This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/03/08/.

மலைகளின் மக்கள்… - மு.சிவலிங்கம்

மேகமலைத் தோட்டத்துப் பக்கத்தில்தான் வானக் காடு தோட்டம் இருக்கிறது. வானக்காடு தோட்டத்துப் பக்கத்தில் தான் ஆனைத் தோட்டம் இருக்கிறது. மேகத்தை அந்த மலை சதா தழுவிக் கொண்டிருப்பதால் மேகமலை என்றும் வானத்தை அந்தக் காடு உரசிக் கொண்டிருப்பதால் வானக்காடு என்றும்¸ யானையைக் கண்டு விரட்டியதால் ஆனைத்தோட்டம் என்றும் அந்தக் காலத்தில் தென்னாட்டுத் தமிழர்கள் இலங்கைக் காடுகளை அழித்துக் கொண்டிருக்கும் பொழுது வைத்த காரணப் பெயர்கள் தாம் இவைகள்… இந்தத் தோட்டங்களுக்குப் பக்கத்திலே ‘மண்ராசி” என்றும் ஒரு தோட்டம்

.


Read More


திருடனைக் கண்டுபிடிப்பது எப்படி? - பீர்பால்

அக்பர் ஒரு நாள் பீர்பாலுடன் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருந்தார். திடீரென அக்பர் தன் வலது கைமணிக்கட்டை இடது கையால் அழுத்தித் தேய்க்க ஆரம்பித்தார். அவருடைய மணிக்கட்டு வீங்கியிருந்தது. அதைப் பார்த்த பீர்பால் சிரித்தார். “நான் வலியால் துடிக்கையில் உனக்கு சிரிக்கத் தோன்றுகிறதா?” என்று அக்பர். “மன்னிக்கவும் பிரபு! நான் ஏன் சிரித்தேன் என்று சொல்கிறேன்” என்ற பீர்பால் தோட்டத்திலிருந்த எலுமிச்சைச் செடிகளிலிருந்து ஒரு பழம் பறித்து வந்து அதை வெட்டி, அதன் சாறை வீக்கத்தில் தடவித்

.


Read More


பந்தாடப்பட்ட பெற்றோர்கள் - ஜெ.சங்கரன்

ஒரு தனியார் கம்பனியிலே கீழ் நிலை கணக்காரக இருந்தார் பரமசிவம் பிள்ளை.அவர் உத்யோகம் நிரந்தரம் ஆனவுடனே அவர் அம்மா அப்பா சொன்னபடி அவங்க உறவிலெ இருந்த அவரது அத்தை மகளான பார்வதியை கைப் பிடித்தார். ரெண்டு வருஷம் சந்தோஷமாக இருந்து விட்டு அவர்கள் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டார்கள்.அவர்கள் கடவுளை வேண்டி வந்தார்கள்.அவர்கள் வேண்டுதல் வீண் போக வில்லை.அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு ரமா என்று பேர் வைத்து மிகவும் செல்லமாக

.


Read More


கொங்கு கிராமியக் கதை - வா.மு.கோமு

ஒரு ஊர்ல சின்னச்சாமின்னு ஒரு விவசாயி இருந்தானாம். அவுனுக்கு வெகு நாளா பொண்ணு அமையாம சடுதிக்கி பக்கத்தூர்ல ஒரு பொண்ணு அமைஞ்சு அவளை கட்டிக்கிட்டானாம். கலியாணம் பண்டி ரெண்டு நா மாமியா வூட்டுல இருந்துட்டு மூனா நாளு புதுப்பொண்டாட்டிய கூப்டுட்டு அவன் ஊருக்கு கெளம்பிட்டானாம் கால்நடையா. வழியில காடு தோட்டம் வரப்புல புதுப்பொண்டாட்டிய பாத்து வரச்சொல்லி கூட்டிட்டு வந்தானாம். ஊருக்கு வர்ற வழியிலே மாமரம் ஒன்னைக் கண்டு அதோட நெழல்ல சித்த க்கோந்துட்டு போலாம் பிள்ளைன்னு சித்த

.


Read More


பஞ்சரத்னம் - நிர்மலா ராகவன்

“பஞ்சரத்ன கீர்த்தனை அஞ்சு இருக்கு. ஆனா, நம்பகூட சேர்ந்து பாட இந்தத் தடவை அஞ்சுபேர்கூட இல்லியே!” என்று அங்கலாய்த்தாள் காமாட்சி மாமி. “அதனால என்ன? வீணை வாசிக்க ஒருத்தர் இருக்காங்க, இன்னும் புல்லாங்குழல் வாசிக்க, வயலின் வாசிக்க,” என்று அடுக்கிக்கொண்டே போனாள் பரம் சோதி. அந்த இசைக்குழுவில் இருந்தவர்களிடையே இருந்த ஒரே ஒற்றுமை – அந்த சிலரே இந்தியாவில் கர்னாடக இசை பயின்றவர்கள் என்பதுதான். அவர்களில் மூவர் திருமணத்திற்குப்பின் கோலாலம்பூர் வந்தவர்கள். கல்லூரிப்படிப்புக்கு நிறைய செலவாகும், போதாத

.


Read More


காது! -  சௌ.முரளிதரன்

குதூகலமாக கொக்கரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் துரியோதனன் “ சகுனி மாமா! நமக்குத்தான் வெற்றி ! பாண்டவர்கள் போரில் தோற்பது நிச்சயம்!” . எதிர் கொண்டு அழைத்தான் சகுனி !. “ என்ன ஆச்சு துரியோதனா, போன காரியம்? காயா? பழமா? நம்மோடு சேர்ந்து பாண்டவர்களை எதிர்க்க, பலராமனும் கிருஷ்ணனும் ஒப்புக் கொண்டார்களா? அவர்கள் சைனியம் நம்ம பக்கம் என்னிக்கு வந்து சேருமாம்?” ஆவலோடு கேள்விக்கணைகளை வீசினான் சகுனி மாமா ! “இல்லே மாமா! பலராமன் மாமா,

.


Read More


செயல்வினை - பா.அய்யாசாமி

இன்று டிசம்பர் 31, காலை. கடந்த வருடம் இந்த நேரம் எல்லாம் அப்பாவிடம் திட்டு வாங்கியபடி டிபன் சாப்பிட்டுக்கிட்டு இருந்தது ஞாபகம் வந்தது, கேசவனுக்கு. பாவம் அவரும் என்னத்தான் செய்வார்? பிடிச்ச வேலையை சொந்தமா செய்வோம் இல்லைன்னா சும்மா இருப்போம் அப்படிங்கறது என் கொள்கை, அது அப்பாவிற்குப் பிடிக்காத ஒன்று, நான் பணமெல்லாம் தரமாட்டேன், கஷ்டப்பட்டு பொறியியல் படிச்சிட்டு கிடைச்ச வேலையை ரசித்து செய்யனுங்கிறது அப்போவோட ஆசை.பெரும்பாலும் எல்லா அப்பாக்களின் ஆசையும் அதுதான். ஆனா, எனக்கு இதெல்லாம்

.


Read More


வாழ்க்கை வாழ்வதற்குத்தான் - ஸ்ரீ.தாமோதரன்

கண்ணாடியை கழற்றி பக்கத்தில் இருந்த மேசையின் மேல் வைத்துவிட்டு களைப்பால் அப்படியே மேசையின் மீதே கன்னத்தில் முட்டு கொடுத்து கண்ணயர்ந்தாள் தேவகி.உடலில் அப்படி ஒரு அசதி, அதை விட மனதில் ஒரு வித அலுப்பு,யாருக்காக? எதற்காக? ஒன்றும் புரியவில்லை. முப்பத்தி ஐந்து வருடங்கள் என்பது பெரிய வயதில்லை,ஆனால் ஒரு கலெக்டர் ஆவதற்கு இத்தனை வருடங்கள் தேவைப்படுகின்றனவே.அதற்குள் தான் எத்தனை போராட்டங்கள். வாழ்க்கையில் ஏதாவது ஒரு லட்சியம்தான் நிறைவேறுமா? அந்த லட்சியத்தை நிறைவேற்ற இத்தனை வருடங்கள் ஆயிற்று.பதவிக்கு வந்த

.


Read More


ரோசம்… - காரை ஆடலரசன்

மதியம் ஒரு மணி. வாசல் வரண்டாவில் சாய்வு நாற்காலி போட்டு சாய்ந்திருந்தேன். சூரியவெக்கை உடலை தழுவி இருந்தது, ‘‘ஐயா !’’ பவ்விய குரல் கேட்டு நிமிர்ந்தேன். வெள்ளை வேட்டி சட்டையில் எதிரில் ஐந்தடிக்கும் சற்று குறைவான குள்ள உருவம். கருத்த மேனி. பழகிய முகம் எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. ஆனால் சட்டென்று ஞாபகத்திற்கு வரவில்லை.ஒரு நிமிட தடுமாற்றத்தில் ஆள் யாரென்று தெரிய…. எனக்குள் குப்பென்று வியர்வை. சின்ன மின்னதிர்ச்சி. ‘‘நீ……நீ…..’’ தடுமாறினேன். ‘‘ராமசாமி கோணார் பெரிய

.


Read More


மரண சிந்தனைகள் - எஸ்.கண்ணன்

அப்பல்லோ ஹாஸ்பிடல், சென்னை. பிரபல தமிழ் சினிமா டைரக்டர் மதனகோபால் டீலக்ஸ் அறையில் தனியாகப் படுத்திருந்தார். அவருக்கு லிவர் கேன்சர். தன்னுடைய நாட்கள் எண்ணப் படுகின்றன என்பது அவருக்கு நன்றாகப் புரிந்தது. வயது எழுபத்தைந்து ஆகி விட்டது. கடந்த நாற்பது வருடங்களாக சினிமா இண்டஸ்ட்ரியில் அவர் சாதித்தது ஏராளம். மதனகோபால் தயாரித்து டைரக்ட் செய்த எழுபது படங்களில் அறுபது படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். அவர் கடைசியாக தன்னுடைய எழுபதாவது வயதில் தயாரித்து வெளியிட்ட ‘காதல் மழை’

.


Read More


நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.