This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/03/31/.

யதார்த்தம் - உஷாதீபன்

அப்பா, லெட்ரீன் குழாய் ஒழுகுது…. – சொல்லிக் கொண்டே வேகமாய் வெளியே வந்தான் சதீஷ். கதவைப் பட்டாரென்று சாத்தும் சத்தம். அதனைத் தொடர்ந்து டொக், டொக்கென்று விளக்குகளை சத்தமெழ அணைக்கும் சத்தம். ஒரே ஆர்ப்பாட்டம்தான். பதவாகம் என்பதே கிடையாது. போவது கழிப்பறைக்கு. அதற்கு குளியலறை லைட்டையும் சேர்த்து ஏன் போட்டுக் கொள்ள வேண்டும். அதுவும் பட்டப் பகலில்? போதுமான வெளிச்சம் உள்ள இடம்தான். ஆனாலும் லைட்டை எரிய விடுவது என்பது வழக்கமாகிவிட்டது. இவனுக்கும் சரி, இவன் அம்மாவுக்கும்

.


Read More


சலோ, சலோ! - கடல்புத்திரன்

நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதிய தொடர். அத்தியாயம் ஒன்று! அராலிக்கூடாகச் செல்கிற பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக வேலியில்லாமல் திறந்த ‘ட’னா வடிவில் முருகமூர்த்திக் கோவில் வளவு, மண்பாதையுடன் செல்கிறது.. வீதியை விட்டு இறங்கியவுடன் சிறிய கோவில்,அதில் யார் இருக்கிறார்கள்?பிள்ளையாரா?துர்க்கை அம்மனா?வைரவரா? யாரோ ஒருவர் செகிருட்டி போல இருக்கிறார்.பனை மரங்களுடன் எதிர்ரா போல் இருக்கிற அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் பாடசாலைக் காணி முருகமூர்த்தி வளவை ‘ட‌’னாவாக்கியிருக்கிறது. அந்த வளவையும் சேர்த்து விட்டால் அது வளவு,சதுர வளவு தான்.

.


Read More


பாசாங்குகள் - இரா.சடகோபன்

அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடங்களேயாகின்றன. அவன் ஒரு பத்திரிகையாளன். அத்துடன் இலக்கியத்துறையிலும் ஆர்வம் செலுத்தி சிறுகதைகள், கவிதைகள் என எழுதிக் கொண்டிருந்தான். மேலும் புகைப்படத்துறையிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தான். காட்டு வாழ்வை படம் பிடித்து அழகு பார்ப்பதில் அதிகம் ஆர்வமுள்ளவனாக இருந்தான். அவன் மனைவி தேனாளியை அவன் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டான். இருந்தாலும் அவன்– அவள் மீது அளவுக்கதிகமான காதலும், அன்பும் கொண்டிருந்தாலும். அவள் பதிலுக்கு தன் மீது எந்த அளவுக்கு அன்பு

.


Read More


பிறழ்வு - எஸ்.அகஸ்தியர்

அதிகாரத்துவம் கல்வித் தரத்தை ஒரே மட்டத்தில் அமைத்தபோது. அதன் ‘தரப்புள்ளி’களில் ‘குல்லா’ மாட்டி. ‘இனப்பாகுபாடு’ வைத்த, தமிழ் மாணவர் சிரங்களையே கொய்கின்ற ‘தரப்படுத்தல்’ வாளை வீசியபோது, அது தன் இனத்துக்கு விட்ட சவாலெனக் கருதி, இவன்போல் சக மாணவ உலகமே கெம்பியது. மேசை கொள்ளாமல் சிதறுண்டு கிடக்கிற புத்தகங்கள் – கொப்பிகள் – நோட்ஸ் தாள்களை ஒழுங்கு பண்ணி அழகாக வரிசைப் படுத்தவும் அவன் மனசு ஏவுகிறதில்லை – நேரமில்லை. ஒரே கரிசனையோடு வாசிப்பு. புத்தகம் விரித்தால்,

.


Read More


சிறந்த ஆயுதம் - பீர்பால்

சக்கரவர்த்தி அக்பர் சில பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்துப் பரவசமான அக்பர், “ஆகா! பூமியில் ஒரு சொர்க்கம் உண்டு எனில் அது இந்த நந்தவனம்தான்!” என்றார். “ஆம், பிரபு! நீங்கள் கூறுவது சரி!” என்று அனைவரும் ஆமோதிக்க, பீர்பல் மட்டும் மௌனமாக இருந்தார். அதைக் கவனித்த அக்பர், “பீர்பல்! சற்று முன் நான் கூறியதில் உனக்கு உடன்பாடு இல்லையா?” என்று கேட்டார். “பிரபு! இந்த

.


Read More


ஆவிக்கதை - முனைவர் ஆ.சந்திரன்

ஆவிகள் பற்றிய பாடம் நடந்துகொண்டிருந்தது மாசில்லாக் கோட்டையின் மாணிக்க மண்டபத்தில். வைரமாளிகையில் படிக்க பிக்காதவன் பெயர் ஜான். அவனுக்கு ஆவிகள் பற்றித் தெரிந்துகொள்வதில் அப்படி ஒரு ஆர்வம்.அதற்குக் காரணம் பலருக்குத் தெரியாது. மதி கேட்டபோது இப்படி பதில் சொன்னான். எங்கப்பா தன் தாத்தாவின் ஆவியை நேரில் பார்த்தார். எனக்கும் ஆவி தெரியுமா? என்று கேட்டதற்கு பெரியவனானது நீயும் ஒரு நாள் பார்பாய் என்றார். அவர் அந்த விவரத்தை சிறுவனாய் இருந்த போது அவனிடம் சொன்னார். கடிகாரத்தைப் பார்த்தான்

.


Read More


மனிதம் - பொன் குலேந்திரன்

எந்த நாட்டிலும் அந்த நாட்டின் பூர்வ குடிமக்கள் புறக்கணிக்க படுகிறார்கள். காலப்போக்கில். காலனித்துவ ஆக்கிரமிப்பால் பூமி புத்திரர்கள் காணி, வீடு ,வாசல் இழந்து காலாச்சாரம் ,மொழி அழிந்து நாட்டில் புறக்கணிக்கப் பட்டவர்கள் ஆகிறார்க்கள் . காலனித்துவ ஆட்சியில் நாட்டின் பொருளாதார் அபிவிரித்து என்ற பெயரில் பூமி புத்திரர்கள் காணிகள் பறிக்கப்பட்டு பிற நாட்டவர்களை கொடுண் வந்து குடி ஏற்றினார்கள் . இது வாடா, தென் அமெரிக்க பல ஆபிரிக்க நாடுகளில் நடைபெற்றது காணலம்ளிர்ந்த ஒரு வீடற்ற மனிதன்

.


Read More


என் வீடு எங்கே? - ஸ்ரீ.தாமோதரன்

ழேய்..யார்ராது? குழறிக்கொண்டே எங்கோ பார்த்துக்கொண்டு மிரட்டினான் அன்னாசி.யாரும் அவனுக்கு பதில் கொடுக்காததால் தூ..என்று காற்றை பார்த்து துப்பினான். அவனின் இடுப்பில் இருந்து அவிழ்ந்த வேட்டியை எடுத்து மடிக்க குனிந்தவன் தடுமாற்றம் வந்ததால் பேசாமல் நிமிர்ந்து நின்று மறுபடியும் ழேய்…யார்ராது?தன் குரலை உயர்த்த முயற்சித்தான்.அவனின் மூளையில் முகுலத்தில் போய் உட்கார்ந்து கொண்ட உற்சாக பானத்தின் சுவை இப்பொழுது அவிழ்ந்து கொண்டே வந்த அவனது வேட்டியை எடுத்து கட்ட முடியாத நிலையை உருவாக்கி விட்டது. இப்பொழுது தான் எங்கு நின்று

.


Read More


எதிர் பார்த்த அன்பு - பா.அய்யாசாமி

ஆச்சி நீ எங்கப் போக? என பேருந்து நடத்துனர் கேட்டார். நான் யன் போராண்டிய பாக்கப்போறேன்! நீ பேராண்டிய பாக்கத்தான் எங்கப்போறேன்னு கேக்கேன். என்றார் சிரித்தபடி.. பேராண்டிய பாக்க எங்கப்போவாக? மவன் வீட்டுக்குத்தான், கேக்கான் பாரு கோட்டியாட்டம்! எனத் திட்டினாள் . எங்கே ஏறினாவோ? எட்டாங்குளத்திலே என்றாள். எங்க இறங்கனும்? மானூர்லே! எனச் சொல்லி நூறு ரூபாய் நோட்டு ஒன்றை சுருக்குப் பையிலியிருந்து எடுத்துக் கொடுத்தாள். காந்திமதி அம்மாள். அதுசரி, உள்ளே வண்டி கட்டற இடத்திற்கு போகாது,

.


Read More


கோயில்கள் - எஸ்.கண்ணன்

பசுபதி. வயது முப்பது. ஊர் தேனி. இயற்கை வனப்புச் செறிந்த பிரதேசங்களுக்கு அடுத்ததாக பசுபதியின் உணர்வுகளை எளிமையாகக் கவர்ந்திருப்பவை அழகிய பழமையான கோயில்கள்தான். தென் தமிழ் நாட்டில் அவன் காணாத கோயில்களே இல்லை எனலாம். மதுரைக்கு அருகே உள்ள கள்ளழகர் கோயிலிலிருந்து, செங்கோட்டைக்குச் சற்றுத் தள்ளிய வனாந்திரத்தில் இருக்கும் அச்சன்கோவில் வரை அத்தனை கோயில்களையும் அவன் பார்த்திருந்தான். கோவில்பட்டியின் அருகில் இருக்கும் கழுகு மலைக் கோயிலும், ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சற்றுத் தள்ளி பல்லாயிரக்கணக்கான பனை மரங்களின் மத்தியில் சிறிய

.

Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.