This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/03/25/.

கமலா வீட்டோடு பறந்து போனாள் - முனைவர் ஆ.சந்திரன்

இரவு கனவில் தன்னுடைய தாத்தாவின் ஆவி சொன்ன அந்தப் பேருந்தில் ஏறினாள் கமலா. அவர் சொன்னதற்கு மாறாகக் காலியாக இருந்த அந்தப் பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்தாள். தன்னைவிட இருமடங்கு வயதையுடைய பத்துபேர் இருந்தது எண்ணியபோது தெரிந்தது. தாத்தா கானாமல் போனபோது அவர் பறந்து போனதாக அந்த ஊரில் பரவலாகப் பேசப்பட்டது. அப்போது அவள் சிறுமியாக இருந்ததால் அது பற்றிப் பெருசாக அலட்டிக்கொள்ளவில்லை. அதன் பிறகு பலமுறை தாத்தாவின் ஆவி நல்லிரவில் வந்து அவளைப் பார்த்து டாட்டா

.


Read More


பொறுப்பறு - பா.அய்யாசாமி

நகரப் பூங்கா, வழக்கமான கூட்டமின்றி, ஆங்காங்கே சிலர் நடைபயிற்சியில் இருக்க, குழந்தைகள் சறுக்கு மரமேறி இறங்கி விளையாடிக் கொண்டு இருந்ததைப் பார்த்து சிவராமன் சார் தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டு சிரித்தபடி அமர்ந்து இருந்தார். சிவராமனுக்கு வயது என்பதை கடந்து ஆறு மாதமாகிறது. மனைவியை இழந்து மூத்த மகளுடன் சீர்காழியில் வசிக்கிறார். இளையமகள் சென்னையில் இருக்கிறார். இவர் அங்கும் இங்குமாக இருப்பார். ஆண் வாரிசு இல்லாவிட்டாலும் பெண்கள் இரண்டும் தன்னை கைக்குள் வைத்து காப்பதும், மாப்பிள்ளை

.


Read More


குட்டிப் பிசாசு 2 - வா.மு.கோமு

Ayiram Sontham Nammai Thedi Varum. Aanaal Thedinalum Kidaikatha Orey Sontham Nalla ‘NANBARGAL’ I am very lucky for your ‘friendship’ Kutty Pisasu : 13/8/2011/ 10/34 Pm. உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே… அச்சம் கலைந்தேன், ஆசையினை நீ அணைத்தாய்! ஆடை கலைந்தேன். வெட்கத்தை நீ அணைத்தாய்! கண்ட திருக்கோலம் கனவாக மறைத்தாலும்… கடைசியிலே அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி… உன்னோடு நானிருந்த ஒவ்வொரு

.


Read More


பரிகாரம் - ஜெயசீதா

ரகு அந்த இடத்திற்கு வரும்பொழுது ஏற்கெனவே கூட்டம் சேர்ந்திருந்திருந்தது. இப்பொழுதெல்லாம் எந்த சாமியார் வந்தாலும் அந்த இடத்துக்கு புற்றீசல் போல் கூட்டம் கூடிவிடுகிறது. நிஜ சாமியாரா, போலிச்சாமியாரா என்பதைப் பற்றியெல்லாம் ஜனங்கள் கவலைப்படுவதேயில்லை. எப்படியாவது தங்கள் ப்ரச்சினைகள் தீர்ந்தால் சரி என்ற மனோபாவம்தான். ரகு தனக்குள் சிரித்துக்கொண்டான், தானும் அதுபோல்தானே வந்திருக்கிறோம் என்று. கொஞ்சம் சிரமத்துடனேயே ஆட்டோவிலிருந்து இறங்கினான். காலில் பட்ட காயம் இன்னும் ஆறவில்லை. இன்னும் எரிச்சலிருந்தது. எப்பொழுதும் எல்லா இடத்துக்கும் அவனுடைய பைக்கில்தான் போவான்.

.


Read More


காது! - சௌ.முரளிதரன்

குதூகலமாக கொக்கரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் துரியோதனன் “ சகுனி மாமா! நமக்குத்தான் வெற்றி ! பாண்டவர்கள் போரில் தோற்பது நிச்சயம்!” . எதிர் கொண்டு அழைத்தான் சகுனி !. “ என்ன ஆச்சு துரியோதனா, போன காரியம்? காயா? பழமா? நம்மோடு சேர்ந்து பாண்டவர்களை எதிர்க்க, பலராமனும் கிருஷ்ணனும் ஒப்புக் கொண்டார்களா? அவர்கள் சைனியம் நம்ம பக்கம் என்னிக்கு வந்து சேருமாம்?” ஆவலோடு கேள்விக்கணைகளை வீசினான் சகுனி மாமா ! “இல்லே மாமா! பலராமன் மாமா,

.


Read More


கர்வத்தின் விலை - வல்லிக்கண்ணன்

ஒரு முத்து மதிப்பு மிக்கதாக இருந்தால், அது விலை மதிப்பற்றது என்பார்கள். முத்துக்கள் சிப்பிப் புழுக்களில் விளைகின்றன. புழுக்கள் சிப்பிகளுள் வசிக்கும். அவை சமுத்திரத்தின் அடியில் கிடக்கும். அப்படிப் பட்ட சிப்பிப் புழு ஒன்றின் கதை தான் இது. இந்தப் புழு தன்னிடம் தானே பெரும் மகிழ்வு கொண்டிருந்தது. உலகத்திலேயே தான் தான் அதிமுக்கியமான ஜீவன் என அது நம்பியது. உண்மைதான், பட்டுப் புழுவும் பயனுள்ளதே, ஆனால் பட்டு, முத்துக்களைப் போல் அதிக விலை பெற்றுத் தருவதில்லை.

.


Read More


பொம்மை - ப.மதியழகன்

ராமையாப்பிள்ளைக்கு வர்ஷினியிடம் அலாதிப் ப்ரியம் என்ன இருந்தாலும் தவமிருந்து பெற்ற பிள்ளையல்லவா, பாசம் இல்லாமல் போகுமா. வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிடிப்பு வேண்டுமே – ராமையாப்பிள்ளைக்கு பிள்ளைப் பாசம். வர்ஷினிக்கு ஏதாவது ஒன்று என்றால் ராமையாப்பிள்ளைக்கு மூஞ்சி செத்துப் போய்விடும். இரண்டரை வயது தான் ஆகிறது அது பேசும் மழலை இருக்கிறதே. குழலும் இனிதில்லை, யாழும் இனிதில்லை மழலைதான் இனிதுயென சும்மாவா சொன்னார்கள். ராமையாப்பிள்ளைக்கு திடகாத்திர சரீரம் தான். ஆனால் பிள்ளைப்பேறு என்னவோ தள்ளிப் போய்விட்டது. என்ன

.


Read More


நான் கோபமா இருக்கேன் - ஸ்ரீ.தாமோதரன்

சே ! இவளை எவ்வளவு நம்பினேன், இப்படி செய்து விட்டாளே? இவளுக்கு தெரியாமல் இது வரை ஏதாவது செய்திருப்பேனா? எது செய்தாலும் இவளிடம் கேட்டுத்தானே செய்தேன். அப்படி செய்தவனுக்கு இவள் செய்த பலன் இதுதான். எனக்கு வேண்டும், அம்மா அப்பொழுதும் சொன்னாள், சொந்தத்துல பொண்ணு கட்டுனா சொன்னபடி கேக்க மாட்டாங்க, நான் கேட்டனா, அத்தை புள்ளை தான் வேணும்னு அடம் புடிச்சி கட்டுனதுக்கு எனக்கு கிடைச்ச தண்டனைதான் இது.இருக்கட்டும், எனக்கு ஒரு காலம் வரும், அப்ப பேசிக்கிறேன்.

.


Read More


2100 - காரை ஆடலரசன்

வீட்டில்….. நூறு வயது தொட்ட மூத்த விஞ்ஞானி முத்துசாமி…. சாய்வு நாற்காலியில் ரொம்ப இறுக்கம், கலக்கமாக அமர்ந்திருந்தார். உள்ளே நுழைந்த இளம்விஞ்ஞானி விஸ்வேஸ்வரனுக்கு அவரைப் பார்க்க அதிர்ச்சி. ” அப்பா…! ” அழைத்து அருகில் தாவி அமர்ந்தான். அவர் எதுவும் பேசாமல் இவனைப் பாவமாய்ப் பார்த்தார். ” ஏன்….. என்னாச்சுப்பா.. ? ” பதறினான். ” தொ….தொலைக்காட்சியில் இன்னையச் செய்தியைப் பார்த்தியா ? ” சொல்லும்போதே அவருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. ” பார்த்தேம்பா. இங்கே…நீங்க வேலை

.


Read More


ஆரம்பக் காதல் - எஸ்.கண்ணன்

ஜெயராமனுக்கு வயது இருபத்தி ஐந்து. பி.ஈ. கம்ப்யூட்டர் சயின்ஸில் டிஸ்டிங்ஷனில் மார்க்குகள் வாங்கியவன். ஊர் குற்றாலத்திற்கு அருகிலுள்ள இலஞ்சி. அவன் வேலை நிமித்தம் சென்னை வந்ததும், அவன் நண்பன் தங்கியிருந்த திருவல்லிக்கேணி மார்க்கபந்து மேன்ஷனிலேயே ஒரு தனி அறை எடுத்துத் தங்கினான். தனி அறை என்பது பெரிய விஷயம். மாதம் பத்தாயிரம் வாடகை. ஜெயராமன் இயல்பிலேயே மிகவும் தனிமையானவன். தவிர, பெரிய பண்ணையார் வீட்டுப் பிள்ளை என்பதால் இந்தப் பத்தாயிரம் வாடகை அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல.

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.