கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

177 கதைகள் கிடைத்துள்ளன.

அர்ஜுனனை வீழ்த்திய அருமை மகன்!

 

 ‘‘குந்தியின் மகனே! யாகம் செய்வதற்காக சித்ரா பௌர்ணமியன்று உனக்கு தீட்சை அளிக்கப்படும். எனவே, அஸ்வ மேத யாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்! உத்தம லட்சணங்கள் பொருந்திய குதிரையை சாஸ்திரப்படி அனுப்பி வை. அது இந்த உலகத்தைச் சுற்றி வரட்டும்!’’ என்றார் வியாசர். அதைக் கேட்ட தருமர் கூப்பிய கைகளோடு, ‘‘குருதேவா! யாகக் குதிரையுடன், காவலுக்கு யாரை அனுப்ப வேண்டும் என்பதையும் தெரி விக்க வேண்டுகிறேன்!’’ என்றார். ‘‘தருமா! அர்ஜுனன் போகட்டும். தெய்விக அஸ்திரங்கள், திவ்ய கவசம், உயர்தர


பாதுஷாவின் சந்தேகம்… பாவாவின் சஞ்சலம்!

 

 மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பண்டரிபுரத்தை நாத பிரம்ம «க்ஷத்திரம் என்பார்கள். பண்டரிபுரத்தில் பஜனை செய்யும் பக்தர்களது இசைக் கருவிகளில் இருந்து கிளம்பும் நாதமே அதை மெய்ப்பிக்கும். புண்டரீகன் என்ற பக்தனின் பிரார்த்தனையில் மகிழ்ந்த ஸ்ரீமந் நாராயணன், ஒரு செங்கல்லின் மேல் நின்று ஸ்ரீபாண்டுரங்கனாக& பண்டரிநாதனாக அருள் புரியும் திருத்தலம் பண்டரிபுரம். இங்கு வாழ்ந்த மகான்கள் பலர் புண்ணிய பாரதத்துக்குப் பெருமை சேர்த்தவர்கள். குலம், கோத்திரம், மதம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். அவர்களுள் ஒருவர் ஸ்ரீதுக்காராம் சுவாமி. பக்தியிலும் பண்பிலும்


பன்மொழிப் புலவரை பந்தாடிய தெனாலிராமன்!

 

 ஒரு நாள் கிருஷ்ணதேவ ராயரின் அரண்மனைக்கு, ஒரிஸாவில் இருந்து வித்யாசாகரர் என்ற சம்ஸ்கிருதப் புலவர் ஒருவர் வந்தார். பல நூல்களை இயற்றி, பல நாடுகளில் பயணித்து, அறிஞர்கள் பலருடன் வாதிட்டு, வெற்றி பெற்றவர் அவர். அவரை வரவேற்று உபசரித்தார் கிருஷ்ணதேவ ராயர். மன்னருக்கு வணக்கம் தெரிவித்த வித்யாசாகரர், ‘‘மன்னா! தங்களது கீர்த்தி எங்கும் பரவி இருக்கிறது. தங்கள் பெருமையை விளக்கும் புலவர்கள் பலர் இந்த அவையில் உள்ளனர். அவர்களு டன் வாதிட்டு, எனது அறிவுத் திறத்தை நிரூபிக்க


இறைவனே தந்த நவமணிகள்!

 

 பாண்டிய நாட்டில்… முடிசூட்டு விழாவுக்கு..இறைவனே தந்த நவமணிகள்! பாண்டிய நாட்டை வழுதியின் மைந்தன் வீரபாண்டியன் சீரும் சிறப்புமாக நல்லாட்சி நடத்தி வந்தான். அவனிடம் நற்பண்புகள் பல இருந்தாலும், திருஷ்டி பரிகாரம் போல் சிற்றின்ப ஆசையும் இருந்தது. முறையான பட்டத்து அரசி இருந்தும், காமக் கிழத்தியர் பலர் வீரபாண்டியனுக்கு இருந்தனர். அவர்களும் அந்த அரண்மனையிலேயே தங்கியிருந்தனர். பட்டத்தரசிக்கு வாரிசு இல்லை. ஆனால், காமக் கிழத்தியருக்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர். எனவே, அங்கயற்கண்ணம்மை சமேத சொக்கநாத பெருமானை பல்வேறு வகை


சூதாடிக்காக வாதாடிய எமன்!

 

 சூதாடி ஒருவன், ஒரு நாள் சூதாட்டத் தின்போது ஏராளமான பொருட்களை வெற்றி கொண்டான். அந்த மகிழ்ச்சியில் கண்டபடி மது அருந்திவிட்டு, விலைமாது ஒருத்தியின் வீட்டுக்குப் போனான். அதிகமான போதையால் பாதி வழியிலேயே தள்ளாடி விழுந்தான். நினைவு திரும்பியதும், ‘தான் செய்தது… செய்ய இருந்தது எல்லாமே பாதகங்கள்’ என்று உணர்ந்தான். பிறகு தன் கையிலிருந்த பணத்தில் கொஞ்சம் பூமாலை& சந்தனம் ஆகியவற்றை வாங்கி… அருகிலிருந்த சிவன் கோயில் வாசலில் வைத்துவிட்டுத் தனது வீட்டுக்கு சென்றான். காலம் கடந்தது. சூதாடியின்


காதலியின் கண்களை விட அழகான கண்கள் உண்டா?

 

 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும் அவர்களால், ‘கோயில்’ என்று சிறப்பிக்கப் படுவதுமான திருவரங்கம். பணியரங்கப் பெரும்பாயற் பரஞ்சுடரை யாங்காண அணியரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்… என்று கவிச் சக்ரவர்த்தி கம்பரால் போற்றப்பட்ட புராதனப் பதி. ‘அரிதுயில்’ செய்யும் அரங்கன் எழுந்தருளி இருக்கும் அந்த அற்புதப் பதி, அன்று திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. வீதியெங்கும் மாவிலைத் தோரணங்களும் வாழைப் பந்தல்களும் எழிலோடு காட்சியளித்தன. கருட வாகனத்தில் அரங்க ராஜாவின் பிரம்மோற்சவக் காட்சியைக் காண ஏராளமானோர் கூடியிருந்தனர். தமிழ் வேதம்


நட்பு பெரிதா? நாடு பெரிதா?

 

 துரோணரும் துருபதனும்… துரோணர், புகழ் பெற்ற ஆச்சார் யர். பாண்டவர் மற்றும் கௌரவருக்கு வில்வித்தை கற்பித்தவர். அர்ஜுனன் தேர்ந்த வில்லாளியாகப் புகழ் பெறக் காரணமானவர். இவரின் குருகுலத் தோழன் இளவரசன் துருபதன். குருகுலத்தில் துரோணரும் துருபதனும் நண்பர்கள். ஒரு நாள் துருபதன், ‘‘துரோணா, நான் அரசனாகும்போது எனது நாட்டில் பாதியை உனக்குத் தந்து உன்னையும் அரசனாக்குவேன்!’’ என்றான். தன் நண்பனின் நட்பை எண்ணி மகிழ்ந்தார் துரோணர். குருகுல வாசம் முடிந்ததும் இருவரும் தத்தமது நாடுகளுக்குத் திரும்பினர். துரோணர்


ஜனகரை சந்தேகித்த முனிவர்!

 

 கலை வளமும் கடவுள் பக்தியும் கொண்ட மிதிலை நகரை ஜனக மகாராஜா நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிந்தார். ஜனகர் கல்வி கேள்விகளில் தேர்ந்த மேதை. ஞானப் பண்டிதரான இவர், தம் பிரஜைகளிடம் ஏற்றத் தாழ்வு பாராமல், சரிசமமாக பாவித்தவர். இருப்பினும் ஜனகர், உலக விஷயங்களில் பற்றற்று ஒரு துறவி போல் வாழ்ந்தார். எனவே, இவரை ‘ராஜரிஷி’ என்றே அழைத்தனர். ஜனகரின் புகழும், செல்வாக்கும் சுகதேவன் எனும் முனிவருக்குள் பகையுணர்ச்சியையும் பொறாமை யையும் ஏற்படுத்தியது. முற்றும் துறந்த முனிவரானாலும்


இந்த இருவரில் யார் என் மனைவி?

 

 உத்தமமான சிவாசார்யரான தேவசர்மா, கயிலைவாச னான உமையரு பாகனை வழிபட்ட தீவிர பக்தர். அவருக்குத் திருமணம் நடந்தது (மணப் பெண்ணை விமலா என்றும், அவள் தங்கையைக் கமலா என்றும் வைத்துக் கொள்வோம்). திருமணத்தின்போது, விமலாவின் வயது எட்டு. உலக அனுபவம் இல்லாத சிறுமியாக இருந்தாலும், தன் கணவனின் பக்தியிலும், சிவத் தொண்டிலும் பெருமைப்பட்டாள். இரண்டு மாதங்கள் கடந்தன. தேவசர்மா, ஸ்தல யாத்திரை செல்லத் தீர்மானித்தார். மனைவியை மாமனார் வீட்டில் விட்டு விட்டுக் கிளம்பினார் தேவசர்மா. ஊர் ஊராகச்


அரசனை உதைத்த துறவி!

 

 கானகம் ஒன்றில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார். முக்காலமும் அறிந்தவர் அவர். ஒரு நாள் திருமகள் அவர் முன் தோன்றினாள். ‘‘மகனே… முற்பிறவியில் நீ செய்த புண்ணியங்களின் பலனாக, சிறிது காலம் நான் உன்னுடன் தங்கி இருக்க வேண்டியது நியதி. என் அனுக்கிரகத்தால் உனக்கு எந்த விதத் தீங்கும் நேராது. இந்த நாட்டு மக்களும் மன்னனும் உன்னைப் போற்றிப் புகழ்வார்கள்!’’ என்றாள் திருமகள். ‘‘தாயே… புகழ்ச்சி& இகழ்ச்சி, இரண்டையும் சமமாகப் பார்க்கும் பற்றில்லாத துறவி நான். இல்லற