This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/01/15/.

ஜிங்கிலி - பானுரவி

 “நாற்பது வயதில் நாய்க்குணம் நாம்தான் அறிந்து நடக்கணும்”…………பாடிக் கொண்டே வந்த பரமுவைப் பார்வையாலேயே தகித்தாள் சீத்தா. இன்னும் பத்து நாட்களில் அவளது நாற்பதாவது பிறந்தநாள் வரப்போகிறது! அதற்குத்தான் பரமுவின் அந்த அழகான வாழ்த்துப்பா! ‘ணங்’கென்று காபித் தம்ப்ளரை மேசைமீது வைத்தவளைக் குறுகுறு வென்று பார்த்தான் பரமு. ‘என்ன மேடம்? உண்மை கசக்கிறதா? இல்ல, பாட்டு பிடிக்கலயா?’……..சீத்தா பதில் பேசவில்லை. ‘ஓகே…ஓகே! கூல்கூல்….இந்தத் தடவை மஹாராணிக்கு என்ன கி:.ப்ட் வேணும்னு சொல்லு’ ‘அதல்லாம் ஒண்ணும் வேண்டாம்’…….சொல்லும்போதே, எங்கே அதைப்

.


Read More


சியாமா - ஜே.கே

 சியாமா இப்போது அவனுக்கென்று அடைக்கப்பட்டிருந்த இரண்டடி உயர விளையாட்டு வேலிக்கூட்டுக்குள் இருந்தான். தரை முழுதும் பொம்மை படங்கள் போட்ட ரப்பர் விரிப்பு. கூடு எங்கும் விளையாட்டுப்பொருட்கள். அண்ணர் எதை எடுக்க? எதை விட? என்று தெரியாமல் குழம்பினார். “சியாமா கண்ணா .. அம்மாவை இஞ்ச ஒருக்கா பாருடா” தாய்க்காரி சியாமாவின் கவனத்தை இந்தப்பக்கம் திருப்பப் பார்க்கிறாள். சியாமா கணக்கே எடுக்கவில்லை. நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அவனைப் பார்ப்பதற்கென்றே வருவார்கள். சியாமா உறவு வட்டாரத்தில் அவ்வளவு பிரபலம். பொதுவாக ஈழத்தில்

.


Read More


குழந்தை - ஜெ.சங்கரன்

 அத்தியாயம் -14 | அத்தியாயம்-15 ஜோதி லக்ஷ்மணைப் பார்த்து சேகரைப் பதி விசாரித்தாள்.அவர் நிதானமாக “என்ன சொல்றது ஜோதி.நானும் வாரம் தவறாம அந்த வக்கீலைக் கேட்டுக் கிட்டு தான் இருக்கேன்.இது வரைக்கும் சேகரைப் பிடிச்ச போலீசார் அவன் மேல் இன்னும் கேஸையே போடலேயாம்..அவனை வெறுமனே ஜெயிலில் அடைச்சு வச்சு இருக்காங்க” என்று சொல்லும் போது அவர் கண்களீல் நீர் கசிந்தது.“நீங்க வீணா வருத்தப் படாதீங்க.அவர் இப்படி புத்தி இல்லாம காரியம் செஞ்சா,நாம என்ன பண்ண முடியுங்க.நாம் கஷடப்

.


Read More


பாப்பாவின் இண்டர்வியூ - நாங்குநேரி வாசஸ்ரீ

 இன்னிக்கு பாப்பாவோட ஸ்கூல்ல இண்டர்வியூ நல்லா போச்சுல்ல. எனக்கு நம்பிக்க வந்துருச்சு இந்த ஸ்கூல்ல இடம் கெடைச்சிரும்னு. டேய் கைய பிடிச்சிட்டு ஒழுங்கா நடடா. காலுக்கு குறுக்க குறுக்க ஏன் வர. ஏதோ சொல்ல வரும் ஏழு வயது மகன் அருணை மடக்கி விரட்டிக்கொண்டே பாப்பா பாவம் டயர்டாகி தோள்லயே தூங்கிருச்சு. இன்னிக்கு ஸ்கூல்ல நல்லா கோஆபரேட் பண்ணிச்சு. வீட்டுக்கு போனவுடனே அது கேட்ட ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துற வேண்டியதுதான். ஒரு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போயிடலாம்

.


Read More


யாழ்ப்பாண நினைவுகளில்…- ஸ்ரீராம் விக்னேஷ்

 1973ம், 1974ம் வருட, 9ம்,10ம் வகுப்புகள் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் – நான் தங்கியிருந்த “யாழ்.மத்திய கல்லூரி”யின் விடுதியும், அதாவது “ஹாஸ்ட” லும் ஊரோடொத்து உறங்கிக்கொண்டிருந்தது. மாடியிலுள்ள மண்டபத்தில்தான் எனது பெட்டி படுக்கைகளும், கட்டிலும் இருந்தன. நல்ல சொகுசான கட்டிலாக இருந்தும், இன்னும் தூக்கமே வரவில்லை. எங்கள் விடுதிக்குத் தெற்கேயிருந்த, முதலாம் குறுக்குத்தெருப் பக்கமாக எங்கோ ஒரு மூலையில் நாய்கள் குரைத்துச் சத்தமிட்டுக்கொண்டிருந்தன. தலையணைக்கு கீழே வைத்திருந்த ஒளிப்பேழையை, அதாவது “ டார்ச்லைட்”டை எடுத்து, பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த

.


Read More


அற்றைக்கூலி - மனோகரன் கிருஷ்ணன்

 “வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்துட்டு “காண்ட மிருகமினு” ஏன் பெயர் வச்சுகிறோமே தெரியலை.” கோவம் மண்டைக்கு மேல் ஏறி நின்றது. தன் மகனை நொந்துக்கொண்டார் கோபால். பிள்ளைகள் என்ற பெயரில் பெரும் “தொல்லை” களை பெற்றுவிட்டோமா? “இந்த காலத்து பிள்ளைங்கள நினைச்சா மனசு பதறுது. இதுல அப்பன குறை சொல்றதா இல்லை ஆத்தாளை குறை சொல்றதா? எவ்வளவு சொன்னாலும் நம்ப காதுல பூவ சுத்திடுறானுங்க. முட்டாப்பசங்க” வானத்தை அண்ணாந்து பார்த்து,வாயை கொப்பளித்து துப்பினார். “வேல வெட்டி இல்லாம

.


Read More


மெளனமான துரோகங்கள் - ஸ்ரீ.தாமோதரன்

 சத்தமில்லாமல் சென்ற குண்டு,முதுகை காட்டி நின்று கொண்டிருந்தவனின் கழுத்து பகுதியை துளைத்து வெளியே சென்றது. மடக்..என கழுத்து மடங்க அதனை தொடர்ந்தவாறு கால் மடங்கி உடல் கீழே விழுந்து உருண்டு, தொம்..என்ற சத்தத்துடன் அந்த பள்ளத்தில் விழுந்தது.குண்டு புறப்பட்ட இடத்திலிருந்த மூவர் அருகில் நின்று கொண்டிருந்த கார் கதவை திறந்து தங்களை திணித்துக்கொண்ட பின் சர் என சீறிக்கொண்டு கிளம்பியது. சந்துரு, ஏன் இந்த டீலிங்குக்கு ஒத்துக்க மாட்டேங்கறே?கேட்ட ராஜேஸிடம் வேண்டாம் ராஜேஸ், தயவு செய்து இந்த

.


Read More


புகையின் பின் - காரைநகரான்

 பக்கத்தில் இருந்த அமுதனின் கையை வினோதன் சுரண்டினான். வேலை முடித்துப் போகும் களைப்பில் அந்தரித்த அமுதனுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. இன்று மத்தியானம் அவன் சாப்பிட நேரம் கிடைக்கவில்லை. ஒரு நாளும் மறக்காத, மீறாத செயலை இன்று அமுதன் மீறிவிட்டான். அது அவனுக்குத் தன் மீதே அளவு கடந்த கோபத்தைத் தந்தது. கோபத்திற் குமைந்தவனை வினோதன் சுரண்டினான். அந்தச் சுரண்டல் ரௌத்திரமாய்ப் பற்றிக் கொண்டது. எரிச்சலோடு ‘என்னடா?’ என்ற வண்ணம் வெறுப்பும் கோபமும் இறுகிப் பிணைந்த

.


Read More


ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!! - காரை ஆடலரசன்

 ஆம்பளைங்களா ! வயசாகிப் போனாலும் வாயை வைச்சிக்கிட்டு சும்மா இருங்க. மீறினா அம்பேல், அம்புட்டுதான். என் இடத்துக்கு நீங்க வந்துடுவீங்க. அனுபவப்பட்டவன் சொல்றேன் கேட்டுக்கோங்க. நாமதான் எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சி 80 வயசாகி… இன்னையோ நாளையோன்னு பாயும் தலையணையுமாய் படுத்த படுக்கையாய் இருக்கோமே, போற போக்கிலேயாவது மனசுல உள்ள பாரத்தை இறக்கி வைச்சுப் போனா நமக்கும் சுமை இறக்கினத் திருப்தி. மனைவியிடமும் உண்மையைச் சொன்ன நிம்மதி. இத்தினி வயசுல இவ என்ன தாண்டி தோண்டியில விழுந்துடப்போறாள். அப்படி

.


Read More


காதல் மழை - எஸ்.கண்ணன்

 அய்யம்புழா, கேரளா. கொச்சிக்கு அருகில் இருக்கும் செழிப்பான மிகச் சிறிய ஊர். அய்யம்புழாவின் மிகப்பெரிய பணக்காரர் பிஜூ குரியன். செல்வாக்கானவர். நிறைய நில புலன்கள்; கேரளாவின் பல பகுதிகளில் ஏலக்காய் எஸ்டேட்டுகள் என செல்வத்தில் கொழிப்பவர். அய்யம்புழாவில் இரண்டு ஏக்கரில் தன் வீட்டுத் தோட்டத்தின் நடுவே ஒரு பெரிய வீட்டில் குடியிருந்தார். வீட்டின் முன் எப்போதும் நான்கு உயர்ந்த வகைக் கார்கள் பளபளவென டிரைவர்களுடன் தயார் நிலையில் இருக்கும். அவருக்கு ஒரே மகள் ரெஜினா. இருபத்திநான்கு வயது.

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.