This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/05/15/.

கொல்வதற்கு வருகிறேன் - மெலட்டூர் இரா. நடராஜன்

முப்பது டிகிரி கோணத்தில் திறந்திருந்த அந்தக் கதவு எனக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் ஒரு சின்ன தப்பு நடந்து விட்டது. ‘க்ளக்’ என்ற ஓசையுடன் கதவு சாத்திக் கொண்டது!! குளிரூட்டப் பட்ட மிகப் பெரிய அறை. சிறிய ஓசை கூட மிகத் துல்லியமாக உள்ளே கேட்டது. முக்கியமாக அஜய் சிங்குக்கு! நான் யாரைக் கொல்ல வேண்டும் என்று வந்திருக்கிறேனோ, அவனுக்குக் கேட்டு விட்டது! மிக அருகிலேயே, அரை இருட்டில், நெளியும் பாம்பு மாதிரியான இரானியத் தட்டிகள் இருந்தன.

.


Read More


யானைகளும், சிங்கங்களும்! - படுதலம் சுகுமாரன்

‘என்ன செய்வீங் களோ தெரியாது. அந்த பரத்தைப் போல, நம்ம நரேந்திரனும் இன்ஜினி யரிங் காலேஜ்ல சேர்த்தாகணும்… நரேனும் ஒரு இன்ஜினியராகணும்…’ ஆவேசமாக கண்களை உருட்டி, முகம் சிவக்க நடுக்கூடத்தில் நின்று காமாட்சி, அன்று போட்ட கூச்சல், கோரிக்கையை, இப்போது நினைத்தாலும் மனம் பதறியது, குகநாதனுக்கு. அவளால் அப்படியும் பேச முடியும், கணவன் எதிரில் சத்தம் போட முடியும், சட்டையை பிடித்து கேள்வி கேட்க முடியும் என்று, அதுநாள் வரை குகநாதன், கொஞ்சமும் எதிர்பார்த்தவரல்ல. காரணம் இருந்தது.

.


Read More


நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி - ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

`ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!’ – யாரோ ஒருவன். அந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்’ என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல.

.


Read More


Where are you from? - வ.ந.கிரிதரன்

“டாக்ஸி கிடைக்குமா?” வார்டன் பாதாள ரயிலிலிருந்து வந்திருந்த அந்தக் கனடிய வெள்ளையினப் பெண்மணி கேட்டபோதுதான் அமைப்பியல் பற்றிய தமிழ் நூலொன்றினை வாசித்துக் கொண்டிருந்த நான் இவ்வுலகிற்கு வந்தேன். “தாராளமாகக் கிடைக்கும். எங்கு போக வேண்டும்?” என்றேன். ” பேர்ச்மவுண்ட்/ லாரண்ஸ்” என்று அதற்குப் பதிலிறுத்தபடியே கதவைத் திறந்து டாக்ஸியினுள் ஏறி அமர்ந்தாள் அந்தப் பெண்மணி. வயது முதிர்ந்த, நன்கு பருத்த உடல் வாகுடன் கூடிய தோற்றத்திலிருந்தாள் அவள். முகத்தில் ஒருவித கடுமையுடன் கூடிய பாவம் விரவிக் கிடந்தது.

.


Read More


பொற்காசுகளை திருடிய செல்வந்தர் - பீர்பால்

உடனே கிழவியை நோக்கி, “அம்மா! உன் பை என் இடமே இருக்கட்டும். நீ சொல்வது உண்மையானால் உன் பொற்காசுகள் உனக்குத் திரும்பக் கிடைக்கும்” என்றார். “அந்தக் கடவுள் சத்தியமாக நான் சொன்னது உண்மை!” என்று ஆணித்தரமாகக் கிழவி கூற, “அம்மா! நாளை மறுநாள் வா! அதற்குள் உண்மை புலனாகும்” என்றார் அக்பர். கிழவியும் சலாம் செய்துவிட்டுச் சென்றாள். அதன்பிறகு தர்பார் கலைந்தது. அனைவரும் எழுந்து செல்ல, பீர்பால் பையைக் கையில் ஏந்திக் கொண்டு தீவிரமாக யோசித்தவாறே சென்றார்.

.


Read More


கனகரத்தினம் மாஸ்டர்! - ஜே.கே

“Bloody Indians…!” கத்திக்கொண்டே அவன் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று ட்ரில்லரால் துளைக்க, கனகரத்தினம் மாஸ்டர் அவமானத்தில் கூனிக்குறுகிப்போனார். அவசர அவசரமாக தபால் பெட்டியில் போட்டிருந்த விளம்பர பத்திரிகைகளை எடுத்து சுருட்டிக்கொண்டு வேகமாக அந்த இடத்தைவிட்டு நடக்கத்தொடங்கினார். கால்கள் நடுங்கின. அவன் அழைத்த தோரணையே மிரட்டலாக இருந்தது. “Hey Mister, Come here ..” ச்சே சனியனுக்கு நாற்பத்தைந்து தாண்டியிருக்குமா? நான்கு நாட்கள் ஷேவ் செய்யாத பிரவுன் தாடி. பியரும் சிகரட்டும் இன்னமும் நாசியில் அடித்தது. அவனும் அவனின்ட கலிசானும்.

.


Read More


அழகி…! - காரை ஆடலரசன்

கடற்கைரையில் ஒன்றாக அமர்ந்து, பேசிப் பிரியும் ஜோடியைப் பார்த்ததும் நளாயினிக்கு அதிர்ச்சி. ” ஏய்ய்…! நில்லு… நில்லு. ..! தன்னைக் கவனிக்காமல் சென்ற தோழியைப் போய் வழி மறைத்தாள். ” ஏய்ய். ..! நளா….! ” அவளுக்கும் தோழியைப் பார்த்த மகிழ்ச்சி, ஆனந்தம். ” நான் கேட்குற கேள்விக்கு மொதல்ல பதில் சொல். .? ” நளாயினி நேரடியாகவே விசயத்திற்கு வந்தாள். ” என்ன கேள்வி. .? என்ன பதில். .? ” இவளும் அவளைக் கேட்டாள்.

.


Read More


எல்லாமே நாடகம்தான் - ஸ்ரீ.தாமோதரன்

வங்காள விடரிகுடா கடலின் ஏதோ ஒரு மூலையில் சிறியதாய் ஒர் நாடு.நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு தீவு போல இருக்கும். அந்த நாட்டின் மீது மற்ற நாடுகளின் கண் படாமல் இருக்க மிகப்பெரிய நாட்டுக்கு கப்பம் கட்டிவிட்டு சுயேச்சையாய் ஆண்டு கொண்டிருக்கும் நாடு. சுபைதான் என்று பெயர் கொண்டுள்ள நாட்டில் மக்கள் தொகையே சுமார் மூன்றரை லட்சம்தான். இதில் ஆண் பாதி,பெண் பாதி, குழந்தைகள், முதியவர்கள், எல்லாரையும் சதவீகிதமாக ¼, 1/2, 3/4, முழுவதும் என்று வரிசையில்

.


Read More


அன்பு இல்லம் - பா.அய்யாசாமி

வழக்கத்திற்கு மாறாக இடமே பரபரப்பாக இருந்தது. மருத்துவர் வருவதும், போவதுமாய் இருந்தனர். சுற்றிலும் அழுகையும், புலம்பலும் சிலரிடம் அமைதியும், சிலரிடம் சிரிப்பும்,சிலர் ஜாடைப் பேச்சினில் வானத்தை நோக்கி பேசிக் கொண்டு இருந்தனர். ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என, அழைக்கப்படும் அற்புத பிறவிகள் ஒன்றாக மனித விலங்குகளிடமிருந்து தனித்து பாதுகாப்பாக வாழ வகை செய்யப்பட்ட இடம், இந்த அன்பு இல்லம். எல்லோருக்கும் பிடித்த சாந்தி அம்மாள் கிடத்தி வைக்கப்பட்டு இருக்கிறாள். இல்லம் வந்து சேர்ந்த நாள் முதல் நேற்று

.


Read More


பணக்கார இசக்கி - எஸ்.கண்ணன்

இசக்கிக்கு கல்யாணமாகி மூணு வருசமும் ஆயாச்சி. அவன் நடுத்தெரு பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது வாங்கிய முட்டைகள் பற்றி வெட்கம் எதுவும் அப்போது வந்துவிடவில்லை அவனுக்கு. ஆனா, இலஞ்சியில் அடுத்து ஒரு குட்டி மச்சான் பிறந்திருக்கான்னு ‘ட்ரங்கால்’ வந்ததும்தான் ஒரே வெட்கக் கேடாகப் போய்விட்டது. பிறந்திருப்பது பத்தாவது பிள்ளை. இதைச் சொல்வதற்கு ட்ரங்கால்..! சும்மா இருக்கமாட்டார் போலிருக்கிறது இசக்கியின் மாமனார். வாரத்தில் ஒருநாள் முழுக் கோழியே சாப்பிட்டு வைக்கிறார் மனுஷன்..! அவ்வப்போது குளத்து நண்டுகள்வேறு… சும்மாயிருக்க முடியுமா? “அதுக்காக ஓங்க

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.