This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2018/12/31/.

சாதலும் புதுவதன்று - நவஜோதி ஜோகரட்னம்

  அந்த விடியற்பொழுதில் ஒலித்த தொலைபேசியின் அறிவிப்பில் வசந்தி விழித்துக்கொண்டதும், அந்தத் தொலைபேசி சுமந்து வந்த செய்தி அதிர்ச்சியானதாகவும் ஆனால், அதே சமயம் ஓரளவு எதிர்பார்த்ததாகவும் இருந்தது. கொழும்பில் வசந்தியின் கணவர் மரணித்த செய்தியை அவரைப் பராமரித்து வந்த லக்சுமி கூறியபோது வசந்தி துணுக்குற்றிருந்தாள். லண்டனில் தானும் கொழும்பில் தன் கணவன் வசந்தனுமாக காடாறு மாதம் நாடாறு மாதம் என்பதுபோல் வாழ்க்கை கழிந்துபோய்விட்டதை அவள் துயரோடு நினைவு கூர்ந்தாள். இந்த ஞாபகம் கசப்பான மூட்டைதானா? இனிய ஞாபகங்கள்

.


Read More


நிலம் விற்பனைக்கு அல்ல - ஸ்ரீ.தாமோதரன்

 கணபதியப்பன் ஒரு எளிமையான விவசாயி, தன்னைப்பற்றி அதிகம் அல்ட்டிக்கொள்ள மாட்டார்.அதேபோல்தான் அவர் மனைவியும், இவர்கள் உண்டு விவசாயம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.ஆனால் இப்பொழுது கணபதியப்பன் அமைதி இழந்து தவித்துக்கொண்டிருக்கிறார், அவரது பிள்ளைகளால் கோடி கணக்கில் பணம் அவரது நிலத்துக்கு கிடைக்கும் என சொல்லப்பட்டிருந்தது. அதனால் இது வரை விவசாய் சிந்தனைகளுடனே வாழ்ந்து வந்தவர் மனம், கிடைக்கப்போகும் பெரும் பணத்துக்கு அடிபணிய வற்புறுத்திக்கொண்டிருந்தது. அவ்வப்பொழுது மாறுபட்ட மனம் மட்டும் பரம்பரை சொத்தை கேவலம் வாழப்போகும் கொஞ்ச நாட்களுக்காக

.


Read More


குழந்தை - ஜெ.சங்கரன்

 அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 மெல்ல கமலாவின்அம்மா கமலாவைப் பாத்து “ கமலா, உனக்கும், மாப்பிள்ளைக்கும் வயசாகி கிட்டு போவுது,சீக்கிரம் ஒரு குழந்தையைப் பெத்துக் கோங்க” என்று சாடை மாடையாகச் சொல்லி வந்தாள்.கமலா சிரிச்சக் கிட்டு “அதுக்கு இப்ப என்னம்மா

.


Read More


பிரம்(ம)பு நாயகம் - உஷாதீபன்

 என்ன சார்…நேற்று கூட்டத்துக்கு வரல்லே….? யார் கண்ணில் படக் கூடாது என்று பொழுது விடியும் முன்பே சற்று முன்னதாக இன்று நடைப் பயிற்சிக்குக் கிளம்பினேனோ அவரின் குரல் சுற்றிலும் சப்தங்கள் அற்ற அந்த விடிகாலை வேளையில் தெளிவாகக் காதில் விழுந்தது. இருள் அடர்ந்த அந்தப் பகுதியில் எப்படி அவர் கண்ணில் பட்டோம் என்று சற்று சந்தேகமும் வந்தது. காலை நாலரை மணிபோல் யோகப் பயிற்சிக்குச் செல்லும் வேளைகளில் அந்த இருட்டுப் பகுதியில் மாடு படுத்திருப்பதைப் பார்க்காமல் எத்தனையோ

.


Read More


ஒரு பேனா பிரபஞ்சமாகியபோது… - ஸ்ரீராம் விக்னேஷ்

 “பாருப்பா, மனுசன் அம்பது வயசாகியும்,என்னமாதிரி பறந்து பறந்து நியூஸ் கவர்பண்ராரு….ரிப்போட்டர்ன்னா இப்பிடித்தான் இருக்கணும்….” சீப் எடிட்டர் சீனிவாசன், தன் நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டதாக சப்-எடிட்டர் சாரங்கபாணி எனக்குச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்ட சம்பவம் நடந்து மூன்று மாதமாகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு நானும்,சாரங்கபாணியும் ஒன்றாகத்தான் இந்த தினசரிப் பத்திரிகையில் நிருபராகச் சேர்ந்தோம். எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கெல்லாம், ஒன்றாகவே சென்று செய்திகள் தொகுத்திருக்கின்றோம். அவரது எம்.ஏ., பட்டப்படிப்பும், எனது எஸ்.எஸ்.எல்.சி.யும் நாளடைவில் எங்கள் இருவரின் தொழில்ரீதியான அந்தஸ்தில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறதே தவிர,

.


Read More


சிலந்தி வலை தட்டான்கள்…- விமலன்

 அந்த நேரத்தில் அவளை அங்கு வைத்துப பார்ப்போமென எதிர்பார்த்திருக்கவில்லைதான். மென் பனி பொழிந்த முன் மாலைப்பொழுது, இன்று பனியின் தாக்கம் சற்று கூடுதலாகவே தெரிந்தது, அழுத்திய உடல் சோர்வை விடவும் பசியும்,ஒண்ணுக்கும் நெருக்கிக்கொண்டு வந்தது, இதில்பசியைதாங்கிக்கொள்ளலாம்,முட்டிக்கொண்டுவருகிறஒண்ணுக்கை என்ன செய்து எங்கிட்டுக்கொண்டு போய் தள்ளுவது எனத்தெரியவில் லை, தள்ள வேண்டாம்,முறையாக கழிக்க எங்காவது ஒரு இடம் வேண்டுமே,,,? சாப்பிடவும் டீக்குடிக்கவும் ரோடு நெடுக்கவும் பிணைந்து இணைத் திருந்த கன்னிகளாய் இங்கு கடைகள் நிறைந்து இருக்கிறதுதான், ஆனால் படக்கென போய்

.


Read More


முகநூலும் அகவாழ்வும் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

 அம்மா வந்திருந்தாள்.அகமும் முகமும் மலர ஆறுமாதக் குழந்தையான என் மகனைத் தூக்கிக் கட்டிக்கொண்டு, அவனுக்கு அள்ளி அள்ளி முத்தம் கொடுத்தாள். அவளை நான் அவதானிப்பதை உணராத உலகில் அவள் எனது குழந்தையுடன்- அவளின் பேரனுடன் உறவாடிக் கொண்டிருந்தாள். அவளை இந்த நிலையிற் கண்டபோது எனக்கு நான் ஆறுமாதக் குழந்தையாகவிருக்கும்போது என்னையும் இப்படித்தான் தன்னோடிணைத்து முத்தங்களைச் சொரிந்திருப்பாள் என்று நினைப்பேன். கொழும்பிலிருக்கும் எங்களைப் பார்க்க அப்பா வருவது கிடையாது. அப்பாவுக்கு அவர் வயதுசார்ந்த பல நோய்களுள்ளன. ஆனால் அவர்

.


Read More


புதிய ஆத்மாக்கள் - காரைநகரான்

 எள்ளும் நீரும் எனக்கு இறைக்கப்படமாட்டாது. கூடுவிட்டுப் பிரிவதற்கு எனக்காகக் கோ வரவில்லைள, அது தானமாகத் தரப்படவில்லை. சேடம் இழுக்கும் போது உயிரை நிறுத்தச் சுற்றியிருந்து சுற்றம் பாலூற்றவில்லை. பஞ்சில் நனைத்த ஏதோவொரு கொழுப்பு என் உதட்டில் பூசப்பட்டது. காதிற்கும், மனதிற்கும் இனிய தேவாரம் பாடப்படவில்லை. பிதிர்க்கடன் கொடுக்கும் பிள்ளைகள் என் கால்மாட்டில் நிற்கவில்லை. பிதிர் என்கின்ற சொல்லின் அர்த்தம் தெரியாத பிள்ளைகள், பாசம் என்கின்ற பிணைப்பு அறுத்து, தூரதேசத்தில் வாழ்கிறார்கள். கூடுவிட்டுப் பிரியும் நாள் நெருங்குவதை அறிந்தபோது

.


Read More


மாடி தேவையா ?! - காரை ஆடலரசன்

 வள்ளிக்குக் கணவன் முயற்சி பிடிக்கவில்லை. நகைகளை இழக்க மனமில்லை. ”என்னங்க ! கீழ் வீடே வெளிப் பூச்சுப் பூசாமல் அரையும் குறையுமாய் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். இப்ப போய் இருக்கிற நகைகளை வித்து வங்கியில கடன் வாங்கி மாடி கட்றதுக்கு முயற்சி செய்யிறது நியாயமா ?” கேட்டாள். ”பேசாம இரு தடுக்காதே !” குணா மறுத்தான். ”தடுக்கலை. வீண் சிரமம். மேலும் மேலும் கடன். ஆறுமாசத்துக்குள்ளே மாடி கட்றாங்களேன்னு நம் சாதி சனத்துக்கெல்லாம் நம் மேல் பொறாமை, கண்ணு.

.


Read More


அண்ணாவின் டைரிகள் - எஸ்.கண்ணன்

 என் பெயர் .ஜமுனா. பதினைந்து வருடங்களுக்கு முன் குடும்பத்துடன் நாங்கள் காரில் திருப்பதி சென்றுவிட்டுத் திரும்பும்போது, கார் விபத்துக்குள்ளாகி என் பெற்றோர்கள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். அப்போது எனக்கு வயது ஒன்பது. என் அண்ணாவுக்கு பன்னிரண்டு. அதன்பிறகு எனக்கு எல்லாமே என் பாசமிகு அண்ணாதான். வருடங்கள் விரைந்து ஓடிவிட்டன. பணம், வசதிகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனாலும் இரண்டு பேருமே இன்னமும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கும் என் அண்ணாவை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.