கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

182 கதைகள் கிடைத்துள்ளன.

ஸ்ரீகிருஷ்ணரின் அருள்

 

 திருடர்களிடம் அர்ஜூனன் தோற்றது ஏன்? ஸ்ரீ கிருஷ்ணர் தனது அவ தாரத்தை நிறைவு செய்து வைகுண்டம் சென்றபின் துவாரகை நகரைக் கடல் கொண்டது. ஆனால், ஸ்ரீகிருஷ்ணரின் திருமாளிகை மட்டும் தப்பித்தது. கிருஷ்ணரின் தேவியரில் ருக்மணி உட்பட எட்டுப் பேர், கிருஷ்ணரின் திருமேனியுடன் அக்கினி பிரவேசம் செய்தனர். மற்றவர்களை அங்கிருந்து ‘பஞ்சவதம்’ என்ற தேசத்தை நோக்கி அழைத்துச் சென்றான் அர்ஜுனன். வழியில்& கானகப் பாதையில் திருடர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். அந்தச் சூழ்நிலையில் அர்ஜுனன் எவ்வளவோ முயன்றும் திருடர்களிடமிருந்து


நரைமுடி தரித்த நாராயணன்!

 

 ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், நான்கு கைகளுடன் கூடிய பெருமாள், திவ்விய தரிசனம் அளிக்கும் திருக்கோயில் ஒன்று உள்ளது. முன்னொரு காலத்தில் தேவாஜி என்பவர் அந்தக் கோயிலில் மிகுந்த பக்தியுடன் பூஜை செய்து வந்தார். தினமும் இரவில் பூஜை முடிந்ததும் அன்று ஸ்வாமிக்குப் போட்ட பூமாலைகளில் ஒன்றை, தன் தலையில் வைத்துக் கொண்டு வீடு திரும்புவது அவரது வழக்கம். ஒரு நாள் இரவு, கோயிலை தேவாஜி பூட்டுமுன் வீரர்கள் சிலர் அவசரம் அவசரமாக ஓடி வந்து, ‘‘ஐயா… ஸ்வாமி


இந்த மணி இருந்தால் சுபிட்சமே!

 

 சியமந்தகம் என்பது உயரிய ஒரு வகை மணி. மிகுந்த சிறப்பு வாய்ந்தது. எவரிடம் இந்த மணி இருக்கிறதோ, அவருக்கு ஏராளமான ஆற்றலும் செல்வமும் வந்து சேரும். சியமந்தக மணி இருக்கும் இடத்தில் மாதம் மும்மாரி பெய்யும். சுபிட்சம் நிலவும். பகைவர்களால் எந்தத் துன்பமும் உண்டாகாது. ஆனால், தூய்மையற்றவர்கள் அந்த மணியை அணிய நேர்ந்தால் கொடுந்துன்பம் நேரும். முதலில், சூரிய பகவானின் கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது இந்த மணி. சத்ராஜித் என்ற மன்னன் சூரிய வழிபாட்டிலும் பக்தியிலும் தன்னை


கைகேயி பிறந்த கதை!

 

 கைகேயியைப் பற்றிப் பலர் பல விதமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்; ஏசுபவர்களும் உண்டு. உத்தமமான கைகேயியைப் பற்றிய உண்மையான தகவல் இதுதான்! துருபதன் மகள் திரௌபதி. ஜனகன் மகள் ஜானகி. பாஞ்சாலன் மகள் பாஞ்சாலி என்பதைப் போல, கேகய மன்னன் மகள் என்பதால் கைகேயி என்று பெயரே தவிர, கைகேயிக்குப் பெற்றோர் வைத்த பெயர் அதுவல்ல. சற்று விரிவாகவே பார்ப்போம். கேகய தேசத்தின் மன்னர் அச்வபதி. தலைசிறந்த தர்மவான். எல்லாக் கலைகளிலும் மிகுந்த அனுபவசாலி. வைச்வானர (விளக்கம் பின்னால்


இறைவன் அருளால் பார்வை இழந்தேன்!

 

 ஒரு காலத்தில் ஒரு நாட்டை கொடுங்கோல் அரசன் ஒருவன் ஆட்சி செய்தான். அவனது நாட்டில் பிறவியிலேயே கண் பார்வை இழந்த புலவர் ஒருவர் இருந்தார். பாடல்கள் இயற்றுவதில் வல்லவரான அவரை, மக்கள் போற்றிக் கொண்டாடினர். நாளடைவில் அவரது புகழ் வேற்று நாடுகளுக்கும் பரவியது. இதனால் அவர் மீது பொறாமை கொண்டான் அரசன். புலவரை அரண்மனைக்கு அழைத்து வரச் செய்து, கேலியும் கிண்டலும் செய்து அவமானப் படுத்துவது அரசனது வழக்கமாயிற்று. ஆனால், புலவர் அதற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல்


அறிவுரை சொன்ன பறவை!

 

 மன்னன் ஒருவன், மரணமற்ற பெருவாழ்வு வாழ எண்ணினான். இது பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள காடு மேடு என்று அலைந்தான். ஆனால், அவனுக்கு வழி காட்ட எவருமே கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவன் ஓர் அடர்ந்த காட்டின் வழியாகப் பயணிக்க நேர்ந்தது. தற்செயலாக அங்கே துறவி ஒருவரைச் சந்தித்தான். ‘தான் விரும்பும் வழியை அவர் நிச்சயம் சொல்வார்’ என்று தீர்மானித்த மன்னன் அவரைப் பணிவுடன் வணங்கி, ‘‘நீங்கள்தான் எனக்கு வழி காட்ட வேண்டும் துறவியே! மரணம் என்னை


சாதுவாக மாறிய ராட்சசன்

 

 புத்தர் காலத்தில் அங்குலிமாலன் என்ற ஒரு ராட்சசன் இருந்தான். ‘தன் வாழ்நாளுக்குள் ஆயிரம் பேரைக் கொல்வது’ என்பது அவனது குறிக்கோள். ஓர் ஆசாமியைக் கொன்றதும் எண்ணிக் கைக்காக, அவரது விரலை வெட்டிக் கழுத்து மாலையில் கோத்துக் கொள்வான். அப்படி, 999 விரல்கள் அவனது மாலையில் இடம்பெற்றுவிட்டன. அங்குலிமாலனுக்கு பயந்து அவன் வசிக்கும் பகுதிக்கு ஊர்மக்கள் செல்வதே இல்லை. ஒரு நாள் புத்தர் அந்தக் காட்டு வழியே செல்ல முற்பட்டார். மக்கள் அவரை எச்சரித்து, ‘‘அந்தப் பக்கம் செல்லாதீர்கள்!’’


பாவத்துக்கு தண்டனை நிச்சயம்!

 

 பத்ராசலம் என்ற ஊரில் வாழ்ந்தவர் கோபண்ணா. ஹைதராபாத் மன்னன் தானீஷா ஆட்சியில் தாசில்தாராகப் பணியாற்றினார் இவர். பத்ராசலத்தில் ராமர் கோயில் சிதிலம் அடைந்திருந்தது கண்டு கோபண்ணா மனம் வருந்தினார். ஆகவே, மக்களிடமிருந்து வசூலித்த வரிப் பணம் ஆறு லட்சம் வராகன்களைக் கொண்டு, ராமர் கோயிலுக்கு மராமத்துப் பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்தினார். வரிப் பணத்தில் கோயில் பணிகள் செய்ததைக் கேள்விப்பட்ட மன்னன் தானீஷா, கோபண்ணாவைக் கைது செய்ய உத்தரவிட்டான். வீரர்களும் கைது செய்து அவைக்குக் கொண்டு வந்தனர்.


சருகினாலும் உண்டு பயன்!

 

 குருகுல வாசம் முடித்துப் புறப்பட்ட சீடர்கள் சிலர், தங்கள் குருநாதரை வணங்கி, “குருதேவா! தங்களுக்குக் குருதட்சிணை தர விரும்புகிறோம். என்ன வேண்டுமோ கேளுங்கள்! எங்களால் இயலாதது எதுவும் இல்லை” என்றனர் பெருமிதத்துடன். தன் சீடர்கள் மேலும் பக்குவம் பெற வேண்டும் என்று நினைத்த குரு, “சீடர்களே! நமது குருகுலத்தை ஒட்டியுள்ள காட்டிலிருந்து எதற்கும் பயனற்ற பொருட்கள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்!’’ என்றார். காட்டுக்குச் சென்ற சீடர்கள், அங்குள்ள காய்ந்த சருகுகளை, ‘பயனற்ற பொருள்’ என்று கருதினர். எனவே,


யார் உண்மையான சீடன்?

 

 புத்த பகவான் முதிய வயதில் கந்தகுடி என்ற இடத்தில் தங்கியிருந்தார். அவரிடம் ஏராளமான சீடர்கள் இருந்தனர். ஆனால், எவரையும் அவர் அணுக்கத் தொண்டராக (எந்த நேரமும் குருவுடன் இருந்து, குறிப்பறிந்து அவருக்குத் தொண்டு புரிபவர்) வைத்துக் கொண்டதில்லை. ஒரு நாள் புத்த பகவான் தன் சீடர்களைப் பார்த்து, ‘‘இது வரை எனக்கு அணுக்கத் தொண்டர் எவரும் இல்லை. இப்போது முதுமை ஏற்பட்டுள்ளது. எனவே, அப்படி ஒருவர் தேவை. அப்படி என்னுடன் இருக்க விரும்புகிறவர் உங்களில் யார்?’’ என்று