This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2018/11/29/

யாரிடம் சொல்வேன்

 மும்பையில் அனிதா பாண்டே யின் வீட்டில் கிட்டி பார்ட்டி களை கட்டியது. அவர்கள் குழுவில் மொத்தம் ஆறு பேர். மாதாமாதாம் ஒவ்வொருவரும் ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். பின் குலுக்கல் முறையில் யாருடைய பெயர் வருகிறதோ அவருக்கு முழுப்பணம் ஆறாயிரம் கொடுக்கப்படும். அடுத்த மாதம் குலுக்கல் சீட்டிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்டு ஐந்து பேர்களின் பெயர்கள் மட்டுமே எழுதப்படும். இங்ஙனம் வருடத்திற்கு இருமுறை அனைவருக்கும் பணம் கிடைத்தது. ஒவ்வொரு முறையும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் மற்றனைவரையும் தன்

.


Read More


ஒரு சம நிலை வைத்தியம்

 மதுரா போகும் வழி தனித்துவானது..சராசரிப் பெண்களைப் போல வீண் ஆசைகளுக்காகத் தன்னிலை மறந்த மயக்கமே ஒரு போதும் அவளுக்கு வந்ததில்லை, உலகம் எங்கே போகிறது? அது தலை கீழாக மாறினாலும் அவள் நிலை இது தான். இந்த நிலை தொடுதலின் உச்சக் கட்டமாக மனிதர்களை அறிந்து கொள்ள அது சந்தர்ப்பமாக அவள் கண் முன்னால் விடிந்த்து. விடியலத் தேடி ஓடுகிறவளல்ல அவள். அது தானாகவே அவளின் காலடிக்கு வந்து சேரும். கொஞ்ச நாளாக முழங்கால் வலி அவளைப்

.


Read More


குழந்தை

 அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் 4 அவள் உடனே ”வேணாங்க இந்த டாக்டர் கிட்டேஎல்லாம் போக வேணாங்க. அவர் உடனே இந்த ‘டெஸ்ட் எடு’’அந்த டெஸ்ட்’ எடுன்னு சொல்லி பணத்தைக் கறப்பாருங்க.என்னால் உங்களு க்கு வீண் செலவு வேணாங்க. நான் வரலைங்க டாக்டர் கிட்” என்று பிடிவாதம் பிடித்தாள். ஆனால் சிவலிங்கம் சரோஜா சொனதை ஒத்துக் கொள்ளாமல் “அடம் பிடிக்காதே சரோஜா. டாக்டர் எல்லா

.


Read More


மாயா

 அவன் ஓடிக்கொண்டிருக்கிறான் காட்டுக் கொடிகளும் செடிகளும் கிழித்து உடலெங்கும் ரத்தமும், வியர்வை வழிய வழிய நா வறண்டு அசுரத்தனமாக ஓடியவன் மர வேரோ எதுவோ தடுக்கி தடுமாறி விழுகிறான்.அய்யோஓஓஓஓஓ…. வனத்தின் அமைதியில் அவனது குரல் எதிரொலிக்கிறது அருகில் இருளை வார்த்தது போல் அவனை துரத்தி வந்த யானை அவன் யானையை அவ்வளவு அருகில் பார்த்ததில்லை துதிக்கையின் சொரசொரப்பான சுருக்கங்களும் வெறி மின்னும் நீர்வழியும் கண்களுமாக துதிக்கையை மேலே சுழற்றி ஆங்காரமாக பிளிறியபடி காலை உயரே தூக்கி கீழே

.


Read More


மீண்டும் ஒரு ஆதாம்

 இறைவன் தனது சாயலில் மண்ணில் இருந்து உருவாக்கிய உருவத்தின் நாசியில் தனது மூச்சை ஊதியபோது மனிதன் உருப்பெற்றான். அந்த மனிதன் ஆதாம் எனப்பெயர் பெருகிறான்- வேதாகமம். ********************** வீதியில் காத்திருப்பது அவனுக்கு கடினமாக இருந்தது. நாற்பது வயது கடந்து விட்ட பின்பு, நல்ல நோக்கமிருந்தாலும், பெண்ணொருத்திக்காக கல்லூரி மாணவன்போல் நடந்துகொள்வது எப்படி…..? வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும் சந்தித்த சீனத்து இளம் பெண்ணொருத்திக்காகக் காத்திருப்பது அந்தரமான குற்ற உணர்வைக் கொடுத்தது. எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது….? அவனது

.


Read More


வண்டி

 பாட்டிவீட்டுக்குப் போகவேண்டும். காலையிலேயே அப்பாவிடம் ஞாபகப்படுத்திவிட்டான் தோமஸ். மரியதாஸ் ஒன்றும் சொல்லாமல் விட்டத்தைப் பார்த்தபடி எம்.ஜி.ஆர் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார். தன் அம்மா வீட்டுக்குச் செல்வதென்றாலே அவருக்குப் பிடிக்காது. ஏதாவது காரணம் சொல்லி தட்டிக்கழித்துவிடுவார். பாட்டி மட்டும் அவ்வப்போது தோமஸைப்பார்க்க வருவாள். வாசலிலேயே அமர்ந்திருப்பாள். தோமஸ் எவ்வளவு அழைத்தாலும் உள்ளே வராமல் “வெத்தல எச்சி துப்பனுமய்யா” என்பாள். மரியதாஸ் “வாங்க” என்பதோடு நிறுத்திக்கொள்வான். அம்மா பாட்டியிடம் பேசி அவன் பார்த்ததில்லை. எம்.ஜி.ஆர் இறந்ததை நேற்று தமிழ்ச்செய்தியில் கேட்டது முதல்,

.


Read More


குருவும் சிஷ்யனும்

 சிவகுரு என்பது அவருடைய இப்போதைய ஞானப் பெயர். முதலில் அவரது பெயர் சிவச்சந்திரன் என்று சாதாரணமாக இருந்தது. தனக்குத் தானே ஞானம் கிடைத்ததாக அவசரக் குடுக்கை போல் எண்ணியதால் அவர் சந்திரனைத் தூக்கி எறிந்துவிட்டுச் சிவத்தை மாத்திரம் முதலில் எடுத்தார். பின்பு அதை மெருகூட்டக் குருவைச் சேர்த்துக் கொண்டார். கடைசியாக மொத்தமாகச் சிவகுரு என்று தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டார். ‘உன்னை நீ அறியாது, நீ உன்னையும் ஏமாற்றி, மற்றவர்களையும் ஏமாற்றுகிறாய்.’ என்று ஒரு துறவி சிவகுரு

.


Read More


ராமுவின் பெரும் உதவி

 சுந்தராபுரம் என்னும் ஒரு ஊரில் மயில்வாணன் என்னும் ஒரு வியாபாரி இருந்தார் அவருக்கு ராமு என்னும் ஒரு மகன் இருந்தான். ராமு அந்த ஊரில் உள்ள நடு நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். மயில்வாகணன் அருகில் உள்ள ஒரு நகரத்தில் கடை ஒன்று நடத்தி வந்தார். தினமும் காலையில் சைக்கிளில் அந் நகரத்துக்கு சென்று கடையை திறந்து வியாபாரத்தை பார்த்துவிட்டு இரவு ஒன்பது மனிக்கு மேல்தான் வீடு திரும்புவார். அவரது கடையில் விவசாயத்துக்கு தேவையான உரங்கள்

.


Read More


மனிதம்

 அதிகாலை. வழக்கம் போல தேசிய நெடுஞ்சாலை 45 ஒரம் என் நடைப்பயிற்சி. இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவன்  ஒதுங்கி செல்ல….நடு ரோட்டில் கிடந்தது இளநீர். தூரத்து பேருந்து நிறுத்தம், மூன்று ரோடு முக்கம் உள்ள டீக்கடை, பால் விற்பனை நிலையம் அருகில் தினம் சைக்கிளில் எடுத்து வந்து விற்கும் இளநீர் வியாபாரியிடம் வாங்கி சென்றவன் தவற விட்டது. இது போக்குவரத்திற்கு இடைஞ்சல் மட்டுமில்லாமல் அதிகாலை சைக்கிளில் டியூசனுக்குச் செல்லும் பள்ளிப்பிள்ளைகளுக்கும் தொந்தரவு. புரிந்தது. எடுத்தேன். இரு நிமிட

.


Read More


காலையில் ஒருநாள்

 எனக்கு வயது ஐம்பது. எனக்கு என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள்; பொழுது போக்குகள்; நான் சாப்பிடும் உணவுகள்; என் தூக்கம் என்று ஒவ்வொரு நிகழ்வும், சம்பவங்களின் கோர்வையும் எல்லா ஷணமும் மிகவும் பிடித்திருக்கிறது. நான் செய்யும் எதையுமே மிகவும் பொறுமையாக அனுபவித்து ரசனையுடன் செய்வேன். அதனாலேயே இன்னமும் ஒரு ஐம்பது ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ ஆசை. அதற்காக என் உடம்பை எப்போதும் நான் மிக கவனமாகப் பார்த்துக் கொள்வேன். அதை மிகுந்த ஈடுபாட்டுடன் சரியான எடையில் அழகாகப் பராமரிப்பேன்.

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2018]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.