This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/06/06/.

பிரம்மஹத்தி தோஷம் - நிர்மலா ராகவன்

தொலைகாட்சி ஒத்திகை முடிந்து வீடு திரும்பியதும் களைப்புதான் மிஞ்சியது அபிராமிக்கு. `எத்தனைவித சமையல் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க!’ என்று புகழ்ச்சியில் ஆரம்பித்து, அவளைத் தன் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்திருந்தார் இயக்குனர் சற்குணம். முதன்முதலாகத் தன்னை பல்லாயிரம் பேர் பார்ப்பார்களே என்று கவனமாக அலங்கரித்துக்கொண்டு போயிருந்தாள் அபிராமி. அவளை மேலும் கீழும் நோட்டமிட்ட சற்குணம், “பாக்கறவங்க ஒங்களையேதான் பாத்துக்கிட்டு இருக்கப்போறாங்க. சமையல் குறிப்பிலே மனசு போகாது!” என்றார் கேலியாக. உடனே, கழுத்திலிருந்த இரண்டு சங்கிலிகளில் ஒன்றைக் கழற்றி கைப்பைக்குள் போட்டுக்கொண்டுவிட்டு,

.


Read More


சட்டத்தின் வரையரை - பி.ஜெகன்நாதன்

அதிகாலையில் ஒருவித படப்படப்புடனே எழுந்து குளித்துவிட்டு வேலையைத் தேட தயராவாள் மது தங்ககுவதற்கென்று சொந்தமாக வீடு இல்லாதவர்கள். சாலையோர கடைகளுக்கு பக்கதில் தான் இவர்களது வீடு. தனக்கு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததும் முதலில் பெற்றோர்களை வாடகை வீட்டில் குடியெற்றிட வேண்டும் அம்மா அப்பாவை வேலைக்கு போகவிடாமல் இனி எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் எனக்காக உழைத்த உழைப்பிற்கு உங்களை ராஜா ராணியைப் போன்று நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சத்தம் போட்டு கத்தி சொல்ல

.


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 கொஞ்ச நேரம் பேசிக் கிட்டு இருந்து விட்டு ரத்தினம் கமலாவைக் கூப்பிட்டு “கமலா,நீ எல்லா ருக்கும் பலகாரம் கொண்டு வந்து குடும்மா” என்று சொன்னதும் கமலா ஆயா வாங்கி வச்சு இருந்த பலகாரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு மெல்ல ஆடி அசைஞ்சு கொண்டு வந்து முதலில் சேக ரின் அம்மாவுக்கும்,அப்புறமா சேகருக்கும்,கொடுத்து விட்டு மீதி இருந்த தட்டை தன் அப்பாவுக்கும் கொடுத்து விட்டு எல்லாருக்கும் ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு அப்பா பக்கத்திலே

.


Read More


ஸோபிதாவுக்கு பெர்லின் காட்டுதல் - பொ.கருணாகரமூர்த்தி

ஜெகன் ஆகப்பட்ட இந்த இளைஞனுடைய இயற்கையை நெருங்கிப் பார்த்தால் ஒரு சமகாலச் சராசரி இளைஞனின்றும் வேறுபட்ட ஒரு ஆதர்ஸன், இலட்சியன் என்ற வகைக்குள் வரமாட்டான். புதுசுகளில் ஆர்வம், வர்ணங்களால் ஈர்க்கப்படுதல், சினிமாமேல் விமர்சனங்களற்ற கவர்ச்சி, நடிகைகள் ஆராதனை, அவர்களின் அணுக்கத்தில் ஆனந்தபரவசமடைதல், கொஞ்சம்போல ரஞ்சக, காதற்கவிதைகளில் நாட்டம் என இருப்பான். மற்றும்படி ஆடம்பரமாக உடுத்தவோ வாசனாதிகள் விசிறவோ, புகைவிடவோ மாட்டான். அடுக்ககத்தின் மின்னுயர்த்தி எப்போதாவது இயங்காதுபோனால் எந்த மாமிகேட்டாலும் அவர்கள் வண்டியிலிருக்கும் 100 லிட்டர் தண்ணீரையும் நாலாம்

.


Read More


நான் – A அவள் – Z - பட்டுக்கோட்டை பிரபாகர்

‘ஹலோ புல்லாங்குழல்! ஹலோ புல்லாங் குழல்! உன்னால் சத்தம். உள்ளே சுத்தம். நீயும் ஒரு அரசியல்வாதி!’ – என் வேதாவின் கவிதைகளில் இது ஒன்று. எனக்கு ஒரு இழவும் புரியவில்லை. புல்லாங்குழல் ஜடம், அரசியல்வாதி உயிருள்ள மனிதன். இவள் எப்படி இரண்டையும் ஒப்பிடுகிறாள்? எனக்கு கவிதைகளே அலர்ஜி, அவள் மனதுக்கு அவை தான் சாப்பாடு. வீடா ஹவ் ஸ்மார்ட்! ஹவ் இன்டெலிஜெண்ட்! என்ன என்னவோ நிறைய படிப்பாள். அந்த ஆசிரியர்களின் பெயர்கள் கூட எனக்குத் தெரியாது. வேதா

.


Read More


காடு திறந்து கிடக்கிறது! - ஜே.கே

நீர்வீழ்ச்சியே தான். ஸ்ஸ்ஸ் என்ற பரிச்சயமான சத்தம். சத்தம் வரும் திசையில் இரண்டு நாள் நடந்தால் அடைந்துவிடலாம். முதலில் குளிக்கவேண்டும். உடல் முழுதும் உள்ள கீறல்கள், அதில் உள்ள ரத்த திட்டுகள், அழுக்குகள், பச்சை இலை வாசனை எல்லாமே போகும்வரை தேய்த்து குளிக்கவேண்டும். அவசரமாக போகலாம் என்றால் போகும் பாதை அத்தனை அழகு. மிரட்டும் அழகு. எங்கேயும் பூக்கள். எல்லாமே பூக்கள். பார்த்தால் அன்று முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல .. அவ்வளவு அழகு. “நீ எப்போதாவது

.


Read More


கணவர்..! – ஒரு பக்க கதை - காரை ஆடலரசன்

அதிகாலை மணி 5.30. கூப்பிடு தூரத்தில் எதிரே வேகுவேகுவென்று வியர்வை வழிய நடந்து வரும் கதிரேசனைப் பார்க்க எனக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். வயது ஐம்பது. ஓமக்குச்சி நரசிம்மன் உடல். அதில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு எதுவும் மருந்துக்குமில்லை என்பது சத்தியம். அப்படி இருக்கும்போது எதற்கு நடைப்பழக்கம் ? ‘பொழுது போகவில்லை என்றால் காலை எழுந்து பல் துலக்கி, காபி குடித்து…. வாசலில் வந்த தினசரியை எடுத்து மேய்ந்தால் மணி எட்டு. அப்புறம் அலுவலகம். அதற்கு எதற்கு நடை.?

.


Read More


எதிர் பாராதது - ஸ்ரீ.தாமோதரன்

அந்த இருளில் ஒரு பாட்டை பாடிக்கொண்டே வந்த சாமிநாதனை ஒரு கும்பல் கை காட்டி நிறுத்தினர். ஏனுங்க என்ன வேணும்? கேள்வியை கேட்டுவிட்டு, மேட்டில் ஒரு காலும், தரையில் ஒரு காலும் ஊன்றி நின்று கொண்டான்.இங்க இராத்திரிக்கு தங்க வசதி இருக்குமா? கேட்டவர்களை நோட்டமிட்டான் சாமிநாதன்.இரண்டு பெண்கள், ஒரு ஆண் இருந்தனர். பார்த்தாலே படித்துக்கொண்டிருப்பவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். இந்த ஊர்ல தங்கறதுக்கு வசதி இல்லைங்க, ஒரு பத்து கிலோ மீட்டர், போனீங்கன்னா,அங்க இருக்கற டவுனுல தங்கற

.

Read More


இனிய தோழா! - பா.அய்யாசாமி

பிரியா பெயருக்கேற்ற அழகும், வயதுகேற்ற வாளிப்பும் உடைய அழகு தேவதை. கல்லூரி முடித்து ஒரு வருடம் ஆயிற்று, வேலைக்குச் செல்ல அனுமதியில்லை வீட்டில் ஜாதகம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள், நல்ல வரன் வந்தால்,திருமணம் செய்துவிடலாம் என்பது பெற்றோரின் விருப்பம். ப்ரியாவின், அப்பா பாங்கில் வேலை, அம்மா பள்ளி ஆசிரியை.அன்பும் பண்பும் ஊட்டி வளர்த்த ஒரே மகள். ப்ரியாவின் நட்பு வட்டம் பெரியது, ஆனால் அருணிடம் மட்டும்தான் சுக மற்றும் துக்கம் பகிர்வாள். அருண், அழகுடன், அறிவும், நல்ல

.


Read More


அடுத்த மனைவி - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘ஜெயித்த நரி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) எங்கே போய் பெண் தேடுவது? எப்படிப் போய்க் கேட்பது? ‘அய்யா எனக்கு ஒரு வாரிசு வேண்டியிருக்கு, அதுக்காக நா இன்னொரு கல்யாணம் செய்துக்க ஆசைப்படறேன். ஒங்க பெண்ணை எனக்குத் தருவீங்களா’ன்னா கேட்க முடியும்? ஆனா அப்படித்தான் கேட்டாகணும். அதுதான் நெசம். ஆனால் ரொம்ப நேரங்களில் நிசத்தைச் சொல்ல முடியறதில்லை. இசக்கி அண்ணாச்சிக்கு மெல்லவும் முடியலை; முழுங்கவும் முடியலை. தர்ம சங்கடமாகப் போய்விட்டது. ஊரெல்லாம்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.