This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/06/30/.

டிஜிட்டல் களவு - வித்யாகிருஷ்

சொகுயூர்டு சேலரி ஃஃபுல் போமலி இன்சூரன்ஸ் பிளான்டு லைப் எஜுகேடட் பர்சனல்ஸ் இதானே வாழ்கையின் முமு அர்தமாக்க கூடியது இது நேற்றுவரை இன்று இதோ கையில் காசு இல்லாமல் என்ன ஆச்சு என்பது கூட புரிந்து கொள்ளமுடியாது பேதலித்து போய் வருன் எப்படி ஆச்சு, எல்லா அகொண்டுக்கும் செகுர்டு பாஸ்வேர்ட் போட்டு தான் இருந்தது. வருனுக்கும் வருன் மிஸஸ் தேஜாவிற்கும் மட்டுமே தெரிந்த விஷயம் எப்படி அந்த மூன்றாமவருக்கு தெரிந்திருக்க கூடும் தேஜாவை திரும்ப திரும்ப கேட்டு


Read More


நிறங்கள் புழங்கும் ஓவியம் - பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

இருவரும் இருவேறு துருவங்களாய் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்களில் நீர் கசிந்தது. மெள்ள மெள்ள கசிந்து ஓடி அந்த திருச்சபையின் சிவப்புகம்பளத்தில் தெரித்து விழுந்தது. தெரித்த கண்ணீர் துளிகள் கம்பளத்தின் இடுக்குகளில், சிலுவையில் அறையப்பட்டு கிடந்த இயேசுவின் பாதங்களை நோக்கி படர்ந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் கண்கள் கலங்க பார்த்து கொண்டனர் இப்போது இவர்கள் கண்களில் காதல் மெல்ல கசிந்தது. கசிந்த கண்களில் நிகழ்ந்த சம்பாஷனையின் உரையாடல்கள் மிக நிளமானது அது ஆளமானதும் கூட. அந்த நொடிகள்


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 ஒரு நாள் இரவு மணி பத்தரை இருக்கும்.சேகர் வேலையிலே இருந்து குடிசைக்குத் திரும்பி வரவில்லை.செங்கலமும் கமலாவும் மிகவும் கவலைப் பட்டார்கள்.இருவருக்கும் என்ன பண்ணுவது என்றே தெரியாமல் தவித்தார்கள்.கொஞ்ச நேரம் ஆனதும் “அத்தே,நான் என அம்மா அப்பா குடிசை க்குப் போய் இந்த விஷயத்தை சொல்லி என் அப்பாவைப் போய் அவரு எங்கே போனார்ன்னு கண்டு பிடிக்க சொல்றேன்.போய் வரட்டுமா” என்று கேட்டதும் “சரி கமலா,நான் இங்கே குழந்தைங்களெ பாத்துக் கிட்டு இருக்கேன்.நீ போய்


Read More


வசந்தியின் நட்பு - இரா.சடகோபன்

வசந்தி நீண்ட காலத்துக்குப் பின்னர் தனது ஆருயிர்த் தோழி சுந்தரவள்ளியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். பாடசாலைப் பருவத்தின் அந்த இனிய நாட்கள் இன்னும் பசுமையாக அவள் மனதில் பதிந்து போயிருந்தன. அவள் எத்தனையோ முறை அவளைச் சென்று பார்த்துவிட்டுவந்துவிட வேண்டுமென்று யோசித்தாலும் அவளுக்கிருந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் அந்த யோசனை தள்ளிக் கொண்டே போகிறது. அவர்கள் அந்த விசாலமான பெரு நகரத்தின் இரண்டு மூலைகளில் வாழ்ந்தார்கள். இருந்தாலும் ஒருவரை ஒருவர் சந்திக்க ஒரு மணித்தியால நேரமே பிடிக்கும். என்றபோதும்


Read More


குப்புச்சியும் கோழிகளும் - கோ.புண்ணியவான்

தோட்டங்களின் எல்லை என்றும் சொல்ல முடியாமல், காட்டின் அடிவாரம் என்றும் சொல்ல முடியாத மனித நடமாட்டமே அற்றுப் போன அல்லது தபால் இலாகாவின் முகவரிப் பதிவேட்டில் துருவித் துருவித் தேடினாலும் காணப்படாத பகுதியில்தான் குப்புச்சி வசித்து வருகிறாள். அவள் கணவன் உயிராய் இருக்கும் போதே இந்த இடத்தை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு செத்துப் போய் விட்டான். அவன் செத்துப் போன செய்தி கூட இவளை முழுசாய் வந்து சேரவில்லை. வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாத காரணத்தால்,


Read More


அப்பாவி அடிமைகளுக்கு! - யுவகிருஷ்ணா

“அம்மா! ராமு புதுசா பேட் வாங்கியிருக்கான். அவன் கூட கிரவுண்டுக்கு வெளையாட போறேம்மா” “கிருஷ்ணா ஒழுங்கா சமர்த்தா போய் படுத்து தூங்கு. லீவு வந்தாலே போதுமே. வெய்யில்ல சுத்த கிளம்பிடுவியே” “அம்மா. ப்ளீஸ்மா ஹோம் ஒர்க் எல்லாம் சமர்த்தா முடிச்சிட்டேம்மா. ப்ளீஸ்மா.” “சொன்னா கேட்க மாட்டே. டாடி வந்தா அடிச்சுடுவார். போயி தூங்குடா” *** “சார் பையன் மேத்ஸ், சயின்ஸ் ரெண்டுத்தேலேயும் நைண்டி பர்சண்ட் ஸ்கோர் பண்ணியிருக்கான் சார். தயவுசெஞ்சி பர்ஸ்ட் குரூப்பே கொடுத்துடுங்க” “இல்லே சார்.


Read More


ஷண்முகி - ஜே.கே

வாசலில் ஓட்டோ நின்றது. இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன். உயரமான தகர கேட். உள்ளே ஒன்றுமே புலப்படவில்லை. போன் பண்ணிவிட்டு வந்திருக்கலாமோ? என்று மனைவியிடம் முணுமுணுத்தேன். ஓட்டோ ஓட்டிவந்த ராஜா அண்ணா ஒன்றையும் யோசிக்காமல் கேட்டில் “டங் டங்” என்று தட்டினார். பத்து செக்கன் கழித்து கேட் அரை அடி திறக்கப்பட, உள்ளிருந்து ஒரு சிறுமி முகம் எட்டிப்பார்த்தது. “பாமினி மேடம் … இருக்காங்களா?” ராஜா அண்ணா கேட்க, பதிலுக்கு அந்த முகம் “வணக்கம் வாங்க” என்று


Read More


நுணுக்கம்…! – ஒரு பக்க கதை - காரை ஆடலரசன்

பாலுவிற்குக் குழப்பமாக இருந்தது. எப்படி யோசித்தும் விடை கிடைக்கவில்லை. இதற்கு மேலும் சிந்தித்தால் மூளை சிதறிவிடும். சம்பந்தப்பட்ட ஆளையேக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.! தீர்மானித்து நண்பன் வீட்டுப் படியேறினான். ”வாடா.” வரவேற்றான். ”என்ன ?” விசாரித்தான். ”கையில உள்ள பணத்தை வைச்சி ஏழை மக்களுக்கு வட்டிக்கு விட்டு நீயே போய் வசூலிச்சு சம்பாதிக்கிறே…சரி. ஆனா…அதுல குதர்க்கமாய் வீட்டுல வயசுக்கு வந்த ஆம்பளைப் பசங்க இருக்கிற இடமாய்ப் பார்த்து எதுக்குக் குடுக்கிறே ?” அவன் மௌனமாய் இருந்தான்.

Read More


அரவணைப்பு - பா.அய்யாசாமி

காவல் ஆய்வாளர் அறை, ஆய்வாளர் சங்கர், இன்றுதான் பதவி ஏற்றார். இதற்கு முன்னால் உதவி ஆய்வாளராக முதன் முதலில் பணியில் சேர்ந்தது இதே காவல் நிலையம்,என்பதில் இவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சீட்டில் உட்கார்ந்தவுடன் ஒரு திமிர் வருது பாருங்க! அதற்கான மரியாதையே தனி. இதற்காகவே நான் போலீஸ் வேலைக்கு வந்தேன் என்று உதவி ஆய்வாளரா இருந்தபோது அடிக்கடிச் சொல்வார். இப்பொழுது கும்பகோணம் டவுன் ஸ்டேசனில் பதவி உயர்வுப் பெற்று பணியில் அமர்ந்துள்ளார். ஐயா, டீ சாப்பிடுறிங்களா?சொல்லவா? என்றார்


Read More


ரத்தம் ஒரே நிறம் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘மதம் பிடித்தவர்கள்’ கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது) “அனன்யா நீ ஒரு ஹிந்து. நம்மோட அருமை பெருமைகளைப் பற்றி உனக்கு நிறைய விஷயங்கள் தெரியாது…” “எனக்கு மனிதர்களை அன்புடன் புரிந்து, தெரிந்து கொண்டால் போதும்பா… மதங்களைப்பற்றி எதுவும் தெரிய வேண்டாம்.” “ஹிந்து மதத்தின் வீச்சைப் புரிந்து கொள்ள, அதன் தத்துவங்களையும், அதனை ஏற்ற சிந்தனையாளர்களின் சாதனைகளையும் நாம் ஓரளவாவது சிந்திக்க வேண்டும்… நான்கு வேதங்கள்; ஓர் அற்புத தத்துவ விசாரணையை நடத்திய


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.