This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/04/28/.

சட்டென நனைந்தது இரத்தம்! - ஜே.கே

யாழ்ப்பாணம் வழமை போலவே அதிகாலையிலேயே விழித்திருந்தது. வெளிச்சம் இன்னும் பரவலாக படரத் தொடங்கவில்லை. மார்கழி மாத பருவமழையில் திருநேல்வேலி சந்தை சாக்லட் தொழிற்சாலையாக காட்சியளித்தது. வியாபாரிகள் சைக்கிளில் கட்டிக்கொண்டுவந்திருந்த மரக்கறி மூட்டைகளை இறக்கி அன்றைய ஏலத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தனர். Special Task Force officer குமரன் Splender Motorbike இல் வந்து இறங்கும் போது நேரம் சரியாக நான்கு மணி. யாழ்ப்பாணம் ASP திலீபன் spot இல் ஏற்கனவே காத்துகொண்டிருந்தார். “எப்பிடி தெரியும் திலீபன்?” “சந்தைல தேங்காய் கடை

.


Read More


மன்னரின் மதிப்பு - முல்லா

ஒரு நாள் துருக்கி மன்னனும் முல்லாவும் அரண்மனைப் பழத்தோட்டதில் உலாவிக்கொண்டிருந்தனர். துருக்கி மன்னன் முல்லாவை நோக்கி, ”முல்லா அவர்களே உங்களைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள்! ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனை மனத்திற்குள் எடை போட்டுப் பார்த்து அவடைய மதிப்பு என்ன என்ற கூறி விடுவீர்களாமே!” என்று கேட்டார். ”அல்லாவின் அருளால் எனக்கு அப்படிப் பட்ட ஒரு ஆற்றல் இருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன் ” என்று முல்லா அடக்கமாகப் பதில் சொன்னார் ”சரி,

.


Read More


யாருக்குச் சொந்தம் - உஷாதீபன்

அந்த நெனப்புலதான் அவ பார்க்குறாங்கிறது எனக்கு நேத்துத்தான் தெரிஞ்சிச்சு… எத்தனையோவாட்டி ராசுக்கட்டி சொல்லியிருக்கான்…போடா ஒனக்கு வேற வேலையில்லன்னு நானும் உதறியிருக்கேன்…ஏன்னா என்னவிட மூணு நாலு வயசு பெரியவ அந்த மீனாப்பொண்ணு. அவள நிமிந்துகூட நா பார்த்ததில்ல…என்னாத்துக்குங்கிற நெனப்புதான்….ஏற்கனவே படிக்காத கழுத, ஊரச் சுத்துற நாயின்னு அம்மா திட்டுது என்னை…எட்டு வரைக்கும்தான் நா படிச்சேன்…என்னத்தப் படிச்சேன்…அவுகளாத் தூக்கித் தூக்கிப் போட்டாக…அம்புடுதே…அதுனால என்னா பிரயோசனம்? எனக்குத்தான் படிப்பே செல்லலியே! சும்மா சினிமாவாப் பார்த்துப் பார்த்துக் கெட்டுப் போயிட்டேனாம்…அம்மாதான் வயித்தெறிச்சலாச் சொல்லும்

.


Read More


சீதாவும் ஆறும் - வல்லிக்கண்ணன்

மலையில் தொடங்கிக் கடலில் முடிந்த அந்தப் பெரிய ஆற்றின் நடுவில் ஒரு சிறு தீவு இருந்தது. ஆறு தீவைச் சுற்றி ஒடியது; சிலசமயம் அதன் கரைகளை அரித்தது; ஆனால் ஒருபோதும் தீவின் மேலாக ஒடியதில்லை. அத் தீவில் ஒரு சிறு குடிசை இருந்தது. மண்சுவரும் சாய்வான ஒலைக் கூரையும் கொண்ட குடிசை பெரிய பாறை ஒன்றை ஒட்டி அது கட்டப்பட்டிருந்தது. எனவே மூன்று சுவர்கள் தான் மண்ணாலானவை. பாறையே நாலாவது சுவர். சில வெள்ளாடுகள் தீவில் முளைத்த

.


Read More


மக்கள் நேர்மையானவர்களா? - பீர்பால்

ஒருநாள் அக்பர் தனது அரசவையில் கூடியிருந்தவர்களிடம், “எனது அரசாட்சியில் மக்கள் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார். உடனே சபையிலிருந்த அனைவரும் “ஆம் அரசே… உங்கள் பொன்னான ஆட்சியில் அனைவரும் நேர்மையைக் கடைபிடிக்கின்றனர். இதை யாரும் மறுக்கவே முடியாது.” என்றனர். ஆனால் பீர்பால் மட்டும் அமைதியாக இருப்பதைக் கண்ட அக்பர், “ஏன் மவுனமாக இருக்கிறாய் பீர்பால்…மக்கள் நேர்மையாக இருப்பதைப் பற்றி உன் கருத்து என்ன?”

.


Read More


ஜனனி - லா.ச.ராமாமிருதம்

அணுவுக்கு அணுவாம் பரமானுவில் பாதியாய் உருக்கொண்டு, பராசக்தியானவள் ஜன்மமெடுக்க வேண்டும் என்னும் ஆசையால் தூண்டப் பெற்றவளாய் ஆகாய வெளியில் நீந்திக்கொண்டிருந்தாள். அப்பொழுது வேளை நள்ளிரவு. நாளும் அமாவாசை ஜன்மம் எங்கு நேரப்போகிறதோ அங்கே போய் ஒண்டிக் கொள்வோம் என்னும் ஒரே அவாவினால் இடம் தேடிக் கொண்டு காற்றில் மிதந்து செல்கையில், எந்தக் கோவிலி லிருந்து தன் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக தேவி புறப்பட்டாளோ அந்தக் கோவிலுக்கு எதிரேயுள்ள திருக்குளத்தின் அருகில், ஒரு மரத்தின் பின்னிருந்து முக்கல்களும், அடக்க

.


Read More


நட்பு..! - காரை ஆடலரசன்

நட்பில் நட்பைப் பார்த்திருக்கலாம். ஏன்…நம்பிக்கை, நயவஞ்சகம், துரோகம்., உதவி, ஒத்தாசை, அன்பு, அரவணைப்புகள்… என்று அனைத்தையும் பார்த்திருக்கலாம். இதையெல்லாம் மீறி… ஒரு உச்சம், உன்னதம், ஒளி, ஒலி, என்று அனைத்துக்கும் மேலாகிய ஒரு தெய்வீகத்தைப் பார்க்க முடியுமா…..? கதிவரன் என்னுடைய ஆத்மார்;த்தமான நண்பன். பால்ய சினேகிதன், கல்லூரித் தோழன். உயர் குலத்திற்கே உரிய சுண்டினால் ரத்தம் வரும் சிவந்த நிறம். கொஞ்சமாய்ப் பல்லெடுப்பு. சுருட்டை முடி. அறிவு விளங்கும் அழகான முகம். இவன் என் வகுப்புத் தோழனென்றாலும்

.


Read More


புதிய வனம் உருவானது - ஸ்ரீ.தாமோதரன்

முன்னொரு காலத்தில் அடர்ந்த கானகத்தை ஒட்டி ஒரு குடியானவன் குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடியானவனுக்கு குருவாயூரப்பன்,என்ற பையன் மற்றும் மனைவியும் இருந்தனர். தினமும் அந்த குடியானவன் அடர்ந்த கானகத்துக்குள் சென்று காய்ந்த மரங்களை வெட்டி விறகுகளாக்கி கொண்டு வந்து ஊருக்குள் விற்று வாழ்க்கையை நடத்தி வந்தான். திடீரென்று குடியானவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் வீட்டிலேயே படுத்து விட்டான். நாலைந்து நாட்கள் எங்கும் செல்லாததால் வீட்டில் வறுமை வந்து விட்டது. அவன் மனைவி என்ன செய்வது என்று

.


Read More


தகவல் எந்திரம் - பா.அய்யாசாமி

ஏண்டி!, மீனாட்சி, நீ வேலை செய்யற ஆபிசர் காலனி வூட்டிலே கல்யாணமாமே, சொல்லவே இல்லே. ஆமா யக்கா,அது சொல்ற மாதிரி ஒன்றும் இல்ல ,என பீடிகை போட்டாள். நல்ல வூடு, நல்ல அம்மா, நல்லப் பொண்னு எல்லாமே என்கிட்டே பாசமாத்தான் இருக்கும். ஐயாதான் கொஞ்சம் கோவக்காரரு, வேலை டான் டான்னு நடக்கனும், கொஞ்சம் பேசினாலும், என்ன வம்புப் பேச்சுனு அம்மாகிட்ட சண்டைப் போடுவாரு, வேலை செய்யறவங்க எல்லாம் புறம் பேசுவாங்க, நம்ம வீட்டு விஷயமும் தான் வெளியே

.


Read More


காதலுக்கு மூடுவிழா - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தையை ‘காதல் யதார்த்தம்’ கதையைப் படித்த பின், இதைப் படித்தால் புரிதல் எளிது) திடீரென சடசடவென்று மழை பெரிதாக பெய்ய ஆரம்பித்தது. மழையில் நனைந்தபடி மூவரும் அங்கேயே அமர்ந்திருந்தனர். சிவா “நாம எல்லோருமே இப்ப குற்றால பசு மாடுகள்…” என்றான். தொப்பலாக நனைந்தபிறகு மூவரும் மெதுவாக எழுந்தனர். மேன்ஷனை நோக்கி மெல்ல நடந்தனர். அப்போது கவிதா திருவல்லிக்கேணி குளத்தைத் தாண்டி தேரடித் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தாள். சிவா, சுந்தர், குமரேசன் மூவரும் சற்றும் எதிர்பாராமல்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.


To change your subscription, click here.