This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/02/09/.

மார்ஸ் ட்ரிப் - அடியான்

 2061 ஆம் ஆண்டு பிறக்க இன்னும் ஒரு மணி நேரமே இருந்தது, சென்னை நகரெங்கும் விழாக்கோலம் பூண்டிருந்தது. வீதியோரம் ஆடவர்களும், இளம் நங்கைகளும் மகிழ்ச்சி உலா சென்று கொண்டிருந்தனர். மெரினா கடற்கரை சாலையில் சில இளைஞர்கள் அதி நவீன 400 cc மோட்டார் பைக்குகளில் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தனர். முதன்மை சாலைக்கு மாற்றாக புதிதாக அமைக்கப் பட்ட பாலம் பொது மக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்திருந்தது. ஆங்காங்கே உயர் நவீன மருத்துவ வசதிகள் கொண்ட ஆம்புலன்சுகளும்,

.


Read More


புதிய வெளிச்சம் தெரிகிறது - குரு அரவிந்தன்

 தூக்கம் இல்லாமல் போன இரவுகளில் இதுவும் ஒன்றாக இருந்தது. திடுக்கிட்டு எழுந்த போதுதான் அதிகாலையில் சற்று நேரம் அயர்ந்து தூங்கியிருந்தது தெரிந்தது. என்றுமில்லாதவாறு அதிகாலையில் காதுக்குள் கேட்ட அந்தக் குயிலின் ‘கூக்கூ’ குரல்தான் எனது தூக்கம் கலைந்ததற்குக் காரணமாய் இருந்திருக்க வேண்டும். அந்தக் குயிலின் குரல் எனக்குள் ஒருவித புத்துணர்வை மீட்டுக் கொண்டு வந்தது போல என்னால் உணர முடிந்தது. யுத்தம் ஓய்ந்துவிட்டாக அறிவித்திருந்தார்கள். யுத்த சூழ்நிலையால் இயற்கை அழிக்கப்பட்டபோது மரங்கள் செடிகள் மட்டுமல்ல விலங்குகள் பறவைகள்

.


Read More


குழந்தை - ஜெ.சங்கரன்

 அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 ‘இவங்க ரெண்டு பேரும் ஏதோ பேசிக்கிட்டு இருக்காங்களே ஒழிய கமலாவும் ‘எங்க வூட்டு வேலை செய்யறயான்னு’ கேக்கலேயே,ராணீயும் ‘நான் பழையபடி இந்த வூட்லே வேலை செய்யட்டுமா ங்கன்னும் ‘கேக்கலேயே. குழந்தை ‘பிஸ்கெட்’ சாப்பிட்டு கிட்டு இருக்கு.கொஞ்சம் நேரம் ஆனா கமலாவுக்கு முதுவலி வந்தா அவள் படுக்கப் போய் விடுவா.’நான் வரேணுங்க’ ன்னு ராணீ சொல்லிட்டு குழந்தையை எடுத்துக் கிட்டு போயிட்டாள்ன்னா நாம என்ன செய்யறது’ என்ற கவலை வந்து விட்டது நடராஜனுக்கு. அவன்

.


Read More


பச்சை மனிதன் - வா.மு.கோமு

 ஒரு மரத்தைக் கடந்து போகும் போது உனக்குள்ளேயே ஹலோ சொல்லிக் கொள்ளத் தவறாதே. அதைக் கரிசனத்தோடு பார்க்காமல் போகாதே. இதில் செலவு ஏதுமில்லை. நீ மரத்தை சந்தோசப் படுத்தினால் மரம் உன்னை சந்தோசப்படுத்தும். மரத்தை வசப்படுத்துவது அவ்வளவு சுலபலமல்ல. மனிதர்கள் மிக மோசமாகத்தான் மரத்தை நடத்தி வந்திருக்கிறார்கள். அவற்றிற்கு மனிதனைக் கண்டாலே பயமாகப் போய்விட்டது. நீ நெருங்கினால் உலகத்திலேயே அபாயமான ஜந்து இவன் தான் என எண்ணுகிறது. ஒரு மரத்துப் பக்கம் போ. மரத்தோடு பேசு. மரத்தை

.


Read More


நகர்வு - மதியழகன் முனியாண்டி

 பிபிஆர் பிளட்சின் 15-வது மாடியில் உள்ள 10-ம் நம்பர் வீட்டில் ஒரே சத்தமும் சண்டையுமாக இருந்தது. வீட்டின் உள்ளே இருந்து ஆண் குரலில் ஒருவன் பலமாக கத்திக் கொண்டிருந்தான். சண்டை நடந்துக் கொண்டிருக்கும் வாசற்படியை மலாய்கார குடும்பம் ஒன்று அமைதியாக கடந்து போனது. கீழ் மாடியில் குடியிருக்கும் சாந்தி சத்தம் கேட்டு வேகவேகமாக படியேறி மேலே வந்தாள். மனிதனை சுற்றி நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் ஒரு பரிணாம வளர்ச்சி உண்டு. மலேசிய தமிழர்கள் சுமார் 250 வருடங்களுக்கு

.


Read More


கேட்டிருப்பாயோ.. காற்றே..! - மு.சிவலிங்கம்

 இவ்வளவு காலமும் சிங்களச் சண்டியர்கள்தான் வீடுகளுக்கு நெருப்பு வைத்து¸ தமிழர்களை விரட்டித் துரத்திய சம்பவங்களைப் பார்க்க முடிந்தது.. இப்போது… தமிழ்ச் சண்டியர்கள் தமிழர்களின் வீடுகளுக்கு நெருப்புவைத்து¸ அடித்துத் துரத்துவதைப் பார்த்த வேலாயுதம் மாஸ்டரின் கண்கள் நம்ப மறுத்தன.. அச் சம்பவம் கனவில் நடப்பதாக நினைத்துக் கொண்டிருந்த அவரின் சட்டையைப் பிடித்து ஒருவன் இழுத்துத் தள்ளும்போதுதான் சுய உணர்வு வந்தது…! நடப்பது உண்மை சம்பவமே என்று.. விழுந்தவர் எழுந்து மெதுவாக நடந்தார்…. சக தமிழனிடம் அப்படி அடி வாங்குவதை

.


Read More


யாசகம் - சந்திரா இரவீந்திரன்

 காற்று, மழை, மேகம், கடல், மலை, நதி, வயல் . . .என்று அழகான தரிசனங்களைச் சுமந்தபடி மென்மை யான மனிதமனங்களுடன் பின்னிப்பிணைந்து, நனைந்து நாளெல்லாம் முக்குளித்து எழுதுகின்றேன்! ஆயினும், திரும்பத் திரும்ப ஒன்றுவிடாமல் என்னால் சரியாகப் புரிய வைக்க முடியவில்லை! “வா, என்னோடு சேர்ந்து நின்று சில உயரங்களை, சில உன்னதங்களைத் தரிசித்துப் பார்” என்று சொல்கிற தைரியம் இப்போ என்னிடமிருந்து தப்பித்துப்போக விடுகிறது! எப்பவும் இரண்டு கண்கள் நெருப்புத்துகள் களை என்னில் படரவிட்டபடி நகருகின்றன!

.


Read More


காடுகளை பாதுகாப்போம் - ஸ்ரீ.தாமோதரன்

 அது ஒரு அடர்ந்த காடு, அந்த காட்டிலே எல்லா மிருகங்களும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தன. புலி, சிங்கம் போன்றவைகள் கூட அதனதன் இடங்களில் வாழ்ந்து வந்து கொண்டிருந்தன. கொஞ்ச நாட்களாக மனிதர்கள் கூட்டம் கூட்டமாக காட்டுக்குள் வருவதும் போவதுமாக இருந்து கொண்டிருந்தனர். இதனால் அமைதியாக இருந்த காடு இவர்களின் வருகையால் நிம்மதி இழந்து தவித்துக்கொண்டிருந்தது. இது இப்படி இருக்க ஒவ்வொரு விலங்குகள் கூட்டத்திலும், நிறைய விலங்குகள் காணாமல் போகத்தொடங்கின. மான் கூட்டத்திலும்,வரிக்குதிரை கூட்டத்திலும்,ஏன் யானைகள் கூட சத்தமில்லாமல்

.


Read More


மண்ணில் சில மனிதம்ங்கள்…..! - காரை ஆடலரசன்

 அறுபத்திரண்டு வயதான ஆறுமுகம் ஓய்வு பெற்ற பேராசிரியர். பெற்ற மகன்கள் இருவரும் சென்னை, டில்லியில் மனைவி மக்களோடு நல்ல நிலையில் இருக்க… இவர் மட்டும் மனைவியோடு…சொந்த ஊரான கும்பகோணம் பக்கத்தில் உள்ள கொட்டையூரில் வாழ்க்கை. நல்ல மனிதர். அவர் தினம் சுயமாய் முகச் சவரம் செய்து கொண்டாலும்… முடி வெட்டுதல் என்பது அவருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயமாகிப் போன விசயம். அதில் ஒன்றிரண்டு நாட்கள் தாண்டக் கூடாது. அப்படித் தாண்டினால்…மனம் தூங்கவிடாது. ‘ முடிவெட்டிக்

.

Read More


அப்பா அப்பாதான் - எஸ்.கண்ணன்

 “அம்மா, ரொம்ப வெயிலா இருக்கு. இந்தப் பதை பதைக்கிற வெயில்ல உன்னால இப்ப பாங்க் வர முடியுமாம்மா?” எழுபது வயது அம்மாவை அக்கறையோடு கேட்டார் பரந்தாமன். “பரவாயில்லைடா… நான் வரேன். சீக்கிரமா பாங்க் வேலையை முடிச்சுட்டு ஆத்துக்கு திரும்பி வந்துடலாம்…” “மறக்காம லாக்கர் கீயை எடுத்துக்கோ.. அப்பாக்கும் உனக்கும் பாங்க் லாக்கர் ஜாயின்ட் அக்கவுண்ட்ல இருக்கு….” அம்மா எடுத்துக் கொண்டதும், ஒரு ஆட்டோ பிடித்து இருவரும் கிளம்பினர். பரந்தாமன் பேங்க் மானேஜரைப் பார்த்து அவரிடம், தன்னுடைய அப்பா

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.