This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/03/05/.

இனிது காதல் இனிது - பா.அய்யாசாமி

சாரு.. தன் மொபைலில் விடியற்காலையில் மிஸ்டு கால் வந்ததை பார்த்ததும், ஏதேதோ உணர்வுகள்,அவளுள் வந்தன. இரண்டு நாளா இப்படி அடிக்கடி நடக்குது. கட்டானதும் மெஸெஜ் வரும் ‘ப்ளீஸ் கால் மீ ‘ ஆர் மெஸெஜ் , என்று. அப்பா,அம்மாவும் யாரும்மா இந்த நேரத்திலே என கேட்கத் தொடங்கிவிட்டனர். என்னச் சொல்வது எதைச் சொல்வது என்ற குழப்பம். திரும்ப மிஸ்டு கால் வரட்டும், இந்தத் தடவை பேசிடனும், ஏன் இப்படி பண்றீங்க? உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டிடனும், அப்பத்தான்

.


Read More


கேள்விக்கென்ன பதில் - வினோத்சந்தர்

என் அருமை மகள் அவள் அம்மாவின் மூலமும், கார்ட்டூன்களின் மூலமும் எண்களை கற்றுக் கொண்டிருக்கிறாள். ஆனால் கேள்வி கேட்டு முழிக்க வைப்பது மட்டும் என்னிடம் . அறிவாளி என்று நினைத்து கேட்கிறாளோ இல்லை எப்படியும் தெரிய போவதில்லை கேட்டு வைப்போம் என்று கேட்கிறாளோ தெரியவில்லை . நாங்கள் சென்ற கடையில் நிறைய லேன்கலில் எண்கள் இடம் பெற்று இருந்தன . அதனை பார்த்துக் கொண்டிருந்த மகளை, ‘என்ன கண்ணு பார்க்கிறாய்?’ என்று கேட்டுவிட்டேன். அமைதியாக இருந்திருக்கலாம். ‘அப்பா

.


Read More


பிரார்த்தனையும் மனிதனும்! - முல்லா

பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தொழுது கொண்டிருந்த ஒருவன் திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருப்பனைப் பார்த்து, ”அடடா நினைவு மறதியினால் என் வீட்டுக் கதவை மூடாமல் வந்து விட்டேன் ” என்றான். ”தொழுகை நேரத்தில், நீ பேசியதானல் என் பிரார்த்தனையைக் கலைத்து விட்டாய். அதனால் நீ மறுபடியும் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்றான் அவன். ”

.


Read More


முடிவு நம்ம கையில இல்லீங்க! - வா.மு.கோமு

மைதிலி மருத்துவமனையில் இருக்கிறாள் என்ற செய்தியே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பெண்கள் என்னவென்ன காரணங்களுக்குத் தான் அரளிக் கொட்டையை அரைத்துக் குடிப்பார்கள் என்ற விபரமெல்லாம் சரிவர தெரிவதேயில்லை. அப்போதைக்கு எது எளிதாக கிடைக்கிறதோ அதை அவர்களின் இறப்பை நிறைவேற்றிவிடுமென தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். போன மாதம் ஒரு முட்டாள் பெண் பக்கத்து ஊரில் சீமெண்ணெயை குடித்து விட்டது. அதுவும் மருத்துவமனை சென்று தப்பித்துக் கொண்டது. அது என்ன காரணத்துக்காக சீமெண்ணெயை தேர்ந்தெடுத்து வயிறு ரொம்ப குடித்தது என்பது நான்

.


Read More


செல்லாத ஓட்டுகள்! - துடுப்பதி ரகுநாதன்

அரவிந்தன் மாநிலத்திலேயே மிகச் சிறந்த அரசியல் பேச்சாளன். அந்ததொகுதியில் இடைத் தேர்தல். இரண்டு முக்கிய கட்சிகள் நேரிடைப் போட்டி! ஒரு கட்சி சார்பாக அந்த நகரத்தில் வாக்கு சேகரிக்க அரவிந்தன் வருகை தந்திருந்தான். உள்ளூரைச் சேர்ந்த சில கட்சித் தொண்டர்களோடு, அரவிந்தன் காரில் முக்கிய வீதிகளில் பிரச்சாரம் செய்து கொண்டே வந்தான். பிரச்சார வேன் தொழிலதிபர்கள் வாழும் நகர்,ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ,டாக்டர்கள், லாயர்கள், உயர் அதிகாரிகள் வசிக்கும் முக்கியமான காலனிகள் என்று தோழர்கள் சொன்ன இடங்களில் எல்லாம்,

.


Read More


வெற்றியை பெற்றுத்தருவது வேறொன்றுமில்லை - இரா.சடகோபன்

நிரோசன் மிகத்துடிதுடிப்பான சின்னக் குட்டிப்பயல். இருந்த போதும் அவன் அம்மா அவன் சிறுவனாக இருக்கும் போதே இறந்து போய்விட்டபடியால் அவனது சுறுசுறுப்பு பாதி அடங்கிப் போய்விட்டது. அவன் அம்மா இல்லாத பிள்ளையாக இருந்ததால் அவனது அப்பா அவனை இரட்டிப்புக் கவனமெடுத்து கண்ணும் கருத்தமாக பார்த்துக் கொண்டார். எல்லாச் சிறுவர்களும் இயல்பாகவே கிரிக்கட் விளையாட வேண்டுமென்று ஆர்வம் காட்டிய போதும் நிரோசன் இதற்கு எதிர்மாறாக உதைபந்தாட்டம் மீது அக்கறை கொண்டிருந்தான். ஊரில் எங்காவது உதைப்பந்தாட்ட நிகழ்ச்சி நடக்குமாயின் அங்கே

.


Read More


விடுகதை - ப.மதியழகன்

இரத்த மாதிரியை பரிசோதித்து ராமச்சந்திரனுக்கு blood cancer என்று உறுதிப்படுத்திவிட்டார்கள். அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தான் என்று அவனுக்கு நாள் குறித்து discharge செய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ராமச்சந்திரனுக்கு கல்யாணமாகி ஒரு மகளுண்டு ராமச்சந்திரனுக்கு அப்பா தவறிவிட்டாலும் அம்மா இருக்கிறாள். கூடப் பிறந்தவர்கள் ஒரு அக்கா மட்டுமே, அவள் கல்யாணமாகி திருச்சியில் வசிக்கிறார்கள். அம்மாவைப் பார்க்க அவ்வப்போது வந்து போவதுண்டு. என்ன அக்காவும், மாமனும் காசிலேயே கண்ணாய் இருப்பார்கள். அப்பா வச்ச அச்சகத்தைத்தான் ராமச்சந்திரன்

.


Read More


கொடுத்த வாக்கு - ஸ்ரீ.தாமோதரன்

அலுவலகம் முடிய இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கையில் மழை நன்கு பெய்ய ஆரம்பித்து விட்டது. அப்பொழுதுதான் நாற்காலியை விட்டு எழுந்து முகம் கழுவி விட்டு வரலாம் என்று நினைத்த விமலா சலிப்புடன் “என்ன திடீருன்னு மழை வந்திடுச்சு சொல்லிவிட்டு பொத்தென மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்தாள். மழைன்னா திடீருன்னுதான் வரும் பெரிதாக ஜோக் அடித்து விட்டதாக சிரித்த ஆனந்தனை பார்த்து முறைத்த விமலா உங்களுக்கென்ன சார்? வீட்டுக்கு போன உடனே எல்லாம் கிடைச்சுடணும். நாங்க அப்படி இல்லை, இங்கிருந்து

.


Read More


ஓடிப்போனவர் - காரை ஆடலரசன்

வெளியே போன ஆள் இரண்டு நாளாக வீடு திரும்பவில்லை என்ன ஆனார், எங்கே போனார் என்று தவித்துக் கொண்டிருந்த தமிழ்ச்செல்விக்கு அந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது, ‘‘கேட்டியாக்கா சேதிய. நீ தேடிக்கிட்டிருக்கிற அந்த மனுசன்… அதான் உன் புருசன் டவுன்ல ஒரு சிறுக்கி வீட்டுல இருக்கார். அதை என் கண்ணால பார்த்தேன். அக்கம் பக்கம் விசாரிச்சேன். ரொம்ப நாளாத் தொடுப்பாம். இப்போ நெரந்தரமா வந்து தங்கிட்டதா சொன்னாங்க. என்ன அநியாயத்தைப் பார்த்தியாக்கா ?’’ செண்பகம் இப்போதுதான் இடியை

.


Read More


பிடித்தமான காதல் - எஸ்.கண்ணன்

கதிரேசன் காலையிலேயே களத்துமேட்டுக்கு கிளம்பிச் சென்றான். அவனுக்கு தற்போது இருபத்தியாறு வயது. பி.ஈ படித்து முடித்ததும் ஒருவருடம் சென்னையில் மென் பொறியாளராக வேலை பார்த்தான். ஆனால் அவனுக்கு அந்தப் பரபரப்பான சென்னை நகர வாழ்க்கை பிடிக்கவில்லை. அங்கு வெள்ளந்தியான மக்கள் குறைவு. பொய்யர்களும், ஏமாற்றுக்காரர்களும்தான் மிகவும் அதிகம். அது நரக வாழ்க்கை. எனவே வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரான அம்பாசமுத்திரம் திரும்பி வந்து தற்போது உற்சாகமாக விவசாயத்தில் அதிக கவனம் செலுத்துகிறான். அப்பாவுக்கு உதவிக்கொண்டு இப்போது மனம்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.