This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/02/23/.

பி.ஜி.ஜி - நாங்குநேரி வாசஸ்ரீ

அம்மா என் மொபைல பாரு. கால் வருது. கிணற்றிலிருந்து பாட்டி இறைத்துக்கொட்டும் தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்த வியக்தா அலறினாள். பாம்பு காது. எங்கேயோ இருக்கு உன் மொபைல். நெனப்பு பூரா அதுல தான். தப்புடியம்மா. ரொம்ப உபயோகிச்சா காதும் கண்ணும் போயிடுமாம். அடுத்த வீட்டு சாம்பு சொன்னான். பாட்டி ஆரம்பித்தாள். எதப் பண்ணறியோ அதுல கவனம் செலுத்து. நிம்மதியா குளி. சுத்திவர பறவைகள் சத்தம் எப்டி கேக்குது பாரு. அம்மாவின் பங்கு. கிணற்றடியில் சிறிது தொலைவில் பறந்து விரிந்து

.


Read More


காணாமற்போனவர்கள் - பொ.கருணாகரமூர்த்தி

நேற்று முழுவதும் வந்திருந்து முற்றத்தைத் தேய்த்து ஓராறு கண்ணீர் ஊற்றிவிட்டுப்போன அந்த நடுவயதுத் தம்பதி இன்றும் வந்திருந்து அரற்றினர். “ ஐயோ ஐயா உங்களைத்தான் நம்பியிருக்கிறம். யாரோ நாதாரியள் எங்கட பிள்ளை பார்த்தனன்தான் செம்மியனைப் போட்டவன் என்று கொடுத்த அநியாயத்தகவலால்………. அவனை உங்கட தாசந்தான் பிடிச்சு வைச்சிருக்கிறாராம். அந்த அப்பாவிக்குழந்தையை எங்களிட்ட மீட்டுத்தந்திடுங்கோ ஐயா…………” என்றபடி அவரின் கால்களில் விழுந்தனர். செம்மியன் பார்த்தனனை வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி அவனது ஐந்து இலட்சத்தை வாங்கி ஏப்பம் விட்டதால

.


Read More


அதிதுடிஇமை குணாம்சம் - எம்.எம்.நெளஷாத்

டாக்டரின் பெயர் யுக்ஸியி. அந்தப் பெயர் யாருக்கும் தெரியாது. எல்லோரும் அவரை தங்கப் புத்தகம் என்று செல்லமாக அழைத்தார்கள். தங்கத்திற்கு நிகரான நற்குணங்களை அவர் கொண்டிருந்தார் என்பதற்காகத் தான் அவருக்கு அந்தப் பெயரைச் சூடியிருந்தார்கள் என்றால் அது தவறு. யுக்ஸியின் மேசையிலே தங்க நிறத்தில் பைண்டு செய்யப்பட்ட ஒரு புத்தகம் இருந்தது. பார்ப்போரின் கண்ணைக் கவரும் விதத்தில் அசல் தங்கப்பாளம் போல் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது அந்தப் புத்தகம். அந்தப் புத்தகத்தை அழகிய கண்ணாடிப் பேழையிலே பத்திரப்படுத்தி

.


Read More


அறிவுப் பானை - பீர்பால்

வீரசிம்மன் ஒரு குறுநல மன்னர்! சிற்றரசராக இருந்த அவர். அக்பருடைய ஆதிக்கத்தில் இருந்தார். முகலாய சாம்ராஜ்யத்திற்கு கப்பம் செலுத்தி, அவர்களுடன் நட்புறவோடிருந்தார். தனது ராஜ்யத்தில் குடிமக்களின் நிம்மதியையே பெரிதாக மதித்த வீரசிம்மன், முகலாயர்களின் அடிமையாக இருந்ததைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவருடைய ராஜ்யத்தில் இருந்த சில இளைஞர்கள் மன்னர் தன்மானத்தை அடகுவைத்து விட்டதாகக் கருதினர். அந்த இளைஞர்கள் தயக்கமின்றி அவரை அணுகி அவருடைய கொள்கைக்குத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். சுதந்திரம் தங்களுடைய பிறப்புரிமை என்றும், நாட்டின் அமைதிக்காக, முகலாயர்களின்

.


Read More


காசம் வாங்கலியோ காசம் - வா.மு.கோமு

இவனுக்கு 14ஏ அறை தனித்தே விடப்பட்டிருந்தது. நாளொன்றுக்கு மருத்துவமனை சாப்பாட்டுடன் அறுபது ரூபாய் தான். இலவச அறைகளும் சானடோரியத்திற்குள் இருக்கின்றனதான் என்றாலும் அதற்கு எம்.எல்.ஏ.வின் பரிந்துரைக் கடுதாசி வேண்டும். இவன் சார்ந்த கட்சியின் தோழர்கள் அந்த பரிந்துரையை வாங்கித் தருவதாகத்தான் கூறினார்கள். என்றாலும் அவன் அதை மறுத்து விட்டான். மேலும் அந்தப் பரிந்துரையினால் 100 பேர் இருமிக் கொண்டிருக்கும் ஒரு நீளமான ஹால் தான் கிடைக்கும். இவனும் கடந்த ஒன்றரை வருடமாக அந்த டாக்டர் இந்த டாக்டர்

.


Read More


கோயில் - சௌ.முரளிதரன்

இருநூறு வருடங்களுக்கு முன் மதுரை மாவட்டம் காட்டுப் புத்தூர் குளம்., அது ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தை தள்ளி, ஊருக்கு வெளியே இரண்டு கிலோ தூரத்தில் ஒரு ராமர் கோயில் சந்நிதி. மிக சாந்த சொருபீயாக , பத்து அடி ராமன் சிலை மண்ணால் ஆனது. அதனால், ராமருக்கு திருமஞ்சனம் எண்ணும் நீராபிஷேகம் கிடையாது. வெறும் பூ அலங்காரம் மட்டுமே. ராமன் அருளால், ஊர் செழித்து இருக்கிறது , சக்தி வாய்ந்த இறைவன் என ஊர்

.


Read More


பாக்கு வெட்டி - மு.சிவலிங்கம்

மாணவி அபி நான்கு மணியாகியும் வீட்டுக்கு வரவில்லை.. குடும்பம் பதறித் துடித்தது. அப்பா பஸ் நிலையத்துக்கு ஓடினார். அண்ணன் பாடசாலைக்கு ஓடினான். அதிபரை விசாரித்தான்.. ஆசிரியர்களை விசாரித்தான்.. அவர்கள் “ரெண்டு மணிக்கே பாடசாலை விட்டாச்சே..” என்று கைகளை விரித்தார்கள். அண்ணன் திரும்பி ஓடி வந்தான். நண்பர்களைக் கூட்டிக் கொண்டு தேடத் தொடங்கினான். இந்த ஊரில் இப்படி எத்தனையோ சிறுமிகள் காணாமல் போன சம்பவங்கள் ஏராளம் உண்டு. அபியின் தாயாரின் ஓலம் வானதிரக் கேட்டுக் கொண்டேயிருந்தது.. அக்கம் பக்கத்து

.


Read More


புலிக்கு புலி - ஸ்ரீ.தாமோதரன்

புலியார் அன்று மகா கோபமாக இருந்தார். காலையில் அவர் கேட்ட செய்தி அவரை அவ்வளவு கோபப்பட வைத்து விட்டது. அதற்கு காரணம் நரியார் சொன்ன செய்திதான். விடிந்த பின் எழுந்த சூரியன் அப்பொழுதுதான் மேலேறிக்கொண்டிருந்தான். புலியார் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண்ணை மூடி குட்டி தூக்கம் போட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது மெதுவான காலடி ஒசை கேட்டது. என்னதான் தூக்க கலக்கத்தில் இருந்தாலும் புலியாரின் காதுகள் விருக்கென் விறைத்து காலடி சத்தத்தை உன்னிப்பாக கேட்டது. நடை பதுங்கி பதுங்கி நடப்பது

.


Read More


அப்பா..! - காரை ஆடலரசன்

தன் மொத்த கனவும் தகர்ந்து போன உணர்வில் ரொம்ப இடிந்து அமர்ந்திருந்தார் தணிகாசலம். பெரிய கனவு. தன் மகன் டாக்டர், இன்ஜினியராகி பெற்றவர்களைத் தாங்கி, மற்றவர்களுக்கும் நல்லது செய்து, பேர் சொல்லும் பிள்ளையாய் ஊர் மெச்ச வாழ வேண்டுமென்கிற கனவு. ஆனாலும் இது அவருக்குக் குருவித் தலையில் பனங்காய். தன் சக்திக்கு எட்டாக்கனி. என்றாலும் அவர் முயன்றால் முடியாததில்லை என்பதில் ரொம்ப மூர்க்கம். துணிந்து இறங்கினார். பலன்…..?! ஒரே பிள்ளை தவமாய் தவமிருந்து பெற்றது. திருமணமாகி முதல்

.


Read More


சமையல்காரன் - எஸ்.கண்ணன்

(‘இல்லாள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது.) மனைவி மரகதத்தின் காரியங்கள் முடிந்ததும், மகள்கள் இருவரும் சபரிநாதனை தங்களுடன் வந்து இருக்கும்படி வருந்தி வருந்தி அழைத்தனர். ஒரு மாற்றத்திற்காக ஹைதராபாத் மகள் வீட்டில் சில நாட்களும்; பெங்களூர் மகள் வீட்டில் சில நாட்களும் இருந்துவர எண்ணிக் கிளம்பிச் சென்றார். மகள்கள் இருவரின் அவசர வாழ்க்கை அவருக்கு மிகவும் அலங்கோலமாகத் தோன்றியது. காலையில் ரொட்டிகளைத் தின்றுவிட்டு பேரக் குழந்தைகளும் மருமகன்களும் ஸ்கூலுக்கும், ஆபீஸுக்கும் ஓடுவார்கள். சபரிநாதன் இல்லாவிட்டால்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.