This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/04/24/.

பின்னுக்குப் போங்க! - மானிப்பாய் சுதன்

பின்னுக்குப் போங்க….. பின்னுக்குப் போ……., சரிஞ்சு நில்லணை, தம்பி உன்னைத்தான் நட்டமரம் மாதிரி நிற்காம பின்னுக்கா போ, பிறகு இறங்கி நின்று கதைக்கலாம்……. டிரைவர் சீற்றுக்கு பக்கத்தில் இருந்த குமாரின் சிந்தனைகளைக் குழப்பியது கொண்டக்ரரின் கத்தல்கள். தனது கிராமத்தில் இருந்து பேரூந்தில் ஏறும்போது தாரளமாக இருக்கைகள் இருந்தன. அடுத்தடுத்த கிராமங்கள் தாண்ட பேரூந்தினுள் சனக்கூட்டம் நிறைந்து வழியத்தொடங்கியிருந்தது. டிரைவர் நேரத்தைப் பார்த்து பார்த்து பேரூந்தை மெதுவா உருட்டிக்கொண்டிருக்க, குமரனின் மனமோ பேரூந்திலிருந்து இறங்கி நடந்தே யாழ்ப்பாணம் போய்விடலாம்

.


Read More


குருவிக் கூடுகள் கூட… - இரா.சடகோபன்

விசாகாவின் மனம் ஒரு சின்ன சலசலப்புக்கும் படபடவென அடித்துக் கொண்டது. ஒரு அன்னையின் அன்பு மனம் என்றால் அப்படித்தான் இருக்குமோ? ஆறு வயதேயான அவளது அன்பான சின்ன மகனை ஆஸ்பத்திரியில் சேர்த்து மூன்று மாதங்களாகின்றன. இந்த மூன்று மாதத்தில் அவன் பத்துக் கிலோவுக்கு மேல் எடை குறைந்திருந்தான். அவனால் உட்கார்ந்து நிம்மதியாக சாப்பிட முடிவதில்லை. அன்றொருநாள் அவளது சின்ன மகன் அருண் பிரகாஸ் படிக்கும் பாடசாலையில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அருண் பாடசாலை மைதானத்தில்

.


Read More


தோழர் - கடல்புத்திரன்

பாரதி கலவன் பாடசாலை”என்ற மரப்பலகை,வளவின் வாயிற் பகுதியில் மழை,வெய்யிலில் காய்ந்து பெயின்ற்ரில் சில புள்ளிகள் உதிர்ந்து நின்றது.நகுலன்,நண்பன் மதியுடன் பள்ளிக்கூடத்திற்குள் நுழைகிறான் . “டேய் கெதியாய் போவோம்,பெல் அடிக்கப் போறதடா”என்று மதி துரிதப் படுத்தினான். 2‍..3.கிலோ மீற்றர் தூர சுற்று வட்டாரத்தில் குடியிருப்புக்களைக் கொண்ட கிராமம் அது!செட்டியார் பகுதியில் நகுலன் இருப்பவன் நட்பு வேரிட்டதால் வரும் போது,.ஒரு கிலோ மீற்றர் தூரம் தள்ளிய சந்தையடியில் மதி யையும். கூட்டிக் கொண்டு வருவான் சுமார் இரண்டு கிலோ மீற்றர்

.


Read More


எனக்கு சிறகு முளைச்சிடுச்சிம்மா… - ஜெ.சங்கரன்

ராமசாமி ஒரு தனியார் கம்பனியில் வேலை செய்து வந்தார்.அவர் தன் வாழக்கையில் நன்றாக செட்டில் ஆனதும்,தன் அம்மா ஏற்பாடு பண்ணின ஒரு தூறத்து உறவு பெண் பத்மாவைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார்.ரெண்டு வருஷம் ஆனதும் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்தது.அந்தக் குழந்தைக்கு ஆனந்தி என்று பேர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்கள். ஆனந்திக்கு நாலு வயசாக இருந்த போது திடீரென்று ஒரு நாள் பத்மா விஷ ஜுரம் வந்து,போதிய மருத்துவ வசதி இல்லாமல் ஆஸ்பத்தியில் ஐஞ்சு

.


Read More


பம் பகதூர் - வல்லிக்கண்ணன்

பம் பகதூர் என்ற யானையின் மாவுத்தன் மத்தாதின், யானை நாளுக்கு நாள் அடங்காப்பிடாரியாக ஆகிக் கொண்டு வருவதாக இளவரசனிடம் முறையிட்டான். அதன் துணைக்கு சீக்கு. எனவே, டாக்டரின் உத்திரவுப் படி அதை அதன் ஜோடியிடமிருந்து பிரித்து வைத்திருந்தார்கள். ஆனால், ஒவ்வொரு நாள் மாலையிலும் அதன் துணையை அதனுடன் உலாவ அழைத்துப் போகாவிடில் பம் பகதூர் அட்டகாசம் செய்தது; கர்ஜித்தும் பிளிறியும் களேபரப்படுத்தியது. அதன் துணையை அதனுடன் இட்டுச் சென்றால் அது துணைக்குத் தொல்லை தந்தது. துணையின் முதுகில்

.


Read More


நிற்பதுவே நடப்பதுவே! - பாக்கியம் ராமசாமி

உடல் பருமனுக்குப் பல வகைக் காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறார்கள். நம்ம உடம்பு அதிகச் சதைப் பிடிப்பாக இருந்தால் கஷ்டம்தான். அனுபவிக்கிறவர்களுக்கு அந்தச் சிரமங்கள் தெரிவதைவிட ஒரு டாக்டருக்கு அதிகம் தெரியும். நண்பன் நாராயணனின் கால் கட்டை விரலில் ஓர் அங்குல நீளத்துக்கு (இரண்டரை சென்டி மீட்டர்) நகம் வளர்ந்திருக்கும். காண்டா மிருகக் கொம்பு மாதிரி பயங்கரமாக இருக்கும். “வெட்டித் தொலையேண்டா,” என்று பல தடவை சொல்லியிருக்கிறேன். அக்கறையைவிடத் தற்காப்புதான். அவனருகில் நின்று பேச வேண்டிய

.


Read More


காத்தான் குளம்…! - காரை ஆடலரசன்

அமாவாசை. மீன் பிடி இல்லை. மணி 7.00. சவகாசமாக எழுந்தான் கண்ணன். வயசு இருபத்தி எட்டு. பொறியியல் படிப்பு. இன்னும் மணமாகாகவில்லை. வேலை கிடைக்காததினாலும் போக விருப்பமில்லாததாலும் அப்பாவுடன் சேர்ந்து சுயதொழில் முயற்சியில் கடல் தொழிலில் இறங்கி விட்டான். தற்போது அப்பாவிற்குச் சொந்தமான ஒரு மோட்டார் கட்டுமரமும் அவனது முயற்சியால் வங்கியில் கடன்பெற்று வாங்கிய சிறு இயந்திரப்படகின் உதவியால் தொழில். சமயத்தில் இவன் அடுத்தவர் படகில் கூலிக்கும் கடலுக்குச் செல்வதுண்டு. அமாவாசை அன்று பெரும்பாலான இந்துக்கள் வீட்டில்

.


Read More


மன்னர் தேவை - ஸ்ரீ.தாமோதரன்

மரகதபுரி மன்னர் நோய்வாய்ப்பட்டு படுத்து கிடந்தார். அவருக்கு பின் பட்டத்துக்கு வரவேண்டிய இளவரசர் மகேந்திரன் தனக்கு இராஜ்ய பரிபாலனை வேண்டாம் என்றும் தான் ஒரு வைத்தியராக இருக்கவே விருப்பம் தெரிவித்தார். இதனால் மரகதபுரிக்கு அடுத்து யாரை மன்னனாக்க போகிறார்கள் என்று மக்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். மன்னனின் உடல் நிலையோ மிகவும் மோசமாக இருந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் அவருக்கு இறப்பு ஏற்படலாம். அதற்குள் ஆட்சி பொறுப்புக்கு வருபவர்கள் முடி சூட்டிக்கொள்ள வேண்டும்.மன்னரை பார்க்க மந்திரியார் உள்ளே வருகிறார். மன்னர்

.


Read More


சிறு விளையாடல் - பா.அய்யாசாமி

பில்லூர் காசுக்கடைத் தெரு. வழக்கமான பரபரப்பு இல்லாமல், இரவு கடைகள் மூடும் நேரம்.. அப்பாடா! இப்பத்தான் நிம்மதிய இருக்கு. நகைகள்,தாலி உட்பட நெக்லஸ் எல்லாம் எடுத்து முடிச்சாச்சு! அதுவும் அவளுக்கு பிடிச்சது போலவே என் பட்ஜெட்குள்ளேயே அமைஞ்சிடுச்சு! என தன் மகளின் திருமணத்திற்கான நகைகளைப் பற்றி பேசிக்கொண்டே வீதியில் நடந்தனர், சுசிலாவும் அவளின் சகோதரியும். திடிரென்று எங்கிருந்தோ ஓடி வந்தவன் அவளிடமிருந்த கைப்பையை பிடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.பிடிங்க! பிடிங்க! என சப்தம் மட்டுமே எழுப்ப முடிந்தது

.


Read More


சதுரங்க சூட்சுமம் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘நட்பதிகாரம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) அந்த உணர்வுத் தளும்பலில் பொல பொலவென்று இனிய மழைத் துளிகளும் விழுந்தது போலிருந்தது – சற்று தூரத்தில் அவனுக்கு முன்னால் தாழம்பூ வர்ணப் புடவையில் கவிதா போய்க் கொண்டிருந்ததைப் பார்த்ததும். அவள் தன்னைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை குமரேசனுள் உதித்தது. ஆனால் அவளைத் தாண்டிச் செல்லாமல், ஆசிரியரை தாண்டிச் செல்லப் பயப்படுகிற மாணவன் போல கவிதாவின் பின்னால் மிக மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.