This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/06/09/.

சிறகுகள் - கோ.புண்ணியவான்

அது ஒரு துர்ச் சம்பவம். தப்பிக்கவே முடியாத ஒரு மாயவலைக்குள் விழுந்து சிக்கிக் கொண்டது போல முடிந்துவிட்டிருந்தது . எல்லாம் கொண்டாட்ட கதியில் நகர்ந்து கொண்டிருந்த தருணத்தில் ஓர் ஊழிப் பெரும் கொடுக்குப் பிடியில் இறுக்கப்பட்டு விடுவோமென்று மதி எதிர்பார்க்கவில்லை. தேனிலவின் மூன்றாவது நாளில் நீர்வீழ்ச்சியில் குளிக்கப் போனபோது ஒரு மூன்று நான்கடி உயரத்திலிருந்து குதூலத்தோடு பாய்ந்தவர் குப்புற விழுந்து நீரிலிருந்து சில நிமிடங்கள் எழாதிருக்க, பதறி ஓடிப்போய் தூக்கும் போதுதான் தெரிந்தது ரமேஷ் நினைவற்றும், மூச்சுப்

.


Read More


பாசம் என்பது எதுவரை? - இரா.சடகோபன்

இயந்திரமயமான, அவசரமான இவ்வுலகத்தில் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் நம்மையறியாமல்தான் நிகழ்கின்றன. அநேகமான நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் திராணி நம் கைகளில் இல்லை. இந்திராணியும் சிவராஜாவும் கிராமத்தில் பிறந்து, கிராமத்தில் வளர்ந்து படித்து ஆளானவர்களாக இருந்த போதும் கிராமத்தில் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இரண்டுபேருமே கொழும்பில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் போதுதான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் அவர்கள் தமது குடும்ப வாழ்வை கொழும்பில் நடத்த வேண்டியிருந்ததால் கொழும்புக்கருகாமையிலேயே வாடகைக்கு வீடொன்றை எடுத்து அதில் குடியேறினார்கள்.

.


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 தேவி குடிசைக்கு வந்ததும் வராததும் “எனக்கு என்னவோ நீங்க சொல்றது சரின்னு படலேங்க. அவங்க வூட்லே ஒரே ஒரு ரூம் தானுங்க இருக்கு.எப்படிங்க அந்த ‘சிறுசுகள்’ அந்த வூட்லே சந்தோஷமா இருக்க முடியுங்க” என்று மறுபடியும் சொன்னவுடன் உடனே ரத்தினம் “என்னப்பா ராஜ், தேவி சொல்றது நிஜமா.அவங்க வூட்டிலே ஒரே ஒரு ரூம் தானா இருக்குது” என்று கேட்க ஆரம் பித்தாள்.‘என்னடா இது வம்பாப் போச்சு.இனிமே சேகர் அவன் அவ பெண்ஜாதியோட சந்தோஷமா

.


Read More


இராணுவத்தில் சித்தார்த்தன் - பொ.கருணாகரமூர்த்தி

புத்தூர் வடக்குச் சந்தியிலிருந்து சுன்னாகம்போகும் வீதியில் வரும் நிலாவரைக் கிணற்றுக்கு ஒரு கி.மீ முன்பதாக வரும் சிறிய செம்பாட்டுக் கிராமந்தான் நவற்கீரி. வாழை, வெங்காயப் பயிர்ச்செய்கைக்குப் பெயர்போன பூமி. அங்கே வாழ்ந்த எளிய விவசாயக் குடும்பஸ்த்தர் சண்முகம். எல்லா இளைஞர்களைப்போலவும் கல்லூரிக்குச்சென்று சோதனைகளில் சித்தியடைந்து ஏதோவொரு தொழிலைப் பெற்றுக்கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய ஒரு பிள்ளை மாறாக இயக்கத்தில் சேர்ந்துகொண்டு தற்கொடைப்போராளியாகி விடுதலைக்குத் தன்னையே கொடுத்திருக்கும் குடும்பம் அது. அப்பா சண்முகத்துக்கு தன் மகனையிட்டுப் பெருமையாக இருந்தாலும் ‘தான்

.


Read More


பிணைப் பூக்கள் - ஜே.வி.நாதன்

வாசலில் நிழலாடியது. “யம்மோவ்…” என்று குரல் கேட்டது. பரிச்சயமான குரல். சமையல் வேலையாய் இருந்த நான் வெளியே வந்தேன். “என்ன பர்வதம்! இந்த நேரத்துல வரமாட்டியே? என்ன விஷயம்?” பர்வதம் எங்கள் வீட்டில் வேலை பார்ப்பவள். கணவன் ஏதோ ஒரு வங்கி ‘ஏ.டி.எம்.’மில் ‘வாட்ச்மேன்’. மாதம் ஐயாயிரம் ரூபாய் சம்பளம் என்று சொல்லி இருக்கிறாள். இரண்டு மகள்கள். மாலை ஐந்தரை மணிக்கு பர்வதமோ… அவளுடைய மகள்களில் ஒருத்தியோ வந்து வாசல் பெருக்கி, கோலம் போட்டு, பாத்திரங்கள் துலக்கி,

.


Read More


அசோகவனத்தில் கண்ணகி! - ஜே.கே

அசோகவனம், சோலையாய், விதம் விதமான மரங்களும் பூக்களும் என அழகை அள்ளி தெளித்துக்கொண்டிருந்தது. சுற்றிவர நீலலில்லி பூக்கள். நுவரேலியா குளிர். தூரத்திலே மலைச்சாரல். வெயில் குறைந்த வானம், மலைகளில் பட்டு தெறித்தோ என்னவோ, மெல்லிய நீல வண்ணத்தில் தூரத்தில் மலைத்தொடர்களை பார்க்கும்போதே கண்ணுக்கு இதமாக, குளிர் பதினெட்டு பத்தொன்பது டிகிரி இருக்கலாம். மரத்தடியில் முழங்கால்களுக்குள் முகம்புதைத்து தன் சிலம்புகளை பார்த்தபடியே கண்ணகி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். மரத்தின் மேலே உச்சியில் இருந்து விதம் விதமான பறவைகளின் சத்தங்கள். அவ்வப்போது

.


Read More


அப்பா..! – ஒரு பக்க கதை - காரை ஆடலரசன்

சந்திரன் புறப்பட்டுச் சென்ற அடுத்த விநாடி அடுப்படியில் இருந்த அம்மாவிடம் சென்றான் அருண். தோசை சுடுவதை நிறுத்தி, ”என்னடா ? ” பார்த்தாள். ”அப்பா சரியான கிறுக்கா ? ” ”ஏன் ?!” ”பணக்காரன் வீட்டுத் திருமணம், விசேசங்களை முடிந்த அளவுக்கு ஒதுக்கி, முடியாததுக்கு ஆர்வமில்லாம புறப்பட்;டு மொய் வைக்காம திரும்பற அப்பா நம்மைவிட வசதி கம்மியான ஏழைங்க வீட்டு திருமணம் விசேசங்களுக்கு தங்கள் வீட்:டுத் திருமணம் போல சுறுசுறுப்பாய்க் கிளம்பி மறக்காம மொய் வைச்சுட்டுத் திரும்பறார்.

.


Read More


கல்யாணம் - ஸ்ரீ.தாமோதரன்

வா மாப்ள வா வா , என்ன விசேசம், கையிலே கவர் கட்டோட வந்திருக்கே, கல்யாண பத்திரிக்கையா? கல்யாணம் யாருக்கு? உனக்கா? குரலில் கிண்டலா,வருத்தமா என்று தெரியவில்லை, அல்லது உனக்கெல்லாம் கல்யாணமா என்ற கேள்வி கூட இந்த வார்த்தையில் அடங்கியிருக்கலாம். பரந்தாமனுக்கு பற்றிக்கொண்டு வந்தது, சுட சுட பதில் சொல்லிவிடலாம், இருந்தாலும் பல்லை கடித்துக்கொண்டு முன்புறுவல் பூத்தான். ஆமாப்பா, எனக்குத்தான் கல்யாணம் வர்ற வியாழக்கிழமை லட்சுமியம்மாள் கல்யாண மண்டபத்துல வச்சிருக்கேன். உனக்கா, கல்யாணமா? சொல்லவேயில்லை, அப்புறம் ரொம்ப

.


Read More


கரை தொடா அலைகள் - பா.அய்யாசாமி

என்னங்க, நாளைக்கு வேளாங்கண்ணி போறதுக்கு ரிசர்வ் பண்ணிட்டிங்களா? இல்லைமா, கார்லயே போகலாம்னு யோசிக்கிறேன், இது பாலு. அப்படியா, உங்க வசதிப் படி செய்யுங்கள், எனக்கூறி வேறு அலுவலில் மூழ்கினாள். சரஸ்வதி. பாலு ,சரஸ்வதி தம்பதியரின் வாழ்க்கையில் வேளாங்கண்ணி என்பது ஒரு புண்ணியத்தலம் ஆகிப்போனது 2004 ஏற்பட்ட சுனாமியிலிருந்து. 2004 சுனாமி நாள்.. பலபேரின் வாழ்க்கையில் இயற்கை சதுராடிய நாள், இவர்களும் ,தனது ஐந்து வந்து மகன் அருண், தங்கள் வளர்ப்பு நாய் மணி ஆகியோருடன் வேளாங்கண்ணி பிரார்த்தனையை

.


Read More


ரெண்டு பெண்டாட்டிச் சங்கடங்கள் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘அடுத்த மனைவி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) ஆச்சு. ஊரே எதிர்பார்த்த பனங்காட்டுச் செல்வனின் அதிவீர திருமணம் நல்லபடியா நடந்து முடிந்தது. இசக்கி அண்ணாச்சியின் ரெண்டாங் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சதில் இருந்து அவரின் வீட்டையே வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பாளை சனங்கள் இப்பவும் அவருடைய வீட்டையே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நப்பின்னை பிள்ளை உண்டாகியிருக்கிறாளா இல்லையான்னு உடனே தெரிஞ்சாகணுமே! இசக்கி அண்ணாச்சி கல்யாணம் செய்ததே நப்பின்னை மூலம் வாரிசு

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.