This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/05/28/.

பிரசுரம் - மயிலம் இளமுருகு

மகேஷ் தான் எழுதிய காகிதத்தை எல்லாம் கிழித்து கொண்டிருந்தான். வீட்டு வாசலில் இருவர் பதுங்கிப் பதுங்கி வருவதைக் கண்டு மகேஷின் அப்பா யாரது என்றார். வந்தவர்கள் தயக்கத்துடன் உள்ளே வந்து, மகேஷைப் பார்க்க வந்தோம் என்றனர். அவன் ஏதாவது எழுதிக்கிட்டு இருப்பான். இல்ல காகிதத்தைக் கிழித்து கொண்டியிருப்பான். அந்த ரூம்ல போய் பாருங்க என்றார். இருவரும் தன்னை விட்டால் போதும் என்று மகேஷின் அறைக்கு வேகமாக சென்றனர். மகேஷ் உனக்கு என்ன.. எப்போதும் எழுதிக் கொண்டேதான் இருப்பியா?

.


Read More


அப்பாவின் மனசு - உஷாதீபன்

கதவைத் திறப்பது அப்பாதான் என்று தோன்றியது. அதென்னவோ அந்த நேரத்திற்கு எனக்கும் முழிப்பு வந்து விடுகிறது. திறக்கும் சத்தம் கேட்டுக் கேட்டே அப்படியாகிவிட்டது தினமும். தூங்குபவர்களை எழுப்பி விடும் என்று அப்பாவிற்கும் தெரியும்தான். கூடியானவரை அதிகச் சத்தம் வராமல்தான் திறக்கப் பார்க்கிறார். அதையும் மீறித்தான் அந்தக் “க்றீச்“. ஒரு நாள் எண்ணெய் கூடப் போட்டார். ரெண்டு நாளைக்கு தாழ்ப்பாள் மிகக் குறைவான ஒலியோடு திறந்தது. பிறகு பழையபடி ஆகிவிட்டது. கதவை இடது கையால் அமுக்கிக் கொண்டு வலது

.


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 அந்த இன் ஸ்பெகடர் ராஜ்ஜிடம் மெதுவாக “ராஜ், நீங்க சொல்றது ரொம்ப உண்மையாகவே இருக்கலாங்க.நான் இல்லேன்னு சொல்லலே.நான் அந்த பெரிய டாகடர் மேலே ஒரு ‘கேஸ்’ போட்டு அது கோர்ட்டுக்குப் போனா ஜட்ஜ் என்னைப் பார்த்து ‘உங்களுக்கு எப்படி குழந்தை பெரிய டாக்டர் பார்க்கும் போது உயிரோடு இருந்திச்சின்னு தெரியும்’ன்னு கேட்டா நான் எப்படிங்க அதுக்கு பதில் சொல்ல முடியும் சொல்லுங்க பார்க்கலாம்.அப்படியே ‘எனக்கு தெரியும்’ ன்னு நான் பதில் சொன்னா அதுக்கு

.


Read More


ஸ்டீயரிங் வீல் - வாஸந்தி

அந்தப் பாதை, வண்டிக்குப் பழகிப்போன ஒன்று. அவள் ஸ்டீயரிங் வீலில் கையை வைத்திருக்கக்கூடத் தேவை இல்லை என்று தோன்றும். தினமும் காலை 7 மணிக்கு அவள் அமர்ந்து, காரேஜ் பொத்தானை அமுக்கி அது திறந்துகொண்டதும், வண்டி சிலிர்த்துக்கொண்டு தன்னிச்சையாகக் கிளம்புவதுபோல இருக்கும். வேடிக்கை… அதற்கும் ஓர் ஆன்மா உண்டு; உணர்வு நிலை உண்டு என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். அவள் சோர்ந்திருந்தால், அது வண்டியையும் தொற்றிக்கொள்ளும். லேசில் கிளம்பாது. ஆனால் கிளம்பிவிட்டால், பாதி வழியில் என்றும் நின்றது

.


Read More


இலக்குதான் முக்கியம்… - ரஞ்சன்

குருவே, என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை.’’ என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “வருத்தப்படாதே, என்ன பிரச்னை?’’ என்று கேட்டார் குரு. ”என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை’’ என்றான் வந்தவன். வந்தவனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார். “அமெரிக்காவில் பரபரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி

.


Read More


கதை சொல்லாத கதை! - ஜே.கே

ஏகலைவன் கவலையோடு தனது வலக்கை பெருவிரல் இருந்த இடத்தை தடவிக்கொண்டிருந்தான். குருஷேத்திரம் போர் தொடங்கி மூன்றாவது தினமே கரண்ட் தடைப்பட தொடங்கியது. இன்றைக்கு பதின்மூன்றாவது நாள். ஒரு நாளைக்கு அரை மணித்தியாலம் படி கரண்ட் தந்தாலாவது மோட்டர் போடலாம். ஒரு கையால் எக்கி எக்கி தண்ணி அள்ள சீவன் போகிறது. யோசித்துக்கொண்டே மனைவி குணாட்டி தந்த தேனிர் கோப்பையை இடக்கையால் வாங்கிக்கொண்டே ரேடியோவை திருகினான். “ஒலி 96.6, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது குரு எப்.எம்மின் குருஷேத்திரம் சிறப்பு செய்திகள்.

.


Read More


பெண் குழந்தை - காரை ஆடலரசன்

தனலெட்சுமி முகம் வாட்டமாக மூத்த மகன் வீட்டுப் படி ஏறினாள். ”என்னம்மா ? ” ”உன் தம்பிக்கு மருத்துவமனையில பெண் குழந்தைப் பிறந்திருக்கு.” ”அதுக்கு ஏன் நீ வாட்டம் ? ” ”ஏற்கனவே அவன் குடிகாரன். இப்போ தலைச்சன் பெண். அந்த மனவேதனையிலும் அடுத்துப் பெண் பிறக்கும் என்கிற யோசனை, பயத்திலும் அதிகம் குடிப்பான்.” ”அதுக்கு நான் என்ன செய்ய ? ” ”பொண்ணு பெத்துட்டேன்னு வருத்தப்படாதே. குடிக்காம கொள்ளாம இருந்தா பத்துப் பெண் புள்ளைகள் பொறந்தாலும்

.


Read More


விளையாட்டாய் சொன்ன பொய் - ஸ்ரீ.தாமோதரன்

கோவையிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் தனது புறப்படு பயணத்தை ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடமே இருந்தது. பாபு இரண்டாம் வகுப்பு அறையில் தனது ரிசர்வேசன் பகுதியை கண்டு பிடித்து, கொண்டு வந்த சூட்கேஸ், பை அனைத்தையும் வைத்துவிட்டு எதிர் இருக்கைக்கு வரவேண்டிய யாழினிக்காக காத்துக்கொண்டிருந்தான். நேரம் கடந்து கொண்டே இருந்தது. யாழினி வருகிற பாட்டை காணோம். இவனுக்கு பதற்றமாகி விட்டது. நாளை காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். இப்பொழுதே மணி இரவு பத்து மணிக்கு

.


Read More


ஈதலிசை - பா.அய்யாசாமி

வாணி, எங்க அம்மா,அப்பா ஊர்லேருந்து நாளை மறுநாள் இங்க வரப்போறதாக சொன்னாங்க, என சந்தோஷமாக கூறினான், சந்தோஷமாகத் தானே இருக்கும், பரத், வாணியை காதல் திருமணம் செய்து தனியாக குடித்தனம் வைத்த பின்னே அவர்களின் வருகை குறைந்து போனது, வாணி ஊரில் இல்லாத போது வருவார்கள், வாணி வந்தவுடன் கிளம்பி போய்விடுவார்கள், அவளிடம் அதிகம் பேச மாட்டார்கள், அது அவளைக் காயப் படுத்தும் என இவனும் பலமுறை சொல்லியும், அவர்கள் மனம் இன்னும் இவர்களின் திருமணத்தை ஏற்றுக்

.


Read More


மச்சான்களின் எச்சரிக்கை - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘வாரிசு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) நாலே எட்டில் இசக்கி கடைக்கு வந்து சேர்ந்துவிட்டார். மனசுக்குள் ஒரு பக்கம் சிரிப்பாகவும், இன்னொரு பக்கம் பயமாகவும் இருந்தது. எப்படியோ ஒரு குருட்டுத் தைரியத்தில் கிணற்றைத் தோண்டி விட்டார்! அதுக்காக உடனே கிணற்றில் குதித்து நீந்திக் குளிச்சிரவா முடியும்? முதலில் கிளம்பி வருகிற பூதத்தை விரட்டி அடித்துவிட்டு அல்லவா குளிக்கிற சமாச்சாரமெல்லாம்… ராத்திரி சாப்பாட்டின்போது, இசக்கி அண்ணாச்சி கருவாட்டுக் குழம்பை சோத்துக்கு நடுவில் நெறய

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.