This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/02/12/.

காமமே காதலாய் - சே.கிருஷ்ணமூர்த்தி

 நிறை ததும்பும் விழி, ஈரம் உலரா கருங்கூந்தல், இதழும், இதழின் வரிகளும், அவளின் அழகை நெடு நேரமாய் கண்ணாடி முன் நின்று அவளே ரசித்துக் கொண்டிருந்தாள், மஞ்சள் நீராடலில் நனைந்திருந்த அவள் உடல் ஓர் சிற்பம் போல் அந்த கண்ணாடியில் பிரதிபலித்தது, மேலாடை அணியும் முன் அரும்பாத மீசையை முறுக்கி பார்க்கும் இளைஞனைப் போல், தனது பருக்காத மார்பினை மெல்ல வருடி பார்த்துக் கொண்டாள். ஏதோ பெண்மையின் முழுமையை அடைந்ததை போல் அவளுள் ஓர் இன்பக்களிப்பு, ஆடைகளை

.


Read More


மகனின் பொம்மை வாழ்க்கை - நாங்குநேரி வாசஸ்ரீ

 வாசலில் கவுசல்யா தன் மகனின் வருகைக்காகக் காத்திருந்தாள். பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கிய ஆதித்யா வீட்டினுள் நுழையுமுன்பே தன் புத்தகப் பையிலிருந்த ஸ்கூல் டைரியை எடுத்து நீட்டினான். அம்மா என் டீச்சர் என்னை கவுன்சிலர் சைல்ட் னு சொன்னாங்க தெரியுமா, ஏதோ கவுரவப் பட்டம் கிடைத்தது போல் ஓடும் மகனைப் பார்த்தாள் கவுசல்யா. கொஞ்ச நாளாகவே அவன் பள்ளியிலிருந்து ஏகப்பட்ட புகார்கள். பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் கூட அவன் வகுப்பு ஆசிரியை உங்கள் மகன் பாடம் எடுக்கும்போது பென்சில்

.


Read More


குழந்தை - ஜெ.சங்கரன்

 அத்தியாயம் 21 | அத்தியாயம் 22 அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை.ஜோதிக்கு கல்யாண நாள்.ஜோதி காலையிலேயே எழுந்து விட்டாள் அவள் குளித்து விட்டு ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு தான் வாங்கி வந்த புது கல்யாண ‘டிரஸ்ஸை’ ராணீக்குக் காட்டினாள்.மிக அழகாக இருந்தது அந்த’டிரஸ்.’பிறகு “ராணீ நான் போய் வறேன்.எனக்கு சமயம் கிடைக்கும் போது நான் உன்னையும் ராஜ்ஜையும் இங்கே வந்து பாக்கறேன்.நான் நல்ல ‘செட்டில்’ ஆனதும் உன்னையும் ராஜ்ஜையும் நான் வந்து என் வூட்டுக்கு அழைச்சுப் போறேன்

.


Read More


144 - விசாலம் முரளிதரன்

 “அம்மா! அப்பா வந்துட்டாரு” கத்திக் கொண்டே வாசலுக்கு ஓடினாள் முருகன். வாயிலைத் தாண்டி நின்று காலணிகளைக் கழற்ற முயற்சித்த கேசவன் தோளில் தாவினான். “இருடா ஷூவ கழட்ட விடு”, சிரித்தபடி தன் முயற்சியை கைவிட்டு முருகனைத் தூக்கி தோளில் தூக்கி தட்டாமாலை சுற்றினான். சத்தம் கேட்டு பக்கத்து போர்ஷன் அன்னம்மா பாட்டி வெளியே வந்தாள். “என்னப்பா கேசவா, மாசமா இருக்குற பொண்ணு, ரெண்டுகெட்டான் வயசுல புள்ள, ரெண்டு பேரையும் விட்டு இப்படி நாள் கணக்கா வேலை வேலைனு

.


Read More


இருவிதைகள் - அடியான்

 இன்று என்னைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ள தேவையில்லாத அளவிற்கு நான் மிகப்பெரும் பதவியில் இருக்கிறேன். என் அதிகாரத்திற்குட்பட்ட இந்த மாவட்டத்தில் நான் நினைத்ததை சாதிக்க முடியும், எதையும் தடுக்க முடியும், எதையும் நிறுவ முடியும், எதையும் பொய்ப்பிக்க முடியும், எதையும் உயர்த்த முடியும். என்னைக்காண நாள்தோறும் நூற்றுக்கணக்கில் மக்கள் வந்து தான் போகிறார்கள், முடிந்தவரை அவர்கள் கோரிக்கைகளை, புகார்களை ஏற்கிறேன், அதில் அநேகமானவை வெறும் காகிதமாகவே கிடப்பில் போய் விடுகிறது என்பது தான் உண்மை. அதில் பெரும்பான்மையானவை கீழ்த்தட்டுமக்களின் கோரிக்கைகளாக

.


Read More


உயிர்ப் பிச்சை… - மு.சிவலிங்கம்

 ‘ரதி..! ரொம்ப தூர பயணமா…?” ‘இல்ல மாமா…! ஆஸ்பத்திரிக்குத்தான் போறேன்..!” ‘தனியா போகாமே வீட்ல யாரையும் கூட்டிக்கிட்டுப் போகலாந்தானே..?” “தம்பி ஸ்கூலுக்குப் போயிட்டான்.. அம்மா வீட்டு வேல செய்யணும்.. அப்பாவுக்கு கஷ்டம் குடுக்க விருப்பமில்ல…” அவளின் வருத்தம் நிறைந்த முகத்தில் சிறு புன்னகை இழையோடியது. ‘எவ்வளவு அழகான பொண்ணு…? எப்படி இருந்த பொண்ணு..? தக்காளிப் பழம் மாதிரி இருந்தவளாச்சே..! இப்ப… கருத்துப் போயி.. இந்த வயசுல ஒடம்பு தளர்ந்து… ச்சே… கடவுள் இப்பிடி சோதிக்கலாமா…?” சீரங்கன் மாமா

.


Read More


கண்ணில் தெரியும் ஓவியங்கள்… - சந்திரா இரவீந்திரன்

 வாயிற் கதவுகளற்ற ஒரு படியில் அப்போது அவள் நின்றிருந்தாள். அது Under groundற்குப் பக்கத்தில் இருந்தது. வர்ணம் தேய்ந்த வெளிச்சுவரொன்றில் ஒட்டப்பட்டிருந்த, யாரையும் கவர முடியாததுபோல் தோன்றிய ஒரு ஓவியத்தை அவள் பார்த்தபடி நின்றிருந்தாள். அழகையும் அபூர்வங்களையும் நடந்தபடியே ரசித்துச் செல்வதென்பது இந்த அவசர நாட்டின் பொது நடைமுறை! ஆனாலும் எத்தகைய வேளைகளிலும் சில நிமிடங்களாவது தரித்து நின்று, ரசித்து விட்டுச் செல்லவே அவள் மனத்தில் ஆர்வமிருக்கும்! ஓவியத்தினூடாய் நெஞ்சிற்குள் ரசனையற்ற கேள்விகள் எழுந்து கொண்டன. அடுத்த

.


Read More


குடியானவனின் யோசனை - ஸ்ரீ.தாமோதரன்

 முன்னொரு காலத்தில் ஒரு சிறு வயது குடியானவன் வாழ்ந்து வந்தான். அவன் கொஞ்சம் புத்திசாலி. அவன் வீட்டில் ஒரு பசு மாட்டை வளர்த்து வந்தான். அந்த பசு மாட்டில் பால் கறந்து வீடு வீடாய் சென்று பால் ஊற்றி தானியங்களை அதற்கு ஈடாக பெற்றுக்கொள்வான். சேகரித்த தானியங்களை கொண்டு போய் நகை கடைகளில் கொடுத்து நகைகளாக பெற்றுக்கொள்வான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை சேகா¢த்து ஒரு மண் சட்டிக்குள் வைத்து ஒரு இடத்தில் புதைத்து வைத்து விடுவான்.புதைத்து

.


Read More


வேர்கள் - காரை ஆடலரசன்

 இருபது வருடங்களாக பாரீசில் வேலை பார்க்கும் எனது மைத்துனன் வருடா வருடம் மகர ஜோதிக்கு ஐயப்பன் மலைக்கு வருவான். வரும்போது கூடவே துணைக்கு ஒரு ஆளையும் இழுத்து வருவான். இரண்டு வருடங்களுக்கு முன் இரண்டு வெள்ளைக்காரர்களை அழைத்து வந்தான். சென்ற வரும் ஒரு இலங்கைக்காரனை அழைத்து வந்தான். இந்த வருடமும் யாரோ ஒரு ஆளைக் கூட்டி வருவதாகத் தொலை பேசியில் சொன்னான். யார், என்ன, விபரம் தெரியவில்லை. பாரீசிலேயே மாலை போட்டு, நாற்பது நாட்கள் விரதமிருந்து, நேராக

.


Read More


மனைவியே குடும்பம் - எஸ்.கண்ணன்

 முதலிரவு அறை. கட்டிலில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் அமுதா. கதவு திறக்கப்பட சட்டென்று கண்களை துடைத்துக் கொண்டாள். அவளுடைய கணவன் பெருமாள் அருகில் வந்து அமர்ந்தான். “இன்னும் அழுதுகிட்டுதான் இருக்கியா அமுதா? என் மேல உனக்கு இன்னமும் நம்பிக்கை வரல… அப்படித்தானே?” “அப்படீல்லாம் இல்லீங்க மாமா…” பெருமாள் அவள் கண்ணீரைத் துடைத்தான். பின்பு ஆதரவாய் அவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். “இங்க இருக்கிற யாருக்குமே என்னைய பிடிக்கலையே மாமா… அப்புறம் எதுக்காக எல்லாரையும் எதுத்துக்கிட்டு எனக்கு தாலியை கட்டினீங்க?”

.


Read More


நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.