This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/05/31/.

என் தோட்டத்து இலுப்பைமரம் - பொன் குலேந்திரன்

நான் பிறந்து, வளர்ந்து, படித்து, தாவரவியலில் பட்டம் பெற்று ஆசிரியராக வேலை பார்த்து, குடும்பம் நடத்தும் ஊர் இலுப்பையூர், அனேகம் ஊர் பேர்கள் மரத்துடன் தொடர்புள்ளது. உதாரணத்துக்கு உரும்பிராய், விளாத்திகுளம், ஆலங்குளம், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம் இப்படிப் பல ஊர்ப் பெயர்களில் மரங்கள் இருக்கின்றன. ஆனால், இன்றைக்கு அந்த ஊர்களிலேயே அந்த மரங்களை இருக்கிறதோ தெரியாது . என் ஊர் அதுக்கு விதிவிலக்கு . இலுப்பையூரில் இலுப்பை மரங்கள் ஏராளம். ஒரு சில விளாத்தி, வேப்பமரங்களும் உண்டு.


Read More


இவன் வேறே மாதிரி…! - உஷாதீபன்

சஞ்சீவி போட்ட சத்தத்தில் பதறித்தான் போனாள் மல்லிகா. இத்தனைக்கும் வீட்டுக்குள் இருந்துதான் கத்தினான் அவன். அது தெருப் பூராவும் கேட்கும்படி இருந்தது. “ஏன் இப்டிக் கத்துறீங்க? மெதுவாச் சொன்னாப் போதாதா? உள்ளே வாடீங்கிறதை இத்தனை சத்தமாவா சொல்லணும்? வந்துட்டேன்…எதுக்குக் கூப்டீங்க?” “ஏண்டீ, தலை வாரிக்கிறதை வாசல்ல நின்னா செய்யணும்…ஊருக்கே காண்பிக்கிற மாதிரி?” “என்ன நீங்க? நீங்கதான சொன்னீங்க…வீட்டுக்குள்ளன்னா அங்கங்க முடி கொத்துக் கொத்தாப் பறக்குதுன்னு…அதுனாலதான் வாசலுக்குப் போனேன்…” “உனக்குக் கொஞ்சமாவது கூர் இருக்கான்னு கேட்குறேன்…வாசலுக்குப் போனா திண்ணைல


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 “ஏங்க,என்னங்க சொல்றீங்க நீங்க.வேறே மாசா மாசம் நிரந்திர வருமானம் பர பையனா நாம பாத்தா அவங்க அம்மா,அப்பா நம்மை பார்த்து, உங்க பொண்ணுக்கு இன்னும் ‘இதைப் போடுங்க’, ‘அதைப் போடுங்க’,’எங்கப் பையனுக்கு இதை வாங்கிக் குடுங்க’,’அதை வாங்கி குடுங்கன்னு’ கேட்டா, உங்களால் அதை எல்லாம் வாங்கிப் போட முடியுமாங்க.நீங்க என்ன அவ்வளவு பணத்தை பாங்கிலே சேர்த்து வச்சு இருக்கீங்களாங்க என்ன.உங்க கிட்டே எவ்வளவு பணம் பாங்கிலே இருக்குது ன்னு நான் நேத்து தானேங்க


Read More


வெள்ளிக்கிழமை இரவுகள் - அ.முத்துலிங்கம்

ஏதோ காட்டு மிருகம் துரத்தியதுபோல் உள்ளே பாய்ந்தாள் ஆகவி. பன்னிரண்டு வயதுதான் இருக்கும். அவளுடன் வந்த காற்றும் உள்ளே நுழைந்தது. புத்தகப் பையைத் தூக்கி கீழே எறிந்தாள். எதையோ தேடுவதுபோல் இரண்டு பக்கங்களும் பார்த்தாள். பத்து மைல் தூரம் ஓடிவந்ததுபோல் அவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. தாயார், சமையல் அறையில் இருந்து மெள்ள எட்டிப்பார்த்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்படி நடப்பதுதான். பள்ளியில் இருந்து வரும்போதே சண்டைபிடிக்க ஏதாவது காரணத்துடன் வருவாள். அகிலா, தனியாக கனடாவுக்கு அகதியாக வந்தபோது


Read More


குறைகளைவிட குணங்களைப் பார்ப்பது நல்லது..! - ரஞ்சன்

“குருவே என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “ஏன்? என்ன பிரச்னை?’ என்று கேட்டார் குரு. “என்னிடம் நிறைய குறைகள் இருக்கின்றன. மற்றவர்கள் என்னைவிட திறமைசாலிகளாக தெரிகிறார்கள்’ என்று சொன்ன இளைஞனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு கதையைச் சொல்லத் துவங்கினார். “ஒரு வேட்டைக்காரன் நாய் ஒன்றை வளர்த்து வந்தான். அந்த நாய்க்கு அபூர்வ சக்தி இருந்தது. அதனால் தண்ணீர் மீது நடக்க இயலும். வேட்டையாடிய


Read More


இலையான்! - ஜே.கே

“உணவு சங்கிலி என்பது சுற்றாடலில் உள்ள ..” அரியலிங்கம் மாஸ்டர் ஒரு வலதுகைக்காரர். இடதுகை கரும்பலகையில் விறுவிறுவென்று எழுதிக்கொண்டிருக்கும்போதே, வலது கை லோங்க்ஸ் பொக்கெட்டில் வறு வறுவென்று சொறிந்துகொண்டிருக்கும். ரிவிரச ஒபரேஷன் முடிந்த ‘கையுடன்’ கழுத்தடியில் ஜெயசிக்குறு ஒபரேஷன் ஆரம்பிக்கும். நீங்கள் மைதானம் பக்கம் உள்ள மிடில் ஸ்கூல் கழிப்பறைக்கு ஒதுங்கினால், கிழக்கேயிருந்து சரியாக நான்காவது அறையின் உள் கூரையில் “சொறியலிங்கம் ஒரு சொறி…” என்று கரித்துண்டால் எழுதப்பட்டு, மிகுதிப்பகுதி, மாஸ்டரின் யாரோ ஒரு ஆஸ்தான மாணவனால்


Read More


யோசனை! - காரை ஆடலரசன்

அலுவலகத்திற்குச் செல்லும் திவ்யாவைக் கண்ட ஆதவன் முகத்தில் மின்னல் மலர்ச்சி. அவள் அருகில் வண்டியை நிறுத்தி, ”ஒரு உதவி…? ” என்றான். ”சொல்லுங்க ? ” ”போற வழியில உள்ள தபால் பெட்டியில இந்த கவரை சேர்க்கனும்.” நீட்டினான். ”கண்டிப்பா…” கை நீட்டி வாங்கி நடந்தாள். நாலடி நடந்தவள் உறையைப் பார்த்து தன் கைபேசியை எடுத்து எண்கள் அழுத்தி காதில் வைத்து……. ”ஹலோ..!” என்றாள். ”சொல்லுங்க திவ்யா.? ” ”இப்போ பேசுறது என் நம்பர். சேமிச்சு வைச்சுக்கோங்க.”


Read More


வெளியில் வராத பெண்களின் சுதந்திர போர் - ஸ்ரீ.தாமோதரன்

மாலை வெய்யில் அவள் முகத்தில் விழுந்து அவளின் வருத்தத்தை எதிரில் இருக்கும் வாலிபனுக்கு காண்பித்தது இப்பொழுது ஏன் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறாய்? ஒன்றை புரிந்து கொள், வீரனுக்கு மனைவியாக வேண்டுமென்றால் தைரியமான பெண்ணாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள். போருக்கு போவதை வீரம் என்று ஒத்துக்கொள்கிறேன், ஆனால் எதிரி எப்படிப்பட்டவன் என்பதையும், மனதில் வைத்து அதன்படி போருக்கு தயாராகுபவன் வீரன். அந்த பெண்ணின் பேச்சு இவனை கோபமுற வைக்கிறது. அப்படி என்ன அவர்கள், நம்மை விட வீரத்தில் சிறந்தவர்கள்

Read More


ஓய்வு ஊழியம் - பா.அய்யாசாமி

மாமா, கதவை சாத்திகிடுங்க!நான் மைதானம் வரை போய் வருகிறேன். படுத்து இருங்க! நான் வந்ததற்கு அப்புறம் நீங்க எந்திரிக்கலாம். எனச் சொல்லிவிட்டு மைதானத்திற்கு வாகனத்தை எடுத்துக்கொண்டு நடைப்பயிற்சி செய்ய கிளம்பினார் மூர்த்தி. வாகனத்தை அவர் இயக்க, அவரது வாழ்க்கையை இயற்கை இயக்கியது. மைதானம் போக பத்து நிமிடம் ஆகும்,அதுவரை நாம் மாமா,மற்றும் மூர்த்தி பற்றிப் பார்ப்போமா?. மாமா என்று அழைத்தவர் மூர்த்தியின் மாமானார், ராமலிங்கம், வயது 88, நீரிழிவு மற்றும் தனிமை எனும் நோய் பாதித்தவர். ஒரு


Read More


கோமதியிடம் சத்தியம் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘மச்சான்களின் எச்சரிக்கை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) கோமதிக்கு புத்தி ஒரேயடியா மாறிப் போயிடலை. ஆனா ‘இந்த மனுசனுக்கு தன் அண்ணன் தம்பிகளிடம் இப்படியொரு பேச்சு தேவையான்’னு ஆகிவிட்டது! இதுவே பெரிசுதானே..! இலஞ்சிகாரன்களுக்கு இசக்கி அண்ணாச்சி மட்டும் சளைத்தவரா என்ன? “அப்ப என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்றீங்க.” என்றார். “ஒங்க சொத்துலேயும் பணத்திலேயும் சரி பாதியை எங்க தங்கச்சிக்கு எடுத்து வச்சிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்குங்க… வேணும்னா இன்னும் ஏழெட்டு

Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.