This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/03/11/.

பசப்பி - நாங்குநேரி வாசஸ்ரீ

தெய்வான வந்தாளா. அரக்கோட்ட நெல்லு இருக்கு. குத்தணும். பாத்தேன்னா நான் வரச்சொன்னேன்னு சொல்லு. சப்பா என்ன வெக்க. அப்பளம் சுடற மாதிரி கால் ரெண்டும் பொத்து போச்சு. புலம்பிக்கொண்டே உள்ளே நுழைந்தார் சங்கரம்பிள்ளை. யாரு வெளில கோட்டி ஆச்சியா. ஒழுங்கா சொல்லுவியா. எங்க திருப்பி சொல்லு. ஆத்தா கிட்ட என்ன சொல்லுவ. சங்கரம்பிள்ளையின் மனைவி பார்வதி கேட்க பாததி தெதுல நெல்லு துத்த போ. பாவதி அம்மா தொல்லிச்சு. வாய்குழறி சொன்னாள் கோட்டி ஆச்சி. என்ன பாவம்

.


Read More


தயக்கம்
- பாலசுப்ரமணியன் சிவராமன் (அறிமுகம்)

ஹரிஹரன், இன்று எப்படியும் தன்னுடைய மனதில் உள்ளதை அப்படியே மஹாவிடம் சொல்லியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அலுவலகத்தில் அவளை தேடினான், கடைசியில் அவளை தோழிகளுடன் காபி அருந்திக் கொண்டிருப்பதை பார்த்து விட்டான். மஹாவின் தோழிகள் அவள் ஆபிஸ் பஸ் வரை சென்று அவளை பஸ்சில் எற்றி விட்டு வந்ததால் ஹரிக்கு அன்றும் ஏமாற்றம் தான். ஹரிக்கு அவனுடைய சீட்டிற்கு போகவே மனமில்லை. ஏதேதோ எண்ணங்கள் மனதை வருடி கொண்டிருந்தது கண்களில் கண்ணீர் மல்க… தன்னுடைய நிலையை

.


Read More


மதி – மதுமிதா - முனைவர் ஆ.சந்திரன் (அறிமுகம்)

படியில் ஏறிக்கொண்டிருந்தபோது வழக்கம் போலதான் நடந்தார். என்றாலும், இன்று ஏதோ இனம்புரியாத ஒரு பதட்டம் மதியிடம் இருந்தது. அதுபோன்ற அவஸ்தையை அதற்குமுன் பலமுறை அனுபவித்திருக்கிறார். என்றாலும் இனி அவரால் அப்படி இருக்க முடியாது. ஏன் இருக்கவும் கூடாது என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆனால், “அப்படி இருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம்” என்று அவர் எதிர்பார்க்காமல் இல்லை. அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்று திடமாக முடிவெடுத்திருந்தார். அதுதான் அவருடைய வாழ்வின் முதல் ஆசை. ஏன் அதுதான் வாழ்வின்

.


Read More


திசை தவறி நகரும் நதிகள் - வா.மு.கோமு

மருத்துவமனையில் காய்ச்சல் என்று இவனைத் தவிர மேலும் பத்து பேர் அந்த நீளமான அறையில் படுக்கையில் கிடந்தார்கள். காய்ச்சல் சரியானவர்கள் மருத்துவமனையைவிட்டு கிளம்பிப் போவதும், புதிய காய்ச்சல் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதுமாக ஒரு பெரிய தொடர்சங்கிலி நிகழ்வு நடந்து கொண்டே யிருந்தது. திலீபன் வைரஸ் காய்ச்சல் என்று ஏழாம் எண் படுக்கையில் விழுந்து இன்றோடு நான்கு நாட்களாகி விட்டன. தெளிவாகப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் நேற்றே சற்று தெம்பு வந்திருந்தது. இன்று அவனுள் பிழைத்துவிட்டோம் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

.


Read More


இருட்டிலும் ஒலி கேட்கும் - முல்லா

முல்லா ஒரு மாலை நேரத்தில் தன் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று அவருடன் நேரம் போனது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார். இருட்டாகி விட்டது. நண்பருக்கு மெழுகுவர்த்தியை எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை. இருட்டில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார். ”என்ன சமாச்சாரம்”, என்று கேட்டார் முல்லா. ”மெழுகுவர்த்தியை எங்கோ வைத்து விட்டேன், இருட்டில் உட்கார்ந்தா நாம் பேசிக் கொண்டிருப்பது?” என்று நண்பர் வருத்தத்தோடு கூறினார். ”இதற்காகவா கவலைப்படுகிறீர்கள்?. நமது பேச்சு ஒலி இருட்டில் கூட நம் இருவர் காதுகளில்

.


Read More


உத்தியோகஸ்தன் மனைவி - பொன் குலேந்திரன்

முன்னுரை “அரச உத்தியோகம் புருஷ லட்சணம்” என்ற கலாச்சாரத்தில் யாழ்ப்பாணத் தமிழர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள். மகளுக்குத் தேடும் மாப்பிள்ளைளை அரசில்அதிகாரி , கிளார்க் அல்லது பியோனாக இருந்தாலும் சரி அந்த மாப்பிள்ளை கேட்கும் சீதனம் அதிகம். இந்த கதை அப்படி ஒரு அரச ஊழியரின் மனைவி பற்றிய கதை, உங்களைப் பல தசாப்தங்களுக்கு முன் அழைத்துச் செல்கிறது *** “:அம்மா அக்காவுக்குக் கொழும்பு கச்செரியிலை வேலை செய்யும் ஒரு கிளாஸ் ரூ எழுத்தரைக் கலியாணம் பேசி

.


Read More


தாய்ப் பாசம் - பா.அய்யாசாமி

வாசுதேவன் ஒரு பொறியாளர். அலுவலகம் கிளம்பி வாசலில் நின்று ராதிகாவை அழைத்தான்.. நான் போயிட்டு வருகிறேன்., மாலை கொஞ்சம் லேட்டாகும் எனக்காக காத்து இருக்க வேண்டாம்,அப்பா அம்மாவைச் சாப்பிட வைத்திடு,என்றுக் கூறி விட்டுச் சென்றான். அப்பா, அம்மா மீது அளவு கடந்த அக்கறை மற்றும் பாசம், மனைவியே பொறாமைப் படும் அளவுக்கு. சரிங்க நான் பார்த்துக்கிறேன், நீங்க கவலைப் படாம போயிட்டு வாங்க, என்று வழியனுப்பினாள். ராதிகா இல்லத்தரசி அவளுக்கு அம்மா மட்டும் தனது சொந்த ஊரான

.


Read More


தந்தை பட்ட கடன் - ஸ்ரீ.தாமோதரன்

இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ஒரு பிரபலமான நிறுவனத்தை நடத்தி வரும் பரமசிவம், அமெரிக்காவில் இருந்து சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கியதும். அவரை வரவேற்க அவரது கம்பெனி இந்திய நிர்வாகிகள்,மூவர் நவ நாகரிக உடையணிந்து வரவேற்றனர்..”வெல்கம் சார்” என்று கை குலுக்கிய மூவருக்கும் நன்றி சொல்லிய பரமசிவம் அடுத்து எங்கே என்பது போல பார்க்க சார் ஹோட்டல் சோழாவுக்கு போறோம். ஹோட்டல் சோழாவின் அறைக்குள் நுழைந்த பரமசிவம், அவர்கள் மூவரையும் நீங்கள் போகலாம், நாராயணனை மட்டும் இரண்டு மணி நேரம்

.


Read More


அப்பா…! - காரை ஆடலரசன்

வீடு…. எல்லாம் முடிந்த மயான அமைதி. படுத்தப் படுக்கையாய் இருந்த அம்மா நாற்காலியில் அமர்ந்து இன்னும் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். கொள்ளி வைத்து விட்டு திரும்பியதற்கடையாளமாய் மொட்டை அடித்து தினேஷ் சோபாவில் அமர்ந்து வீட்டின் கான்கிரீட் தளத்தை இலக்கில்லாமல் வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். கணேஷ் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாதாவனாய் வெளியே வெற்றுப் பார்வைப் பார்த்தான். அப்பா சாவு அவனுக்குப் பெரிய இடி. அவனுக்கு மட்டுமா !? குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் ஊருக்கும். தணிகாசலம் சாக வேண்டிய வயதில்லை. ஐம்பதில்

.


Read More


புத்தகங்கள் - எஸ்.கண்ணன்

சிறிய வயதிலிருந்தே எனக்குத் தமிழ்ப் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் அதிகம் உண்டானது. அதற்கு முழு முதற் காரணம், என் வீட்டில் அப்பா அப்போது வாங்கிப்போட்ட ஜனரஞ்சகப் பத்திரிகைகள்தான். அதுதான் எனக்குத் தொடக்கம். அந்தக் காலத்தில் ஆனந்த விகடன்; குமுதம்; கல்கி; கலைமகள் போன்றவைகள் மிகவும் தரத்துடன் விளங்கின. ஜெயகாந்தன், சாண்டில்யன்; நா.பார்த்தசாரதி; லக்ஷ்மி; ஜாவர் சீதாராமன்; ர.சு நல்லபெருமாள்; மேலாண்மை பொன்னுச்சாமி; சுஜாதா போன்ற எழுத்துலக ஜாம்பவான்கள் நிறைய எழுதிய காலம் அது. தற்போது அவர்கள் அனைவரும்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.