This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2018/12/27/.

கழிவறையின் கதவு - முனைவர் க.லெனின்

 “அம்மா பேஸ்ட் பிரஷ், சோப்பு ஷாம்பு துண்டெல்லாம் எடுத்து வச்சிட்டியா…” என்றான் கதிர். “எல்லாம் எடுத்து வச்சாச்சு. ஆமாம்! நீ ஏன் இப்படி குட்டிப் போட்ட பூனையாட்டம் குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டு இருக்க. ஒரு இடத்துல போயி உட்காருடா” என்றாள் கதிரின் அம்மா ரஞ்சிதம். அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு ஷோபாவில் அமர்ந்தான் கதிர். அவனின் கையில் இருந்த ஈரம் அம்மா ரஞ்சிதத்தின் உள்ளங்கையை நனைத்தது. மகனின் கையை இறுக்கப் பிடித்துக்கொண்டாள். அவன் தலைமுடிக்குள் தனது ஐந்து

.


Read More


நந்தி - ப.மதியழகன்

 அளவில் சிறிய கோவில் தான் சிலசமயம் அர்ச்சகரையும், கைலாசநாதரையும் தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள். சிறிய பிரகாரம், நவகிரக சந்நதி, பைரவர் எல்லாம் உண்டு. அம்மன் பெரியநாயகி, லோகத்துக்கும் அவள் தான் பெரியநாயகி. நாயகன் யாரென்று என் வாயால் சொல்ல வேண்டுமா? கோயிலுக்கென்று நுழைவு வாயில் இடது பக்கத்தில் சிறிய தோட்டம் உண்டு. சொல்லிக் கொள்கிற மாதிரி பெரிய வரும்படி எதுவுமில்லை. கிழக்கு நோக்கியிருக்கும் வாயிலில் பாமிணி ஆறு ஓடுகிறது. தெற்கு நோக்கி இருக்கும் வாயிலில் தான்

.


Read More


குழந்தை - ஜெ.சங்கரன்

 அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 ”நீங்க சொன்னதற்கு மேலே ஜனங்க வந்து சாப்பிட்டதை நீங்க கவனிக்கலயா.கல்யாணம் நடந்த அன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. அன்னைக்கு காலையில் வந்த அத்தனைப் பேரும் மதியம் சாப்பிட்டு விட்டு,சாயங்காலம் டிபனும் சாப்பிட்டு விட்டு,இரவு ‘டின்னரும்’ சாப்பிட்டு விட்டுப் போனாங்க

.


Read More


பழைய ராகம் - எஸ்.எஜ்.எம்.ரபிதீன்

 பாக்கெட்டிலிருந்த சில்லறையை எடுத்து டீக்கு கொடுத்துவிட்டு அவசர அவசரமாக வெளியே ஓடி வந்தான் ‘ஷாம்’. வீதியின் இரு பக்கமும் வண்டிகளின் நெரிசலை பார்த்ததும், பயந்து பம்மிக்கொண்டே முன்னாடியிருந்த பஸ் ஸ்டாப்புக்கு தாவி ஓடிச்சென்று நின்று கொண்டான். ஒரு மர நிழலில் பஸ்ஸுக்காக காத்திருந்த அவன், வாட்சில் நேரத்தை சரி பார்த்தவண்ணம் தூரத்தில் பஸ் ஏதாவது தென்படுகிறதா என வீதியை வெறித்துப் எட்டிப் பார்த்துக்கொண்டான். டவுணுக்கு செல்லும் பஸ் ஏகப்பட்ட பயணிகளை அடைத்து ஏற்றிக்கொண்டு முக்கி முனங்கிக்கொண்டே வந்துசேர்ந்தது.

.


Read More


கேள் கேள் பெரிது கேள் - டி.சாய்சுப்புலட்சுமி

 பா……,,ர……,,தீ…, நீயா? அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த குரலில் விழிகள் விரிய சாலையின் எதிர்த்திசையில் சென்று கொண்டிருந்தவளைப் பார்த்துக் கேட்டாள். தீடீரென்று எதிரே வந்தவள் தன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதும் திகைத்துப் போய் ஆ… …ஆமாம்…நீ…ங்……க? என்று சற்றே இழுத்தாள். நீங்க சூர்ய பாரதி தானே?………நான்……என்னை நினைவில்லையா?…,,மீனாட்சி மகளிர் பள்ளியில் ஒன்றாய்ப் படித்தோமே?……. ஓ……,ஓ……ஞாபகம் வந்துடுச்சுடீ……,அனு…,,அனுஷா மோகன்……கரெக்டா? உடனே இயல்பாக இருவரையும் *டீ* தொற்றிக் கொண்டது. “ஏய்…,,எப்படி இருக்கடீ?ஆளே மாறிப்போயிட்ட? என்ன ஆச்சு?. பள்ளி இறுதிநாளன்று சந்தித்தது. அப்பொழுதே

.


Read More


ரோசாப்பூ - கவிஜி

 அவரவர் இடத்தில் அவரவர் அக்கறையின்றி அமர்ந்து…….. அப்படித்தான் ஆரம்பிக்கும் அந்த நாள். பிச்சையெடுப்பதை போல உயிருக்கு நடுக்கம் தரக் கூடியவை வேறொன்றும் இல்லை. ஒரே ஒரு நாள் பிச்சை எடுத்து பார்த்திருக்கிறேன். அது அத்தனை சுவாரஷ்யமானதாக இல்லை. பிச்சையெடுப்பதிலும் கொடுமையான ஒன்று கண்கள் தெரியாமல் பிச்சை எடுப்பது. பிச்சைக்காரிக்கு மட்டும் வயதை கணிக்கவே முடிவதில்லை. தினம் மாறும் உடல் அமைப்பின் ஓரங்கள் காலத்தின் கரமுற கவனிப்புகள். அவளை, கடந்த ஒரு வாரமாக கவனிக்கிறேன். ஒவ்வொரு நாளும்… பிச்சை

.


Read More


நீதானா அந்தக் குயில் - ரஞ்சனி நாராயணன்

 ஒரு வாரமாகிறது நாங்கள் இந்த ஊருக்கு வந்து. அழகான ஊர் என்று இங்கு வருவதற்கு முன்பே நண்பர்கள் சொன்னார்கள், வந்த பின்தான் தெரிந்தது, மிக மிக அழகான ஊர் என்று. சுற்றிலும் பச்சைப்பசேலென்ற மலைகள்……. கீழே பெரிய தோட்டம். மாடியில் மூன்று அறைகளுடன் வீடு. தோட்டம்தான் என்னை மிகவும் கவர்ந்தது. ஓர் பக்கத்தில் மா, பலா, வாழை, கொய்யா, சப்போட்டா என்று பழ மரங்கள். இன்னொரு பக்கத்தில் ‘கிச்சன் கார்டன்’ அமைக்கக் கூடிய அளவுக்கு இடம் இருந்தது.

.


Read More


அல்லல் - காரைநகரான்

 ஏற்றமான இடமொன்றில் பரந்து விரிந்து கிடந்த சீக்கயெம்மின் (முதியோர் இல்லம்) கண்ணாடிக் கதவுகள் செல்வியை உள்ளே விட்டுத் தாளிட்டுக் கொண்டன. தாளிட்டதான அந்தச் சுதந்திரத்தைப் பிடுங்கும் உணர்வு நிம்மதி திருடிச் சென்றது. ஆரம்பக் காலங்களில் தோன்றாத இந்த உணர்வு இப்போது வாட்டும் நோயாகிய பரிணாமம். தாதி வேலைக்குப் படித்துவிட்டு வேலை இல்லாது வீட்டில் இருக்க இங்கு விடமாட்டார்கள். படித்த வேலையைச் செய்யும் போது ஏற்படும் மனவழுத்தங்களையும் இலகுவாகப் புறம் தள்ள முடிவதில்லை. வேலை என்பது ஐரோப்பிய வாழ்வின்

.


Read More


பாவம்…! - காரை ஆடலரசன்

 பாமினிக்குத் தன் கணவனை நினைக்க… பொச பொசவென்று எரிச்சல், கோபம். பின்னே! தன் தம்பி. தங்கக் கம்பியைப் பற்றி முகம் தெரியாத நபரிடம் இல்லாததும் பொல்லாததுமாய்ச் சொன்னால் யாருக்குத்தான் கடுப்பு, வெறுப்பு வராது. சேதி கேட்ட அந்த அம்மாள் ஓ…. அந்தப் பெண்ணின் தங்கையா இவள் ? என்று தன்னைப் பற்றியும் ஒரு தாழ்ந்த கருத்தை எடுத்துச் செல்வாள்.! பழக்க தோசத்தில் அடுத்த வீட்டு அலமேலு அம்மாள் தன் மகன் குறையைக் கொட்ட வந்தாள். ”வாங்கும் சம்பளத்தைக்

.


Read More


இளம் கன்றுகள் - எஸ்.கண்ணன்

 சென்னை ஈ.ஸி.ஆர் சாலையில் பற்பல அடர்த்தியான மரங்களுக்கு அப்பால் ஓசையின்றி இயங்கிக் கொண்டிருந்தது, அந்தப் பிரபலமான ட்ரைவ்-இன் ரெஸ்டாரண்ட். ஆங்காங்கு ஒழுங்கற்ற வரிசைகளில் பல்வேறு இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஓய்வுடன் நின்றிருந்தன. அந்த வெளிர் நீல நிற புத்தம் புதிய இன்னோவா க்ரெஸ்டா காரில் ட்ரைவிங் சீட்டில் வினோத் அமர்ந்திருந்தான். அவனைச் சுற்றிலும் அந்தக் காரில் அவன் நண்பர்கள் ஐந்து பேரும் கையில் புகையும் சிகரெட்டுடன் அமர்ந்து பெண்களைப்பற்றி வம்படித்துக் கொண்டிருந்தார்கள். . நண்பர்கள்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2018]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.