This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/04/09/.

திருமண அழைப்பிதழ் - பொன் குலேந்திரன்

நான் வேலையிலிருந்து வீடு திரும்பியதும் எனக்குக் கோப்பியும் சான்விட்சும் தந்தபோது, அதோடு எனக்கு வந்திருந்த மூன்று கடிதங்களையும் என் மனைவி ஜூலியா எனக்குக் கொடுத்தாள். அவைற்றை எடுத்துக்கொண்டு போசனம் அருந்தும் மேசைக்கு முன் போய் அமர்ந்தேன் . மூன்று கடிதங்களில் ஒன்று என் பெயருக்கு வழமை போல் வரும் எனது கிரெடிட் கார்டு பில் . அடுத்தது டொரோண்டோ ஸ்டார் பத்திரிகையில் நான் எழுதிய ஸ்ரீ லங்காவில் மனித உரிமை மீறல்களும் ஐ நா சபையும் என்ற

.


Read More


சலோ, சலோ! - கடல்புத்திரன்

(நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதிய தொடர்) அத்தியாயம் ஒன்று! | அத்தியாயம் இரண்டு! | அத்தியாயம் மூன்று! | அத்தியாயம் நான்கு! பொதுவாக,‌ உள்ளேயிருப்பவர்களிற்கு தெரியிற விசயங்கள் வெளியில் இருப்பவர்களிற்கு தெரிய வருவதில்லை. அதுவும் பொய்யாக தெரிவதென்றால்…?? ஏன், உலகநாடுகள், தணிக்கை செய்து தமக்கென செய்தி ஊடகங்களை பிறிம்பாக வைத்திருக்கிறார்கள் என்பதும் புரிவது போல இருக்கிறது. புலம்பெயர்ந்தவர்கள், கூட்டு கைகளாகச் சேர்ந்து ‘ஆயிரதெட்டு பத்திரிகைகளை வெளியிடாமல் உறுதியான கனமான ஒரே ஒரு செய்திப்பத்திரிக்கையை’ மட்டும் வெளியிட மாட்டார்களா?

.


Read More


மஞ்சள் பிசாசே! கொஞ்சம் நில்! - பாக்கியம் ராமசாமி

அப்புசாமி சுற்றுமுற்றும் ஒரு தரம் பார்த்தார். மூன்று தரம் பார்த்தார். மனைவி சீதாலட்சுமியின் குறட்டை ஒலி உள்ளிருந்து வந்தது. ‘நல்ல காலம்’ என்று நினைத்துக்கொண்டு பொடிக் கடையை நோக்கி விரைந்தார். பொடிக் கடைக் கதவுகள், ஐயஹோ! அடைத்துக் கூடக்… இல்லை… இல்லை… அப்புசாமிக்கு உயிர் வந்தது. சொர்க்கத்தின் கதவுகள் அப்போதுதான் மெதுவே மெதுவே அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இதோ, கடைசிப் பலகையைச் சிப்பந்தி போடப் போகிறான். அனார்கலியின் சமாதியை அடைத்த கடைசிச் செங்கல்லைத் தடுக்க, அக்பரின் மகன் ஓடிய

.


Read More


சீவன் - கந்தர்வன்

கூழுப் பிள்ளைக்கு ஒரு வாரமாகவே மனது சரியாயில்லை. விரட்டி விரட்டி பார்த்தும் இந்த கிறுக்கு பிச்சைக்காரன் மறுபடி மறுபடி கோயிலடியில் வந்து படுத்துக் கொள்கிறான். நிற்கவே பயப்பட வேண்டும். அந்த இடத்தில் போய் இவன் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொள்கிறான். ஊருக்கு வெளியே அத்துவானமாய் பரவிக்கிடக்கிறது அந்த பொட்டல். நடுவில் ஆகாயத்திற்கு வளர்ந்த ஒற்றை அரசமரம். அதன் கீழ் ஆயுதபாணியாய் முனியசாமி சிலையும் அருகில் கடல் போல் கிடக்கும் ஊருணியின் நீரும் யாருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும். அந்த

.


Read More


என் மனத்தோழி - நாங்குநேரி வாசஸ்ரீ

மருத்துவரின் குறுக்குக் கேள்விகள் முடிந்தவுடன் அவருக்கு கைபேசியில் முக்கிய அழைப்பு வந்ததால் எங்களை உட்காரச் சொல்லிவிட்டு எழுந்து சென்றிருக்கிறார். இப்பொழுது யாராவது என்னிடம் பேச வேண்டும் எனத் தோன்றியது. மதன் மருத்துவர் என்ன கேட்டார்னு கேளுங்களேன். நீங்க வெளில தானே இருந்தீங்க. என்ன கேக்கணும். சொல்ல வேண்டியதை நீயே சொல்லு. இது மதன். எரிச்சலாக வந்தது எனக்கு. இப்போ சம்பந்தமில்லாமல் மதன் என்னய இங்க எதுக்கு கூட்டி வந்திருக்கார். அவருக்கு ஏதும் பிரச்சினையா. அமைதியாக ஜானவியுடன் பேச

.


Read More


வானம் மெல்ல கீழிறங்கி! - ஜே.கே

“விளக்கு வச்சாபிறகு தான் அந்த ஈர்வலிய எடுத்தோண்டு போய் நல்லா இழு, உள்ள தரித்திரம் எல்லாம் வந்து சேரட்டும்” இரண்டு ஈர் அடிப்பதற்குள் அம்மா குசினிக்குள் இருந்தவாறே திட்ட ஆரம்பிக்க கரண்டும் கட்டாக சரியாக இருந்தது. செவ்வாய்க்கிழமை என்றால் கம்பஸ் பகுதிக்கு மின்வெட்டு என்பதை ஏதோ ஒரு ஞாபகத்தில் மேகலா மறந்துபோயிருந்தாள். சிமினி எதையுமே துடைத்துவைத்திருக்கவில்லை. உடனேயே தட்டுத்தடுமாறி எழுந்துபோய் மெழுகுதிரி ஒன்றை கண்டுபிடித்து ஏற்றிக்கொண்டு, பழைய உதயன் பேப்பரை கிழித்து அரிக்கன் லாம்பையும், மேசை லாம்பையும்

.


Read More


துயரம் - உஷாதீபன்

ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்…! ஒரு சாண் வயிற்றை, வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்…….. ஊரார் நினைப்பது சுலபம்…!!! பாடலில் வழிந்தோடும் நெஞ்சைப் பிழியும் துயர வரிகள் மார்பில் அறைந்து கொண்டிருந்த வேளையில், பதஞ்சலியின் குரலில் அந்தக் குடிசையே கிடுகிடுத்தது. சம்பங்கிய வேலைக்கு அனுப்பாத, அனுப்பாதன்னு எத்தனவாட்டி படிச்சுப் படிச்சுச் சொன்னேன், கேட்டியா? இத்தன நா நாஞ்சொன்னதுக்கு என்னாதான் மதிப்பு? அப்புறம் இந்த வீட்ல ஆம்பளப்புள்ளன்னு நா ஒருத்தன்

.


Read More


அதிர்ஷ்டம் எப்படியும் வரும் - ஸ்ரீ.தாமோதரன்

சித்தூர் என்னும் ஊரில் முனியன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு அப்பாவி குடியானவன். எது சொன்னாலும் நம்பி விடுவான். இதனால் நிறைய இடங்களில் ஏமாந்து விடுவான். அவனை பல பேர் ஏமாற்றிவிடுவர். முனியனுக்கு விவசாய வேலை மட்டும் தெரியும். அங்குள்ள விவசாய நிலங்களுக்கு விவசாய கூலியாகத்தான் செல்வான். கூட அவன் மனைவியும் வேலைக்கு செல்வாள். அவன் மனைவிக்கு நாமும் சின்ன தோட்டம் ஒன்று வாங்கி அதில் விவசாயம் செய்து வாழ வேண்டும் என்று நீண்ட நாள்

.


Read More


அபியும் நானும் - பா.அய்யாசாமி

காலை 7.00 மணி, அபி ! ஷூவைப் போடு! வா,சாப்பிடு! சீக்கிரமா எழுந்திருன்னா? எழுந்து இருக்கறது இல்லே! உன்னாலே எங்களுக்கும் ஆபிஸ் போறது லேட்டாகுது, இது கலா வின் காலை நேர ஒலிப்பரப்பு. அரைத் தூக்கத்தில் எழுந்த மூன்றாம் வகுப்பு மாணவி அபி,என்கிற அபிராமி கடமைக்கு பல் துலக்கி, சாப்பிட்டு, சீருடை அணிந்து , ஷூ வெல்லாம் மாட்டிகிட்டு, ஆட்டோவுக்கு தயாராகி உட்காரும் போதும், அரக்க , பறக்க, அவர்களும் சாப்பிட்டு அலுவலகத்திற்கு கிளம்பும் போது காலை

.


Read More


கருப்பட்டி - எஸ்.கண்ணன்

அது 1954. பாளையங்கோட்டை. இசக்கிப்பாண்டி பிறந்த பதினைந்தாவது நாள் அவனுடைய அப்பா குலசேகரப்பாண்டி திடுதிப்னு மார் வலிக்குதுன்னு சொல்லித் தரையில் சாஞ்சவன் திரும்பி எந்திரிக்கவே இல்லை. “பாத்தீங்களா… பனங்காட்டுப் பயல் பொறந்ததுமே அப்பனை எமபட்டனத்துக்கு அனுப்பிச்சிட்டான்.” “பெத்தவனையே முழுங்கியவன் வேற எவனைத்தான் முழுங்க மாட்டான்?” “எனக்குத் தெரியும் பூரணிக்கு இப்படியொரு எமப்பயல்தான் பொறப்பான்னு.” இப்படித்தான் ஆளுக்கு ஆள் நல்லா நாக்கை வளைத்து வளைத்துப் பேசினார்கள். ஆனா, அப்ப அப்படிப் பேசினதை ஒரேயடியா தப்புன்னும் சொல்லிட முடியாது. ஏன்னா,

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.