This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/04/12/.

கலியாண(வீடு) ஹோல்! - மானிப்பாய் சுதன்

ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே உறவினர் ஒருவரின் திருமண வீட்டுக்கு செல்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தோம். மணமகனும் மணமகளும் உத்தியோத்தர்கள். திருமணம் காலை பத்து மணிக்கும் பதினொருமணிக்கும் இடைப்பட்ட நல்வேளை. அதனால், வழமையாக வாரஇறுதியில் செய்யும் வேலைகளை முடித்துக்கொண்டு திருமணத்துக்கு போவது இலகுவாக இருந்தது. திருமண மண்டபத்தை அடைந்தபோது, மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்கு சரியான இடம்தேடி கண்கள் சுழன்ற போது: “அண்ணை இங்கே கொண்டாங்க, இந்த சைக்கிளுக்கு பின்னால நெருக்கமாக விடுங்க, கெல்மெற்றை கொண்டுபோங்க, “கான்டில் லொக்” போடவேண்டாம்” மண்டப செக்கியூரிட்டியின் குரலில்

.


Read More


மாம்பழ அவதாரம் - நாங்குநேரி வாசஸ்ரீ

சென்னை பல்லாவரத்தில் டெக்ஸ் பன்னாட்டு நிறுவனத்தின் மானேஜர் பதவிக்கான நேர்முகத்தேர்வு இன்று. . என்னுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் அமர்ந்திருக்கிறோம். மற்ற நால்வரிடமும் பேச்சு கொடுத்ததிலிருந்து தெரிந்தது. எல்லா விதத்திலும் இந்த வேலைக்கு நான் தான் தகுதியானவன். படிப்பு, அனுபவம் எல்லாம் அவர்களை விட எனக்கு தான் அதிகம். இருந்தாலும் மனசுக்குள் இருந்த பதட்டத்தை குறைக்க பக்கத்திலிருந்தவரிடம் பேச்சு குடுக்க ஆரம்பித்தேன். மும்பையிலிருந்து இப்ப வேலை பாக்குற கம்பெனிக்கு அவசரமா மாற்றுதலாகி வந்ததால படிப்புச் சான்றிதழ்கள்

.


Read More


அரச மரம் - கனகலதா கிருஷ்ணசாமி

முதலில் சில கணங்கள் என்ன பேசுவது என்று மலருக்குத் தெரியவில்லை. முதல்நாள் பேராசிரியரின் உரையைக் கேட்டதிலிருந்து அவர் மீது மலருக்கு அளவுகடந்த மரியாதை உண்டாகி இருந்தது. அவரிடம் மேலும் பேசும் ஆர்வத்தில் அவரது பரபரப்பான அட்டவணையில் எங்களுக்குச் சிறிது நேரம் ஒதுக்கக்கேட்டிருந்தோம். காலையில் என்ன சாப்பிட்டீர்கள்…? இன்றைய உங்களது திட்டம் என்ன…? அண்மையில் என்ன வாசித்தீர்கள் …? என்று மெல்ல உரையாடலைத் தொடங்கி இயல்பான நிலையில் பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த மலர் திடீரென்று கேட்டார் “இந்த அரச

.


Read More


ஒரு தோட்டக்காரனின் ‘சத்தியம்’! - பாக்கியம் ராமசாமி

அவன் மகா சாது, மகா பக்தி, மகா உழைப்பு, மகா மகா வினயம், இன்னும் பல மகாக்களுக்கு உரியவன். பொருத்தமில்லாத ஒரு மகாவுக்கும் உரியவன் – மகா குடியன். எங்கள் குவார்ட்டர்ஸில் தோட்டக்காரன், காவல்காரன், அக்கம் பக்கத்துக்கெல்லாம் ஆடி மாசக் கூழ் ஊற்றும்போது சமையல்காரன். சாயந்தரத்துக்குள் காம்பவுண்ட் வேலைகளை ஒழுங்காக செய்து முடித்துவிட்டு அங்கிருக்கும் பிள்ளையார் முன்னால் (சிறிய ஒரு பிள்ளையார் கோவிலை குடித்தனக்காரர்கள் கட்டியிருந்தனர்.) உட்கார்ந்து விடுவான். விடிய விடிய பிள்ளையார் சந்நிதி தோட்டக்கார கிருஷ்ணனுடையதுதான்.

.


Read More


அதிவேக பினே - வல்லிக்கண்ணன்

நந்து நவாதே ஒர்லியில் வசித்தான். அவன் உண்மையான பம்பாய்வாசி. பாணேஷ் (அல்லது அதிவேக) பினேயோ பூனாவில், வித்யா பவனில் படிக்கும் மாணவன். இந்த உலகம் முழுவதும் என் வீடு என்பது அவன் கொள்கை. சுற்றித்திரியும் பாணேஷைத் தன் வீட்டின் வாசல் அருகே சந்திக்க நேர்வது விசித்திரம் தான் என்று நந்து நினைத்தான். அந்தத் தற்செயலான சந்திப்பின் அதிவிசித்திர விளைவு, அதிவேக பினேக்குத்தான் ஏற்பட்டது-அதற்குக் காரணம் கூட நந்து தான். உண்மையில் பாணேஷ் நந்துவின் வீட்டுக்கு அழைக்கப்படவில்லை. பார்க்கப்

.


Read More


அப்பா வருகிறார்! - ஜே.கே

குமரனின் அப்பா இன்று தான் வருகிறார். காலையிலிருந்தே அவன் படலைக்கும் வீட்டிற்குமாய் ஓடிக்கொண்டு இருந்தான். இருப்புக்கொள்ளவில்லை அவனுக்கு. இரவு முழுதும் தூக்கம் இன்றி உழன்றுவிட்டு அடிக்கடி எழும்பி நேரம் பார்த்து பார்த்து வெறுத்துப்போனான். அடடே குமரனைப்பற்றி சொல்லவேயில்லை. எப்படித்தொடங்குவது? நான் தான் குமரன் என்று சொன்னால் வேலை இலகுவாக முடிந்துவிடும். ஆனால் அதில் ஒரு சங்கடம் இருக்கிறது. இதையெல்லாம் ஏன் எழுதுகிறாய் என்பார்கள். அட மறந்துவிட்டேன், சத்தியமாக இந்த குமரன் நான் இல்லை. எங்கள் வீட்டில் அப்போது

.


Read More


சத்யாவைத் தேடி…! - உஷாதீபன்

நிறுத்தத்திலிருந்து விலகி சற்றுத் தள்ளிப் பேருந்து நின்றபோது கீழே குதித்தான் மனோபாலா. பிறகுதான் உணர முடிந்தது படி சற்று உயரம் என்று. இறங்கிய வேகத்தில் நிதானிக்கும்முன் ஆட்டோ ஒன்று உரசுவது போல் கடந்து சென்றது. கவனிக்காமல் இறங்கிவிட்டோமா அல்லது இடிக்காமல் கடந்து விடலாம் என்று அது பறக்கிறதா தெரியவில்லை. மனக் கலக்கத்தோடேயே எந்தக் காரியம் செய்தாலும் இப்படித்தான் நிதானமில்லாமல் இருக்கும், அவ்வப்போதைய வேலைகளில் கவனமிருக்க வேண்டும். பயணத்திற்காக, தான் கிளம்பியதிலிருந்தே இப்படித்தான் இருக்கிறோமோ என்று நினைத்தான். இனி

.


Read More


காட்டுக்குள் சுற்றுலா - ஸ்ரீ.தாமோதரன்

அன்று காலை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பின் வகுப்பாசிரியர் “அடுத்த மாதம் பத்தாம் தேதி நாம் எல்லோரும் சுற்றுலா போகப்போறோம்” என்று அறிவித்தார். உடனே மாணவ மாணவிகள் “ஹோய்” என்று கூச்சலிட்டனர். சார் எத்தனை நாள் சார்? ஒரு மாணவன் கேட்டான் சார் சார் எந்த ஊருக்கு சார் ஒரு மாணவி கேட்டாள் பொறுங்கள் பொறுங்கள், சொல்லிவிட்டு நிறுத்திய வகுப்பாசிரியர் சுற்றுலான்னு சொன்னவுடனே நீங்க வெளி மாநிலமோ,இல்லை,நம்ம ஊர்களுக்கோ போகப்போறோமுன்னு நினைச்சுக்காதீங்க. அவர் இப்படி சொன்னவுடன் மாணவ

.


Read More


ஒரே மகன் - பா.அய்யாசாமி

என்னங்க! அத்தைக்கு பிடித்த வாழைத் தண்டு, சுண்டைக்காய் எல்லாம் வாங்கி வாங்க, நாளைக்கு அதுதான் சமையல் என்றாள் மருமகள் கீதா மீனாட்சி, சுந்தரம் தம்பதியரின் ஒரே மகன். கிருபாகரன், தவமாய், தவமிருந்து திருவருளால் பெற்ற வாரிசனாதால் கிருபாகரன் எனப் பெயரிட்டு நன்கு படிக்க வைத்து, அருகிலேயே இருக்க வேண்டும் என நல்ல வேலைகளெல்லாம் வந்தும் நிராகரித்து, நல்ல இடத்தில் கீதாவை மணமுடித்து பெண் பிள்ளை இல்லாததால், மருமகளையே பெண்ணாக பாவித்து, சுந்தரம் வேலைப் பார்த்தது போதும் என

.


Read More


சூதானம் - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘கருப்பட்டி’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) பாளையங்கோட்டையில் உளுந்து துவரை மொத்தமாக விற்பனை செய்கிற வியாபாரிகள் நிறைய இருந்தார்கள். மணியாச்சி, சாத்தூர், கோவில்பட்டி போன்ற ஊர்களுக்கெல்லாம் பாளையங்கோட்டையிலிருந்துதான் பருப்பு வகைகள் சில்லரை வியாபாரிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன. இதற்கென்றே இடைத் தரகர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களை நம்பி மொத்த வியாபாரிகளும் சரக்குகளை அனுப்பி வைப்பார்கள். சில்லரை வியாபாரிகள் கடன் சொல்லி வாங்கிக் கொள்வார்கள். இடைத்தரகர்கள் அவ்வப்போது போய் பணத்தை வசூலித்துவிட்டு வந்து கொடுப்பார்கள்.

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.