This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/03/17/.

இறந்தவனின் அலைபேசியிலிருந்து வரும் அழைப்பு - ஜி.சிவக்குமார்

ஏம்ப்பா மணி ஒன்பதரை ஆச்சு ஒன்பது மணின்னு டிக்கெட்ல போட்டு இருக்கு எப்பத்தான் எடுப்பீங்க? ஏழு மணிக்கு மேல சிட்டிக்குள்ள பஸ்சை விடமாட்டான் தெரியுமில்ல. அஞ்சு நிமிஷம் சார் ஒருத்தர் வந்துக்கிட்டு இருக்கார். பழனி பேருந்து நிலையத்தில் வெளிப்புறமாக நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் அமர்ந்திருந்தேன் ரெண்டு ரோஸ்ட் ஒரு முட்ட புரோட்டா ரெண்டு கலக்கி தள்ளுவண்டி ஹோட்டல் ,பேருந்து ஆட்டோ ஹார்ன் சத்தங்களின் பின்னணியில், பௌர்ணமி ஒளியில் வையாபுரி குளத்தின் நீர் அசைவற்றிருந்தது. பேருந்தின் முன்

.


Read More


அம்மாவின் முடிவு - என்.செல்வராஜ்

கணேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அவன் அவ்வப்போது சென்னையில் இருக்கும் அம்மாவிடம் அலைபேசியில் பேசுவான். இப்போது அம்மாவின் அலைபேசியில் பதிலில்லை. சற்று நேரத்துக்கு முன் கடைசியாக அம்மாவுடன் பேசினான். பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென அம்மாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அழைப்பு துண்டிக்கப்பட்டதாக நினைத்த கணேஷ் மீண்டும் அழைத்தான். ஆனால் அம்மாவின் அலைபேசி பதிலில்லாமல் இருந்தது. வேலைக்குப் போய்விட்டு வந்து பேசிக்கொள்ளலாம் என்று அவன் வேலைக்குப் போய்விட்டான். மறுநாளும் அம்மாவை அலைபேசியில் அழைத்துப் பார்த்தான். மீண்டும் பதிலில்லை. தன்னுடைய

.


Read More


கற்பனை காதலி - முல்லா

ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நண்பன் கிண்டலாக , “நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் “ என்று சொன்னான். முல்லா கம்பீரமானார். “எப்போது அவள் வருகிறாள் ? “ என்று கேட்டார். “இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்கு” என்றான் அவன். அந்த நாள் நசுருதீனின் பொழுது மன அமைதியற்றுக் கழிந்தது. இரவு உணவுகூட சாப்பிடவில்லை.இரவு பத்து மணி அடித்தது. தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச்

.


Read More


சரோஜா - வா.மு.கோமு

சரோஜா தூக்கம் வராமல் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள். கால்களுக்குப் போடப்பட்டிருந்த தலையணையைக் காலாலேயே மேலுக்கு இழுத்துத் தூக்கி தன் நெஞ்சில் புதைத்து இறுக்கிக் கட்டிக் கொண்டாள். தலையணையை சாமிநாதன் என்றெண்ணி உயரத் தூக்கி முத்தம் கொடுத்து சிரித்துக் கொண்டாள். ‘உடுங்க என்னெ சின்னக் கவுணுச்சி உடுங்க’ என்று இவளின் காதுக்குள் சாமிநாதன் கூறுவது போலவே இருந்தது. ‘உன்னை உடவே மாட்டேன்டா… ஒரு விசுக்காத்தான்டா இந்த சரோஜா ஏமாந்து போவா. எப்பத்திக்கிம் ஏமாந்துட்டே இருப்பாளாடா! உன்னையெ உடவே மாட்டேன்டா

.


Read More


ஒரு பாடம் - வினோத்சந்தர்

ஜனவரி மாதத்தின் இறுதிக்கட்டத்தில் குளிரும் குளிர் சார்ந்த இடமுமாக மாறிப்போன மிச்சிகன் மாநிலம் . அண்டார்டிக்காவிலும் , மிச்சிகனிலும் ஒரே விதமான குளிர் -34 . பாதரசத்தின் அளவு கீழே இறங்க இறங்க குளிரின் அளவு மேலே ஏறிக்கொண்டிருந்தது . -50 வரை போக வாய்ப்பிருப்பதாக அலறிக் கொண்டிருந்தன செய்தித்தாள்கள் . polar vortex என்று தினுசாக ஒரு பெயரை சொன்னார்கள் . விளக்கத்தை தேடினால் , வட துருவத்தில் இருக்கும் காற்று மண்டலத்தில் அழுத்தம் அதிகமாகி

.


Read More


தாத்தாவுக்குக ஒர் கடிதம் - பொன் குலேந்திரன்

நத்தார் தாத்தாவுக்கு மரியாவிடம் இருந்து ஒர் கடிதம். வருடா வருடம் நான் தூங்கும் போது என் கட்டிலில் எனக்குத் தெரியாமல் பரிசுகளை வைத்துவிட்டு போகும் என் அருமை நத்தார் தாத்தாவுக்கு மரியா எழுதுவது நான் என் தாத்தாவை மூன்று வயதுக்கு பின் காணவில்லை அவர் ஒரு பிரபல புற்று நோய் வைத்தியர் என்று நான் வளர்ந்த பின் அம்மாவும் அம்மம்மாவும் சொல்லிக் கேள்விப்பட்டேன் . அவர் பல உயர்களை நீண்ட காலம் வாழ வைத்திருகிறார் அவரின் படத்தை

.


Read More


ஆட்டோ அங்கிள் - பா.அய்யாசாமி

சார் லோன் விஷயமா ஆறு மாசாமா வருகிறேன், இதோ, அதோங்கிறிங்க, என்ன சார் கிடைக்குமா? இல்லைன்னா சொல்லுங்க ,என் அலைச்சலாவது மிச்சமாகும், என அலுத்துக் கொண்டே புலம்பினார். ஆறு மாதமாக ஆட்டோ ஒன்று வாங்க வங்கி லோனுக்காக அலைந்து ஏமாற்றத்தையே சந்தித்த ஆட்டோ ஓட்டுநர் கலைசெல்வன். ஆறுமாசம் முன்னரே இருந்த மேனேஜர், இவர் ஜாமீன் போட்ட ஆளு ஒருத்தன் தவணைக் கட்டாத்தாலே இவருக்கும் கடன் தர மறுத்து எழுதி விட்டார், அதன் பின் அந்த ஆளுடைய பணத்தை

.


Read More


யாரென்று அறியாமல் - ஸ்ரீ.தாமோதரன்

மருத்துவமனையில் நடுவில் தடுப்பு மட்டும் போட்டு இரு புற வாசலுடன், கட்டில் போடப்பட்டிருந்தது. ஒரு கட்டிலில் நீண்ட நாள் நோயாளியாய் நடமாட முடியாமல் படுத்திருந்த பாஸ்கரன் மருந்தின் வேகத்தில் கண்ணயர்ந்து கொண்டிருந்தவர், தடுப்பை தாண்டி பக்கத்து கட்டிலின் அருகே சத்தம் கேட்டு விழித்து பார்த்தார். யாரையோ கொண்டு வந்து படுக்க வைக்கும் சத்தம் கேட்டது, வலியால் அழுகும் சத்தம் கேட்டதும், பாஸ்கரன் நோயாளியாய் வந்திருப்பவன் சிறுவனாய் இருக்க வேண்டும், என்று முடிவு செய்தார். “எல்லாம் சரியாகிவிடும்” குரல்

.


Read More


பாரதி பையன்…! - காரை ஆடலரசன்

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் ரகுராமனை இவ்வளவு அருகில், நெருக்கத்தி;ல் பார்ப்பேனென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம்…. இவன் அவன்தானா….என்கிற ஐயம் மனதுக்குள் சடக்கென்று தோன்ற…. எதிரி;ல் வந்த அவனை உற்றுப் பார்த்தேன். அவனேதான்..! கால இடைவெளி வளர்ச்சியில் கொஞ்சம் மாறி இருந்தான். அதே சமயம், என்னை அவனுக்கு அடையாளம் தெரியுமா என்பதிலும் எனக்குள் ஒரு சந்தேகம் துளிர்த்தது. தெரியாவிட்டாலென்ன… அறிமுகப்படுத்திக் கொள்வோம்.! என்று துணிந்து…ஆர்வமிகுதியில்……. ” டேய்..! ரகு! ” என்னையுமறியாமல் கூவினேன். அவன்

.


Read More


விளக்கு - எஸ்.கண்ணன்

சென்னை-மும்பை தாதர் விரைவு ரயில். மரகதம் அதில் மும்பைக்கு பயணித்துக் கொண்டிருந்தாள். சமீபத்தில் திருமணமான அவளுடைய ஒரே மகன் ஸ்ரீராம், மருமகள் அனன்யா இருவரும் மும்பையில் தனிக் குடித்தனம் நடத்துகிறார்கள். கல்யாணத்திற்குப் பிறகு இப்போதுதான் முதல் தடவையாக மரகதம் அவர்களுடன் மும்பையில் ஒரு ஆறு மாதங்கள் தங்கப் போகிறாள். ஸ்ரீராமுக்கு பாபா அடாமிக் ரிசர்ச் சென்டரில் (BARC) நல்ல வேலை. அவனுக்கு அங்கேயே அணுசக்தி நகரில் ஒரு பெரிய வீடு கொடுத்திருந்தார்கள். பி.ஈ படித்திருக்கும் அனன்யா மும்பையில்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.