கதைத்தொகுப்பு: அமானுஷம்

75 கதைகள் கிடைத்துள்ளன.

பாழடைந்த கிணறு

 

 ஒரு பாழடைந்த ஓலைக்குடிசை வீடு…. வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு சிறிய வட்ட கிணறு… எட்டிப்பார்த்தால், முகம் கண்ணாடியில் தெரிவது போல தெளிவாக தெரியும்… குடிசையோரம் ஒரு தொத்தலான ஆடு கட்டப்பட்டிருந்தது. ஒரு உருவம் நடுங்கியவாறே குடிசைக்குள் நுழைந்தது. குடிசைக்கு வெளியே ஒரு பூனை, ஒரு சுண்டெலியை துரத்திப் பிடித்துக் கொண்டிருந்தது. அடுத்த‌ இரண்டாவது நிமிடம், குடிசைக்கு வெளியே ஒரு சத்தம் கேட்டது. “பாட்டி.. பாட்டி..” “யாரு?” “நான் பிரபாகர்.. சுகாதாரத்துறையில இருக்கேன்.. கிராமம் முழுதும் எல்லாரையும் பார்த்து


நள்ளிரவு ஒன்றரை மணி

 

 பதின்ம பருவத்திலிருக்கும் ராகுலுக்கு அப்பா இல்லை. ஒத்த பிள்ளையைப் பெற்ற, அநேக அன்னையரைப் போல், அவன் பத்து வயது வரை அவன் கால்கள் தரையில் படாத வண்ணம் பார்த்துக்கொண்டாள் அவள் அன்னை. இப்போது குடும்ப பொருளாதாரம் கருதி, இரவு பகலாய் வேலை பார்க்கலானாள் அவ்வன்னை. ஒரு நாள் பின்னிரவு, தன் வேலைகளையெல்லாம் முடித்து விட்டு வீடு திரும்பிய அன்னை, தன் மகன் எதோ ஒரு பதட்ட நிலையிலேயே இருப்பதை பார்த்தாள்… “ராகுல் கண்ணா.. என்னாச்சுப்பா..” ஏன் ஒரு


ஜி.எச்

 

 எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டால் அதற்கான பதிலைக் கொஞ்சம் குழப்பமாகத்தான் சொல்ல முடியும். கடவுள் இருக்கிறார் என்றோ, இல்லை என்றோ என்னால் உறுதியாச் சொல்லி விட முடியாது. இதே பதில்தான் காதல் இருக்கிறதா என்ற கேள்விக்கும். இளமைப் பருவத்தின் ஆரம்ப நாட்களில் அது இருப்பது போலவும் தோன்றுகிறது. மத்திம மற்றும் இறுதி நாட்களில் அது இருக்கிறது என்று நிரூபிப்பதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் ஆவிகள் இருக்கிறதா என்ற கேள்வி வந்தால் அதற்கான பதில் என்னைப்


இது என் வீடு

 

 “ஹேய் தேவி நீ வேணும்னா பாரு அம்மா உன் பிறந்தநாள் அதுவுமா தான் போய் சேரும் போல”. “வேணாம்டி மதி வாய வச்சுக்கிட்டு சும்மா இரு, நான் என் பிறந்தநாளை காலத்துக்கும் கொண்டாட முடியாம போயிடும்டி”. “ஏய் பெரியம்மா ரெண்டு நாளில் என் பிறந்தநாள் வருது அன்னைக்கு பார்த்து நீ போய் சேர்ந்த அவளோ தான் பார்த்துக்க” என்று இழுத்துக் கொண்டிருந்த தன் பெரியம்மாவை நோக்கிக் கூறினாள் தேவி. அனைவரும் ஒவ்வொருவராக சீதேவிக்கு பால் கொடுக்க, தொண்டைக்குழி


பாதைகள்

 

 குடிவந்த போது சிவசங்கரன் மாமா தன்னை ஓர் ஓவியர் என்று தான் அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த வீடு எட்டுவருடமாகப் பூட்டிக் கிடந்தது. அதைக் கட்டியவர் சிங்கப்பூர்க்காரான டேனியல் வைத்தியர். அவ்வருடமே அவரது மகளும், மனைவியும் கார் விபத்தில் இறந்தார்கள். வைத்தியருக்கு ஆரம்பத்தில் ஒன்றும் தெரியவில்லை. அழுகையும் படுக்கையுமாக இருந்தார். ஊரார் போய் துக்கம் கேட்டார்கள். மூன்று மாதத்தில் எழுந்து நடமாடி ஆறுமாதத்தில் வழக்கம் போல புதுமாப்பிள்ளைக் கோலம் பூணுவார் என்றுதான் எதிர்பார்த்தார்கள். சில கல்யாணத்தரகர்கள் கூட போய்


தனிஷ்டா பஞ்சமி பஞ்சமி பேய்

 

 முகவுரை மனிதனாகப் பிறந்தால் எல்லாருக்குமே பொதுவாக பேய்களை பற்றி ஒரு திகில் இருக்கும். பேய்களை பற்றி பேசினாலே கண்களை மூடிக் கொள்பவர்கள் நிறையப் பேர். பயமில்லாதது போல் காட்டிக் கொண்டு, பயந்தாங்கொள்ளியாக வீரவேஷம் போடுபவர்கள் பேய்கள் உறங்குவதில்லையாம் என்ற்று சொல்லுகிறார்கள். தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும் வரை அலைந்தபடியே இருக்குமாம். அதுவும் கொலை பட்ட அல்லது தற் கொலை செய்தவரின் ஆவி மறு பிறவி எடுக்கும் மட்டம வரை ஆளைந்து கொண் திரியுமாம். பேய்கள் அல்லது ஆவிகள்


நேரம் இரவு ஒன்று முப்பத்தியாறு

 

 தாஹிர் பாய் என் குழந்தை பருவத்தில் எரிந்த ஒரு அக்காவின் ஆன்மா, அந்த தெருவையே பல வருடங்கள் ஆட்டிப் படைத்தது. ஹரே கிஷோர் பாய், கொஞ்சம் நேரத்தை பாருங்க மணி இரவு ஒன்று முப்பத்தாறு ஆகிறது. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? சொல்லுங்க தாஹிர் பாய். இப்போ நான் ரூம்ல இருக்கேன், நீங்க கம்பெனில இருக்கீங்க. உங்களை நான் எப்படி தொடர்பு கொள்ள முடியும்? மொபைலுக்கு அழைப்பீங்க தாஹிர் பாய். ஹான் சரியாக சொன்னீங்க கிஷோர் பாய். சரி


ஸ்கை ப்ரிட்ஜ்

 

 சிறுகதைகள் தளத்தில் திரு.கண்ணன் அவர்கள் எழுதிய 500வது கதை. வாழ்த்துக்கள் ஐயா. பெங்களூர். அன்று சனிக்கிழமை. விடிகாலை இரண்டு மணி. ஜூன் 26 ம் தேதி 2021. மழை பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. பயங்கரக் குளிரில் ஊதக்காற்று அடித்துக் கொண்டிருந்தது. பெங்களூர் நகரமே அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது. பெங்களூரில் மிகப் பிரபலமான பணக்காரர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய மெஜஸ்டிக்கில் இருக்கும் அபார்ட்மென்ட் ஈடிஏ. ஒவ்வொரு வீடும் இரண்டு கோடி. மொத்தம் பதினோரு டவர்கள். ஒவ்வொரு டவரிலும் பதினெட்டு மாடிகள். ஒரு


அன்புள்ள அமானுஷ்யம்

 

 இராமநாதபுரம் மாவட்டத்தின் நகர்ப்புற பகுதி என் தெரு. அந்த அக்காவின் பெயர் சாயா. அவங்க ரொம்ப பாசமானவங்க, யாரு மேலயும் கோபத்தைக் காட்டி கூட நான் பார்த்ததில்லை. அவங்க அம்மா ஒரு பெட்டிக்கடை வைத்து தொழில் நடத்தி வந்தார். கடைக்கு வரும் அனைவரிடமும் சாயா அக்கா இன்முகத்தோடு நலம் விசாரிப்பாங்க, பார்க்கவும் அழகான தோற்றம் கொண்டவங்க. நான் சிறுவயதில் ஜவ்வு மிட்டாய், கல்கொனா, கொக்கோச்சி, கடலை மிட்டாய், தேன் மிட்டாய், அலாவுதீன் மிட்டாய் மற்றும் பன்னீர் சோடா


அமானுஷ்ய மாற்றம்

 

 சுகந்தியின் தங்கைக்கு திருமணம். ஒரு வாரத்திற்கு முன்பே வருமாறு அவள் அம்மா கூறிவிட்டாள். சுகந்தி தன் இரு பெண் குழந்தைகளையும் கிளப்பிக் கொண்டு ஊருக்கு தயாரானாள். தயாளன் தனது காரில் அவர்களை ஏற்றி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தான். அவர்கள் ரயில் ஏறியதும் மிக பாசமாய் “மிஸ் யூ சுகந்தி” ஒரு வாரம் எப்படி இருக்க போறேனோ என்று செவலியர் சிவாஜி கணேசன் அளவிற்கு நடித்தான். ரயில் கிளம்பிய அடுத்த நொடி “ஹய்யா… என் பொண்டாட்டி