This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/06/12/.

வீட்டுக்கு ஒரு….! – ஒரு பக்க கதை - துடுப்பதி ரகுநாதன்

மழை வேண்டுமானால் வீட்டுக்கு ஒரு மரம் நட வேண்டும் என்று ஒரு காலத்தில் தொகுதி மக்களிடம் தீவிர பிரச்சாரம் செய்த அந்த முன்னாள் அமைச்சரின் சட்டசபைத் தொகுதியின் இடைத் தேர்தலும், இந்த பாராளுமன்றத் தேர்தலோடு வந்து விட்டது! அதனால் அவர் குட்டி போட்ட பூனை மாதிரி தொகுதியில் தினசரி வலம் வந்து கொண்டிருந்தார். அவர் தொகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு டாஸ்மாக் கடை இருந்தது. அதை உயர் நீதி மன்ற உத்திரவுப் படி மூட வேண்டிய நிர்ப்பந்தம்

.


Read More


சத்தை ஏர் - கோபிநாத் மோகன் (அறிமுகம்)

பச்சை பசேலென பச்சை பாயை விரிதஂதாறஂ போலஂ எஙஂகுமஂ பசுமை எனஂற நிலையெலஂலாம் மாறி,முறஂறிலுமஂ மாறுபடஂடு,பல ​ விளைநிலஙஂகளஂ தரிசு காடாக​,வீடஂடு மனைகளாக ​ காடஂசி தருகினஂறன நமது ​ கிராமங்களஂ. அப்படியாகதஂதானஂ தஞஂசை தரணியினஂ சூரப்பள்ளம் எனும் அழகிய​ கிராமமும் காலதஂதினஂ போக்கிற்கு மாறுபடஂடு முறஂறிலுமாக கலையிழநஂது நிற்கிறது. அப்படியாக​,இந்த காலத்தினஂ மாறஂறம் விஞஂஞான வளரஂச்சி எனஂறு பெருமை பீத்தி கொள்ளும் சனஙஂகளுகஂகு மதஂதியிலஂ அகப்பட்டும்,உட்பட்டும் போராடி தத்தளிக்கும் பாமர ​ ஏழை விவசாயி ஒருவரோடு

.


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 உடனே செந்தாமரை உடனே ”சுமதி.நான் உனக்கு தினமும் கணக்கு சொல்லி தறேன். நீ பத்தாவதிலே நிச்சியமா கணக்கிலே ரொம்ப நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணுவே சுமதி” என்று சொன்னதும் சுமதி செந்தாமரையை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு “உண்மையாகவா செந்தாமரை நான் உன்னைக் கேட்டதும் நீ இவ்வளவு சீக்கிரமா எனக்கு கணக்கு சொல்லிக் கொடுக்க ஒத்துப்பே ன்னு நான் கனவிலும் நினைக்கலே.ரொம்ப ‘தாங்க்ஸ்’ செந்தாமரை. நீ பண்ண போற இந்த உதவியை நான்

.


Read More


வெள்ளை அடிக்காத கல்லறை - வல்லபாய்

பாதி இறக்கப் பட்டிருந்த கண்ணாடியின் வழியாக காற்று அவன் முகத்தில் பட படத்துக் கொண்டிருந்தது. முற்பகல் வேளையின் தென் தமிழகத்து சாலை உஷ்ணத்தை விரிந்த சாலையின் இரு புறமும் பரந்து கிடக்கும் வெளியின் காற்று சற்றே வெம்மை தணிக்க, காரின் பின் இருக்கையில் வெகு வசதியாய் சாய்ந்து அதிகப் பரபரப்பு இல்லாத இளைப்பாறுதலில் பயணத்தை ருசித்துக் கொண்டிருந்தான். எத்தனை வருடங்களுக்குப் பின் ?மனதில் உறைந்திருந்த வருடங்களை தேடி முகிழ்ந்த போது பத்து பதினைந்து – இல்லை பதினேழு

.


Read More


ஓட்ரா வண்டியை! - யுவகிருஷ்ணா

இளையகண்ணனுக்கு வயது நாற்பது இருக்கலாம். நரைத்த தன் தலையை நன்கு மைபூசி மறைத்திருந்தாலும், சில இடங்களில் எட்டிப் பார்க்கும் நரையை ‘பித்த நரை’ என்று சொல்லிக்கொள்வார். பழைய பாக்யராஜ் படங்களின் கதாநாயகிகள் அணிவது போல தடிமனான கறுப்பு ப்ரேம் கண்ணாடி. முதுமையால் மாறிப்போன தன் தோற்றத்தை இளமையாக காட்டிக்கொள்வதில் ஆர்வம் அதிகம். பாப் மியூசிக் பாடும் இளைஞர்கள் அணிவது போல ஒரு வட்டவடிவ தொப்பி. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காத மனிதர் இளைய கண்ணன். இருசக்கர வாகனத்தில்

.


Read More


நாளை இன்று நேற்று! - ஜே.கே

2123ம் ஆண்டு மே மாதம். 25ம் திகதி, இடம் யாழ்ப்பாணம் சென்றல் நேர்சிங்கோம். ஏழாம் நம்பர் பிள்ளை… அதான் கலைத்துறையில் நல்லா இருக்கப்போறார்! முணுமுணுத்தபடி நேர்ஸ் பிறந்த நேரத்தை குறித்துக்கொண்டிருக்கும்போதே அவசரமாக உள்ளே நுழைந்த யாழ்ப்பாணம் கம்பன் கழக செயலாளர் வில்வராஜா தொட்டிலில் கிடந்த வயோதிபரை கண்டதும் நிம்மதிப்பெருமூச்சு விட்டார். “அப்பாடி .. எங்க டைமிங் பிழைச்சிடுமோ எண்டு பயந்திட்டன் .. வெளியீட்டு விழாவுக்கு நேராமாச்சுது .. ஐயாவை கெதியா ரெடிப்பண்ணுங்க” “ஐயா” ஆறடித்தொட்டிலில் ஆவென்று விட்டத்தை

.


Read More


அவன்..! – ஒரு பக்க கதை - காரை ஆடலரசன்

அலுவலகத்தில் நுழைந்த திவ்யா கண்களில் இருக்கையில் அபிஷேக்கைக் கண்டதைவிட ஆனந்தைக் கண்டதில் இவளுக்கு ஏக கடுப்பு. இதில் ஆளைப் பார்த்ததும் வேறு அவன் முகத்தில் ‘ஈ’ என்று இளிப்பு. ‘வரட்டும் ! இன்னைக்கு எதிர்க்க உட்கார்ந்து ஆள் ஏடா கூடமாய்ப் பேச வாய்ப்பே வைக்கக் கூடாது. அபிஷேக்கூட மனஸ்தாபம், சண்டை, ரெண்டு பேருக்கும் காதல் முறிவு. இடையில் புகுந்து நாம் பேச்சுக் கொடுத்து இடைவெளியைப் பெரிசாக்கி ஆளைக் கவித்துடுவோம் என்கிற நினைப்பு.! எங்க காதல் முறிஞ்சே போனாலும்

.


Read More


காவல் அதிகாரியின் ஆதங்கம் - ஸ்ரீ.தாமோதரன்

சே ! இந்த திருட்டு வேலை செய்வது என்றாலே நமக்கு குலை நடுக்கம்தான், மனதுக்குள் புலம்பிக்கொண்டவன் சட்டென தலையில் தட்டிக்கொண்டான். திருட வந்த இடத்தில் இப்படி நினைத்து மண்டையை உடைத்துக்கொண்டால் வந்த காரியம் என்னவாகும். அந்த ஐந்து மாடி கொண்ட பிளாட் அமைப்பு. ஒவ்வொரு தளத்திலும் நான்கு நான்கு வீடுகள் உள்ளது. இப்பொழுது செல்லபோகும் வீடு பூட்டி இருக்கும். அங்குள்ளவர்கள் வெளியூர் போயிருக்கிறார்கள். கணவன்,மனைவி, அல்லது நண்பர்களாக இருக்கலாம். அந்த பூட்டு “நவ்தால்” வகையை சேர்ந்த்து, அதற்கு

.


Read More


காதல் ஓய்வதில்லை - பா.அய்யாசாமி

நாச்சியார் கோவில். பெயருக்கேற்ற அழகும், கும்பகோணத்துக் குசும்பும், நிறைந்த வடக்கு அக்ரஹாரம்.. தெரு ஆரம்பத்தில் ஒரு பெருமாள் கோவில், இரண்டு பக்கமும் நெருக்கமான ஓட்டு வீடுகள், ஓட்டினில் சொருகப்பட்ட காய்ந்துப் போன மாங்கொத்துகள், ஒவ்வொரு வீடும், நீளமும் அகலமும் கொண்ட செதுக்கி வைத்த வீடுகள், வீட்டுத் திண்ணகள், அதன் மடிப்புகள், அதில் ஏறி விளையாடும் குழந்தைகள், படுத்துக்கொண்டு கதை அளக்கும் தாத்தாக்கள்.. வாசலில் வில்லு வண்டி, மற்றும் மாடுகள், அழகான சானம் தெளித்து இட்டக் கோலங்கள். சிறிய

.


Read More


மூன்று வாரிசுகள் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘ரெண்டு பெண்டாட்டிச் சங்கடங்கள்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) பாண்டி அண்ணாச்சி வேகமா கோமதியைப் பாக்குறதுக்குப் போனார். அவள் அவர் சொன்னதைக் காதில் போட்டுக் கொண்டாளா இல்லையான்னே தெரியலை. அவளும், அவளுக்குத் தலைக்குமேல் கிடந்த சோலிகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘எல்லாம் நீ போட்ட பிச்சைதானே; நீ சம்மதிச்சி; நீயே பெண் பாத்துக் கட்டி வச்சதின் பலன்தானே இது’ன்னு புருசன் கெடந்து உள்ளுக்குள் உருகுவது அவளுடைய மனசுக்குத் தெரியவே இல்லை. ‘ஒனக்கு வாரிசு

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.