This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/05/06/.

கொசு - கே.பாலமுருகன்

நான் ஒரு எம்.எல்.எம் வியாபார ஏஜேண்ட. அதனால் என் காருக்குள் ஒரு எளிய கொசு நுழையக்கூடாது என்றெல்லாம் இல்லைத்தான். யார் காரைத் திறந்து வைத்திருந்தாலும் இந்த எழவெடுத்த கொசு சட்டென நுழைந்துவிடும். நீங்கள் என்னை எங்காவது பார்த்திருக்கக்கூடும். தைப்பிங் நாலு ரோடு பக்கம் எந்த மூலையிலாவது என்னை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். கழுத்துப்பட்டை ஒன்றை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு முன்சட்டையின் கீழ்ப்பகுதியில் பிதுங்கி நிற்கும் தொப்பையுடன் முகமும் தலையும் வியர்த்துக்கொட்ட முன் சொட்டையில் மிஞ்சியிருக்கும் கொஞ்சம் முடியும் ஒட்டிப்

.


Read More


யோகம் - லா.ச.ராமாமிருதம்

காலம் காலமாய், கற்பாந்த காலமாய் அவ்விடத்தில் நடமாடியவை காற்றும், மழையும், மண்ணும், மணலுமே. மரமும் செடியும் அவையவை விதை விழுந்த இடத்தில் முளைத்து, வளர்ந்து, சளைத்து மறுபடியும் கிளைத்தன. வானளாவியனவெல்லாம் கூனிக் குறுகிக் குன்றி மறுபடியும் தோன்றின. காற்று சுழல்கையில் அதனுடன் உதிர்ந்த சருகுகள் சுற்றித் தம்மைத் தாமே துரத்தி அலைந்தன. இரவியும் இரவும் மாறிமாறி வந்து போயும், கற்பாந்த காலமாய், காலம் அவ்விடத்தில் வரையே இல்லாது போயிற்று. மனிதனின் அடிச்சுவடு படாமலே கற்பாந்த காலம்… ஆயினும்

.


Read More


3வது குறுஞ்செய்தி - மீ.மணிகண்டன்

வெள்ளிக் கிழமை மாலை, மாஸ்டா வின் வேகம் மணிக்கு 80 மைல் என்று பறந்து கொண்டிருந்தது காரை செலுத்திக்கொண்டிருந்த விவேக்கின் மனவேகம் அதனினும் மேலாய் குதித்தோடிக் கொண்டிருந்தது காரணம் தான் அந்த மூன்றாவது குறுஞ்செய்தியை அனுப்பிவிட வேண்டுமென்பதே. இரண்டு குறுஞ்செய்திகள் வந்துவிட்டது இனி அந்த மூன்றாவது தான்தான்… மாறிப்போனால்… போனால்… ஆ… அதை அவனது மனம் ஏற்க வில்லை. அப்படி என்ன அந்த மூன்றாவது குறுஞ்செய்தியில் மகிமை? சற்றே இரண்டு நாட்கள் முன் செல்வோம்… புதன் கிழமை

.


Read More


சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை! - வ.ந.கிரிதரன்

இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிரி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின் ஹரி பாட்டர் தொடர் புத்தகங்கள் எனக்குப் பிடித்த தொடர்களிலொன்று. ஆனால் இந்தப் புத்தகத்தை மட்டும் அப்பா ஒவ்வொருமுறையும் வாங்குவதற்குச் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்துக் கொண்டு வந்தார். காரணம் இதன் விலைதான் தான். முப்பத்தைந்து கனடியன் டொலர்கள். சென்ற முறை சாப்டர்ஸ்ஸிற்குக் கூட்டிப் போனபோது இந்தப் புத்தகத்தை வாங்கித் தருவதாகத்

.


Read More


அபசகுனம் - பீர்பால்

அக்பர் தினமும் தூங்கி எழுந்தவுடன் அவர் எதிரில் உள்ள வினாயகர் படத்தை தான் பார்ப்பார். ஒரு நாள் அவர் கண் விழிக்கும் போது சிப்பாய் ஒருவர் வந்து விட்டார். அன்று முழுவதும் அக்பருக்கு பல‌ பிரச்சனைகள் வ்ந்தது. எல்லாம் அந்த‌ சிப்பாய் முகத்தில் விழித்ததால் தான் என்று அந்த‌ சிப்பாயை தூக்கில் போட‌ உத்தரவிட்டார். இந்த‌ விஷயம் பீர்பாலுக்கு தெரிய‌ வந்தது.பீர்பால் மன்னரிடம் ஏன் அவரை தூக்கிலிடபோகிறீர் என்று கோபமாக கேட்டார். அதற்கு அக்பர் இவனுடைய‌ முகத்தில்

.


Read More


அக்கா - ஜே.கே

டக் டுடும் டக் டக் டக் டுடும் டக் டக் ஒவ்வொரு முறையும் இராணுவமும் புலிகளும் மோதிக்கொள்ளும் போதும் எனக்கேன்னவோ அவர்கள் ராஜாதி ராஜா படத்தில் வரும் “வா வா மஞ்சள் மலரே” பாட்டின் ஆரம்ப இசையை இசைக்கிறார்களோ என்ற சந்தேகம் தான் வருவதுண்டு. எம்மோடு மெதுவாக நடக்க ஆரம்பித்த மழை இன்னும் சன்னமாகவே பெய்து கொண்டு இருந்தது. தீபாவளிக்கு அளவுக்கதிகமாக சாப்பிட்ட அக்கா சமைத்த ஆட்டிறைச்சி கறி வயிற்றுக்குள் கடகட என்றது. இப்போதைக்கு இந்த கூட்டத்தில்

.


Read More


பஞ்சாயத்து…! - காரை ஆடலரசன்

ஊரைக் கூட்டச் சொல்லி நச்சரிப்பு தாள முடியவில்லை…..சிவ சிதம்பரத்திற்கு. ” சரிய்யா ! நாளைக் காலையில எட்டு மணிக்கெல்லாம் கூட்டம் போட்டு செய்ய வேண்டியத்தைச் செய்துடுவோம் ! ” என்று நேரம் காலம் குறித்து விட்டு திண்ணையில் சாய்ந்தார். மறுநாள் காலை சரியாய் எட்டு மணிக்கெல்லாம் ஆற்றங்கரை ஆலமரத்திடலில் ஊர் மொத்தமும் கூடி இருந்தது. சிவசிதம்பரம் நாட்டாண்மை தோரணையில் வந்து மேடையில் அமர்ந்தார். அப்படியே கூட்டத்தினரைப் பார்த்து நோட்டம் விட்டு….. ” இப்போ இங்கே விஷயம் தெரியாதவர்களும்

.


Read More


நாட்டியத்தில் ஒரு நாடகம் - ஸ்ரீ.தாமோதரன்

கடிவாளத்தை இறுக்கி பிடித்து நிறுத்தியதில் ஏற்பட்ட வேதனையால் நின்ற குதிரை வலியால் கணைத்து நின்றது. குதிரை மேலிருந்த மன்னன் “தளபதியாரே” இந்த இரவில் அங்கு என்ன கூட்டம்? அதுவும் இவ்வளவு பிரகாசமாய் தீபங்களை ஏற்றி வைத்துக்கொண்டு அங்கு என்ன செய்கிறார்கள்? பின்னால் திரும்பிய தளபதி ஒரு ஆளை சமிக்ஞை செய்து அழைத்து “நீ போய் அங்கு என்ன நடக்கிறது என்று கேட்டு விட்டு வா” சரி என்று தலையாட்டிய அவ்வீரன் சிறிது வேகமாக குதிரையை முடுக்கினான். சிறிது

.


Read More


விவசாயி மகள் - பா.அய்யாசாமி

அப்போ நாங்க கிளம்புறோம்! நல்லா யோசித்து முடிவைச் சொல்லுங்க! எனக் கூறி கிளம்ப எத்தனித்தனர். யோசிக்க ஒன்றுமில்லை! தாத்தாவின் முடிவே என் முடிவும் என திட்டவட்டமாக கூறினாள். லக்ஷ்மி. லக்ஷ்மி, ஒரே பெயர்த்தி, அரசு என்கிற திருவரசு தாத்தாவுக்கு. அப்போது லக்ஷ்மிக்கு பத்து வயதேயிருக்கும்! ஐந்தாம் வகுப்பு முடித்து விடுமுறைக்குச் சென்று கழித்து ஊர் திரும்பும் போது நடந்த விபத்தில் இவள் மட்டுமே உயிர் பிழைத்து ஊர் வந்து சேர்ந்தாள். தாயும்,தந்தையையும், வீட்டு நடு கூடத்தில் கிடத்தி

.


Read More


இசக்கியின் கல்யாணம் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘மச்சு வீடு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) ரயில் பிற்பகல் ஒரு மணிக்கு மேல்தான் கொல்லம் போய்ச் சேர்ந்தது. ஆவுடையப்பனுக்கு சோலி கொல்லத்தில் மட்டும் இல்லை. திருச்சூர், கோட்டயம் வரைக்கும் போனார். செங்கனாச்சேரி போன்ற சின்னச் சின்ன ஊர்களுக்கும் போனார். இசக்கி மலையாளம் இருந்த அழகைப் பார்த்து பொங்கிவிட்டான். எங்கு பார்த்தாலும் தென்னை மரங்கள், பாக்கு மரங்கள் உயரம் உயரமாய் வளர்ந்து காற்றில் ரொம்ப அழகாக ஆடிக்கொண்டிருந்தன. பாளையில் மருந்துக்குக்கூட தென்னைமரம்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.