Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

218 கதைகள் கிடைத்துள்ளன.

அரசனை உதைத்த துறவி!

 

 கானகம் ஒன்றில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார். முக்காலமும் அறிந்தவர் அவர். ஒரு நாள் திருமகள் அவர் முன் தோன்றினாள். ‘‘மகனே… முற்பிறவியில் நீ செய்த புண்ணியங்களின் பலனாக, சிறிது காலம் நான் உன்னுடன் தங்கி இருக்க வேண்டியது நியதி. என் அனுக்கிரகத்தால் உனக்கு எந்த விதத் தீங்கும் நேராது. இந்த நாட்டு மக்களும் மன்னனும் உன்னைப் போற்றிப் புகழ்வார்கள்!’’ என்றாள் திருமகள். ‘‘தாயே… புகழ்ச்சி& இகழ்ச்சி, இரண்டையும் சமமாகப் பார்க்கும் பற்றில்லாத துறவி நான். இல்லற


அர்ஜுனனை அதிர வைத்த கர்ணன்!

 

 பாரதப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது… அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையே நடந்த யுத்தத்தில், தேரிலிருந்த படியே அர்ஜுனன் ஓர் அம்பை எடுத்து கர்ணனது தேர் மீது எய்தான். அந்த அம்பின் வீரியத்தால், கர்ணனது தேர் சற்று நிலைகுலைந்து, நான்கு அடி பின்னோக்கி நகர்ந்தது. இதனால், கோபமுற்றான் கர்ணன். மறு கணம் அவன் ஆக்ரோஷத்துடன் அம்பு ஒன்றை எடுத்து அர்ஜுனனின் தேர் மீது எய்தான். அதனால் அர்ஜுனனின் தேர் ஓர் அடி பின்வாங் கியது. அப்போது அர்ஜுனன்


சக்குபாய்க்காக சிறைப்பட்ட பண்டரிநாதர்!

 

 பண்டரிபுரத்துக்கு அருகில் சிஞ்சிருனிபுரம் என்ற கிராமத்தில் கங்காதர ராவ் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் மனைவி கமலாபாய். இவர்கள் எப்போதும் பகவான் நாமத்தைச் சொல்லி, நல்லதையே நினைத்து, எல்லோருக்கும் நல்லதையே செய்து வந்தார்கள். இவர்களுக்கு சக்குபாய் என்ற பெண் குழந்தை இருந்தது. தினமும் தெய்வ வழிபாட்டையும், பஜனையையும் கேட்டபடியே குழந்தை வளர்ந்தது. ஒரு நாள் தோழி களுடன் சக்குபாய் மணல் வீடு கட்டி விளை யாடிக் கொண்டிருந்தாள். அப்போது பஜனைப் பாட்டுகளைப் பாடியபடியே முதியவர் ஒருவர் அந்த


தம்பிகளைத் திரும்பப் பெற்ற தருமன்!

 

 பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது கடுமையான தாகத்தால் தவித் தனர். நீர் இருக்கும் இடம் தேடிச் சென்ற சகோதரர்களை நீண்ட நேரமாகியும் காணாததால் தவித்தார் தருமன். துரியோதனன் வேண்டிக் கொண்டதன் பேரில் பாண்டவர்களைக் கொல்வதற்காக யாகம் நடத்தி அதன் மூலம் ஒரு பூதத்தை வரவழைத்து, ஏவி இருந்தார் காளமா முனிவர். இதை உணர்ந்த பகவான் கண்ணன், ‘பாண்டவர்களைக் காக்குமாறு’ எமதர்மனிடம் வேண்டிக் கொண்டார். எமதர்மனும் அதற்கு ஒப்புக் கொண்டான். கவலையின் மிகுதியால், தண்ணீருக்காகச் சென்ற தன் தம்பியரைத்


திருமணம் பேச வந்தவர்கள் திகைத்து நின்றது ஏன்?

 

 இயற்கை வளம் கொழித்துக் கிடந்தது. பச்சைப் பசேலென வயல்வெளிகள். பசுக் குலம் ‘அம்மா!’ என்று அழைப்பதும் அவற்றின் கழுத்து மணி ஓசைகளும் மென்மையாகக் கேட்டன. இடையர்களின் சொர்க்க பூமியாகத் திகழ்ந்தது தொண்டை நாட்டின் காரணை என்ற அந்தக் கிராமம். அங்கிருந்தவர்களின் தலைவர் அரியகோன். ஏராளமான செல்வம் இருந்தும் குழந்தைச் செல்வம் இல்லை அவருக்கு. குறையை எண்ணிக் கண்ணீர் சிந்தினாள் அவர் மனைவி. அரியகோனுக்கு நெஞ்சு பதைபதைத்தது. நாளாக நாளாகக் கவலை அதிகரித்ததே தவிர குறையவில்லை. ஒரு நாள்…


நாமதேவருக்கு உணவு ஊட்டிய ஸ்ரீபாண்டுரங்கன்!

 

 பரம பக்தரான உத்தவர் சகாயத்தால் குருவாயூரில் குடிகொண்டிருக்கும் குருவாயூரப்பர் நமக்குக் கிடைத்தது பெரும் பேறு. ஸ்ரீகிருஷ்ண பகவானால் பூஜிக்கப்பட்ட நாராயண விக்கிரகத்தை குரு பகவானிடமும், வாயு பகவானிடமும் சேர்ப்பித்தவர் உத்தவர். குரு, வாயு இருவராலும் ஸ்தாபிக்கப்பட்டதால், ‘குருவாயூர்’ என்று பெயர் பெற்றதாகப் புராணம் மூலம் அறிய முடிகிறது. ஸ்ரீமத் பாகவதத்தில் கண்ணன், உத்தவருக்கு உபதேசம் செய்தது ‘உத்தவ கீதை’ எனப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணரின் உத்தரவுப்படி உத்தவர், ‘நாமதேவர்’ என்ற பெயரில் மறுபிறவி எடுத்து பக்தியை பரப்பினார் என்று புராணம்


பகவத் கீதை தெரியும்… உத்தவகீதை தெரியுமா?

 

 குரு«க்ஷத்திரத்தில் அர்ஜுனனுக்குக் கண்ணபிரான் அருளியது பகவத் கீதை. தேரோட்டியான உத்தவனின் கேள்விகளுக்கு கண்ணன் கூறிய பதில்தான் ‘உத்தவ கீதை’! குரு«க்ஷத்திரப் போருக்குப் பிறகு தருமனுக்கு முடிசூட்டிய கண்ணபிரான் துவாரகை திரும்பினான். தமக்கு இளமை முதலே தேரோட்டியாக இருந்த உத்தவனை அழைத்து, ‘‘உத்தவா! உனக்கு வேண்டிய தைக் கேள்’’ என்றான். உத்தவனோ, நீண்ட நாட்களாகவே தனக்கிருந்த சந்தேகங்கள் சிலவற்றை கண்ணனிடம் கேட்டான்: ‘‘பரந்தாமா! ராஜசூய யாகத்துக்கு தருமனை வர வழைத்த துரியோதனன் விருந்துக்குப் பிறகு தருமனை சூதாட்டத்துக்கு அழைத்தான்.


விதியை பத்தினியாலும் வெல்ல முடியாது!

 

 மகரிஷி தன்ரீகரின் மனைவி பூந்ததி, கணவர் மீது பக்தி கொண்டவள். அதிகாலை எழுந்ததும் அவர் பாதங்களைத் தொட்டு வணங்குவாள். ஒரு நாள் கணவரின் பாதங்களைத் தொட்டு வணங்கியவள், தற்செயலாகத் திரும்பினாள். முனிவர் தன்ரீகர் நிம்மதியாகப் படுத்துக் கிடக்க… அவரது நிழல் மட்டும் அரையடி தள்ளி இருப்பதைப் பார்த்தாள். தன் கணவருக்கு ஏதோ விபரீதம் நிகழப் போகிறது என்பது புரிந்து கலவரப்பட்டாள். இதைத் தடுக்க வேண்டும் என்ற ஆவேசத்துடன் எழுந்து அகல் விளக்கை நன்கு தூண்டி எரிய விட்டாள்.


உயிருக்கு போராடிய கர்ணனிடம் தங்கம் கேட்ட கிருஷ்ண பரமாத்மா!

 

 மகாபாரதப் போரில் பலசாலியான கர்ணன் வீழ்ந்துவிட, கௌரவர்கள் தோல்வியைத் தழுவினர். பாண்டவர்கள் பாசறையில் வெற்றிக் கொண்டாட்டம். எல்லை மீறிய உற்சாகம். குதூகலத்தில் பாண்டவர்கள் திளைத்திருந்தனர். ஆனால், ஸ்ரீகிருஷ்ண பரமாத் மாவின் முகத்தில் மட்டும் சோகத்தின் சாயல். பாண்டவர்கள் திகைத்தனர். அர்ஜுனன் அவரை நெருங்கி, ‘‘கிருஷ்ணா, உன் முக வாட்டத்துக்கு காரணம் என்ன?’’ என்று கேட்டான். துயரம் கவ்விய முகத்துடன் அவனை ஏறிட்ட ஸ்ரீகிருஷ்ணர், ‘‘தனஞ்சயா… பராக்கிரமசாலியும், தலைசிறந்த கொடையாளியுமான ஒருவன், இன்று வீழ்ந்து விட்டானே… அதை நினைத்து


தசக்ரீவன், ராவணன் ஆன கதை!

 

 இலங்கை மன்னனாக இருந்து ராஜ போகம் உட்பட அனைத்தையும் இழந்தவன் சுமாலி, அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் ஒரு முறை பாதாளத்தில் பதுங்கி வாழ்ந்தான். ‘அரக்க வீரன் ஒருவனை உருவாக்கி, அவன் மூலம் தேவர்களை வீழ்த்தி, மீண்டும் இலங்கையை ஆட்சி புரிய வேண் டும்!’ என்ற ஆசை அவன் மனத்தில் தோன்றியது. வானத்தில் பொன் விமானத்தில் குபேரன் உலவி யதைப் பார்த்த சுமாலிக்கு, அவனைப் போல் தன் புதல்வி கைகஸி மூலம் தனக்கு ஒரு பேரன் பிறக்க