This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/04/16/

எங்க காலத்துல… - சத்யஸ்ரீ

மாதவன் ஸாரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். ரொம்ப சுவாரஸியமான ஆள். நிறைய அறிவு. நல்லா பழகுவார். ரொம்ப பேசுவார். பிறருக்கு உதவிகள் செய்ய தயங்கமாட்டார். சாயந்திரம் ஆனால் போதும், எங்கள் குடியிருப்பில் உள்ள சிறு பூங்காவின் இருக்கையில் வந்து உட்கார்ந்துகொண்டு, போவோர் வருவோரை எல்லாம் விடாப்பிடியாக அழைத்து உட்கார வைத்து ரம்பம் போட ஆரம்பித்துவிடுவார். அவருக்கு பயந்தே அனைவரும் வேறு நுழைவாயில் வழியாகச் செல்வார்கள். யாருமே அகப்படாவிட்டால் வாயிற்காப்போனிடம் கதை அளக்க

.


Read More


நீங்களே நியாயம் சொல்லுங்கள், நான் குற்றவாளியா? - சரோஜ் நீடின்பன்

நேற்று இரவு வெகுநேரம் கண்விழித்து மிட்டேர்ம் பரிட்சைக்குப் படித்துவிட்டுத் தூங்கி, காலையில் எழுந்து கல்லூரிக்குச் செல்லத் தயாராகும் போது, என் செல்போன் அலறியது. என் க்ளாஸ்மேட் சந்தியா போனில் சொன்ன செய்தி கேட்டு அப்படியே கீழே சரிந்தேன். என் கைகால்கள் நடுங்க ஆரம்பித்தது. தலை சுற்றியது. வயிற்றில் ஒரு வலி ஆரம்பித்து என் நெஞ்சையும் தொண்டையையும் அடைத்தது. என் செல்போனைத் திறந்து பார்த்தேன். அதில் சுரேந்தரிடமிருந்து பன்னிரண்டு மிஸ்ட் கால்ஸும், மெஸேஜும் இருந்தது. என் உடம்பெல்லாம் வியர்த்தது.

.


Read More


ஷாலினிக்குப் பாராட்டு….! - காரை ஆடலரசன்

பள்ளி வளாகத்தினுள் அன்னை அருள்மேரி ஆங்கிலப்பள்ளியின் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பார்வையாளர்களாக பெற்றோர், பொது மக்கள். மேடையில்;….சிறப்பு விருந்தினராக கல்வித்துறை அதிகாரி அமர்ந்திருக்க… ஆசிரியை ஆர்த்தி அறிவிப்பின்படி தலைமை ஆசிரியை மரிபிலோமினா மாணவ மாணவிகளுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கிக் கொண்டிருந்தாள். ”எங்கள் பள்ளியில் ஆங்கிலத்திற்கு மட்டுமில்லாமல் தமிழுக்கும் முதலிடம், முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளைத் தாய்மொழியிலும் சிறப்பாக வர ஊக்குவிக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இந்த பள்ளியில் முதல் வகுப்புப் படிக்கும் மாணவி ஷாலினி திருக்குறளில்

.


Read More


செப்புக் காசாக மாறிய தங்கக் காசுகள் - பீர்பால்

சக்கரவர்த்தி அக்பர் பொது மக்களைத் தன் சபையில் நேரடியாக சந்தித்துக் குறைகளை விசாரிப்பார் என்ற செய்தி கேட்டு அந்தக் கிழவி பரபரப்படைந்தாள். சமூகத்தில் மிக செல்வாக்குடைய குல்ஷா என்ற பணக்கார பிரபுவின் முகத்திரையைக் கிழிக்க அவள் துடித்தாள். ஆனால், தான் அந்தப் பிரபுக்கெதிராக கூறப்போகும் புகாரை அக்பர் நம்புவாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. எதற்கும் அவரை சந்திப்பது என்ற முடிவுக்கு வந்தாள். மறுநாள் கிழவி தயங்காமல் தர்பாருக்கே சென்று விட்டாள். வாயிற்காவலர்கள் அவளைத் தடுத்தி நிறுத்தி என்ன

.


Read More


கனா கண்டேன் தோழா நான்! - பாக்கியம் ராமசாமி

நண்பன் நாராயணன் ஏதாவது கனவு கண்டால் அவனது மனைவியிடம்கூடச் சொல்லமாட்டான். (அப்படியே அவன் சொன்னாலும் அந்த அம்மையார் பொறுமையாக காது கொடுத்துக் கேட்கமாட்டாள்.) ஆகவே தனது கனவுகளை சுடச்சுட சொல்லுவதற்கு சில வேளைகளில் என் வீட்டிற்குக் காலை ஏழு மணிக்கெல்லாம் வந்து விடுவான். அன்றைக்குக் காஃபி சாப்பிட்டானதும் தன் கனவைப் பற்றிக் கூறினான். ஏதோ ஒரு சத்திரத்தில் நிறைய மனிதர்கள் மூட்டை முடிச்சுகளுடன் காத்திருக்கிறார்களாம். அவர்களுக்கு நடுவில் நாராயணனும் போய் உட்கார்ந்து கொள்கிறானாம். சாப்பாடு இன்னும் வரவில்லையே

.


Read More


அப்புவின் கதை - வல்லிக்கண்ணன்

முத்துத் தீவு என்று ஒரு சிறு கிராமம் இருந்தது. ஆனால் அந்த ஊரில் முத்துக்கள் சேகரிக்கப்படவுமில்லை; அது ஒரு தீவுமில்லை. அந்த ஊர் வெகு தூரத்தில் தன்னந்தனியாக இருந்தது; அதை அடைவது சிரமம், அதனால் அந்தப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். பக்கத்து நகரம் கூடப் பல மைல் தூரத்தில் இருந்தது. இரண்டு மைல் தள்ளி கூடம், ஒரு இரவு படகுப் பயணம் போனால், பாலம், குதிரை வண்டியில் ஒரு மணி நேரம் சவாரி செய்து பிறகு பஸ்ஸில் மூன்று

.


Read More


அருமருந்து - பாரதிநேசன்

“தொடரும்”….. என்று இரவு 10.30 நாடகம் முடிந்ததும் வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டது. மரம் செடி கொடிகள் மூலம் இயற்கை இரவோடு பேசிக்கொண்டிருக்க…என் மனம் உன்னையே அசைபோட்டுக்கொண்டிருந்தது. “நீ வந்துவிடுவாய் ! ” என்பதால், போர்வை, தலையணை உதறி படுக்கையை சரிசெய்து கொண்டேன். கொசுவோடு போர் செய்ய ஆல்அவுட்டும் வைத்துவிட்டேன். சன்னலை அடைத்து அறையை மேலும் இருட்டாக்கி கொண்டேன். உனக்குப் பிடித்த “நீல நைட்லாம்ப்” மட்டும் போட்டுக்கொண்டேன். அம்மா அப்பா உறங்கிவிட்டார்கள் !. உன் வருகைக்கான எல்லா ஏற்பாடையும்

.


Read More


தெரு நாயை துன்புறுத்த வேண்டாம் - ஸ்ரீ.தாமோதரன்

கோவிந்தாபுரம் என்னும் சிற்றூர், அந்த ஊரில் பெரும்பான்மையான மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். விவசாயத்திற்கு ஏற்றவாறு அந்த ஊரில் பெரிய ஆறு ஒன்றும், நிறைய வாய்க்கால்களும் உண்டு. வாய்க்கால்களில் ஓடும் நீரில் விவசாய்மும், ஆற்றில் ஓடும் தண்ணீரில் குடிதண்ணீர், மற்றும் பல தேவைகளை அங்குள்ள மக்கள் பூர்த்தி செய்து கொள்வர். அந்த ஊரில் சிவனேசன் என்ன்னும் விவசாயி வாழ்ந்து வந்தார். அவருக்கு மனைவியும், பூபதி என்னும் ஒரு பையனும், பூங்க்கொடி என்னும் பெண்ணும் உண்டு. பூங்கொடி

.


Read More


சிவ சக்தி - பா.அய்யாசாமி

என்னங்க! இன்னும் நம்ம சமையல்காரர் வரலை! வேலைக்கார்ரும் வரலை! மணி ஒன்பது ஆகிடுச்சு. அவங்கவங்களுக்கு ஏதாவது வேலை இருக்கும். நமக்குத்தான் ஒரு வேலையும் இல்ல, காத்துகிட்டு இருக்கிறதைத் தவிர, அப்படினு நினைச்சுகிட்டாங்க போல. இன்றைக்கு பிரதோஷம்! அவங்க விரதங்கிற பேரிலே பட்டினியா கிடக்கிறாங்களோ, இல்லையோ? நம்மலை பட்டினி போட்டு ஒரு கால பூஜையை சாயங்காலாம் பண்ணலாம்னு இருக்கலாம். என ஆதிசிவனாயும், உமா மகேஸ்வரியாய் குடிக்கொண்டுள்ள ஆதிபுரம் கோவிலில் சிவனும் பார்வதியும் உரையாடிக் கொண்டு இருந்தனர். யாரோ, வாரப்ல

.


Read More


இசக்கியின் பள்ளிப் பருவம் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘பூரணி’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது ). இசக்கிப் பாண்டியை நன்றாகத் தயார்செய்து பெரிய பள்ளிக்கூட ஹெட் மாஸ்டர் கஸ்தூரி ஐயங்கார் கிட்ட கூட்டிட்டுப்போனா பூரணி. “ஏம்மா, இந்தப் பயலைப் பார்த்தா ஏழெட்டு வயசுப் பயலாட்டம் இருக்கான்… நீ என்னமோ ஐந்து வயசுன்னு சொல்றயே?” எடுத்த எடுப்பிலேயே கஸ்தூரி ஐயங்கார் கேட்டார். “நெசமாத்தேன் சாமி… இப்பத்தேன் இவனுக்கு அஞ்சு வயசு முடிஞ்சிருக்கு. பாக்கறதுக்குத்தேன் இப்படியிருக்கான்.” “நீ சொல்றே, எப்படி நான் நம்புறது?”

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.