கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

178 கதைகள் கிடைத்துள்ளன.

வெல்லத்துடன் கலந்த எலி பாஷாணம்!

 

 கேசவ ஸ்வாமி என்பவர், கண்ணனின் பால லீலைகளில் நெஞ்சைப் பறி கொடுத்து, கண்ணனது புகழ் பாடி ஊர் ஊராக அலைந்தவர். இவரது குரல் இனிமையால் பெரிய கும்பல் இவரை எங்கும் சூழ்ந்து விடும். ஒரு முறை தன் குருவுடன் மராட்டிய மாநிலத்தில் உள்ள விஜயபுரத்துக்கு வந்தார். அங்குள்ள பக்தர்கள் இவரிடம் ஏகாதசி வரை தங்கி பஜனை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். ஏகாதசியன்று பக்தர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உபவாசம் (விரதம்) இருந்ததால், வறட்சியின் காரணமாக நா உலர்ந்து


இந்த சிறுவனா குற்றவாளி?

 

 மன்னனைத் தடுமாற வைத்த வழக்கு. அரியணையில் அமர்ந்திருந்தான் மன்னன். சபை கூடி இருந்தது. வாதிகளாக, அந்தணர்கள் ஒருபுறம். பிரதிவாதியாக எட்டு வயதுச் சிறுவன் மறு புறம். சிறுவனைக் கண்ட மன்னன் யோசனையில் ஆழ்ந்தான்… ‘மழலை மாறா முகத்துடன் விளங்கும் இந்தச் சிறுவனா குற்றவாளி?’ ‘‘மன்னா! இந்த அந்தணர்கள், என் தாத்தாவை அடித்துத் துன்புறுத்தியதால், அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். முதியவரான அவர் இந்த நிலையில் அரச சபைக்கு வர முடியவில்லை. எனவே, அவர் பேரனாகிய நான் இதற்கு


பரதனைக் காப்பாற்ற ராமனே ஏன் செல்லவில்லை?

 

 ‘அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவார்’ என்ற பழமொழியின் உண்மைப் பொருள், ‘திருமாலின் திருவடி நமது துன்பங்களைக் களைவது போல், அண்ணன்& தம்பிகள் போன்ற நெருங்கிய உறவினர்கள்கூட நமக்கு உதவ மாட்டார்கள்’ என்பது! இதையட்டியே நம்மாழ்வாரும் திருவாய்மொழியில், ‘துயர் அறு சுடரடி தொழுதெழு’ என்று குறிப்பிடுகிறார். தசரதரின் மூத்த மைந்தன் ஸ்ரீராமன். மூத்தவனுக்கு முடிசூட்டுவது மரபு. எனவே, ஸ்ரீராமனுக்கு முடி சூட்ட விரும்பினார் தசரதர். உடனே குலகுருவான வசிஷ்டர் மற்றும் மந்திரிகளுடன் ஆலோசித்து, அதற்காக நல்ல


கடவுளுக்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு?

 

 கடவுளை ஆணாகவும், சக்தியைப் பெண்ணாக வும் பொதுவாக வழி பாட்டில் உருவகம் செய்வோம். மச்சாவதாரம், கூர்மாவதாரம் தவிர மற்ற அவதாரங்கள் பெரும்பாலும் மானுட வடிவில் அமைந்துள்ளன. சிவபெருமான், பார்வதி, விநாயகர், முருகன் ஆகியோர் மனித வடிவில் விளங்குகின்றனர். இறை அவதாரங்களில் திருப்பாதங்களும், திருக்கரங்களும் அமைந்திருக்கும். அவை, மனிதனைவிட மேன்மையானவை. அதுவே கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையிலுள்ள வேறுபாடு. இந்த வேறுபாட்டை பக்தி இலக்கியங்கள் நுட்பமாக விளக்குகின்றன. மானுட வடிவில் அவதரித்த மகாவிஷ்ணுவான ராமபிரானின் நடை, உடை, பாவனைகள் மனிதர்


பசியால் வாடிய அருணகிரிநாதர்!

 

 இளம் வயதிலேயே, அருணகிரிநாதர் படத்தைப் பலரிடம் தந்து வழிபடுவதற்கு வழிகாட்டியவர். தலைசிறந்த முருக பக்தர். அருணகிரிநாதரிடம் அளவில் லாத, அசைக்க முடியாத பக்தி கொண் டவர். இப்படிப்பட்டவர், தானே முன்னின்று வயலூர் முருகன் கோயில் ராஜ கோபுரத் திருப்பணியை நடத்திக் கொண்டிருந்தார். ஒரு நாள்… இந்த பக்தரும் அவர் நண்பரும் கோயிலி லேயே படுத்துக் கொண்டனர். விடியற்காலை ஐந்து மணி. பக்தருக்கு இனிமையான ஒரு கனவு. அதில் காங்கேயநல்லூர் முருகன் கோயிலில் அருணகிரி நாதர் விக்கிரகத்தின் முன்


காளைகளை அடக்கி கன்னியின் கரம் பற்றிய கண்ணபிரான்!

 

 தர்மத்தின்படி நடந்ததுடன், தன் குடி மக்களையும் அந்த வழியைப் பின்பற்றச் செய்தவர் நக்னஜித். கோசல தேசத்து அரசரான அவருக்கு சத்யா என்று ஒரு மகள். அவளது அழகுக்கு ஈடு இணை கிடையாது. அத்துடன் நல்ல குணமும் நிறைந்தவள். பற்பல தேசத்தைச் சேர்ந்தவர்களும் சத்யாவை திருமணம் செய்யப் போட்டியிட்டனர். அப்படிப் பட்டவர்கள் கோசல தேசத்துக்கு வந்தார்கள். அங்கு அவர்களுக்கு ஓர் அறிவிப்பு காத்திருந்தது. ‘‘என்னிடம் உள்ள வலிமை மிக்க ஏழு காளைகளை யார் அடக்குகிறாரோ, அவருக்கு என் மகள்


பட்ட மரத்தை பசுமை ஆக்கிய கிளி!

 

 ‘‘தர்மம் தெரிந்தவரே! எல்லா ஜீவராசி களிடமும் அன்பாக இருப்பதன் சிறப்பையும், பக்தியுள்ள மக்களின் மேன்மைகளைப் பற்றியும் நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்’’ என்று கேட்டார் தர்மம் பற்றி நன்கு அறிந்த தருமர், பீஷ்மரிடம். பீஷ்மர் சொன்னார்: ‘‘காசி மன்னரது நாட்டின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த வேடன் ஒருவன், கடுமையான விஷம் தோய்ந்த அம்பை எடுத்துக் கொண்டு காட்டில் மான் வேட்டைக்குப் போனான். ஓரிடத்தில் ஏராளமான மான்களைக் கண்டு, துரத்திக் கொண்டு போய் அம்பைத் தொடுத்தான். அம்பு


சீடராகச் சேர்ந்த வீர சிவாஜி!

 

 மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் குரு ராமதாசர். ராம தாசரின் இயற்பெயர் நாராயணன். சூர்யாஜிபந்த்& ரேணுபாய் தம்பதிக்கு இரண்டாவது மகனாக கி.பி.1608&ஆம் ஆண்டு ஸ்ரீராம நவமியன்று இவர் பிறந் தார். இவருக்கு ஆறு வயதிலேயே ஆஞ்ச நேயர் அருளால் ஸ்ரீராமபிரானின் தரிசனம் கிடைத்தது. ஒரு முறை ஆஞ்சநேயர் சந்நிதியில் ராமபிரான் தோன்றி, ‘‘செல்வனே! கிருஷ்ணா நதிக்கரையில் தோன்றும் அரசனுக்குத் துணையாக இருந்து, நாட்டில் நல்லாட்சி, நல்லறம் சிறக்க உதவுவாயாக!’’ என்று கட்டளையிட்டார். ஸ்ரீராமபிரானின் அருள் பெற்ற நாராயணன்,


பொற்காப்பைத் திருடினாரா புரந்தரதாசர்?

 

 அது அழகான ஒரு நந்தவனம். அதன் நடுவே பசுமையான புல் தரை மீது அமர்ந்து, மலர் தொடுத்துக் கொண்டி ருந்தாள் அழகான இளம் பெண் ஒருத்தி. அவள் ஒரு தேவதாசிப் பெண். பெயர் லீலாவதி. அவள், ‘நாரத முனிவரின் அம்சம்’ எனப்படும் புரந்தரதாசரின் பரம பக்தை. விரல்கள் பூத்தொடுக்க, உதடுகள் புரந்தரதாசரின் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தன. அப்போது, ‘‘மகா ஜனங்களே… நம் பாண்டுரங்கப் பெருமானின் சிலையில் இருந்த பொற்காப்பைக் காணவில்லை. அது தொடர்பான தகவல் அறிந்தால், உடனே


தங்கக் கிண்ணத்தை வீசி எறியுங்கள்!

 

 ஏழை மற்றும் எளியவர்களிடம் கருணை கொண்டு தான& தர்மங்கள் வழங்குவதில் பேர் பெற்றவர் பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தருமர். இதனால் அவர் மனதில், ‘தர்மம் செய்வதில் தனக்கு இணை யாருமே இல்லை!’ என்கிற கர்வம் படியத் தொடங்கியது. தருமரின் உள்ளத்தில் படிந்த இந்தக் கர்வத்தைப் போக்கத் திருவுளம் பூண்டார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. தருமரின் இருப்பிடத்துக்கு வந்த ஸ்ரீகிருஷ்ணன், தருமருடன் உரையாடியவாறே வெளியே நடந்தார். இருவரும் பாதாள லோகத்தை அடைந்தனர். பாதாள லோகத்தை பிரகலாதனின் பேரனான மகாபலிச் சக்ரவர்த்தி ஆண்டு