This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/06/24/.

பழுப்பு நகரம் - செந்தூரன் ஈஸ்வரநாதன்

1 சில பருவங்களில் மட்டுமே எங்கள் நகரத்தில் மழை பொழியும். மற்றபடி நகரம் காய்ந்துபோய், மனிதர்களின் மண்டைகளும் காய்ந்திருக்கும். சரியாக இங்கு நான் எங்கள் நகரம் என்பதை எப்படிப் பயன்படுத்திக்கொண்டேன் அல்லது சுவீகரித்துக் கொண்டேன் என்பது மிகுந்த குழப்பகரமான ஒன்று. வங்கக் கடற்கரையில் நடந்து கடல் நகரம் ஒன்றை அடைந்துவிடுவது அல்லது வறண்ட காடுகளில் புகுந்து செழிப்பான பாலைமரக் காடுகளுக்குள் புகுவதைப்போன்ற முட்டாள்தனமான யோசனை என்னிடம் இருக்கிறது. நகரத்துக்கூடாய்க் கடந்துபோய் வேறொரு நகரத்தை அடைந்துவிடுதல்தான் என் முழுமையான


Read More


வாழக் கனவு கண்ட வசந்திக்கு…! - இரா.சடகோபன்

என்னைப் பொறுத்தவரையில் வாழ்வில் என்றுமே மீண்டும் கிடைக்காத ஒரு வாழ்க்கை அனுபவம்தான் பாடசாலைப் பருவமும், பல்கலைக்கழக வாழ்க்கையும். பாடசாலை வாழ்வு அநேகமாக எல்லாருக்கும் இருக்கும். ஆனால் பல்கலைக்கழக வாழ்வு மிகச் சிலருக்குத்தான் கிட்டும். அத்தகைய பாக்கியசாலிகளில் இருவர்தான் வசந்தியும் ஆனந்தனும். இவர்கள் இருவரும் கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் தான் முதல் முதல் சந்தித்தார்கள். ஆனந்தன் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவன். வசந்தி விஞ்ஞானம் முதலாம் வருடம். இப்போதெல்லாம் இந்த “ராக்கிங்’ என்ற விடயம் மிகக் கடுமையாக


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 மூன்று மாதம் ஆகி விட்டது. அன்று காலையில் எழுந்ததும் சரளா அடுத்து, அடுத்து, வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தாள்.இதை பார்த்த வசந்தா “ஐயையோ,ஏண்டி சரளா இப்படி வாந்தி எடுக்க றே.நான் நினைச்சது சரியாப் போச்சேடி.அந்தப் பணக்கார பையன் உன்னை ஆசை காட்டி ‘கெடுத்து’ விட்டு இருக்கானேடி.நான் இப்போ என்ன பண்ணுவேன்” என்று கத்திக் கொண்டே“யோவ், தூங்கி கிட்டு இருக்கியே எழுந்துரிய்யா.பாருயா இந்த அநியாயத்தை.அந்த பணக்கார பையன் நம்ப சரளா வை கெடுத்து விட்டு


Read More


இல்லாதவன் - நிலாரவி

வெண்ணிலாவையும் விண்மீன்களையும் தொலைத்த தனிமையில் கருமை பூசிக் கிடந்தது வானம். காணும் யாவிலும் காரிருள் கவ்விக் கொண்டிருந்த ஓர் இரவு. காற்றின் தீண்டல் இல்லாது கற்சிலைகளாய் உறைந்திருந்தன மரங்களும் செடிகளும் . பகல் முழுவதும் சுட்டெரித்த அனலின் தாக்கம் நீறுபூத்த நெருப்பாக்கி இருந்தது இரவை. தவளையின் குரலொன்று தனித்து ஒலித்தது இரவில். ஒரே மாதிரியான சப்தத்தையே மீண்டும் மீண்டும் எழுப்பியது அது. சற்று நேரத்தில் அடங்கியது சப்தம். ஒரு நிசப்தம் அதனை விழுங்கியிருந்தது. அந்த நிசப்தம் ஒரு


Read More


என்னைக் கொலை செய்பவர்கள் - கோ.புண்ணியவான்

மீண்டும் அப்பாவின் அறை ஒளியில் உயிர்பெற்றிருந்தது. கணினித் திரையை அடைத்துவிட்டு அப்பாவின் அறைய நெருங்கினேன். கதவு தாழ்ப்பாள் இடப்படாமல் சிப்பியில் வாய்போல லேசாக பிளந்திருந்தது. அப்பா அம்மாவின் பொட்டுவைத்த நிழல் முகத்தை அசையாது பார்த்தபடி இருந்தார். தான் இழந்த புற உலகை நினைத்து பெருமூச்செரியும் சுயசோகம் கசியும் நோக்கு. வலது கையைச் சுவரில் முட்டுக்கொடுத்தபடி. கொசுறாக சோகம் இழையோடும் முனகல். அம்மா தவறியதிலிருந்து உடல் இளைத்து பழைய முகப் பொலிவை இழந்துவிட்டிருந்தார். முதுகு கூன் விழத் துவங்கியிருந்தது.


Read More


மீசை! - யுவகிருஷ்ணா

குமரனுக்கு அந்த கனவு ஆறாவது படிக்கும்போது வந்திருக்கலாம். பத்தாவது படிக்கும் அண்ணன்கள் வெள்ளிக்கிழமை மாலை குசுகுசுவென்று பேசிக்கொள்வதும் சனிக்கிழமை காலை எட்டரை மணிக்கெல்லாம் சைக்கிள் எடுத்துக் கொண்டு ஓடுவதும் அந்த வயதில் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தியிருக்கலாம். என்ன ஏதுவென்று விசாரித்தபோது தான் தெரிந்தது ஆதம்பாக்கம் ஜெயலஷ்மியில் காலை 9 மணி காட்சி ஸ்பெஷல் காட்சியாம். நானும் பத்தாவது போகும்போது அண்ணன்கள் மாதிரி ‘அந்த’ மாதிரி படத்துக்கெல்லாம் போகணும் என்று கனவுகளை வளர்த்துக் கொள்ள தொடங்கினான் குமரன். ஆறாவதில்


Read More


எளிய நாய்! - ஜே.கே

நான் ஆரெண்டு தெரியுதா? இல்லையா? ம்ம்ம். அப்படீண்டா பேஃஸ்புக்ல லொகின் பண்ணிப்போய் “மனீஷா சூரியராகவன்” என்று தேடிப்பாருங்கோ. எல்லாமா பதினொரு பெயர்கள் லைன்ல வந்து விழும். அதுல எட்டாவதா இருக்கிற புரபைல் எண்டு நினைக்கிறன். டிரான்சி, பிரான்ஸ் எண்டு ஊர் இருக்கும். அந்த போட்டோவை கிளிக் பண்ணுங்க. அண்ணே அப்பிடியே கொப்பி பண்ணி தேடாதீங்க. அந்த பொண்ணுக்கு எங்கண்ணே தமிழ் தெரியப்போகுது? இங்கிலீஷ்ல டைப் பண்ணி தேடுங்க. “Manisha Sur”ஆ வருதா? ஒரு பொம்பிளை படம் இருக்கா?


Read More


புத்தி..! – ஒரு பக்க கதை - காரை ஆடலரசன்

நண்பனைப் பார்க்க வீட்டிற்குப் போனேன். ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியரான அவன் அப்பா சந்திரசேகர் காப்பகத்திலில்லாமல் வாசலில் நார் கட்டிலில் அமர்ந்திருக்க…அருகில் பத்து வயது பேரன் கையில் தமிழ் தினசரியைப் பிடித்து உரக்க வாசித்துக் கொண்டிருந்தான். அவர் கண் மூடிக் கேட்டுக் கொண்டிருந்தார். ‘காலை வேலை குழந்தையைப் படிக்க விடாமல் வயசான காலத்துல தாத்தா ஏன் பேரனை இந்த இம்சைப் படுத்தறார்.? ‘ என்ற நினைக்கும்போதே…. என்னைப் பார்த்த நண்பன், ”வாடா…” வரவேற்றான். ”இது….? ” இழுத்தேன்.


Read More


பச்சைத் துண்டு - பா.அய்யாசாமி

முத்தப்பா!| மைசூர் வண்டி எத்தனை மணிக்கு வரும்? போங்க! போய் விருந்தாளியை அழைச்சுகிட்டு வாங்க! – புனிதா. இப்பத்தான் கும்பகோணம் தாண்டியிருக்கு! நான் போறேன் பாத்துக்கிறேன் – மாரி் என்கிற மாரியப்பன். வண்டியை எடுத்துகிட்டு குத்தாலம் ரயிலடி போகத் தயாரனான். புனிதா மாரி தம்பதியரின் மூத்த ஒரே மகன் முத்து தற்போது பெங்களூரில் ஒரு IT company ல் வேலை, அங்கே கூட வேலைச் செய்யும் அவனின் நண்பனின் தாய், தந்தை, அவரின் மகள் ஆகியோர் இங்கு

Read More


நாளை வரும் - எஸ்.கண்ணன்

ராஜசேகர் அந்தப் பிரபல நிறுவனத்தின் நேர்முகத் தேர்விற்கு ஆயத்தமானான். கிளம்பும்போது தாத்தா ஜம்புநாதனின் காலைத் தொட்டு வணங்கினான். அவரின் கண்கள் லேசாக ஈரமானது. ஜம்புநாதன் சுதந்திரப் போராட்ட வீரர். போராட்டத்தில் தனது ஒரு காலை இழந்தவர். அதற்காக கலங்கி விடாமல், தனது எண்பது வயதிலும் உற்சாகமுடன் மகன், மருமகள், பேரன், பேத்திகள் என்று அமோகமாக இருப்பவர். “ராஜா இந்த வேலை உனக்குக் கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும்…” தாத்தா ஜம்புநாதன் சொன்னார். அப்போது சமையற்கட்டில் ஒரு


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.




To change your subscription, click here.