This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/02/05/.

அவளா சொன்னாள்? - குரு அரவிந்தன்

 அவள் செல்லமாய்ச் சிணுங்கினாள். “என்ன இது நிச்சயதார்த்தம் முடிஞ்சு இரண்டு நாட்கூட ஆகவில்லை இவ்வளவு சீக்கிரம் நீங்க கிளம்பணுமா?” என்றாள். “உன் ஆதங்கம் எனக்குப் புரியுது சுபா, நான் என்ன செய்யட்டும் டூபாய் உத்தியோகம் என்றாலே இப்படித்தான்! எந்த நேரமும் வரச்சொல்லி அழைப்பு வரலாம், போனால் திரும்பிவர ஒரு வருடமோ அல்லது அதற்கும் மேலேயோ?” “என்ன நீங்க? ‘டூபாய் மாப்பிள்ளை’ என்று நொடிக்கொரு தடவை எங்க வீட்டிலே சொல்லிக் காட்டிக் கொண்டே இருக்கிறாங்க, எனக்கு இதைக் கேட்க

.


Read More


கடைசி கடிதம் - மதியழகன் முனியாண்டி

 22 திசம்பர் 1902 என் அன்புள்ள மாமன் மகள் மரகதத்திற்கு ஆயிரம் முத்தங்களோடு உன் மாமன் சுப்ரமணியம் எழுதிக் கொள்வது. நான் இங்கு நலம். உன் நலம் அறிய ஆவல். இப்போது எல்லாம் உன் நினைவுகள் என்னை அதிகம் வாட்டுகிறது. சீக்கிரமே உன்னை கல்யாணம் செய்துக் கொண்டு குடும்ப வாழ்கை தொடங்க வேண்டும் என்று அதிக ஆசையாக உள்ளது. ஆனால் இங்கு என்னுடைய உத்தியோகமும் வருமானமும் நிரந்திரமில்லாமல் இருக்கிறது. இங்கு இருக்கும் நிலைமையை பார்த்தால்; எல்லாவற்றையும் உதறிவிட்டு

.


Read More


குழந்தை - ஜெ.சங்கரன்

 அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 “நான் சந்தேகப் பட்டது சரியா போச்சுங்க.அந்த வேலைக்காரி அம்மா தான் திருடிக்கிட்டுபோய் இருப்பாங்க. அவங்களுக்கு பதினெட்டு வயசிலும்,இருபது வயசிலும் ரெண்டு பையன்ங்க இருக்காங்கன்னு அந்த அம்மா எனக்கு வூட்டு வேலைக்கு வந்த அன்னைக்கு சொன்னாங்க.வரட்டும் இன்னைக்கு வேலை க்கு.நான் அந்த வேலைகாரி அம்மா கிட்டே கேக்கப் போறேங்க” என்று கருவினாள் கமலா. அடுத்த நாளே நடராஜன் போஸ்ட் ஆபீஸ் போய் ராணீக்கு ஆறு நூறு ரூபாய் மணி ஆர்டர் பண்ணினான். அடுத்த நாள்

.


Read More


சில நொடியில்… - காசாங்காடு வீ.காசிநாதன்

 கதிரவன் தன்பயணத்தை இனிதே தொடங்கி வெண் கதிர்களால் அப்பகுதியை வெப்பப் படுத்திக் கொண்டிருந்தான். காலை மணி 10. சிங்கப்பூரில் தனியார் குடியிருப்பு பேட்டைகளில் அழகாக வடிவமைக்கப்பட்ட நீச்சல் குளம் இருப்பது அவற்றின் சிறப்புகளில் ஒன்று. தனது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தின் அருகில் மஞ்சுளா சாய்வு நாற்காலியில் ஒய்யாரமாய் படுத்திருந்தாள். காதில் ஒலிப்பானை மாட்டியபடி இனம்புரியாத இசை ஒன்றைத் தனது கைபேசியிலிருந்து ரசித்துப் புன்னகைத்தாள். அவளது உடல் சாய்வு நாற்காலியை முழுதும் ஆக்கிரமித்து இருந்தது.

.


Read More


சொல்லாதே யாரும் கேட்டால் - ராம் ஸ்ரீதர்

 விவேக் குமார் காலையில் கண் விழித்தபோது இன்னும் அரை மணிநேரத்தில் தான் கைது செய்யப்படப் போகிறோம் என்று நிச்சயமாக நினைக்கவில்லை. காஃபி குடித்தவாறே அன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையை மேய்ந்து கொண்டிருந்த போது வாசல் மணி அழைத்து. கதவைத்திறந்து, “எஸ்” என்றார் கேள்விக்குறியுடன். உள்ளே இருவர் நுழைந்தனர்; ஒரு ஆண் (சுமார் 50 வயதிருக்கலாம்), ஒரு பெண்மணி (சுமார் 40 வயதிருக்கலாம்). விவேக் குமாரிடம் எதுவுமே கேட்காமல் சுவாதீனமாக இருவரும் சோஃபாவில் அமர்ந்தனர். விவேக் குமாருக்குப்

.


Read More


பேப்பர் பிரஜைகள்… - மு.சிவலிங்கம்

 (“மலைகளின் மக்கள்” சிறுகதை தொகுப்பில் இருந்து) இன்றைய இரவு விடிந்தால்… நாளை சுப்பையா கொழும்புக்குப் பயணம்…! இரவு முழுக்க பார்வதியம்மாள் தூங்கவேயில்லை. “நான் வளத்த செல்லக்கண்ணுக்கு உத்தியோகம் கெடச்சிருக்கு கொழும்பு தொறை முகத்துல கிளாக்கர் வேல… இந்தத் தோட்டத்துக் கணக்கப்புள்ள ஐயாவை… நானும் பாத்துக்கிறேன் என் மவன் படிக்கிறதப் பாத்து கேலி பண்ணினாரே..? அவருக்கிட்டேயே போயி எம்மவனை பயணஞ் சொல்ல வைக்கிறேன்.” இப்படி அந்த தாய் உள்ளம் மகனுக்கு உத்தியோகம் கிடைத்து விட்ட பெருமையில் “வீம்பு” பேசிக்

.


Read More


வல்லை வெளி தாண்டி… - சந்திரா இரவீந்திரன்

 காற்று வெளியூடாய், கணவருடன் மோட்டார் சைக்கிளில் ‘டபிள்’ போவது எவ்வளவு சுகமான அனுபவம்! திருமணமான புதிதில் தொல்லைகளேது மற்ற சுதந்திர நினைவுகளோடு சோடியாய்ச் சுற்றித் திரியும் சுகம் எத்தனை இனிமையானது?! அக்காற்றுவெளி ‘வல்லை வெளி’யாய் இருக்க வேண்டும்! அந்த நேரம் வானில் ‘ஹெலி’களே இல்லாத, மழையும் தூறாத, கோடைக்காலத்து மாலை நேரமாய் இருக்க வேண்டும்! வீசிவரும் காற்று, காதோடு கதை சொன்னவாறே கூந்தலையும் சேலையையும் வருடித் தவிக்க வைக்க வேண்டும்! சின்ன புள்ளினங்கள் மேலும் கீழுமாய்ச் சிறகடித்துப்

.


Read More


கண்டெடுத்த கடிகாரம் - ஸ்ரீ.தாமோதரன்

 மேட்டுப்பாளையம் என்னும் சிற்றூரில் கன்னையன் என்பவன் வாழ்ந்து வந்தான் அவனுக்கு சுகுமாரன்,வளர்மதி, என இரு குழந்தைகள். இருவரும் முறையே ஏழாவது வகுப்பும், மூன்றாவது வகுப்பும்,அந்த ஊரில் உள்ள அரசு பள்ளியிலேயே படித்து வந்தார்கள்.அவர்கள் வசித்து வந்த ஊர் பெரிய நகரமும் இல்லாமல் சிறிய கிராமமும் இல்லாமல் நடு நிலையாக இருந்தது. அங்குள்ள பள்ளியில் எட்டாவது வகுப்பு வரை இருந்தது. சுகுமாரன் ஒரளவு நன்றாக படிப்பான். வளர்மதியும் நன்றாக படிப்பவள். இருந்தாலும் கன்னையன் ஒரு ஏழை. அவன் அங்குள்ள

.


Read More


வலி..! - காரை ஆடலரசன்

 எதிரில் வந்த என்னைக் கவனிக்காமல் தெரு திருப்பத்தில் திரும்பி ஐம்பது மீட்டர் தூரத்தில் உள்ள வீட்டின் முன் வண்டியை நிறுத்தி படியேறும் ரமேசைப் பார்க்க எனக்குள் பரவசம். நான் இவனைப் பிஞ்சிலேயேத் தூக்கி கொஞ்சிய பக்கத்துவீட்டுப் பிள்ளை. பத்து வயதுவரை என் மடியில் படுத்து வளர்ந்தவன். இவன் தாய் வயிற்றில் இருக்கும்போது அப்பா ஆளவந்தான் அருகில் இல்லை. வெளிநாட்டு வேலைக்காரன். மனைவியைக் கருவாக்கி விட்டு விமானம் ஏறியவன் ஐந்து வருடங்களுக்குப் பிறகு வந்துதான் பிறந்த மகன் முகத்தை

.


Read More


தகாத உறவுகள் - எஸ்.கண்ணன்

 கிரஹப்பிரவேசம் முடிந்து சென்னை நங்கநல்லூரில் உள்ள புது வீட்டிற்கு குடியேறியதும் மல்லிகாவுக்கு அதிகமான வேலைப்பளுவால் மிகுந்த ஆயாசமாக இருந்தது. முதலில் ஒரு நல்ல வேலைக்காரியை வீட்டோடு அமைத்துக்கொள்ளத் துடித்தாள். பல பேரிடம் சொல்லி வைத்தாள். மல்லிகா ஒரு சீரியல் பைத்தியம். மாலை ஆறு மணியிலிருந்து தொடர்ந்து சீரியல்களில் லயிக்கும் மல்லிகாவுக்கு, புது வீட்டில் ஒரு வேலைக்காரி அமையும் வரை எல்லா வேலைகளையும் அவளே செய்வது கஷ்டமாக இருந்தது. நான்கு படுக்கையறைகள் கொண்ட அந்தப் பெரிய வீட்டில் மல்லிகா;

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.