This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/04/26/.

மனவலிகளுக்கு ஒத்தடம் கொடுத்தல் - இரா.சடகோபன்

சென்ற வருடத்தை விட இந்த வருடம் குளிர் சற்று அதிகமாக அருக்கின்றதென தோன்றியது. அந்த மலலைப்பாங்கான பிரதேசத்தில் அதனை நன்றாகவே உணரக்கூடியதாக இருந்தது. சுஜாதா அந்த பள்ளிக்கு கூட அறையில் மேசைக்கு முன்னமர்ந்து ஜன்னலுக்கு அப்பால் அடர்த்தியதக பூத்துக் குழங்கிய சூரியகாந்தி பூக்குளை ரசித்து கொண்டிருந்தாள். மலைநாட்டுப்பகுதியில் அந்தப் பூக்களை கண்டபடி பூத்-துக்கிடக்கும் ஆனால் அதனை யாரும் ரசித்து பார்ப்பதில்லை. சுஜாதா அந்தப் பாடசாலைக்க திருமணமாகி வந்து கொஞ்சநாள் தான் ஆகிறது. இருந்தாலும் பள்ளிக்கூட சூழலுடன் ஒன்றி

.


Read More


மயக்கம் - பாலசுப்ரமணியன் சிவராமன்

ஹரிஹரனுக்கு லேசான நெஞ்சு வலி இருந்ததால் இப்போது தன்னுடைய குடும்ப டாக்டரிடம் BPயை check பண்ணிக்கொண்டிருந்தான் 200/110 இருந்ததை பார்த்து டாக்டரே கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார், என்னப்பா ஹரி BP ரொம்ப அதிகமா இருக்கே என்ன Officeல்ல் ரொம்ப Stress அதிகமோ? இல்ல உன்னோட பொண்டாட்டி ரொம்ப படுத்தறாலோ என உரிமையுடன் ஹரிஹரனை பார்த்துக்கேட்டார் இல்ல வேற ஏதாவது காரணம் இருக்கான்னு கேட்க, ஹரி Officeல்லதான் கொஞ்சம் Project Pressure அதிகமா இருக்குன்னு சொல்ல டாக்டர் ஹரிக்கு

.


Read More


தியானம் செய்ய வாருங்கள் ! - சௌ.முரளிதரன்

தியானம் – 5 வேத வியாசரின் மனைவி ஒரு தெய்வீக குழந்தையை கருவுற்றாள். சுகதேவ் பிறந்தான். பிறந்தது முதல், தன் தந்தை வேத வியாசரை அரித்தான் குழந்தை சுகதேவ். “பிரம்ம ஞானத்தை எனக்கு இப்போதே உபதேசி !” வேத வியாசரும், சுக தேவரை ( பிற்காலத்தில் சுக முனிவர் ) , மிதிலை ராஜா, ஜனகரிடம் , பிரம்ம ஞானத்தை பற்றிய உபதேசம் பெற, அனுப்பி வைத்தார், வியாசரை போன்ற , ஒரு போற்ற தகுந்த மகா

.


Read More


புதிய விதை - கார்த்திக் ஆலங்காட்டான்(அறிமுகம்)

உலகம் அதன் இயல்பாய் சுற்றிவருகின்றது.. இரவு வந்தால் விடிந்துதானே ஆகவேண்டும்..விடியற்காலையில் மனிதர்களை விடுத்து மற்ற எல்லா உயிரினங்கள் தன் இரையை தேட ஆயர்தமாகின்றன , பட்சிகளுக்கு மட்டும் ஒரு கூடுதல் வேலை என்னவென்றால் மனிதர்களை உறக்கத்திலிருந்து எழுப்புவது.. சேவல் அதன் பங்குக்கு ‘கொக்கரக்கோ’ என, குயிலோ ‘குக்கூ’ என, கிளிகள் ‘கீகி’ என என்ன ஒரு ரம்மியமான காலை.. அதனை அனுபவிக்க விடியற்காலையில் அழகை ரசிக்க வேண்டும்.. ரசிக்க தெரியாதவனுக்கு குழல், யாழ் மற்றும் பறவைகள் எதற்கு,

.


Read More


மாற்றும் மனிதன் - முல்லா

முல்லாவுக்கு ஒரு பால்கன் பறவை கிடைத்தது. அது புறாவைப் போல இருக்கும். முல்லா இதற்கு முன் இப்பறவையைப் பார்த்ததில்லை. அவருக்கு இப்பறவையின் அகண்ட தாடையும், வளைந்த அலகும் அதிக அளவில் இருக்கும் சிறகும் ரசிக்கத் தக்கதாக இல்லை. ”என்ன இருந்தாலும் புறாவின் அழகு வருமா? ஏ பறவையே,உன்னையும் புறா போல அழகாக ஆக்குகிறேன்,” என்று கூறிக்கொண்டே, அதிகமாகவுள்ள இறகுகளைப் பிய்த்தெடுத்தார். வளைந்த அலகை ஒரு சிறு உளி கொண்டு செதுக்கி வளைவைக் குறைத்தார். ஒரு கத்திரியை எடுத்து

.


Read More


ராகுலன் - வல்லிக்கண்ணன்

ராகுலன் முதலில் எங்கள் வீட்டுக்கு வந்த போது சிறு குட்டியாகத் தான் இருந்தது. என் பாட்டி சுத்தம் பற்றி அலட்டிக் கொள்கிறவள்; அழுக்குப் படிவது பற்றி தீவிரக் கருத்துகள் உடையவள். நாய் வருகிறது எனத் தெரிந்ததுமே அவள் குழம்பித் தவித்தாள். பத்திரிகை படித்துக் கொண்டிருந்த என் அப்பாவிடம் போய், “கவனி, குழந்தே” என்றாள். ராகுலனைப் பற்றி பாட்டி நீண்ட உபதேசம் புரிவாள் என அப்பா அறிவார். எனவே அவர் பத்திரிகையை மடக்கி விட்டு அவள் சொற்பொழிவைக் கேட்கத்

.


Read More


நாத்திகவாதி..! - காரை ஆடலரசன்

உங்களுக்குச் சாமியைப் பிடிக்குமா ? எனக்குப் பிடிக்காது.!! – ஆத்திகமும் நாத்திகமும் எதிரெதிர் துருவங்கள் ஒன்று சேர முடியாத புகைவண்டி தண்டவாளங்கள், இணை கோடுகள். இருக்கு, இல்லை என்று எவரும் நிரூபித்தது இல்லை. இது இப்போதல்ல. ஆதி காலம் தொட்டே அப்படி. இருக்கிறவர்களுக்குக் கடவுள் இருக்கார். இல்லாதவர்களுக்கு இல்லை. இப்படித்தான் ஒதுங்கிப் போய்…எவரெவருக்கு எது சரியோ அதைப் பிடித்துக் கொண்டு வாழ்வது முறை. அதை விடுத்து…ஏற்றத் தாழ்வு, மக்கள் பலம் அதிகம், குறைவு காரணங்களால் வஞ்சம், வன்மம்,

.


Read More


மாசிலாபுரத்து கிணற்று நீர் - ஸ்ரீ.தாமோதரன்

நூறு வருடங்களுக்கு முன்னால், அதாவது நம் நாட்டை பிரிட்டிஷார் ஆண்டு கொண்டிருந்த காலம், தமிழ்நாட்டில் மாசிலாபுரம் என்னும் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் சுமார் இருநூறு குடும்பங்கள் வசித்து வந்தனர். அவர்களது முக்கிய தொழில் விவசாயம்தான். அந்த ஊர் ஐந்து தெருக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. அதன் நடுவில் பொது கிணறு ஒன்று இருந்தது. அந்த கிணற்றில்தான் அந்த ஊர் மக்கள் அனைவரும் வந்து “இறைத்து” குடிப்பதற்கும், மற்றவைகளுக்கும் எடுத்துச்செல்ல வேண்டும். அதனால் எப்பொழுதும் அந்த கிணற்றுக்கு அருகில்

.


Read More


சுடாத தோண்டி - பா.அய்யாசாமி

ஏய்,மாப்ள! வா,வா.. என தனது நண்பன் ரவியை ஏகமாய் அழைத்தான் ராஜா. எல்லாரும் ஊருலே எப்படி இருக்காங்க! நல்லா இருக்காங்க! என்ன வேலைனு சொன்னே? இங்கதான் கட்டிட வேலை, சூபர்வைசரா, என்றான் டிப்ளமோ வரை படித்த ரவி, சுமாரான நடுத்தரக் குடும்பம். ஒன்றும் பிரச்சினை இல்லை ,மாப்ள! நீ இங்கேயே தங்கிக்க, எனக்குத் துணையாச்சு என்று மகிழ்வுடன் அழைத்த ராஜாவுக்கு பெயின்டிங் வேலை. பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து அனுபவத்தில் வேலை பெற்று சென்னைக்கு முன்பே வந்தவன்.

.


Read More


காதல் யதார்த்தம் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘சதுரங்க சூட்சுமம்’ கதையைப் படித்த பின் இதைப் படித்தால் புரிதல் எளிது) ராணி மேரிக் கல்லூரியின் எதிரே அகன்ற நடைபாதையில் இன்னமும் சிவா வராததால், குமரேசன் அங்கும் இங்கும் நடை பயின்று கொண்டிருந்தான். பிறகு மகாத்மா காந்தி சிலையின் கீழ் நின்று நிமிர்ந்து பார்த்தான். சிலையின் பீடத்தை ஒருமுறை சுற்றி வந்தான். “என்னடா காந்தி சிலையைச் சுத்தி வந்து பாத்துகிட்டு இருக்கே?” சிவாவும் சுந்தரும் அங்கு வந்தார்கள். “இன்னும் பத்துப் பன்னிரண்டு நாள்ல காந்தி

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.