This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/03/27/.

தோழர் இறந்து விட்ட பின்பும் ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது - வா.மு.கோமு

“தோழர் விருப்பப்படி அவர் இறந்த பிறகு பிரேதத்தை அவரது உற்ற நண்பர்கள் நீளவாக்கில் இரண்டு குழி வெட்டி தோழரை இரண்டாகப் பிளந்து இரண்டு குழிகளிலும் அடக்கம் செய்து விட்டார்கள். காற்று சூழ்ந்திருக்கிறது , மதியத்தில் டைனோசர்கள் புற்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன.” *** ஈரோடு பாரதி புத்தகாலயத்தில் புதியதாக ஏதாவது நாவலோ , சிறுகதைக் கொத்துக்களோ கிடைக்குமா என்று நான் தேடிக்கொண்டிருந்த சமயம்தான் என்று நினைக்கிறேன் அல்லது அப்படி தோணுகிறதோ என்னவோ , கடைக் கல்லாவின் முன் அமர்ந்திருந்த

.


Read More


யாருக்கு மரண தண்டனை? - பீர்பால்

அன்றும் வழக்கம் போல் தர்பார் கூடியிருக்க, அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கையில் அவருடைய பணியாள் ஒருவன் ஒரு கூண்டுக் கிளியை அங்கு கொண்டுவந்து வைத்தான். கூண்டினுள்ளிருந்த பச்சைக்கிளி சிறகுகளை அடித்துக் கொண்டு ‘கீ’ ‘கீ’ என்று கத்தியது. அந்தக் கிளியை அன்புடன் பார்த்துக் கொண்டு இருந்த அக்பர், பின்னர் சபையோர் பக்கம் திரும்பி, “என்னுடைய நெருங்கிய நண்பன் இந்தக் கிளியை எனக்குப் பரிசாக அளித்திருக்கிறான். இந்தக் கிளி அழகாக இருக்கிறதல்லவா?” என்று கேட்டார். “ஆம், பிரபு! நானும் எத்தனையோ

.


Read More


நாய் வால் - முல்லா

முல்லா அவசரமாக ஒரு விலங்கு வைத்தியரிடம் வந்தார். அவருடன் அவருடைய நாயும் இருந்தது. வைத்தியர் முல்லாவிடம் நலம் விசாரித்து விட்டு நாய்க்கு உடல் நலம் இல்லையா எனக் கேட்டார். முல்லா, ”நாய் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதன் வாலை முழுமையாக நறுக்கி விட வேண்டும்,” என்றார். மருத்துவருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘முல்லா, உன் நாய் அழகாக இருக்கிறது. அதன் வாலை அறுத்தால் மிக அசிங்கமாக இருக்கும். ஏன் அதன் வாலை நறுக்க வேண்டும் என்கிறாய்?. தயவு செய்து

.


Read More


இரண்டாவது மனைவி - முனைவர் க.லெனின்

ஆட்டோவிற்கு மூன்று சக்கரம்தான் உள்ளது. நான்காவதாக இன்னொரு சக்கரம் இருந்தால் நன்றாய் இருந்திருக்கும். மூன்று சக்கரம் உள்ளதால்தான் ஆட்டோ என்கிறோம். நான்கு சக்கரம் இருந்துவிட்டால் குட்டியானை, டெம்போ, லாரி என்றல்லவா அழைத்திருப்போம். கையில் பிடித்த ஸ்டிரிங்கை சாலையில் குண்டு குழியில் சக்கரம் சிக்கிக்கொள்ளாமல் சரியாக ஓட்டினான் கனகசபை. அவனுடைய ஆட்டோவில் வருகின்றவர்களுக்கு ஒருகுறையும் வந்துறக்கூடாது என்பதில் கவனமாய் இருப்பான். “தம்பி இந்த இடம்தான் நிறுத்துப்பா..” என்றார் அந்த வயதானவர். ஆட்டோவை நிறுத்தி மீட்டரைப் பார்த்தான் கனகசபை. அந்தப்

.


Read More


நிறம் மாறும் தேவி - ஜி.சிவக்குமார்

ஆயுள் உள்ளவரை இன்ப துன்பம் பகிர்வேன் என்று அக்னி சாட்சியாய் கரம் பிடித்து ஆறே மாதத்தில் பலவீனமாய் இயற்கையால் சபிக்கப்பட்டவளை,. திருப்பித் தாக்க இயலாதவளை. பெற்றோர் உறவினர் நண்பர்களை விட்டு என்னையே சதம் என்று நம்பி வந்தவளை, என்னில் ஒரு துளியை கர்ப்பத்தில் சுமப்பவளை கள்வெறி கொண்டு முத்தமிட்ட கன்னத்தில் அறைந்து மிருகமென வீழ்த்தப் போகிறேன் என்று நினைக்கும் படி எந்த பொல்லாத சொப்பனம் நான் காணவில்லை. கேடு வரும் போது மனிதனை எச்சரிக்கும் தேவதைகளும் என்னை

.


Read More


ஒரு முதியவரின் காதல் - பொன் குலேந்திரன்

முன்னுரை : காதல் இளம் வயதினருக்கு மட்டுமல்ல வயது வந்த முதியோருக்கும் வரலாம்.. இளம் வயதில் எதை இழந்தார்களோ அதை மரணத்துக்கு முன் எதிர்பார்ப்பதில் என்ன தவறு ? இந்த கதை சற்று வித்தியாசமான பார்வையில் எழுதப்பட்டது சோமர் என்ற சோமசுந்தரம் கொழும்பில் போலீஸ் இலாகவில் சிரேஷ்ட போலீஸ் அதியட்சகராக ( Senior Supdt of Police) இருந்து முப்பது வருட சேவைக்குப் பின் ஓய்வு பெற்றவர். அவர் சேவை செய்த நகரங்கள் இலங்கையில் இல்லை என்றே

.


Read More


பூக்களை பறிக்காதீர்கள் - பா.அய்யாசாமி

ஏய்,இந்திரா, டிபன் ரெடியா? மணி என்ன ஆச்சு? விடிகாலையிலே எழுந்த பின்னும் உன்னால் நேரத்திற்கு தயார் பண்ண முடியல இல்ல, என்னத்தான் பண்ணுகிறாயோ? நாங்க எல்லாம் வெளியே போனத்துக்கு அப்புறம் மத்த வேலையை பார்க்க வேண்டியதுதானே, என அங்கலாய்த்த படியே கையில் நாளிதழ் படித்தபடி அலுவலகத்துக்கு கிளம்ப தயாராய் இருந்தான் ஜனா என்கிற ஜனார்தன். என்னங்க, காலையிலே சாப்பிட டிபனும், உங்களுக்கு மதிய உணவும் சேர்த்து தயார் பண்ணனும்னா கொஞ்சம் லேட்டாத்தான் ஆகும். இதலே அவள் என்ன

.


Read More


இறைவனால் அனுப்ப பட்ட உதவி - ஸ்ரீ.தாமோதரன்

பார்வதி தன் மகள் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருப்பதை மனம் பதைபதைக்க பார்த்து கொண்டிருக்கிறாள். அவளை பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டி செல்ல வேண்டும். என்ன செய்வது? யாரும் அருகில் இல்லை, அவரவர்கள் வீட்டில் பதுங்கிக்கொண்டுள்ளார்கள். இவளுக்கும் ஆண் துணை இல்லை. யாராவது வெளியே சென்று ஒரு ஆட்டோவோ, வண்டியோ பிடித்து வந்தால் போதும், எப்படியும் கூட்டி போய்விடலாம். ஆனால் அதற்கு உதவுவது யார்? காரணம் அன்று அந்த ஊரின் பொது உணவு பண்டகசாலையில் பொதுமக்களை வரிசையாக நிற்க

.


Read More


கணவன்…! - காரை ஆடலரசன்

நான் அண்ணன் வீட்டு வாசல்படி தாண்டி உள்ளே நுழைந்த அடுத்த வினாடி எதிரே தரையில் அமர்ந்திருந்த அண்ணி செண்பகத்தின் கண்கள் குபுக்கென்று கொப்பளித்து…. கண்ணீர் அருவியாகக் கொட்டியது. ‘ ஏன்…ஏன்….? ‘ எனக்குள் பதற்றம் பெட்ரோல் மீது பட்ட தீயாய்ப் பற்றியது. நான், அண்ணன் அர்ச்சுனன் வீட்டிற்கு அருகில் ஒரு சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தாலும் வாரத்திற்கு ஒருமுறை போகவில்லை என்றாலும் மாதம் ஒரு முறை கண்டிப்பாகப் போய்…. அண்ணன், அண்ணி, அவர்கள் மருமகள், பேரன் பேத்திகளை

.


Read More


தீட்டு - எஸ்.கண்ணன்

என் நண்பன் அருணாச்சலம் மகளுக்கு 2019 பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாலக்காட்டில் திருமணம். அதற்காக நானும் என் மனைவி சரஸ்வதியும் பெங்களூரில் இருந்து கிளம்பி ஒன்பதாம் தேதி பகல் ஒரு மணிக்கு பாலக்காட் சென்றடைந்தோம். இந்திர பிரஸ்தா ஹோட்டலில் அருணாச்சலம் எங்களுக்கு அறை ஒதுக்கியிருந்தான். அன்று மாலையில் நானும் சரஸ்வதியும் மலம்புழா அணைக்குச் செல்வதாக பேசி வைத்திருந்தோம். மூன்று மணிக்கு என் மொபைல் சிணுங்கியது. ‘அட அருணாச்சலம்’… மொபைலை எடுத்தேன். “டேய் கண்ணா, ஹோட்டலுக்கு

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.