This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/07/09/.

இது என்ன வாழ்க்கை!

“ஐயோ, அம்மா, யாரும் இல்லியா. வலி தாங்க முடியலையே, யாராவது வாங்களே” கலையரசி பிரசவவலி தாங்க முடியாமல் கத்தித் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் போட்ட அலறல் அந்த ஆஸ்பத்திரி வார்ட்டை மாத்திரமன்றி வெளியிலும் கேட்டு பலரையும் அதிரவைத்தது. அது வலியால் துடிக்கும் ஒரு குரலாக மாத்திரமன்றி தனக்கு உதவ யாருமே இல்லையே என்ற அவலக் குரலாகவும் இருந்தது. அவளுக்கு பிரசவ வலியேற்பட்டபோது அவளது தந்தையும் தாயும் தான் அந்த ஆஸ்பத்திரிக்கு அவளை அழைத்து வந்து சேர்த்தார்கள். அவளது

.


Read More


புத்தம் புது பூமி!

“இதோ, இதுதான் நாம் கண்டுபிடித்துள்ள புதிய கோள்!” என்று பெருமிதப் புன்னகையோடு தன் இடப்புறம் இருந்த திரையைக் காட்டினார் அந்த விண்வெளிக் கூடத்தின் தலைமை அறிவியலாளர். அங்கே நூற்றுக்கு எழுபத்தைந்து அடி நீள அகலம் கொண்ட மாபெரும் திரையில், பல்லாயிரம் ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து நேரலையில் தெரிந்தது அந்தப் புதிய பூமி. ஊடகங்களின் ஒளிப்படக் கருவிகள் படபடவென அதைப் பார்த்துக் கண் சிமிட்டின. விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் பிற அறிவியலாளர்கள், உதவியாளர்கள் புடைசூழ அமர்ந்திருந்த மூத்த அறிவியலாளரின் முன்னால்

.


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை

அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 நான் அப்புறமா B.Ed. ‘கோர்ஸ்’ படிச்சு ‘பாஸ்’ பண்ணி னேன்.நான் என்னுடைய அந்த ஆ¨ சயை நிறைவேத்திக் கொள்ள இப்போ நான் சென்னைக்கு வந்து இருக்கேன்” என்று தன் கதையை சொல்லி தன் பையில் இருந்து எல்லா டிகிரீ ‘சர்டிபிகேட்டுகளையும்’ எடுத்து ‘பிரின் ஸிபாலிடம்’ காட்டினாள்.அந்த ‘சர்டிபிகேட்டுகளை’ எல்லாம் வாங்கிப் பார்த்த மூர்த்தி அசந்து விட்டார். ‘பிரின் சிபால்’ ஆச்சரியப்பட்டு “அப்படியா செந்தாமரை.என்னால் நம்பவே முடியலையே.ஏதோ ஒரு சினிமா லே வரும் கதை

.


Read More


கோடி இன்பம் வைத்தாய்

லண்டன்.. பனிப்புகார் படர்ந்த மாலை வேளை. சூரியனை மழைத்துளிகள் விழுங்கிக்கொண்டிருந்தன. குறிப்பிட்ட நேரத்தின் ஒரு நிமிடம் கூடப் பிசகாமல் தாதியின் வரவு. கதவு மணி ஒலித்தது. ‘மாலினி’ தாதியை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். தாதியில் இடைவிடாது பெருகும் மெல்லிய சிரிப்பு அவள் முகத்தினை வருடிக்கொண்டிருந்தது. ‘எப்படி இருக்கிறீர்கள் மாலினி?’ தாதி மாலினியை நோக்கி எழுப்பிய உற்சாகமான கேள்வி மனதில் ஒரு தெம்பை ஏற்படுத்தியதுபோல் இருந்தது. சற்றுக் குள்ளம்தான். பரந்த சீன முகம். குடுகுடுத்துப் பேசிக்கொண்டேயிருப்பாள் அந்தத் தாதி.

.


Read More


சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே

நான் வீட்டுக்கு வெளியே இருந்தேன். கொஞ்ச நாளாய் குளியலறை நீர் வடிந்து ஓடித் தெரு சாக்கடையில் விழாமல் எரிச்சலை உண்டு பண்ணியது. குளிலயறையிலேயே குளம் கட்டி புரொஸ்டேட் நோயாளியின் சிறுநீர் போல மெல்ல மெல்லத்தான் வெளியானது. அது முற்றிலும் வடிந்த பின்னரும் அடித்தரையில் மெல்லிய வழுக்குப் பாசி. சிறுநீர் வீச்சம் இலவச இணைப்பாக. தினமும் தேய்த்து கழுவேண்டியதாயிற்று. கழுவிய நீர் கறைந்தோட பலமணி நேரப் பிடிவாதம். கணுக்கால் வரை அழுக்கேறித் தேங்கிய குளத்தில் நின்று குளிக்கும் நிலையைத்

.


Read More


டாஸ்மாக் ஞானி

நேற்றிரவு தண்ணி அடித்து விட்டு பட்டினப்பாக்கம் டூ மந்தைவெளி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டு இருந்தான் டமாரு. ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகதான் வாந்தி எடுத்திருந்தான். மாவா போட்டிருந்ததால் அது கடைவாயில் ஒழுகி சட்டையை கறையாக்கி இருந்தது. ஏர்டெல் ஆபீஸை தாண்டியதுமே கொஞ்சம் இடதுபுறம் திரும்ப வேண்டி இருந்தது. மப்பு அதிகமானதால் க்ளர்ச்சுக்கு பதிலாக ப்ரேக்கையும், ப்ரேக்குக்கு பதிலாக ஹார்னும் அடித்து தலைகுப்புற விழுந்தான். அப்படியே ஓரக்கண்ணால் ரோட்டைப் பார்த்தான். பட்லிஸ் ஏதாவது பார்த்துவிட்டால் மானம் போய்விடும் என்ற

.


Read More


மண்ணெண்ணெய்

கோள்மூட்டி இன்னமும் ரீ… என்று ஒரே சுருதியில் வானத்தில் சுற்றிக்கொண்டு இருந்தது. வெறும் மண்ணெண்ணெய் கானோடு வீடு திரும்பிய நமசிவாயத்தை வாசல்படியில் மறித்தபடியே மருமகள் நின்றாள். “என்ன அதுக்குள்ள எண்ணை முடிஞ்சுதா?” “இல்ல கோமளா … சரியான கியூ .. நாச்சிமார் கோயிலடி வரைக்கும் போய் நிக்குது ” ”அதுக்கு?” நமசிவாயம் தயங்கினார். ” .. மினக்கட்டு ஒரு லீட்டர் எண்ணைக்கு போய் ரெண்டு கட்டை கியூவில நிண்டு காயோணுமா? எண்டு வந்திட்டன்.” ”ஏன் இங்க வந்தீங்கள்?

.


Read More


தொ(ல்)லைபேசி?

‘இந்த வீட்டில் இன்டர்நெட்லிருந்து அனைத்து வசதிகளும் இருக்கு. ஆனா தொலைபேசி மட்டும் கூப்பிடுவறங்க எண் தெரியற வசதி இல்லாத சாதாரணம். ஏன் இப்படி ?” வீட்டிற்குள் உட்கார்ந்து நண்பனோடு பேசிக் கொண்டிருந்த ரமேசுக்குள் திடீர் கேள்வி. ‘நண்பன் பொம்பளை விசயத்துல அப்படி இப்படி. அந்த காட்டிக்கொடுக்கும் தொலைபேசி இருந்தா வீட்டுல உள்ளவங்ககிட்ட மாட்டிக்கிட்டு வீண் விவகாரம், வம்புன்னு விட்டுட்டானா ?’ ‘மனைவி அரசு ஊழியை. மகன்கள் இருவரும் கட்டிளம் காளைகள். கல்லூரி படிப்பு. அந்த நவீன தொலைபேசியை

.


Read More


இனிக்கும் வேப்பம் பழம்

டேய், ஓடாதீங்கடா, விழுந்திடுவீங்க, நடந்து போங்க! எனக் கெஞ்சினார், கேட்காமல் கருமமே கண்ணாக ஓடினார்கள் பெயரனும் அவன் நண்பர்களும். அடிக்கிற வெயிலுக்கே இங்க வந்து இருக்கானுக போல, புலம்பினார் தாத்தா ராமன் ஆமா, உங்க பேச்சை உங்க பசங்களே கேட்க மாட்டாங்க. பெயரப் பிள்ளைகிட்ட கெஞ்சுறீங்க, சின்னப் பசங்க அப்படிதான் ஓடுவாங்க, வருவாங்க, அவங்களுக்கு கால் எல்லாம் வலிக்காது, விளையாட்டு முடிஞ்சதும் தான் வலிக்கும் அழுதுகிட்டே வீடு வந்திடும். பள்ளி விடுமுறைக்கு ஊருக்கு வந்து இருக்கும் எட்டு

.


Read More


துவஜஸ்தம்பம்

சேலம். பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதி. அந்தத் தெருவிலுள்ள வயதானவர்கள் பலர், பெரியவர் ஆவுடையப்பன் வீட்டில் அன்றும் ஒன்று கூடினார்கள். அவ்வப்போது அந்தத் தெருவில் நடந்து கொண்டிருக்கும் ‘அந்த’ அசிங்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தேயாக வேண்டும் என்று மறுபடியும் அவரிடம் முறையிட்டார்கள். இது இன்று நேற்று நடப்பதல்ல. கடந்த பல மாதங்களாகவே அவர்கள் அடிக்கடி ஆவுடையப்பனிடம் இதுபற்றி புகார் அளித்துள்ளனர். அனால் ஆவுடையப்பன் “இது ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட விஷயம், இதில் நாம் தலையிடுவது மிகவும்

.


Read More


நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.



To change your subscription, click here.