This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/05/12/.

நல்லவனாய் இருந்தால் மட்டும்போதாது… - ரஞ்சன்

என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. என்ன பிரச்சனை? எல்லோரும் என்னை நல்லவன்னு சொல்றாங்க. ஆனா எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்க மாட்டேங்குது. எதுவும் சம்பாதிக்க முடியல என்று வருத்ததோடு சொன்னவனின் பிரச்னை குருவுக்கு புரிந்தது.அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்ல துவங்கினார். தாயும் மகனும் கடைக்கு போயிருந்தார்கள். பையன் ரொம்ப சுட்டி. பார்த்தாலே எல்லோருக்கும் பிடித்து விடும் கடையில் அம்மா வீட்டுக்கு வேண்டிய பொருட்களை தேர்ந்தெடுத்து கொண்டிருந்தாள். பையன் கடைக்குள் சுற்றிக்கொண்டிருந்தான்.

.


Read More


அம்மா, நான் தோத்துப் போயிட்டேன்! - இரா.மு.மோதிரேகா

பெங்களூர் மெட்ரோ ரயில் திட்ட வேலை நடப்பதால் அகண்ட எம்.ஜி.ரோடும் குறுகி, குக்கிராமப்பாதையைப் போலாயிற்று. வாகன ஒட்டுநர்களுக்கு, போக்குவரத்து உச்சவேளையில் இது ஒரு சாபக்கேடாகவே தோன்றியது. சரிதா அலுவலக அலுப்போடு என்றும் போல் இந்தத் தண்டனையை அனுபவித்து, வேலையிலிருந்து வீடு திரும்பினாள். அரைமணி நேரமாய் அம்மாவை எதிர்பார்த்து ஏமாந்த அவளது முதல் பையன் விட்டல், தன் அம்மா வீட்டில் நுழையும் போதே. அம்மா இங்கே பாரும்மா! இன்னைக்குக் கோபியோட பிறந்த நாள் விழாவுல ஒரு கேம் வெச்சாங்க;

.


Read More


கருட வித்தை - என்.ஸ்ரீராம்

அகாலத்தில் வந்து யாரோ வெளிநடைக் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. தோட்டத்து வீட்டின் ஆசாரத்துத் திண்ணையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டுக் கண்விழித்தேன். தோக்குருவிகள் ஊடுருவி முகட்டுவளையோரம் சடசடத்தபடி குறுக்கும் நெடுக்குமாகப் பறந்துகொண்டிருந்தன. மேல்விட்டத்தில் ஊர்ந்த பல்லி கணிக் கணிரென சகுனித்தது. அதற்குள் கதவு மீண்டும் தட்டப்பட்டது. நான் உள்ளுக்குள் பயந்துபோனேன். அவசரமாக எழுந்து காவி வேட்டியை இறுக்கிக் கட்டினேன். நடையை நோக்கிச் சென்றேன். ஒற்றை மாடவிளக்கு ஒளியில், சுவரில் அசைந்த என் நிழல் கூடவே வந்தது.

.


Read More


வங்காலை! - வ.ந.கிரிதரன்

மீண்டும் மீண்டும் அந்தத் துன்பகரமான நினைவுகளே சிந்தையில் வளைய வந்து கொண்டிருந்தன. அந்தச் செய்தியின் ஆழமும், அதன் பின்னால் புதைந்து கிடக்கும் துயரமும் நெஞ்சினைப் பிளக்குமொரு வலியாகக் கோடிழுத்தன. எதற்காக? ஏன்? இணையக் கடலின் ஆழத்தில் முத்தெடுக்க முனைந்தவன் முள்ளையெடுத்த கதையாக ஆகிப் போன நிலைமை. எத்தனை கனவுகளுடன், கற்பனைகளுடன், துள்ளல்களுடன், தழுவல்களுடன், மகிழ்ச்சி கலந்த உணர்வுகளுடனிருந்தது சூழல். பொறுப்பும், கனிவும், காதலும் மிக்கு விளங்கியது பொழுது. இளங்கணவனும் தந்தையுமான அந்த இளைஞன்; தாயும், தாரமுமான அந்த

.


Read More


கடவுளும் தூதுவர்களும் - பீர்பால்

“கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதுவர்களை அனுப்பமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?” இது பேரரசர் அக்பர் பீர்பாலை பார்த்து கேட்ட சந்தேகம் பீர்பால் கூறினார் “இதற்கு உடனே விடை கூற முடியாது, சற்று அவகாசம் வேண்டும்” சில நாட்கள் கழித்து அக்பர் குடும்பத்தாரோடு கங்கையில் படகில் செல்ல வேண்டியிருந்தது. ஆழமான பகுதியில் செல்லும் போது அக்பரின் பேரனை தூக்கி பீர்பால் கங்கை நதியில் போட்டு விட்டார். அக்பருக்கு ஆத்திரம் வந்தாலும், உடனே ஆற்றில்

.


Read More


உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம்! - ஜே.கே

இன்று அவளுக்கு chemistry பரீட்சை. முதலாம் பகுதி என்பதால் பதினொரு மணிக்கெல்லாம் பரீட்சை முடிந்து விடும். எனக்குள் மெதுவான ஒரு பதட்டம் பரவத்தொடங்கி இருந்தது. அவளை கடைசியாக பார்த்து ஒரு வாரம் ஆகியிருக்குமா? கண்ணாடியில் பார்த்த போது முன்பக்க முடி இலேசாக கொட்ட ஆரம்பித்துவிட்டது தெரிந்தது. பத்தொன்பது வயதிலேயே இந்த நிலை என்றால் முப்பது வயதில் எப்படி இருக்கும்? ம்ஹூம்.. அவள் கவனித்திருக்க மாட்டாள். எதற்கும் தொப்பியை எடுத்து மாட்டிக்கொள்வோம், என்று யோசித்து கொண்டே aஅவசரமாக எனது

.


Read More


அப்பா..! - காரை ஆடலரசன்

அப்பாவிற்கு நெஞ்சு குழியில் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. இன்றோ… நாளையோ. .. எப்போது என்று சொல்ல முடியாத அளவிற்கு ஊசலாட்டம். ஆனால்… கண்டிப்பாய் ஒரு வாரத்திற்கு மேல் தாங்காது என்பது நிச்சயம்.! வந்திருந்த சுற்றம், நட்புக்கெல்லாம் இன்னும் இழுத்துக்கொண்டிருக்கிறதே… கவலை.! டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று வந்திருந்த அண்ணன், அக்காள், தங்கைகளுக்கெல்லாம் சீக்கிரம் போய் விட்டலாவது தூக்கிப் போட்டுவிட்டு ஊர்ப்பக்கம் போகலாமென்று விசனம். ஊர் ஜனங்கள் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக் கொண்டிருந்த்தார்கள். அவர்களுக்கும் வேலை வெட்டி என்று

.


Read More


டுபாக்கூர் ஸ்டீல் கம்பெனி - ஸ்ரீ.தாமோதரன்

டுபாக்கூர் ஸ்டீல் கம்பெனி. வீட்டு எண் 000, காணாமல் போன வீதி, முட்டு சந்து, சின்னூர் மேனேஜர் அவர்களுக்கு தாதா என்று அழைக்கப்படும் ராக்காயி எழுதுவது ! உம்முடைய கடையில் வாங்கிய பீரோ ஒன்று உம்மால் “இது உயர் தரமானது” எளிதில் உடையாது, வளைந்து கொடுக்காது, திறப்பதற்கும், மூடுவதற்கும் சுலபமாய் இருக்கும் என்று உம்மால் பிலாக்கணம் செய்யப்பட்டு, என்னைப்போன்ற ஏமாளியான ராக்காயால் வாங்கப்பட்டு அதற்கான தொகையையையும் ஒரு பைசா குறையாமல் கொடுக்கப்பட்டு,. அதன் பின் வீடு வந்து

.


Read More


சமூக பிரசவம் - பா.அய்யாசாமி

தாய்ப்பால் குழந்தைக்கான ஆகாரம் மட்டுமல்ல! வளர்ச்சிக்கான ஆதாரம்! தாய்ப் பால் கொடுப்பதால் குழந்தைகளின் நோய் எதிர்பு சக்தி அதிகரிக்கும். என பேசிக்கொண்டே போனார். தாய் சேய் நல விடுதியில். அதன் திட்ட இயக்குநர். நல்லாதான் புரியுது, நல்ல விஷயம்தான் ஆனால் வேலைக்குச் செல்வதால் கொடுக்க முடியுமா? அதிலும் தாய்ப்பால் வங்கி எல்லாம் வந்து விட்டதாக கேள்விப்பட்டேன் என சமூக அக்கறையோடு பேசினார்கள். அருகே அருகே கட்டிலில் அமர்ந்து இருந்த பிரசவித்த பெண்கள் சுகன்யா , மற்றும் சாருலதா.

.


Read More


மாப்பிள்ளைச் சோறு - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘இசக்கியின் கல்யாணம்’ சிறுகதையைப் படித்து விட்டு, இதைப் படித்தால் புரிதல் எளிது) ஏற்கனவே இசக்கி ஒரு சாப்பாட்டுப் பிரியன். அதுவும் ஒரு புது மாப்பிள்ளையாக ‘மாப்பிள்ளைச் சோறு’ சாப்பிட இலஞ்சி வந்ததும் அவன் தினமும் ஏராளமாகத் தின்று தீர்த்தான். புதுமனைவி கோமதி அவன் குறிப்பறிந்து நடந்து கொண்டாள். அவள் காட்டிய வாஞ்சையும், மரியாதையும் இசக்கியை அசர வைத்தன. காலையில் படுக்கையைவிட்டு எந்திரிச்சதும் ரெண்டு நாட்டுக் கோழி முட்டையை உடைத்து ரெண்டு சின்னச் சொம்பில் தனித்தனியாக

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.