: ஸ்ரீ ராமம் ரகுகுல


நல்ல தம்பிக்கு உதாரணம்

 

 ராமாயண கதை எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதை. அந்தக் காலத்தில் ராமாயண காவியத்தை தெரு கூத்தாகக் காட்டி பரப்பி வந்தார்கள். அப்புறம் ராமாயண கதையை நிறைய நாடகக் கலைஞர்கள் நாடகமாகப் போட்டு பரப்பி வந்தார்கள். கால§க்ஷப வித்வான்கள் ராமாயண கதையை,ஒரு வாரம்,பதினைத்து நாட்கள்,ஒரு மாசம், என்று தினமும் சாயங்காலத்தில் ‘கால §க்ஷபம்’ செய்து வந்து, மக்களுக்கு ராமாயண கதையின் சாராம்சத்தை பரப்பி வந்தார்கள். சினிமா படங்கள் வர ஆரம்பித்தவுடன் எல்லாம் மொழிகளிலும் ராமாயண கதை வர ஆரம்பித்தது.