கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

177 கதைகள் கிடைத்துள்ளன.

காவிரியில் தந்தையை இழந்தான்…

 

  ஹரிதாஸ் கதை காவிரியில் தந்தையை இழந்தான்… கங்கையில் தாயை இழந்தான்… ரங்கநாதரின் சந்நிதியில், அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர். ஒரு முறை, இவரது இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்த புரந்தரதாஸர், கிருஷ்ணபட்டரின் மகள் பிரேமாவுக்கு, ‘சரிகமபதநி’ எனும் சப்த ஸ்வரங்களை போதித்தார். இதன் பின்னர், கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்கிய பிரேமா, கோயிலில் ஆழ்வார் பாசுரங் களை பாடி வந்தாள். அவள் பாடுவதைக் கேட்கும் அனைவரும் மெய்ம்மறப்பர். இந்த நிலையில், ஏழ்மை நிலையில் இருந்த


கயவன் வேதநிதி மோட்சம் பெற்ற கதை!

 

 மகன் வேதநிதியை நினைக்க நினைக்க பண்டிதருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ‘என்ன பாவம் செய்தேனோ, எனக்கு இப்படி ஒரு மகன்!’ – மனம் வேதனையில் விம்ம… வீடு நோக்கி தளர் நடை போட்டார். பண்டிதரின் ஒரே மகன் வேதநிதி. பெற்றோரை மதிக்காமல், கற்ற கல்வி யையும் மறந்து, எந்த நேரமும் மது- மாது என்று சிற்றின்பத்திலேயே திளைத்திருந்தான். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவன் புத்தியில் ஏற வில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக… இன்று, அரண்மனையில் அவனால் ஏற்பட்ட


ஆத்மாவை அறிய முயன்ற அரசன்!

 

 பிரம்மதேசத்தின் மன்னர், நீதிநெறி தவறாதவர். அறம் உரைக்கும் அமைச்சர்கள் மற்றும் ஞானவான் களான ஆன்றோர்கள் பலரது வழிகாட்டுதலுடன் செம்மையாக ஆட்சி புரிந்த மன்னருக்கு, நீண்ட காலமாக ஒரு சந்தேகம். ‘வனத்தில் வசிக்கும் தவ சீலர்களான மகரிஷி கள், தனது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பார்கள்!’ என்ற எண்ணத்துடன் ஒரு நாள், பரிவாரங்கள் புடைசூழ மகரிஷிகளது ஆசிரமத்துக்குச் சென்றார். மன்னரை முகம் மலர வரவேற்று, ஆசிர்வதித்தனர் மகரிஷிகள். அவர்களிடம், ”மகரிஷிகளே… நீண்ட காலமாக என்னுள் இருக்கும் ஓர் ஐயப்பாட்டுக்கு விளக்கம்


நாரதர் நடத்திய திருமணம்

 

 மகாபலி சக்ரவர்த்திக்கு நூறு பிள்ளைகள். இவர்களில் மூத்தவன் பாணாசுரன். சோணிதபுரத்தை ஆட்சி செய்த இவன், சிறந்த சிவபக்தன்; சிவனருளால் ஆயிரம் கரங்களையும் அரிய வரங்கள் பலவற்றையும் பெற்றவன். ஆனால்… காலப்போக்கில் அவனிடம், ‘தம்மை எதிர்க்க எவரும் இல்லை!’ என்ற அகந்தையும் அதிகார மமதையும் வளர்ந்தன. ஒரு நாள் சிவபெருமானிடமே, ”ஸ்வாமி, தங்களது அருளால் பெரும் வல்லமை பெற்றுத் திகழும் என்னை எதிர்க்க ஒருவனும் இல்லை. என் தோள்கள் தினவெடுக்கின்றனவே!” என்று இறுமாப்புடன் கூறினான் பாணாசுரன். ‘பெரும் வீரனான


ராவணனைக் கொன்ற மாமனார்!

 

 சிவ பக்தனாக இருந்து, பல வரங்களைப் பெற்றிருந்த போதும், பெண்ணாசையில் மதிமயங்கிய ராவணன் எப்படி அழிந்தான் என்பதை விளக்கும் ஓர் அபூர்வ கர்ண பரம்பரைக் கதை: ராவணனின் தாயார் சோகமாக அமர்ந்திருந்தாள். அவள் தினமும் வழிபடும் ஆத்மலிங்கம், ஆதிசேஷனின் சுவாசம் வழியே பாதாள லோகத்துக்குச் சென்று விட்டது. அந்த சோகத்தில் இருந்தவள், மகன் ராவணனை அழைத்தாள். அவனிடம் நடந்ததை விவரித்து, ”உடனே கயிலாயம் சென்று, உனது சாம கானத்தால் சர்வேஸ்வரனை மகிழ்வித்து, அந்த ஆத்மலிங்கத்தைப் பெற்று வருவாயாக!”


சிறுவன் வைத்த கோரிக்கை

 

 ‘மரண தண்டனையை நிறைவேற்றும் பணியைத் தாருங்கள்!’ இறைவனை அடைவதற்கான மார்க்கங்களில், குறிப்பிடத் தக்கது- இறை நாம ஜபம். இறை நாம மகிமையால் வாழ்வை வென்ற மகான்கள் ஏராளம்! நம்மில் பலர், பந்த- பாசத்தில் கட்டுண்டு கிடக்கிறோம். குழந்தைகளிடம் விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து விளையாட விட்டு வேடிக்கைப் பார்க்கும் தாயைப் போல, குடும்பம்- உறவு- வீடு- பணம்… என்று மாயைகளால் நம்மை ஆட்டுவிக்கிறான் இறைவன். இதில் வெற்றி பெற்று, மீண்டும் பிறவா பெரு நிலை அடைவதற்கு பேருதவி புரிவது


அதென்ன விஷேஷ தர்மம்?

 

 அந்த கிராமத்தில், பாகவதர் ஒருவர் கதாகாலட்சேபம் செய்ய வந்திருந்தார். ஒவ்வொரு நாளும் புராணக் கதைகள் பலவற்றைக் கூறி, அவற்றின் மூலம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய நீதிநெறிகளை விளக்குவார். அன்று தர்மத்தைப் பற்றி பேச வேண்டும். ”தர்மத்தில் சாதாரண தர்மம், விசேஷ தர்மம் என்று இரண்டு வகை உண்டு!” என்று அவர் ஆரம்பித்ததும், பக்க வாத்தியக்காரர் ஒருவர் இடைமறித்தார்: ”தர்மம் சரி… அது என்ன விசேஷ தர்மம்?” ”சற்றுப் பொறும். விளக்கமா சொல்றேன்!” என்ற பாகவதர் தொடர்ந்தார்: ”ஒருவன்,


அனந்தாழ்வானுடன் விளையாடிய வேங்கடவன்!

 

 அனந்தாழ்வான் மீது கடுங் கோபத்தில் இருந்தார் ஏழுமலையான்! இருக்காதா பின்னே? ‘அனந்தாழ்வானை உடனே வந்து என்னைப் பார்க்கச் சொல்’ என்று அர்ச்சகர் மூலம் இவர் சொல்லி அனுப்ப… அனந்தாழ்வானோ, ”ஸ்வாமிக்குப் பூமாலை தொடுத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது வர முடியாது!” என்று அர்ச்ச கரிடம் சொல்லி விட்டார். இதனால் ஏற்பட்ட கோபம். விழி சிவக்கக் காத்திருந்தார் பகவான். ஆயிற்று… பூமாலை கட்டி முடித்த அனந்தாழ்வான், அதை எடுத்துக் கொண்டு சந்நிதிக்கு வருவதை அறிந்த ஏழுமலையான், தனக்கு முன்பு இருந்த


காமதேனுவால் வந்த கோபம்!

 

 ஸ்ரீபரசுராமர் கதை… காமதேனுவால் வந்த கோபம்! உலகில் அதர்மம் அதிகரிக்கும்போது, அதை அழித்து தர்மத்தை நிலை நாட்ட மகாவிஷ்ணு எடுத்த அவதா ரங்களில் குறிப்பிடத்தக்கவை 10 அவதாரங்கள். இதில், 6-வது அவதாரம்- ஸ்ரீபரசுராமர். ஜமதக்னி முனிவர்- ரேணுகாதேவி தம்பதிக்கு மக னாக அவதரித்தவர் ஸ்ரீபரசுராமர். முனி குமாரனாக இருந்த போதிலும் அரசர்களுக்கே உரிய சகல போர்க் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார் ஸ்ரீபரசுராமர். இவர், பரமேஸ்வரனை தியானித்து தவம் இருந்து, அவரிடம் இருந்து மழுவாயுதம் (கோடரி) பெற்


காப்பாற்றியது பாராயணம்!

 

 ஆத்மார்த்தமாகச் செய்யப்படும் பிரார்த் தனைகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்: பெரம்பூரில் சுமார் 10 ஆண்டுகள் வசித்த என் அண்ணன், தன் மகனின் பணி இடமாற்றத்தின் காரணமாக பெங்களூ ருவுக்கு குடி பெயர்ந்தார். அங்கு, பொங்கலுக்கு முதல் நாள் கடைத்தெருவுக்குச் சென்றபோது விபத்தில் சிக்கிய என் அண்ணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ‘ஓரிரு நாட்கள் கழித்தே எதுவும் சொல்ல முடியும்!’ என்று மருத்துவர் கள் கை விரித்து விட… தகவல் அறிந்த நாங்கள் அதிர்ந்தோம்.