This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2018/12/12/

வேத வித்து

 “ஈஸ்வரா” சொம்பைக் கையில் வாங்கி கை கால்களை அலம்பினார் விஸ்வநாதய்யர். மேலே போர்த்தியிருந்த அங்கவஸ்திரமாக ஒரு காலத்தில் இருந்து தற்போது என்னவென்றே தெரியாமல் இருக்கும் துணியை உதறி கையைத் துடைத்துக் கொண்டவர், அப்படியே முள்முள்ளாக இருந்த முன்னுச்சி மண்டையைத் துடைத்துக் கொண்டார். முற்றத்தைக் கடந்து பின் கதவைத் திறந்து புழக்கைடைக்குச் சென்றவர் கிணற்றுக்குப் பக்கத்தில் இருந்த தோய்க்கும் கல்லில் அமர்ந்தார். அவர் பின்னாலேயே வந்த விசாலம், கிணற்றில் சாய்ந்தவாறு நின்று கொண்டாள். விசாலம் கேட்டாள் “ஏன்னா, போன

.


Read More


ஆடையில் ஓட்டையிடும் இராட்சதர்கள்

 அம்மா போரடிக்குது. எங்கேயாவது வெளியில் போகலாமா? தொடர்ந்து நச்சரிக்கும் குட்டி ஸ்ருதியை அழைத்துக் கொண்டு செல்ல இடம் ஆலோசிக்க ஆரம்பித்தனர். ‘அரை மைல் தூரத்தில் புதியதாக மால் திறந்திருக்கிறார்கள் கூட்டிக் கொண்டு போய் வா’ என்றாள் பாட்டி கோமதி. மும்பையிலிருந்து கோடை விடுமுறைக்காக வந்திருக்கும் ஸ்ருதிக்கு மால் ஒன்றும் பெரிய ஆச்சர்யம் இல்லையெனினும் தான் பிறந்து வளர்ந்த இந்த சின்ன ஊரில் மால் என்பது வானதிக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. நல்ல முன்னேற்றம் தான். நாங்கள் படிக்கும் காலத்தில்

.


Read More


குழந்தை

 அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 எல்லாத்துக்கும் மேலாக உங்க அப்பா தான் ‘ரிடையர்’ ஆன பணத்தை யாரோ ஆளும் ஒரு கட்சிக் காரன் கிட்ட குடுத்து விட்டு இப்படி அந்த பணத்தை திரும்பி வாங்க முடியாம கஷ்டப் படுவதையும் நினைச்சா இன்னும் ரொம்ப கஷ்டமா இருக்கு கமலா.என்ன பண்ணுவது.நம்ப மாதிரி நடுத்தர குடும்பங்களில் இந்த

.


Read More


அம்மாவின் ஹார்ட் அட்டாக்கும், ஏர்ஹோஸ்டஸ் பேயும்

 அவசரமாக அலுவலக வேலை நிமித்தம் நியூ யார்க் செல்ல வேண்டும் என அம்மாவிடம் சொன்ன போது ஆரம்பித்தது வினை. “டே கண்ணா, அம்மா அமெரிக்கா போனதே இல்லடா, கூட்டிண்டு போடா,” என்றாள். “என்னமா, நியூ யார்க் என்ன பாம்பே, டெல்லியா, நெனச்ச போது போறதுக்கு, ஏகப்பட்ட செலவு ஆகும்மா, “என்றேன். அம்மா நொடித்துக் கொண்டாள். “நீ நெனச்சா முடியும், போறது போ,” என்றாள். தனக்கென எதுவுமே வேண்டுமென அம்மாஅதுவரை கேட்டதில்லை. எனவே அம்மாவின் அந்த குழந்தைத்தனமான வேண்டுகோளைத்

.


Read More


பிச்ச காக்கா

 “பொழுதுபோக்கு அம்சங்களுக்கு எங்க ஊரை மிஞ்சவே முடியாது என்றிருந்த, ஒரு காலம் அது…” சுன்னத்து கல்யாண வீட்டிலும், ஏனைய விசேஷ இன்னபிற கலை நிகழ்ச்சிகளிலும் இன்னிசைக் கச்சேரிகள் இடம்பெற்றுவந்த காலம். ‘என்னமோ தாங்கள்’ எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ் என்பதை போன்ற நினைப்பில் தெருவுக்கு ஒரு ‘பஜனா குழுவும்’ இருந்து வந்தது. ஆர்மோணிப் பெட்டி ஒன்று , ஒரு சோடி தபேலா, ஒரு கடம் , மற்றும் ஜால்ரா. அத்தோடு சேர்த்து டிஜிட்டல் சவுண்ட் எபக்ட்டுக்காக! உலகத்திலயே

.


Read More


வெள்ளைப் பாப்பாத்தி

 மினி சைக்கிளின் இரும்பு கேரியரில் அமர்ந்துகொண்டால் ருக்குவின் பிட்டம் கொடிமலருக்குத் தலையணையாகிவிடும். பெடலை மிதிக்கும்போது விளம்பித லயத்தில் தலை அசைந்து தாலாட்டுவதுபோல இருக்கும். அவள் பள்ளிக்கு மட்டம் போடத்தொடங்கிய ஒருசில நாட்களுக்கு முன்புதான் இறுதியாண்டு சோதனை முடிந்திருந்தது. இரவல் பாடப் புத்தகங்களை ஒப்படைத்துவிட்டு, தேர்வுத் தாட்களையும் முடிவு அட்டையையும் பெற்றுக்கொள்ளச் சொல்லி கதிர்வேலுவை ஆசிரியர் ஏவும் வரை பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றே அவளுக்குத் தோன்றவில்லை. அன்றைய தினத்தைத் தவறவிட்டால் வருட இறுதி விடுமுறை நீண்டுவிடும். பொதுவாக

.


Read More


தெய்வமில் கோயில்

 கமாலா ஒஸ்லோவில் இருக்கும் அந்தக் கோயிலுக்கு போவதற்காய் மிகவும் ஆர்வத்தோடு புறப்பட்டாள். அவள் அதற்காகப் பல மணித்தியாலங்கள் பல ஆடையலங்காரங்களை மாற்றி மாற்றி இறுதியாக ஒரு சிவப்புக் காஞ்சிபுரத்தை தெரிவு செய்து தன்னை அலங்கரித்துக் கொண்டாள். செல்வனைப் புறப்படுமாறு ஏற்கனவே பத்து முறை கேட்டுவிட்டாள். அவன் அசையவே இல்லை. காதற்றவன் போல் இருந்தான். அவள் மீண்டும் சளைக்காது ஒரு முறை அவனைக் கெஞ்சுவது போலக் கேட்டாள். ‘தயவு செய்து வெளிக்கிடுங்க… திருவிழாவிற்குப் போவம்.’ ‘அது திருவிழாவா?’ அவன்

.


Read More


கிராம வாழ்க்கையில் இப்படியும் இருக்கும்

 அன்று என் கிராமத்துக்கு வந்திருந்தேன்.நல்ல வெயிலில், பஸ் கிடைக்காமல் நடந்து வந்ததில் களைப்பாய் இருந்தது.வந்தவுடன் அம்மா கொடுத்த ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீரை குடித்தவுடன் உடம்பு கொஞ்சம் குளிர்வது போல் இருந்தது. வெயிலில் வந்தவுடன் உடனே தண்ணீரை அப்படி குடிக்க கூடாது என்று அடிக்கடி மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் வைத்தியன் நான். ஆனால் அனுபவப்படும்போது அதுவெல்லாம் ஞாபகத்துக்கு வருவதில்லை. அதுவும் மனோதத்துவ வைத்தியர் நான், எனது வைத்தியத்தில் பேச்சுதான் முக்கியம். நோயாளியின் கவலைகளிலிருந்து அனைத்தையும் பேச்சின் மூலம்

.


Read More


தாய்

 ”என்னங்க! சாப்பிட வாங்க.” அழைத்தாள் மனைவி மரகதம். ”அம்மாவுக்கும் போடு.” என்றேன். அம்மா காலையில்தான் கிராமத்திலிருக்கும் தம்பி வீட்டிலிருந்து வந்தாள். வந்து இரண்டு நாட்கள் தங்குவாள். நல்லது கெட்டது சாப்பிட்டுவிட்டு கிளம்புவாள். அம்மாவிற்கு இங்கு கக்கூஸ் போகக் கஷ்டம். கிராமத்தில் காற்றாடச் சென்றவள். அடுத்து அவளுக்கு இங்கு பேச்சுத்துணைக்கு ஆளில்லை. அக்கம் பக்கம் பழக்கமில்லை. அவள் வாழ்ந்த கிராமம் அவளுக்கு எல்லாவிதத்திலும் வசதி. அதனால் அம்மாவிற்கு இங்கு இரண்டு நாள் இருப்பு என்பதே அதிகம். ”அத்தையும் நானும்

.


Read More


உள்ளும் புறமும்

 இப்போதெல்லாம் மாதத்திற்கு ஒரு முறையாவது ‘மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது’ என்கிற செய்தி சர்வ சாதாரணமாக நம் காதுகளில் விழுகிறது. ஒரு தந்தையைப் போல் நடந்து கொள்ள வேண்டிய ஆசிரியரே இப்படி நடந்து கொள்கிறாரே என்று நாம் நொந்து கொள்வதுதான் சமீப காலமாக நம் அனுபவம். தருமபுரியில் லளிகம் ஒரு சிறிய கிராமம். அங்கு அரசினர் கோ-எஜுகேஷன் மேல் நிலைப் பள்ளியில் ஆங்கில டீச்சராக இருக்கிறார் எஸ்தர். மிகவும் மரியாதைக்குரியவர். பண்பானவர். பள்ளிக் குழந்தைகளிடம் எப்போதும்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2018]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.