This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/04/21/

சாமியாடி - நாங்குநேரி வாசஸ்ரீ

ரொம்ப நாள் கழிச்சு நண்பன் ஜோசப் கிட்ட பேசினதுல மனசுக்குள்ள ஒரு குதூகலம். பழைய நினைவுகளோடு மொட்டை மாடியின் உச்சத்தில் ஏறி மல்லாக்கு படுத்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் முழுவதும்இருட்டாத அந்தி மாலைப் பொழுது. கூட்டம் கூட்டமாக பறவைகள் எங்கிருந்தோ அவசரமாக திரும்பி வீட்டிற்குபோவது போல் போய்க் கொண்டிருந்தன. தூரத்தில் அம்மங்கோவிலிலிருந்து பாட்டு மாரியம்மா… மாரியம்மா…. திரிசூலியம்மா…… பக்கத்திலிருந்த வேப்பமரம் ஏதோ அந்தப் பாட்டுக்கு தலையாட்டுவது போலவே அசைந்து கொண்டிருந்தது. மனசு வேற எதையோ யோசிக்க

.


Read More


கற்பு என்பது யாதெனின் - விஷ்வதாரா (அறிமுகம்)

மாடிப்படிகளில் வேகமாக ஏறிக் கொண்டு இருந்த ருத்ராவின் காதுகள் கேட்குமாறு பக்கத்துவீட்டுப் பெண்கள் பேசத் தொடங்கினர்.. “இங்கே பார்த்தியா.. எவ்வளவு ஸ்டைலா நடந்து போறா.. இதே நானா இருந்தா தூக்குல தொங்கி இருப்பேன்.. கொஞ்சமாவது மான மரியாதை வேணாம்.. கெட்டுப் போன அப்புறமும் எப்படி இவளாலே தலை நிமிர்ந்து நடக்க முடியுதோ..” என பேசிக் கொண்டு இருக்க நடந்துக் கொண்டு இருந்த அவளது கால்கள் தானாக நின்றது… அவர்களின் பக்கம் திரும்பி நேராகப் பேச ஆரம்பித்தாள் ருத்ரா..

.


Read More


உங்களுக்காகத்தானே உழைக்கிறேன் - இரா.சடகோபன்

தேவநேசன் வாழ்க்கையில் மிக நொந்து போனதன் பின்னரே ஓரளவு நல்ல நிலைக்கு வந்தான். இருந்தாலும் அவனது கடுமையான முயற்சி அத்துடன் நின்று போய்விடவில்லை. அவனுக்கு ஒரு அழகிய அற்புதமான மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். அந்த ஐவர் அடங்கிய குடும்பம் ஐக்கியமாகவும் அன்புடனும் வாழ்ந்து வந்தது. ஆனால் தேவநேசனுக்கு மட்டும் அவர்களை சீரும் சிறப்புடனும் வாழ வைக்க முடியவில்லையே என்ற கவலை எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. அதனால் அவன் இப்போதை விட இன்னும் கடுமையாக உழைக்க

.


Read More


டார்லிங் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

அது ஒரு அழகான காலைநேரம். லண்டனில் வசந்தகாலம் முடிந்து விட்டது.சாடையான இளம் குளிர்காற்றின் தழுவலில் தோட்டத்து செடி கொடிகள் இணைந்து சிலிர்த்துக் கொண்டிருந்தன.பழுத்துக் கொண்டிருக்கும் தக்காளிகள் காலைச்சூரியனின் இளம் சூட்டில் பளபளத்தன. வேலியில் படர்ந்து பூத்துக் கிடந்த சிறுமல்லிகையின் மணம் மனத்திற்கு இதமளித்தது. வசந்த காலம் முடியப்போகிறது. தோட்டத்தில் போட்டிருந்த மரக்கறிவகைகள் தங்கள் சேவையைமுடித்த திருப்தியுடன் கொஞ்சம் கொஞ்சமாக வாடத் தொடங்கி விட்டன. ஒரு சில மாதங்களுக்கு முன் விதைத்த சிறு பயிர்கள் முளைத்து வளர்ந்து அதைச்

.


Read More


புத்ரன் - ப.மதியழகன்

தூது சென்ற கண்ணனால் கெளரவர்களை சமதானம் செய்ய முடியவில்லை. இனி போர் தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு வருகிறான். சதுரங்க ஆட்டத்தில் முதல் காயை கண்ணனே நகர்த்துகிறான். கெளரவர்களின் படைத் தலைவனான கர்ணனிடம் பாண்டவர்களை ஒழித்துவிடும் உக்கிரம் இருப்பதை கண்ணன் அறிந்திருந்தான். வரும் வழியில் அங்க தேச அரசனான கர்ணனிடம் நீ சூதனல்ல சத்ரியன் உன் தாய் குந்தி. நீ பாண்டவர்கள் ஐவரில் மூத்தவன் என்ற உண்மையை தெரியப்படுத்திவிட்டுத்தான் குந்தியிடம் வந்து விவரத்தை தெரிவித்தான். குந்தி குந்திபோஜனால்

.


Read More


நெடும் பயணம் - முனைவர் ஆ.சந்திரன்

அனுமன் வால் போல் நீண்டது அப்பயணம். தொடங்கியது யார் தொடங்கி வைத்தவர்கள் யார்? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் தொடர்ந்து கொண்டுள்ளது முடிவில்லாத அப்பயணம். அப்பயணத்தை நான் எங்கிருந்து ஆரம்பித்தேன் என்று சரியாக இப்போது நினைவில்லை. ஆனால் வானைத் தொட்டு நின்ற அந்த மலையில் வெண்மேகம் தவழ்ந்து கொண்டிருந்த அந்த காட்சிதான் எனக்கு இப்போது நினைவில் உள்ளது. அந்த அழகிய காட்சியில் இருந்துதான் என்னுடைய பயணம் தொடங்குகிறது. அப்படின்னா அதுதான் என்னுடைய துவக்கப் புள்ளி என்று நினைக்கிறேன்.

.


Read More


நிறம் மாறும் நிஜங்கள்…! - காரை ஆடலரசன்

நெடுநேரம் பேசாமல் எதிரும் புதிருமாய் அமர்ந்திருக்கும் ராஜலட்சுமி, ஹசீனாபேகத்திற்குள் ‘இந்த சிக்கலை எப்படித் தீர்க்க…? ‘ என்பதில் தீவிர யோசனை. மூளைக்குள் வண்டு குடைச்சல். ராஜலட்சுமியின் மகன் ரகோத் ஞாயிறு விடுமுறை நாளான இன்று காலையில்தான் தயங்கித் தயங்கி….. ”அம்மா…! ” என்று அருகில் அமர்ந்திருந்தவளை அழைத்து பேச்சை ஆரம்பித்தான். தினசரி படித்துக் கொண்டிருந்தவள் அதை நிறுத்தி, தாழ்த்தி, திரும்பி.. ”என்னப்பா..?” என்றாள் பாசமாய். ”ஒ…ரு சேதி…!” குரல் தெளிவாக வந்தாலும் வார்த்தைகள் தடுமாறியது. ” சொல்லு

.


Read More


பள்ளியில் திருட்டு - ஸ்ரீ.தாமோதரன்

இரவு பனிரெண்டு மணிக்கு மேல் ஆகி விட்டது, ராமசாமியும், அவன் அப்பா, அம்மா, தங்கை, நால்வரும் அவர்கள் ஊருக்கு பேருந்தில் வந்து இறங்கினர். பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிடம் நடந்தால் போதும், அவர்கள் வீட்டுக்கு போய் விடலாம். நால்வரும் வேகமாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். நேரம் பனிரெண்டுக்கு மேல் ஆகி விட்டதால், தெருவெல்லாம் வெறிச்சென்று இருந்தது. வீதியில் விளக்கும் எரியவில்லை. அவ்வப்பொழுது இவர்களை கடந்து செல்லும் வாகனங்களின் வெளிச்சத்தை வைத்து பாதையில் நடக்க ஆரம்பித்தார்கள்.

.


Read More


கழிவறை - பா.அய்யாசாமி

அவையோருக்கு என் கழிவான வணக்கம்! மன்னிக்கவும் , கனிவான வணக்கம்! கைத்தட்டல்… கழிவு என்றவுடன் எப்படி நாம் முகம் சுழிக்கின்றோம்? ஆனால் முகம் சுழிக்கின்ற விஷயம் இல்லை. முகம் மலரும் விஷயம்!? ஆம் ! அதன் அருமை அவதிப்படுவோருக்கு மட்டுமே புரியும். கழிவு வராதவரை கேட்டுப்பாருங்கள்! அல்லது கழிவு அறை இல்லாதவங்களை கேட்டுப் பாருங்கள்! அதன் கஷ்டம் புரியும்! இன்று நம் எல்லோர் வீட்டலும், ஒன்று, அல்லது மேற்பட்ட கழிவறைகள் உண்டு.நாம் அதன் அத்தியாவசத்தை உணர்ந்து, அதற்காக

.


Read More


நட்பதிகாரம் - எஸ்.கண்ணன்

குமரேசனுக்கு சொந்த ஊர் தென்காசி. சென்னையின் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியராக வேலையில் இருக்கிறான். ஒருவாரம் முன்பு புதிதாக வந்து சேர்ந்த தன்னுடைய டீம்லீடர் கவிதாவின் மீது அவனுக்கு காதல் துளிர்விட்டது. ஒரு நாளில் குறைந்த பட்சம் பன்னிரண்டு மணிநேரம் அவளுடன் இருந்து வேலை செய்வதில் புளகாங்கிதம் அடைந்தான். ஞாயிறுகளில் ஏன் விடுமுறை என்று எரிச்சலாகக்கூட வந்தது. கவிதா தன்னுடைய பாஸ். தன்னைவிட ஒரு வயது பெரியவள். ஸோ வாட்? தினமும் அவளை

.


Read More


நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.


To change your subscription, click here.