This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2018/11/09/

சாபமா, வரமா

 சாலையில் பயணித்த முருகன் கைபேசி அழைப்பு ஒலிகேட்டு பயணித்த வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு கைபேசியை எடுத்து பேசினான். எதிர்முனையில் முருகனின் பத்து வயது மகள் கீர்த்தி. அப்பா நான் ஸ்கூலவிட்டு வந்துட்டேன், இன்னைக்கு ஸ்கூல டெஸ்ட் வைத்தார்கள். டெஸ்டில் நான்தான் முதல் மதிப்பெண். டீச்சர் குட்போட்டு பாராட்டினார்கள், என சந்தோஷமாக கூறினாள். அதற்கு முருகன், அப்படியா, அருமை! நீங்கதான் என் தங்கமச்சேடா என்று பாராட்டினான். அப்போது கீர்த்தி அப்பா வீட்டுக்கு எப்ப வருவீங்க என கேட்டாள். இன்னும்

.


Read More


தோடி

 தந்தியைப் படித்ததும் எனக்குப் பிரமை தட்டிப் போய் விட்டது. போன மாதம் தானே இங்கு வந்து விட்டுப் போனார்? நன்றாக இருந்தாரே அப்போது. ‘ஆவுடையப்ப பிள்ளைக்கு உடம்பு மோசமாகி விட்டது. உங்களைப் பார்க்க விரும்புகிறார்’ என்று அவர் மைத்துனர் அடித்திருந்த தந்தி அது. அதன் வாசகம் என் நெஞ்சத்தைக் குத்திக் குதறியது. கைகால்களெல்லாம் பதற ஆரம்பித்துவிட்டன எனக்கு, எப்படியோ ரயிலேறினேன். மனத்தின் பதைபதைப்பு இன்னமும் அடங்காத நிலையில் பெஞ்சியில் உட்கார மாட்டாமல் நிற்கவும் முடியாமல் நான் தவித்தேன்.

.


Read More


குழந்தை

 அத்தியாயம்-1 காலை மணி ஐந்தரை ஆயிற்று.அலாரம் தன் வேலையை தவறாமல் செய்தது.‘கண’ ‘கண’ வென்று அலறிய அலாரம் சத்தம் கேட்டு கண் விழித்துக் கொண்ட சிவலிங்கம் அலாரத்தின் தலையில் தட்டி அதை ஓயப் படுத்தினார். மெல்ல கண்ணை திறந்து கொண்டு எழுந்தார். அவர் ‘ பாத் ரூமுக்கு’ ப் போய் தன் பல் துலக்கி விட்டு, சுவாமி படத்தின் முன் இருந்த திரு நீரை எடுத்து தன் நெற்றியில் இட்டுக் கொண்டு கைகளை கூப்பிக் கொண்டு கடவுளை

.


Read More


மறு பக்கம்

 நான்காவது மாடியின் மேல் தளத்தில் வெயில் காய்ந்து கொண்டு வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டிருக்கும் இவர் தான் நமது கதையின் ஹீரோ பாலா. இவர் முன்னால் வேர்க்கடலைத் தொலிகள் நிரம்பிய கிண்ணம், ஒரு சிறிய பாக்கெட் டயரி, ஒரு பேனா. என்னடா ஏதேனும் தீர்வு கிடைத்ததா, கேட்டுக்கொண்டே பிளாஸ்டிக் பாயில் அமர்பவன் பாலாவின் நண்பன் வினோ. இவர்கள் இருவருக்கும் என்னதான் தீர்வு வேண்டும். யார் இவர்கள்? கதை எழுத்தாளர்களா, ரகசிய உளவாளிகளா? இல்லை. இருவரும் பெயர் பெற்ற

.


Read More


கறிச்சோறு

 “மாப்ளே.!நாளைக்கு மாசி மகம்டா…திருவிழாவுக்கு கோவில்ல நேர்த்திக்கடன் கிடா வெட்டுவாங்கடா…நம்ம ஊர் தலைகட்டுக்கு வீட்டுக்கு நூறுகிராம் கிடைச்சாலே பெருசு…பத்துநாள் விரதத்தை எலும்பு உறிஞ்சாம எப்படிடா முடிக்கறது..?..முந்நூற்றி எண்பது ரூவா விக்குதேடா ஆட்டுக்கறி…”கோவில் திண்டில் ஆரம்பித்தான் கண்ணன். “ஒங்க..கதை அரைகிலோ,முக்கா கிலோவுல முடிஞ்சிடும்டா,என் கதைய கேளு …முதல்முதலா மாமியார் ,மாமனார் வர்றாங்க..கூடவே கொழுந்தியாளும்..!..நல்ல மாதிரியா செய்யனும்னா எங்க குடும்பத்துக்கு மூனு கிலோ வாங்கனும்…முழுசா ஆயிரம் ரூவா வேணும்…செலவில்லாம கறிதிங்க ஏதாவது யோசனை சொல்லுங்கடா”..என்றான் புதுமாப்பிள்ளை மூர்த்தி. “சரிடா,..இன்னிக்கு ராத்திரி பதினோரு

.


Read More


என்ன மாயம் செய்தாய்?

 வித்யாவின் பர்த்டே பார்ட்டியில் மூன்றாவது மாடி ஃப்ளாட்டே கோலாகலமாகியிருந்தது. அவள் கர்ல் ஃப்ரெண்ட்ஸ் பாய் ஃப்ரெண்ட்ஸ், என ஒரு கூட்டமே திரண்டிருந்தது. ““பாத்துடீ, மத்த ‘ஃப்ளாட்’காரங்கல்லாம் சண்டைக்கு வந்துடப்போறாங்க, கொஞ்சம் அடக்கம் வேணும்” என்று அதட்டினாள் அம்மா சுமதி. “எஞ்சினியரிங் முடிச்ச பசங்க அப்படித்தான் இருப்பாங்க, ரொம்ப அதட்டாதே, போ போய் டீ போட்டு எல்லாருக்கும் கொடு” என்று அவளை சமாதானப்படுத்தினான் ப்ரகாஷ். பின்பு ‘ஹேப்பி பர்த்டே டு யு’ பாடி வித்யா மெழுகு வர்த்திகளை அணைத்து,

.


Read More


கணேசர் வீட்டுப் பேய்

 இப்போது இந்த வீடு பேய் வீடு போல இருக்கிறது. அப்படி எண்ண நினைத்த கணேசர் அதைத் திருத்தி இல்லை இது பேய்வீடே என்கின்ற அனுபவத்தை முடிவாக ஞாபகப்படுத்திக் கொண்டார். பின்பு மிகுந்த கவலையோடும், வேதனையோடும் எழுந்து சாளரங்களை இறுக்கமாக இழுத்து மூடினார். அடக்க முடியாத கவலையும், பொறுக்க முடியாத பயமும் வெடித்து விடுமோ என்கின்ற நடுக்கத்தை அவருக்கு உண்டு பண்ணியது. அழுதுவிடுவேனோ என்பதான எண்ணம் அவருக்குத் திறந்த குளிர்பானத்தில் இருந்து வெளிவரும் குமிழிகளாய் தோன்றி அவர் நெஞ்சத்து

.


Read More


புத்திசாலி சகோதரர்கள்

 ராமுவும், சோமுவும் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிற மாணவர்கள். இவர்களின் பெற்றோர் அந்த ஊரில் விவசாயம் செய்து வந்தார்கள். இருவரும் நல்ல புத்திசாலிகள். அவர்கள் அம்மாவுக்கு எல்லா உதவிகளும் செய்து நல்ல பிள்ளைகளாகவும் பெற்றோர் சொல் பேச்சு கேட்கும் குழந்தைகளாகவும் இருந்தனர். ராமுவும், சோமுவும் உள்ளுரில் உள்ள பள்ளியிலியே படித்து வந்தனர்.அவர்கள் படித்து வந்த பள்ளி அவர்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருந்தது.தினமும் நடந்தே பள்ளிக்கு சென்று மாலையில் பள்ளி விட்டவுடன் வீடு

.


Read More


மனிதன்..!

 புதுச்சேரி-நாகை பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பஞ்சைப் பனாதி… வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை. நாற்பத்தைந்து வயது தோற்றம். எதைஎதையோத் தின்று வெறுப்பேற்றினான். மரியாதை மருந்துக்குக் கூட ”சார்!” நீட்டவில்லை. எனக்கு, இவன் அநாகரீகத்தை உணர்த்தி முகத்தில் கரி பூச ஆசை. கடலூர் பேருந்து நிலையம் வந்ததும் வெள்ளரிப் பிஞ்சு விற்பவனை அழைத்து பத்து ரூபாய் நீட்டினேன். அவன் இரண்டு கட்டுகளை ஒரு கேரி பேக்கில் கொடுத்துச் சென்றான். ஒரு கட்டில் இரண்டை எடுத்து, ”சார் !” அருகில்

.


Read More


கறுப்பு

 சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட். அமெரிக்காவில் இருக்கும் மூத்த மகனைப் போய்ப் பார்ப்பதற்காக செக்இன் செய்துவிட்டு ஏர் ப்ரான்ஸ் விமான அழைப்பிற்காக டிபார்ச்சர் லவுஞ்சில் காத்திருந்தாள் பாகீரதி. அமெரிக்காவுக்கு அவள் பறப்பது இது முதல் முறையல்ல. பத்துப் பன்னிரண்டு தடவைகள் தனியாகவே பறந்திருக்கிறாள். முதல் மூன்று பயணங்கள் கணவருடன். தவிர கணவருடன் இரண்டாவது மகனைப் பார்க்க ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திற்கு சிங்கப்பூர் வழியாக இதுவரை நான்கு முறை பயணித்திருக்கிறாள். பயணத்தின் போது சில தடவைகள் அதிர்ஷ்டவசமாக பிஸினஸ் க்ளாஸில்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2018]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content

To change your subscription, click here.