This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/04/14/

வெயில் வா மழை போ..! - குரு அரவிந்தன்

என்றும் இல்லாதவாறு இன்று வாசலில் அதிக கூட்டமாக இருந்தது. டாக்டர் அஞ்சலி பம்பரம் போல சுழன்று கொண்டிருந்தாள். கடமையில் இருந்த தாதிகளால் கூட அவளுக்கு ஈடாக நின்று பிடிக்க முடியவில்லை. இடியும் மின்னலுமாய் இருந்த வானம் சற்று ஓய்ந்திருப்பது போலத் தோன்றினாலும், இன்னும் மழை கொட்டலாம் என்ற எதிர்பார்ப்போடு வானம் காத்திருப்பது தெரிந்தது. ‘டாக்டர் எங்க அம்மாவைக் காப்பாற்றுங்க..!’ ‘டாக்டர் என்னோட ஒரே பிள்ளை, பிளீஸ் காப்பாற்றுங்க..!’ பரிதவிப்போடு ஓடி வந்த எல்லோருக்கும் அவள் கைகொடுத்தாள். ஒவ்வொரு

.


Read More


குளத்தில் முதலைகள் - மதியழகன் முனியாண்டி

பகல் பொழுது போனால் இரவு. இருட்டு நிறைந்த கால பொழுதுகள். அதில் நல்ல இரவு கெட்ட இரவு என்பது எல்லாம் கிடையாது. அதை அனுபவிக்கும் மனிதரிடம் தான் இருக்கு. இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு நடக்க போகும் சம்பவங்கள்; அது நல்ல இரவா அல்லது கெட்ட இரவா என முடிவு செய்ய போகிறது. நடு இரவை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. சாலை ஓரத்தில் தெரு விளக்கின் கீழ் இரு மோட்டார் சைக்கிள்கள் நின்றுக் கொண்டிருக்கிறது. அந்த மோட்டார்

.


Read More


லைகா - பாரதிநேசன் (அறிமுகம்)

அந்த தெரு மக்கள் அன்று வழக்கமான மகிழ்ச்சியில் இருந்து நழுவியிருந்தனர். அவர்களின் பேச்சில் இருக்கும் துள்ளல் விடுப்பில் சென்றுவிட்டது. அவர்களின் அன்பும்,உணவும் அவனுக்காக காத்திருந்தன. அவனுக்கு பிடிக்கும் என்று அங்காடி அரிசியில் வடித்த “வெள்ளை சாதமும்,மீன் குழம்பும்” சில மீன் துண்டுகளோடு அவனுடைய தட்டில் நிரம்பியிருக்கிறது. ஒருநாள் ஆகியும் அவனது பாத சுவடுகளோ,அவன் தூரத்தில் வரும்போதே ஒரு காத தூரம்வரை தூக்களாக வீசும் அவனது தண்ணீர்படாத மேனியின் தாராள துர்நாற்றமோ இப்போது அங்கே இல்லை. யார் வீட்டிலாவது

.


Read More


புதுவரவு - ம.மீனாட்சிசுந்தரம்

காலை வெயிலின் கடுமையை குறைத்துக் கொள்ள வீட்டு முற்றத்திலிருந்த மாமரத்து நிழலில் அடைக்கலமாகி, அன்றைய தினசரியை படித்துக் கொண்டிருந்தார் சங்கரன். பெட்ரோல் விலை ஏற்றம், தங்கம் விலையில் இறக்கம் இப்படி பல பல சூடான செய்திகளுக்கு நடுவில் ”இந்தாங்க காபி” ஆவி பறக்க கோப்பையை நீட்டிய விசாலம், ”என்னங்க இது என்ன மாசம்” ”அக்டோபர்” ”ஞாபகம் இருக்கா” ”காலையிலயே உம் புராணத்த ஆரம்பிச்சிட்டயா சொல்லித் தொலை” ”இந்த கோபம் உங்கள விட்டுப் போகாதா” ’வயசான காலத்துல கோபத்தக்

.


Read More


ஸ்டாம்பு ஆல்பம் - சுந்தர ராமசாமி

ராஜப்பாவின் புகழ் மங்கிப்போய்விட்டது. மூன்று நாட்களாக நாகராஜனைச் சுற்றிக் கூட்டம், நாகராஜனுக்குக் கர்வம் வந்து விட்டது என்று ராஜப்பா எல்லாப் பையன்களிடமும் சொன்னான். பையன்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. நாகராஜன் சிங்கப்பூரிலிருந்து அவன் மாமா அனுப்பி வைத்த ஆல்பத்தை எல்லோரிடமும் காட்டினான். பள்ளிக் கூடத்தில் காலை முதல்மணி அடிப்பதுவரை பையன்கள் நாகராஜனைச் கற்றிச் சூழ நின்று கொண்டு ஆல்பத்தைப் பார்த்தார்கள். மதியம் இடை வேளையிலும் அவனை மொய்த்தார்கள். கோஷ்டி கோஷ்டியாக வீட்டிற்கு வந்தும் பார்த்து விட்டுப் போனார்கள். பொறுமையோடு

.


Read More


சிவலிங்க செட்டியார் பங்களாவில் தபாலாபீஸ்! - பாக்கியம் ராமசாமி

சிவலிங்க செட்டியாரின் பங்களாவுக்கு நிகரான பங்களா எங்கள் கிராமத்தில் அப்போது ஏதுமில்லை. மதிப்புக்குரிய செல்வந்தர்களான நாடார் இனத்தவரை ‘செட்டியார்’ என்று மரியாதையாக குறிப்பிடுவது எங்கள் வட்டார வழக்கு. அசல் செட்டி நாட்டுப் புகழ்பெற்ற பங்களாக்களைப் போலவே கட்டிட நேர்த்தியும், பளபளப்பும் மழமழப்புமாக ஊரே பிரமிக்கும்படி சிவலிங்கம் செட்டியார் பங்களா கட்டியிருந்தார். கண்ணாடியில் பார்ப்பதுபோல சுவர்களில் நம் உருவம் பிரதிபலிக்கும். தொட்டுப் பார்த்தால் ரொம்ப நாளைக்கு அந்த மழமழப்பை விரல்கள் தெரிவித்துக் கொண்டிருக்கும். முட்டைக் கருவும், வெல்லமும், சுண்ணாம்பும்

.


Read More


சொர்க்கத்துக்கு ஏழு படிகள் - வல்லிக்கண்ணன்

ஒரு நாள் நான் செய்திப்பத்திரிகையை புரட்டிய போது, பின்வரும் வார்த்தைகள் என்னை கவர்ந்தன. “ஹலோ, இளைஞர்களே! நீங்கள் விண்வெளி வீரர்கள் ஆக ஆசைப்படுகிறீர்களா?” நான் உணர்ச்சியோடு துள்ளிக் குதிப்பதற்கு இருந்தேன்; என் கண்கள் அச்சு எழுத்துக்களில் தயங்கின. உண்மையில் அது ஒரு விளம்பரம் தான்! நான் தொடர்ந்து படித்தேன்: “ஸாமந்தா சந்திரசேகர் விண்வெளி ஆய்வு நிலையம், பம்பாய்-1, விண்வெளி வீரர்களை நாடுகிறது! விண்வெளிப்பயணிகள் ஆக விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்…. “ஸாமந்தா சந்திரசேகர்? இந்தியாவின் பெரிய வானசாஸ்திரி! ஒரு

.


Read More


எதுவும் ஒரு தொழில்தான் - ஸ்ரீ.தாமோதரன்

இரத்தினபுரி என்னும் சிற்றூருக்கு மாதவன் என்னும் இளைஞன் வேலை தேடி வந்தான். அந்த ஊரில் எல்லா இடங்களிலும் வேலை தேடி அலுத்து போனான். எங்கும் வேலை கிடைக்கவில்லை. காரணம் இவன் வெளியூர்க்காரன் இவனை நம்பி எப்படி வேலை கொடுப்பது என்று நிறைய பேர் வேலை தர மறுத்து விட்டனர். மாதவன் பாவம் சோர்ந்து போய் விட்டான். அவனுக்கு அவன் அம்மாவிடம் சொல்லி வந்தது ஞாபகம் வந்தது. அவன் அம்மா சுமார் ஐம்பது மைல் தள்ளி வசித்து வந்தார்.

.


Read More


ஒன்டிக் கட்ட - பா.அய்யாசாமி

ஏங்க ,கொஞ்சம் அடுப்பிலே பாலை வைங்க, இதோ வந்து காபி தாரேன். சந்தானம், காலை நடைப் பயிற்சி முடித்து வந்தவனைப் பார்த்து குளித்துக் கொண்டு இருந்த கீதா கூறினாள். சரி சரி,வைக்கிறேன். என பாலை அடுப்பில் வைத்தான். குளித்து முடித்து வந்த கீதா, ஒன்னுத்துக்கும் லாயக்கில்லே, பாலை வைன்னா அப்படியே வச்சுடறதா? அடுப்பை மூட்ட வேணாமா? அப்படி என்னத்தான் கத்துக்கிட்டிங்களோ, என்ன செல்லோ, கொஞ்சும் கூட ஒத்தாசையா இல்லைன்னா, கஷ்டம்தான், இப்படியே இருபது வருடமாக நான் உழைக்கிறேனே,

.


Read More


பூரணி - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘சூதானம்’ கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது) பூரணி சொன்ன பொய்யால் அத்தனை சொந்தக்காரப் பயல்களும் ஓடிப்போய்விட்டான்கள். அதுவும் எப்படி? ‘வெளி வேசத்தைப் பார்த்து யாரையும் நம்பக்கூடாது’ என்று பேசியபடி… செந்தூர் பயல்களே இப்படிப் பேசினான்கள் என்றால் பாளை வியாபாரிகள் பேசாமல் இருப்பார்களா? அவர்கள் அதற்குமேல் பேசித் தீர்த்தார்கள். “பாண்டி துட்டே சம்பாரிச்சிருக்க மாட்டான்னு ஒரேமுட்டா சொல்லிர முடியாது. கை நெறைய சம்பாரிச்சிருப்பான். ஆனா சம்பாரிச்ச துட்டு எல்லாத்தையும் விட்டிருப்பான். அதான் ஊர்

.


Read More


நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.